30/04/2020
ஒரு குட்டி கணக்கு
அதாவது பண்ணையில் அதிக எண்ணிக்கையில் இருப்பது பெட்டை ஆடுகளே, இப்படியிருக்க பெட்டை ஆடுகள் கிலோ 500-600 என்று வாங்கினால் 40 கிலோ இருக்கும் தாய் ஆட்டிற்கு 20 ஆயிரம் ஒரு ஆட்டிற்கு செலவு செய்து 50 தாய் ஆடுகள் என வைத்துக்கொள்வோம் அப்போ 10-12 இலட்சம். ஒரு ரூபாய் வட்டி போட்டால் கூட மாதம் குறைந்தது10 ஆயிரம் மற்றும் கொட்டகை ஒரு 5 இலட்சம், ஆக மாதம் 15 ஆயிரம் வட்டி வரும்...சரி மாதம் 10 குட்டிகள் விற்கிறோம் என வைத்துக்கொள்வோம். சராசரி ஒரு குட்டி 6,000 என வைத்துக்கொள்வோம் அப்போ 60 ஆயிரம். வட்டி போக 45,000. தீவன செலவு 10,000 + வேலையாட்களுக்கு 15,000..மீதம் 20,000 மாதம் இதற்கு 2 ஏக்கர் நிலம்..இறப்புகளை கணக்கிடப்படவில்லை, மருந்து செலவு கணக்கிடப்படவில்லை...இது இலாபமா இல்லை
100 குட்டிகள் 4 இலட்சத்திற்கு வாங்கி 3 மாதத்தில் 6 இலட்சம்....
3 மாத வட்டி 12,000
தீவன செலவு 3 மாதத்திற்கு 30,000
வேலையாட்களுக்கு 3 மாதத்திற்கு 45,000
ஆக செலவு 87,000+முதலீடு 4,00,000 = 4,87,000
நிகர இலாபம் 6,00,000-4,87,000 = 1,13,000(மூன்று மாதங்களுக்கு) அப்போ மாதம் 37,666
பரண் எதுவும் தேவையில்லை சாதாரணமான கீற்றுக்கொட்டகை போதும்...
தங்களுக்கு மாற்றுக்கருத்து இருந்தா சொல்லுங்க