Vanathi Faizal Novels

Vanathi Faizal Novels எழுத்துக்களின் காதலி - வானதியின் நாவல்கள்

"நீங்க ரொம்ப வலிக்க வலிக்கப் பேசுறீங்க சர்வா..." என்றாள்...        ​"ஆமாமா... வலிக்க வலிக்கப் பேசுற உரிமை உன் குடும்பத்த...
08/10/2026

"நீங்க ரொம்ப வலிக்க வலிக்கப் பேசுறீங்க சர்வா..." என்றாள்...

​"ஆமாமா... வலிக்க வலிக்கப் பேசுற உரிமை உன் குடும்பத்துக்கு மட்டும்தானே உண்டு?" என்றவன், சிகரெட்டை ஆஷ்ட்ரேயில் அழுத்தி அணைத்துவிட்டு அவளை நோக்கி வந்தான்...

​அவனது ஆக்ரோஷமான நடையைக் கண்டு, பயத்தில் இரண்டடிகள் அவள் பின்வாங்க, அந்த விலகலைப் பார்த்ததும் பல்லைக் கடித்தவன், "நான் பக்கத்துல வந்தாலே உனக்கு அருவருப்பா இருக்குதுல்ல?" எனத் தன் கூர்விழிகளால் அவளையே பார்த்துக்கொண்டு கேட்டான்...

​"சர்... சர்வா... ப்ளீஸ்... நான் சொல்றதை..." என அவள் பேசத் தொடங்கிய நேரம், கையைத் தூக்கிப் பேச்சை நிறுத்தியவன்,

​"உன்னோட எந்த விளக்கத்தையும் கேட்க நான் விரும்பல! நீ ஆசைப்பட்டது எதையும் நான் நடக்க விட மாட்டேன்... அந்த மதன் நாய்க்கு ஒரு ரூபாய்கூடப் போகாது.... அவனுக்கு அமெரிக்கா இல்ல... இங்க இருக்கிற கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில கூட இடம் கிடைக்காம நான் பண்றேன் டி! அவன் தெருவுல நிக்கிறதை என் கண் முன்னாடி இருந்து பார்த்துட்டு அழு..." என முகமிறுகக் கூறிவிட்டு, அறையில் இருந்த ஃபிரிட்ஜைத் திறந்து மது பாட்டிலை எடுத்தான்...

​"அண்ணி விஷயம் தெரிஞ்ச நாள்ல இருந்து அவன் நடுத்தெருவுல நிக்கணும்னுதான் நானும் நெனச்சேன் சர்வா!" என்றவள் தயக்கத்துடன் பேசத் தொடங்க,

​"இதை நம்புறதுக்கு எவனாவது இளிச்சவாயன் இருப்பான்... அவன்கிட்ட பொய் சொல்லு..." எனக் கூறிக்கொண்டே கோப்பையில் மதுவை ஊற்றினான்...

​"நீங்க என்னை நம்ப மாட்டீங்க சர்வா... ஆனா நான் நம்பினேன்... நீங்க சொன்னது எல்லாத்தையும் நம்பினேன்... இனியும் நம்புவேன்..." என்றவள் கூற கண்டு கொள்ளாமல் கோப்பையில் இருந்த மதுவை குடிக்க தொடங்கினான்...

அவளுக்கு பேசிய தீர வேண்டும் போல் தோன்றியது.... "பணத்துக்காக எவன்கூட வேணாலும் படு***கப் போயிருப்பேன்னு சொல்லிட்டீங்களே சர்வா? இன்னொரு ஜாதிக்காரனோட குழந்தைன்னு சொல்லி நம்ம குழந்தையை அழிச்சிடுவியான்னு கேட்டுட்டீங்களே... அந்த அளவுக்கு நான் மோசமானவ இல்ல சர்வா? உங்களையே நினைச்சு தான் இந்த அஞ்சு வருஷமும் வாழ்ந்தேன்!" என்றவள் கூற அவளோ கண்டுகொள்ளவே இல்லை..

​ "அன்னைக்கு நைட்டு உங்ககிட்ட பணத்துக்காகத்தான் நான் வந்தேன்... ஆனா சத்தியமா அது மதனுக்காக இல்ல, ஹரிஷுக்காக வந்தேன்! அவன் என்கிட்ட நடிப்பான்னு நிஜமா நான் கற்பனை கூட பண்ணல சர்வா... சத்தியமா உங்ககிட்ட பணம் இல்லேன்னா நான் வேற எவன்கிட்டயும்

👉👉👉👉லட்சக்கணக்கானவர்கள் ஆர்வமுடன் படித்துக் கொண்டிருக்கும் இக்கதையை படிக்க👉👉👉👉
86 🌺தழல் நதியில் பூத்த செங்காந்தள் 🥀,

https://pratilipi.app.link/YcbaGpIz46b

வாசிக்க கதையின் மேல் க்ளிக் செய்யவும்

#வானதிநாவல்கள் #ஆன்டி_ஹீரோ_கதை

"அப்பாடா... நல்லவேளை, பார்க்கல..." என மனதிற்குள் பெருமூச்சுவிட்டபடி, விதுர் இருந்த திசையை விட்டு எதிர்த்திசையை நோக்கி எஸ...
07/10/2026

"அப்பாடா... நல்லவேளை, பார்க்கல..." என மனதிற்குள் பெருமூச்சுவிட்டபடி, விதுர் இருந்த திசையை விட்டு எதிர்த்திசையை நோக்கி எஸ்கேப் ஆகும் அவசரத்தில் வேகமாகப் பின்னோக்கி நகர்ந்தாள்... பாறாங்கல் போன்ற அகன்ற மார்பின் மீது 'தொம்'மெனப் பலமாக மோதி நிலைதடுமாறி விழப்போனவளின் இடையைச் சுற்றி வளைத்து ஒரு நீண்ட பலமான கரம் தாங்கிப் பிடிக்க ​அவளைத் தூங்கவிடாமல் செய்துகொண்டிருந்த அதே வாசனையை உணர்ந்தவள் தூக்கிவாரிப் போட்டுத் திரும்பிப் பார்த்தாள்...

​முகத்தில் ஒரு குறும்புப் புன்னகையுடனும், அவளையே கூர்மையாகப் பார்த்த விதுர் அவளது மிரண்ட விழிகளை பார்த்து, "குள்ள வாத்து மகாராணி... யாரைப் பார்த்துப் பயந்து இப்படிப் பின்னங்கால் பிடறியில் பட ஓடி வர்றீங்க?" எனக் கிசுகிசுக்கும் குரலில் குறும்பு புன்னகையுடன் கேட்டதும் ​சட்டென்று விலகியவளின் இதயத் துடிப்பு எகிறியது...

​'ஐயையோ... ஆரம்பிச்சிட்டானே! எவனாவது பார்த்துட்டா அவ்வளவுதான்!' என நெஞ்சம் பதைபதைத்தவள், அசட்டுச் சிரிப்புடன்,

"அது... சாரி சார்! நீங்க ரொம்பப் பெரிய ஆளு... முக்கியமான பிசினஸ் விஷயமா பார்ட்டிக்கு வந்திருப்பீங்க... நீங்க போய் அந்த வேலைகளைப் பார்க்கலாமே!" என்று படபடவெனக் கூறியபடி, வேகமாக விலகிச் செல்ல முயன்றாள்...

​ மறுநொடி அவளது மென்மையான மணிக்கட்டை விதுர் பற்றி இழுக்க அந்த பலமான இழுப்பில் நிலைதடுமாறி மீண்டும் அவனது மார்பின் மீதே மோதி நின்றாள்...

​சட்டெனச் சுதாரித்துக்கொண்டு அவனது நெஞ்சில் கைகளை வைத்துப் பின்னே தள்ளியவள், சுற்றும் முற்றும் யாராவது நிற்கிறார்களா எனப் பதற்றத்துடன் பார்த்துக் கொண்டே, "யோவ் ஆர்வக்கோளாறு! கொஞ்சமாவது அறிவு இருக்கா உனக்கு?! இந்த பார்ட்டிக்கு என் புருஷனும் வந்திருக்காரு... தேவையில்லாம என்கிட்ட வம்பு பண்ணி வாங்கிக் கட்டிக்காத!" என இடையில் இரண்டு கைகளையும் வைத்துக்கொண்டு முறைத்துப் பார்த்துக் கூற ​அவளது இந்தத் தோரணையில் விதுருக்குச் சிரிப்பு வந்தது...

​மேலும் இரண்டு எட்டுகள் அவளை நெருங்கி வந்தவன், "உன் புருஷன் என்ன இந்த உலகத்துக்கே ராஜாவா?" என நக்கலாகக் கேட்க,

👉👉👉👉ஆயிரக்கணக்கானவர்கள் ஆர்வமுடன் படித்துக் கொண்டிருக்கும் இக்கதையை படிக்க👉👉👉👉
14 ✨ தென்றலைத் தீண்டிய தீம்புயல்🌪️🌸,

https://pratilipi.app.link/V6xgiSp126b

இந்திய மொழிகளில் எண்ணற்ற படைப்புகளை இலவசமாக வாசிக்கலாம், எழுதலாம் மற்றும் கேட்கலாம்

#வானதிநாவல்கள் #ஆன்டி_ஹீரோ_கதை

"ப்ளீஸ் சச்சின் அடிக்க வேண்டாம்னு சொல்லுங்க... அவ பாவம், அவளுக்கு யாரும் கிடையாது... அடிச்சா கேட்கக் கூட யாரும் கிடையாது...
07/10/2026

"ப்ளீஸ் சச்சின் அடிக்க வேண்டாம்னு சொல்லுங்க... அவ பாவம், அவளுக்கு யாரும் கிடையாது... அடிச்சா கேட்கக் கூட யாரும் கிடையாது... ப்ளீஸ் சச்சின் சொல்லுங்க!" எனக் கண்ணீருடன் நவ்யா கூற,

​"கடுப்பைக் கிளப்பாம உன் பொண்டாட்டியை கூட்டிட்டு வெளியே போடா!" எனக் சீறினான் சர்வன்...

​கன்னத்தைப் பிடித்துக்கொண்டு அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டு நின்ற அவந்திகா முன் தன் ஆள்காட்டி விரலை நீட்டியவன், "ஒரு வார்த்தை பொய் சொல்லக் கூடாது... ஒரு வார்த்தை பொய் சொன்னாலும் அடிச்சே கொன்னுடுவேன்! எல்லா உண்மையும் வெளிய வந்துடுச்சு... இதுக்கு மேல நீ எதையும் சொல்லி நடிக்க முடியாது!" என்றவன், தன் பாக்கெட்டில் மடித்து வைத்திருந்த காகிதங்களை உருவி எடுத்து அவள் முகத்திற்கு முன் நீட்டினான்...

​மதனின் அமெரிக்க மருத்துவமனை ரோபோட்டிக் சர்ஜரி மதிப்பீடு, அவனது பாஸ்போர்ட், விசா விண்ணப்ப விவரங்களுடன் கூடிய மெயிலைப் பார்த்த அடுத்த நொடியே, காலடியில் பூமி நழுவி விழுந்தது போல் உறைந்துபோனாள் அவந்திகா...

வேகமாக அதை கையில் வாங்கி மீண்டும் மீண்டும் பார்த்த அவந்திகா, ​"இ... இல்ல... இது எனக்குத் தெரியாது சர்வா... நிஜமாவே ஹரிஷுக்குத்தான்... ஹரிஷுக்கு உடம்பு முடியாம இருந்துச்சு... அவ... அவன் நேர்ல பார்க்கும்போது ரொம்ப டல்லா இருந்தான்..." எனப் பதற்றத்துடன் பெரிய பெரிய மூச்சுகள் எடுத்து கூற,

​"இருந்திருப்பான்டி! வீட்டுக்கே மேக்கப் ஆர்டிஸ்ட்டை வரவச்சு, நோயாளி மாதிரி மேக்கப் போட்டா டல்லாதான் இருந்திருப்பான்! போட்டோ எடுத்து என்கிட்ட காமிச்சு நாடகம் ஆடி இருக்கல்ல?" என சர்வன் கேட்க, அந்தப் துரோகத்தின் வலியை தாங்க முடியாமல் பேச்சற்று நின்றாள் அவந்திகா...

​ஒரு குழந்தையை வைத்து நாடகமாடும் அளவுக்கு ஒரு குடும்பமே இவ்வளவு கீழ்த்தரமாக இறங்குமா என நினைத்த நவ்யாவும் வாயடைத்துப் போய் நின்றிருந்தாள்...

​சர்வனின் முகம் மொத்தமாகக் கல்லாய் இறுகிப்போயிருந்தது... அவந்திகாவின் முகத்திற்கு மிக அருகில் குனிந்தவன், ​"தாலி கட்டின புருஷன்... என்னைத் தொட்டா அருவருப்பா இருக்குதுன்னு திரும்பத் திரும்ப சோப்பு போட்டுத் தேய்த்துக் கழுவினவ நீ... ஆனா, அவனுக்காக இந்த அளவுக்குத் துணிஞ்சிருக்க... இதுக்கு என்ன அர்த்தம்னு நான் தெரிஞ்சுக்கலாமா மிசஸ்ஸ் அவந்திகா?" என இறுகிய குரலில் கேட்க,

👉👉👉👉லட்சக்கணக்கானவர்கள் ஆர்வமுடன் படித்துக் கொண்டிருக்கும் இக்கதையை படிக்க👉👉👉👉

85 🌺தழல் நதியில் பூத்த செங்காந்தள்🥀,

https://pratilipi.app.link/44lxyiIR26b

வாசிக்க கதையின் மேல் க்ளிக் செய்யவும்

#வானதிநாவல்கள் #ஆன்டி_ஹீரோ_கதை

ஆழினி தொடர்ந்து மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொண்டிருந்தாலும், அவளது அடிமனதில் குழந்தையில்லாத ஏக்கம் ஒரு தழலாக எரிந்து...
07/10/2026

ஆழினி தொடர்ந்து மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொண்டிருந்தாலும், அவளது அடிமனதில் குழந்தையில்லாத ஏக்கம் ஒரு தழலாக எரிந்து கொண்டுதான் இருந்தது... அவளது மௌனத்தையும் தவிப்பையும் நொடிக்கு நொடி உணர்ந்த சிம்மன், அந்த ஏக்கம் அவளைச் சிதைத்துவிடாதபடி தன் காதலால் அவளை தாங்கி எப்போதும் அவளது முகத்தில் புன்னகை தவழுமாறு பார்த்துக் கொண்டான்...

​இதற்கிடையில் ரூபாவுக்கும் அழகான ஆண் குழந்தை பிறந்தது...

​அன்று... விஷாலினிக்குப் பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாள்... பிரசவ வார்டின் வெளியே சத்யாவின் குடும்பத்தினருடன் சேர்ந்து, சிம்மனும் ஆழினியும் பதற்றத்துடன் நின்றுகொண்டிருந்தனர்...

" எனக்குப் பொம்பளப் புள்ள பிறந்தா ரொம்ப நல்லா இருக்கும்ல..." என சத்யா கூற,

"அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை எப்ப பாரு என்கிட்ட மல்லுக்கு வர்றல்ல... உனக்கு ஆம்பள புள்ள தான் பிறக்கும்... 'அண்ணி மாதிரி ஒரு சேட்டைக்கார சமத்து பொண்ணு நம்ம வீட்ல இல்லையே'ன்னு நீ தினமும் புலம்பணும்...." என உதட்டை ஒழுங்கு காட்டி ஆழினி கூற,

"எனக்கு மட்டும் பொம்பளப் புள்ள பிறக்காம போகட்டும்,.. உன்னைத் தூக்கிப் போட்டு மிதிக்கிறேன்... பார்த்துட்டே இரு!" என்று சத்யா மல்லுக்கு போக,

அருகில் நின்ற சௌந்தரவல்லி அவனை முறைத்து, "என்ன குழந்தையா இருந்தா உனக்கென்னடா? அங்க உள்ள ஒருத்தி வலியில துடிச்சுட்டு இருக்கா... இங்க நின்னு ரெண்டு பேரும் வம்பு பேசுறதைப் பாரு!" என்று அதட்ட சிம்மன் சிரித்தான்...

பரபரப்பான இறுதி அத்தியாயத்தை நோக்கி👉👉👉👉
116 💖ராட்சசனின் ரகசிய காதலி✨✨✨✨,

https://pratilipi.app.link/jtAUgwkC26b

வாசிக்க கதையின் மேல் க்ளிக் செய்யவும்

#வானதிநாவல்கள் #ஆன்டி_ஹீரோ_கதை

நேற்று வரை 'டேய் சத்து' என்று அழைத்த நண்பனின் கழுத்தில், இன்று மணப்பெண்ணாக மாலை போடப் போகிறோம் என்ற நினைப்பே அவளது கன்னங...
07/10/2026

நேற்று வரை 'டேய் சத்து' என்று அழைத்த நண்பனின் கழுத்தில், இன்று மணப்பெண்ணாக மாலை போடப் போகிறோம் என்ற நினைப்பே அவளது கன்னங்களைச் செக்கச்செவேலெனச் சிவக்க வைத்தது...

​அவள் நின்ற கோலத்தைப் பார்த்ததும், சத்யா கண்ணிமைக்க மறந்து வாயைப் பிளந்து நின்றான்...

​அவன் தோளில் கிடந்த மாலையைச் சரி செய்வது போல குனிந்த ஆழினி, "டேய் அறிவு கெட்டவனே... பப்ளிக்கா ஜொள்ளு விடாதே! எல்லாரும் கையில போனை வச்சு போட்டோ எடுத்துட்டு இருக்காங்க!" என்று கிசுகிசுக்க, மேடையிலிருந்த ஒட்டுமொத்தக் கூட்டமும் கொல்லென்று சிரித்தது...

​விஷாலினிக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது... மங்கள வாத்தியங்கள் விண்ணைப் பிளக்க, முகம் கொள்ளாப் புன்னகையுடனும் பூரிப்புடனும் தன் ஆருயிர்க் காதலியின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு மங்கல நாணைப் பூட்டினான் சத்யா....

​திருமணச் சடங்குகள் அனைத்தும் இனிதே முடிந்து, வரவேற்புக்காக மணமக்கள் சோபாவில் அமர்ந்திருந்தனர்...

​சத்யாவால் இன்னும் தான் மணமகனாகிவிட்டதை நம்பவே முடியவில்லை... பக்கவாட்டில் சாய்ந்து, "ஆட்டுக்குட்டி... நிஜமாவே நீ என் பொண்டாட்டி ஆயிட்டியாடி?" என்று கண்கள் மின்னக் கேட்டான்...

​முகம் சிவக்க உதட்டைக் கடித்த விஷாலினி, "சும்மா இருடா சத்து... எல்லாரும் நம்மளையே பாக்குறாங்க!" என்று முனக,

​"ஹலோ மேடம்! என்ன 'சத்து'ன்னு கூப்பிடுறீங்க? புருஷனை மரியாதையா 'வாங்க, போங்க'ன்னு கூப்பிடணும்னு வீட்ல சொல்லிக் கொடுக்கலையாக்கும்?" என்று வம்பிழுக்க,

​"போடா... ஒரு மாதிரி இருக்கு! நீ ரொம்ப பண்ற!" என்று முகம் சிவக்க உதட்டை கடித்தாள் விஷாலினி....

​அப்போது ரூபாவும், ஆழினியும் ஒரு பெரிய பரிசுப் பெட்டியுடன் மேடைக்கு வந்தனர்... ரூபா குழந்தை உண்டாகி இருந்தாள்...

​"வாவ்! அண்ணி... இவ்வளவு பெரிய கிஃப்ட்டா? சொல்லவே இல்ல! ரொம்ப தேங்க்ஸ் அண்ணி!" என்று வாய் முழுக்கப் பல்லாக சத்யா கையை நீட்டினான்...

​"ஹலோ மிஸ்டர்! இது உனக்கு இல்லடா, எங்க பிரண்டுக்கு!" என்ற ஆழினி, விஷாலினியைப் பார்த்து, "விஷாலி... இது எங்களோட ஸ்பெஷல் கிஃப்ட்!" என்று நீட்ட, அவள் சிரித்துக்கொண்டே வாங்கிக்கொண்டாள்...

​"என்ன கொடுமைடா இது... புருஷனுக்குக் கொடுக்காம பொண்டாட்டிக்கு மட்டும் தனியா கிஃப்ட் கொடுக்குறீங்க.." என்ற சத்யா அவர்கள் சொல்ல சொல்ல கேட்காமல் வேகமாக பரிசு பெட்டியை திறந்தான்...

உள்ளே இருந்த சிறிய உருட்டு கட்டையை பார்த்ததும் சத்யா மட்டுமல்ல அங்கு நின்றிருந்த அனைவருமே வாயை பிளந்தனர்...

"அடிப்பாவி அண்ணி... என்ன இது கிப்ட்..." என சத்யா கேட்க,

​" நீ ரொம்ப வாய் பேசினா உன் மண்டையிலேயே போடுறதுக்கு!" என்று ஆழினி கூலாகக் கூற மண்டபமே சிரிப்பலையில் அதிர்ந்தது...

லட்சக்கணக்கானவர்கள் ஆர்வமுடன் படித்துக் கொண்டிருக்கும் இக்கதையை படிக்க👉👉👉115 💖ராட்சசனின் இரகசிய காதலி✨✨✨✨,

https://pratilipi.app.link/TEBndkEw26b

வாசிக்க கதையின் மேல் க்ளிக் செய்யவும்

#வானதிநாவல்கள் #ஆன்டி_ஹீரோ_கதை

07/10/2026

பரபரப்பான இறுதி அத்தியாயத்தை நெருங்கிக் கொண்டிருக்கும்👉👉👉👉

"💖ராட்சசனின் ரகசிய காதலி✨✨✨", - பிரதிலிபியில் படிக்க :,

https://pratilipi.app.link/S72BWMBm26b

இந்திய மொழிகளில் எண்ணற்ற படைப்புகளை இலவசமாக வாசிக்கலாம், எழுதலாம் மற்றும் கேட்கலாம்

#வானதிநாவல்கள் #ஆன்டி_ஹீரோ_கதை

"ஆமா அத்தான், எனக்குப் பைத்தியம்தான்! நான் ரொம்ப எமோஷனல் ஆயிடுறேன் அத்தான்... என்னால என் கோபத்தைக் கட்டுப்படுத்தவே முடிய...
06/10/2026

"ஆமா அத்தான், எனக்குப் பைத்தியம்தான்! நான் ரொம்ப எமோஷனல் ஆயிடுறேன் அத்தான்... என்னால என் கோபத்தைக் கட்டுப்படுத்தவே முடியல! ஒரு கலெக்டராவோ, ஐபிஎஸ்ஸாவோ இருக்கணும்னா, என்ன தப்பு நடந்தாலும் சட்டப்படி நிதானமா யோசிக்கத் தெரியணும்... கோபத்தை அடக்கத் தெரிஞ்சிருக்கணும்! ஆனா, எனக்கு அது வராது அத்தான்!" என்றவளது நெஞ்சம் இயலாமையால் ஏறி இறங்கியது...

​"இந்தக் கோபம்தான்டி அந்த வேலைக்கு வேணும்! ஐபிஎஸ் ஆனேன்னு வச்சுக்கோயேன்... வேற லெவல்ல இருப்ப! என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்... நீ இருக்கிற ஏரியாவுல தப்பு பண்ணுறதுக்கு ஒவ்வொருத்தனும் பயப்படுவான்..." எனச் சிம்மன் அழுத்தமாகக் கூற,

​"கோபம் வேணும் அத்தான்... ஆனா, அது ஒரு கட்டுப்பாட்டோட இருக்கணும்! எங்கேயாவது ஒரு பொண்ணுக்கு அநீதி நடக்குதுன்னு என் கண்ணு முன்னாடி தெரிஞ்சா, அவளைக் காப்பாத்தத் துடிக்கிற அந்த நொடியில கூட நிதானமா முடிவெடுக்கணும்... ஆனா, நான் நானாகவே இருந்துக்க மாட்டேன்! என்னை இயல்புக்குக் கொண்டுவர அந்த இடத்துல நீங்க தேவைப்படுவீங்க...

அன்னைக்கு பங்களாவுல பாஸ்கியையும் ஆர்யனையும் அடிச்சு நொறுக்கின மாதிரி, நாளைக்குக் கலெக்டர் நாற்காலியில உட்கார்ந்துட்டு அநீதி பண்ற எவனையாவது என் கையாலேயே அடிச்சுக் கொன்னுட்டா என்ன அத்தான் பண்றது?!" என்ற ஆழினியின் நியாயமான கேள்வியில் சிம்மன் வாயடைத்துப் போய் நின்றான்...

"நாம அதுக்கு ட்ரீட்மென்ட் பார்க்கலாம் பேப்..."

​"நான் ரிஸ்க் எடுக்க விரும்பல அத்தான்... அந்த நாற்காலிக்குன்னு ஒரு கம்பீரம் இருக்குது... சட்ட வரம்பு இருக்குது அத்தான்! என்னால ஒரு சாதாரண மனுஷியா நின்னு நியாயத்துக்காக ஆக்ரோஷப்பட முடியும்... ஆனா, அந்தப் பதவியில உட்கார்ந்துட்டு அமைதியா ஃபைலை நகர்த்த என்னால முடியாது! என் எமோஷன் என்னை ஒரு நாள் குற்றவாளியா ஆக்கிடும்... நீங்க என்ன சொன்னாலும் சரி, திட்டினாலும் சரி... நான் இந்த வேலைக்குப் போகவே மாட்டேன்!" எனக் கலங்கிய கண்களுடன் சொல்லிவிட்டு, சோபாவில் தொப்பென்று அமர்ந்து, தன் தலையை இரு கைகளாலும் தாங்கிப் பிடித்தபடி குனிந்து அமர்ந்தாள்...

👉👉👉👉லட்சக்கணக்கானவர்கள் ஆர்வமுடன் படித்துக் கொண்டிருக்கும் இக்கதையை படிக்க👉👉👉👉
114 💖 ராட்சசனின் இரகசிய காதலி✨✨✨✨,

https://pratilipi.app.link/9qxos1Pi16b

வாசிக்க கதையின் மேல் க்ளிக் செய்யவும்

#வானதிநாவல்கள் #ஆன்டி_ஹீரோ_கதை

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vanathi Faizal Novels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category