Event Book Shop

Event Book Shop Event Book Shop

உற்சாகமே உங்கள் சொத்து!கவலைப்படுவதால் எந்த நல்லதும் நடக்க வாய்ப்பில்லை. நிலைமை மேலும் மோசமாகத்தான் செய்யும். அதற்குப் பத...
01/02/2023

உற்சாகமே உங்கள் சொத்து!

கவலைப்படுவதால் எந்த நல்லதும் நடக்க வாய்ப்பில்லை. நிலைமை மேலும் மோசமாகத்தான் செய்யும். அதற்குப் பதிலாக நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையோடு பிரச்சனைகளை எதிர்கொள்ளத் தொடங்குங்கள்.

நான் வெற்றிபெற பிரார்த்திருக்கிறேன். நான் வெற்றி பெறப் போகிறேன். நான் வாழப் போகிறேன் போன்ற நம்பிக்கை உரையாடல்களை அடிக்கடி கூறுங்கள்.

நாளையை நினைத்து பெரிதாக கவலைப்படாதீர்கள். இன்றைய தினத்தில் முழுமையாக அனுபவித்து வாழுங்கள்.

மிக மோசமாக அப்படி என்ன நடந்துவிடும்? தைரியமாக அணுகுங்கள். பிறகு அந்த மோசமான சூழ்நிலைகளை மேம்படுத்த அமைதியாக முயற்சி செய்யுங்கள். துணிவே துணை. நம்பிக்கையாக இருங்கள்.

பிரச்சனை என்ன? பிரச்சனைக்கான காரணம் எது? சாத்தியமான தீர்வுகள் என்னென்ன? அதில் எது சிறந்த தீர்வு? என ஆலோசித்து ஒரு சிறந்த தீர்வைச் செயல்படுத்துங்கள்.

சுறுசுறுப்பாய், உற்சாகமாய் இருங்கள். கவலை கொண்ட மனிதர் தன்னை ஒரு வேலையில் மூழ்கடித்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அவர் துயரத்தில் மூழ்கி விடுவார். லிவ் நவ் ப்ளீஸ்.

இதுவும் கடந்துபோகும். எல்லா பிரச்சனைகளும் சரியாகும். நிலைமை சீராகும். எல்லாம் நல்லபடி நடக்கும் எனப் பரிபூரணமாக நம்புங்கள்.

உங்களின் ஆசீர்வாதங்களைப் பட்டியலிடுங்கள். வாழ்வில் நல்ல அம்சங்களைப் பாருங்கள். கடந்த காலம் மற்றும் எதிர்காலத்தின் இரும்புக் கதவுகளை இழுத்து மூடுங்கள். இன்றைய தினத்தை முழுமையாய், சிறப்பாய் வாழுங்கள்.

கடந்த காலம் கடந்து போனதாகவே இருக்கட்டும். இன்று ஒருநாள் மட்டும். இந்த நாளை முழுமையாய் வாழ்வதற்கு முயற்சிப்பேன் என்று சொல்லிக் கொள்ளுங்கள். இப்படி ஒவ்வொரு நாளும் இந்த ஒரு நாள் வாழ்க்கையை மகிழ்வாய் வாழுங்கள். வேண்டும். இல்லையென்றால் அவர் துயரத்தில் மூழ்கி விடுவார்.நிகழ்காலத்தில் வாழுங்கள் ..

உதயசான்றோன் எழுதிய "வெற்றிக்கு 16"
புத்தகத்திலிருந்து “How to stop worrying and start living “ புத்தகத்தை பற்றி

“எல்லாவற்றையும் பெற்றுவிடத் துடித்து, மகத்தான வாழ்க்கையை இழந்துவிடுவதில் எனக்கு உடன்பாடில்லை. தமிழ் இலக்கியத் துறையில் ப...
12/21/2022

“எல்லாவற்றையும் பெற்றுவிடத் துடித்து, மகத்தான வாழ்க்கையை இழந்துவிடுவதில் எனக்கு உடன்பாடில்லை. தமிழ் இலக்கியத் துறையில் படைப்பாளிகள் பலர் வெறுப்பும் கசப்பும் கலந்த மனப்பான்மையோடுதான் வாழ்கிறார்கள். இரண்டு வேளை சாப்பாட்டுக்கு உத்திரவாதம் கிடைத்திருந்தால் இன்னும் சற்று அதிகமாக எழுதியிருக்கலாமோ என்ற எண்ணத்தைத் தவிர வாழ்க்கையில் எனக்கு வேறெந்தப் பிராதும் கிடையாது”.இருந்தாலும் நான் பாரதியை விடவும், பாரதிதாசனை விடவும் அதிகத் துன்பத்தை அனுபவித்துவிடவில்லை”

பிரபஞ்சன் நினைவு நாள் (21-DEC-2022)

பிரபஞ்சன் படிக்க வேண்டிய 10 நூல்கள் :

மானுடம் வெல்லும்
பிரபஞ்சன் கதைகள்
மனிதர் தேவர் நரகர்
வானம் வசப்படும்
சித்தன் போக்கு
பெண்
மகாநதி
தாழப்பறக்காத பரத்தையர் கொடி
குயிலம்மை
கண்ணீரால் காப்போம்
எமதுள்ளம் சுடர்விடுக

A person saying, that I spent 2 hours to read and compete the book.Once after that, in her/his lifestyle, activities sho...
11/17/2022

A person saying, that I spent 2 hours to read and compete the book.

Once after that, in her/his lifestyle, activities should have any of the considerable improvement / understanding / changes to reflect from that book.

Every book is a cherish, and should deep into that and absorb the good thing in ethical way.

It will change the life entirely and motivates everyone in the another level❤️👍

With love
Prabakaran

11/15/2022
11/10/2022

படித்ததில் பிடித்தது சுகி சிவம் ஐயாவின் "சொன்னார்கள்...! சொன்னார்கள்...! சொன்னார்கள்...! " புத்தகத்திலிருந்து

தரமா? விளம்பரமா?

அமெரிக்காவில் நடந்த சம்பவம் இது. நாய்களுக்கான உணவு தயாரிக்கும் பெரிய நிறுவனம் ஒன்று. நூற்றுக்கணக்கானவர்கள் பணிபுரிந்தார்கள். லட்சக்கணக்கான டாலர் முதலீட்டில் நிறுவனம் தொடங்கப்பட்டது. ஆனால் விற்பனை சரியாக இல்லை. எனவே விற்பனைப் பிரதிநிதிகளுக்கு உத்வேகம் ஊட்டுவதற்காக ஒரு சுயமுன்னேற்றப் பயிற்சியாளர் வரவழைக்கப்பட்டார்.

விற்பனைப் பிரதிநிதிகள் மனதில் நிறுவனம் பற்றிய பெருமித உணர்வைத் தூண்டி விற்பனையைப் பெருக்க வேண்டும் என்று அந்தப் பயிற்சியாளர் திட்டம் தீட்டினார்.

எனவே கேள்விகள் கேட்டு பதில் பெறுகின்ற உத்தியைக் கையாண்டார்.

அமெரிக்காவில் நாய் உணவு தயாரிப்பில் மிகப் பெரிய வர்கள் யார்?

பதில் வந்தது "நாம்தான்"

நாய் உணவு தயாரிப்புக்கு அதிக விளம்பரம் செய்பவர்கள் யார்?

பதில் வந்தது "நாம்தான்"

விரிவான வினியோக தொடர்புகளைக் கொண்டிருப்பவர்கள் யார்?

பதில் வந்தது "நாம்தான்"

விற்பனைக்கு வசீகரமான சலுகைகள் தருபவர்கள் யார்?

பதில் வந்தது "நாம்தான்"

பயிற்சியாளர் கேட்டார் " அப்படியானால் ஏன் நாம் நம் தயாரிப்பை இன்னும் நன்றாக விற்பனை செய்யவில்லை""

பலத்த அமைதிக்கு பிறகு ஒரே ஒரு குரல் எழுந்தது " ஐயா அந்த புள்ளி விவரங்கள் நமக்குத் தெரியும் நாய்களுக்கு தெரியாது. அவற்றுக்கு நம் தயாரிப்புகள் பிடிப்பதில்லை முகர்ந்து பார்த்து விட்டு நகர்ந்து விடுகின்றன"

தரத்தில் கவனம் செலுத்தாத தயாரிப்புகளுக்கு எத்தனை விளம்பரங்கள் செய்தாலும் எடுபடுமா என்ன?

4 பிரதிகள் மட்டுமே விற்பனைக்கு உள்ளது. தேவை படுவோர் தொடர்புகொள்ளவும்

514-512-6992

09/28/2022

Address

Toronto, ON

Alerts

Be the first to know and let us send you an email when Event Book Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Event Book Shop:

Shortcuts

Share

Category