NCBH Tamilnadu

NCBH Tamilnadu வாசகர்களின் அனைத்து விதமான புத்தக தேவைக்கும் தொடர்பில் இருங்கள்

இரா.மு.தனசேகரன்
மேலாளர்
நாகர்கோவில் கிளை
8124949491

https://youtu.be/uTcjYeZ9orY?si=pbfv89gMYDgXMZTt
01/04/2026

https://youtu.be/uTcjYeZ9orY?si=pbfv89gMYDgXMZTt

மதிப்பிற்குறிய எழுத்தாளர் திரு எஸ்.ஏ.பெருமாள் அவர்கள் எங்கள் புத்தக நிலையத்தைப் பற்றி பகிர்ந்த எண்ணங்களை மகி.....

எமது நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் புதிய வெளியீடாக,AITUC கட்டிடத் தொழிலாளர் சங்கத்தின் மாநில செயலாளர் தோழர் இரா.துரை...
06/11/2025

எமது நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் புதிய வெளியீடாக,

AITUC கட்டிடத் தொழிலாளர்
சங்கத்தின் மாநில செயலாளர்
தோழர் இரா.துரைசாமி அவர்களின்,

#போராட்டங்களும்_தியாகங்களும்
#நூல்_வெளியீட்டு_விழா,

108 ஆவது நவம்பர் புரட்சி தினத்தன்று ( 07.11.2025 ) இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமாகிய பாலன் இல்லத்தில் நடைபெற உள்ளது.

அக்டோபர் புரட்சியை நேரில்
கண்டு உலகை குலுக்கிய
10 நாட்கள் என்ற நூலை எழுதிய
ஜான் ரீட் வாழ்க்கை வரலாறு முதல்,

தொழிலாளி வர்க்கம்
தன்னுடைய உரிமைகளுக்காக
ஒரு நூற்றாண்டுக்கு மேலாகப்
போராடிய வரலாறு, நடைபெற்ற
போராட்டங்கள், பங்கேற்ற போராளிகள் அவர்களின் தியாகங்கள் குறித்து கடந்த 2010 முதல் ஜனசக்தி, தொழிற்சங்க செய்தி, உங்கள் நூலகம், டாஸ்மாக் குரல், காக்கைச் சிறகினிலே உள்ளிட்ட பல்வேறு பத்திரிகைகளில் தோழர் துரைசாமி அவர்கள் எழுதி வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் மூ.வீரபாண்டியன் அவர்களின் அணிந்துரையோடு இந்த நூல் வெளிவருகிறது.

தொழிலாளி வர்க்கத்திற்காகத்
தன் வாழ்வை அர்ப்பணித்துப்
போராடி தியாகம் புரிந்த தலைவர்கள் முதல் அடிமட்டத் தொண்டர்கள்வரை போராட்டக் களத்தில் காவல்துறையின் தடியடி, துப்பாக்கிச் சூடு,தூக்குமேடை, காவல்துறையின் அத்துமீறிய அராஜகம் ஆகியவற்றால் பலியான தோழர்களின் வரலாறுகள் 'போராட்டங்களும் தியாகங்களும்' என்ற தலைப்பில் நூலாகி உள்ளது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு தருவாயில் நவம்பர் புரட்சி தினத்தன்று வெளிவருவது கூடுதல் சிறப்பு.

என்.சி.பி.எச் வெளியீடு
விலை ரூபாய் 125
சிறப்புத் தள்ளுபடியில்
ரூபாய் 100 மட்டும்
(நவம்பர் புரட்சி தினத்தன்று மட்டும்)

வரலாற்று சிறப்புமிக்க இந்நூல் 108 ஆவது நவம்பர் புரட்சி தினத்தன்று
தமிழகம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தொழிற்சங்கள் சார்பாக
நடைபெறும் கொடியேற்றுதல் மற்றும் கருத்தரங்க நிகழ்வுகளில் என்.சி.பி.எச் சார்பாக இடம்பெறும் புத்தகக் கண்காட்சிகளிலும் கிடைக்கும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

தொடர்புக்கு
இரா.மு.தனசேகரன்
என்.சி.பி.எச்,அம்பத்துர்
சென்னை
8124949491

இன்றைய நிகழ்வு 24.10.2025நியூசெஞ்சுரி புத்தக நிறுவனத்தின் வெளியீடாகிய கவிஞர் சக்தி ஜோதி எழுதிய சங்க இலக்கியம் உடல் | மனம...
24/10/2025

இன்றைய நிகழ்வு 24.10.2025

நியூசெஞ்சுரி புத்தக
நிறுவனத்தின் வெளியீடாகிய
கவிஞர் சக்தி ஜோதி எழுதிய

சங்க இலக்கியம் உடல் | மனம் | மொழி
நூல் வெளியீட்டு விழா இனிதே நடைபெற உள்ளது.

இடம் : அண்ணா நூற்றாண்டு நூலகம் இரண்டாம்தளம்,கோட்டூர்புரம்,
சென்னை.

நேரம் : மாலை 5.00 மணி

வாசகர்கள் அனைவரையும் அன்புடன் அழைப்பதில் மகிழ்கிறது எமது நிறுவனம்.

தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் இணைந்து வெளியிடும்அண்ணல் அம்பேத்கர் ஆக்கங்கள் 17 தொகுதிகள் வ...
13/08/2025

தமிழ் வளர்ச்சித் துறை மற்றும்
நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் இணைந்து வெளியிடும்

அண்ணல் அம்பேத்கர் ஆக்கங்கள்
17 தொகுதிகள் வெளியீட்டு விழா தலைமைச் செயலகத்தில்
இனிதே நடைபெற்றது.

நூல் தொகுதிகளை மாண்புமிகு தமிழ்வளர்ச்சி மற்றும்
செய்தித் துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் வெளியிட்டார்.

Best Money Gold பெருமையுடன் வழங்கும்  இலக்கியத் திருவிழாவில், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் மகிழ்வுடன் அளிக்கும் கவிஞர் ...
09/08/2025

Best Money Gold
பெருமையுடன் வழங்கும்
இலக்கியத் திருவிழாவில்,

நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் மகிழ்வுடன் அளிக்கும்
கவிஞர் தியாரூ எழுதிய
எழுச்சிமிகு 4 நூல்கள் வெளியீட்டு விழா

இன்னும் சற்று நேரத்தில் இனிதே துவங்க உள்ளது.

அனைவரையும் அன்புடன் அழைப்பதில் மகிழ்கிறது எமது நிறுவனம்.

நேரம் மாலை 5.30 மணியளவில்
ஹோட்டல் பாம்குரோவ்
நுங்கம்பாக்கம் ,சென்னை

 #சுதந்திரச்_சுடர்கள்த.ஸ்டாலின் குணசேகரன்Stalin Gunasekaran T இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றைப் பேசும் எண்ணற்றநூல்கள்...
08/08/2025

#சுதந்திரச்_சுடர்கள்

த.ஸ்டாலின் குணசேகரன்
Stalin Gunasekaran T

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றைப் பேசும் எண்ணற்ற
நூல்கள் ஏராளம் பேரால் எழுதப்பட்டு தமிழில் வெளிவந்துள்ளன.
வந்துகொண்டே இருக்கின்றன. தமிழகத்தின் ஆற்றொழுக்கான
பேச்சாளர்களில் ஒருவரும் நற்சிந்தனையாளருமான
த.ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் ஆற்றிய உரைகளின் எழுத்து வடிவமே சுதந்திரச் சுடர்கள் என்னும் தலைப்பிலான இந்நூல்.

ஏற்கெனவே விகடன்
வெளியீடாக வெளிவந்து ஏகோபித்த வரவேற்பையும் பரவலான
வாசிப்பையும் கவனிப்பையும் பெற்ற இந்நூல் தற்போது எமது
பதிப்பகத்தால் வெளியிடப்படுகிறது.

ஈரோட்டில் தேசிய நல விழிப்புணர்வு இயக்கம் நடத்திய மாதமொரு கூட்டத்தில் ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் நிகழ்த்திய 15 உரைகளின் எழுத்துருவாக்கமாக இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது.

இவரது 'விடுதலை வேள்வியில் தமிழகம்'எனும் மிக
முக்கியமானதொரு நூல் விடுதலைப் போராட்ட வரலாற்றில் அறியப்படாத பல அரிய தகவல்களை உள்ளடக்கிய நூலாகும். அதைத் தொடர்ந்து வந்திருக்கக்கூடிய இந்நூல் பல புதிய
செய்திகளையும் அரிய தகவல்களையும் உள்ளடக்கியதாக அமைந்துள்ளது.

இந்நூலுக்கு அணிந்துரை எழுதியுள்ள தமிழருவி மணியன் அவர்களின் கூற்று இந்நூலின் சிறப்பை எடுத்துரைப்பதாக
அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

'தமிழகத்தில் காந்தியடிகள்' முதல் 'விடுதலைப் போரில் தமிழ் இதழ்கள்' முடிய பதினைந்து தலைப்புகளில் ஸ்டாலின் குணசேகரன் ஆற்றியிருக்கும் உரைகள் அனைத்தும்
அற்புதமானவை. நாம் மறந்துவிட்ட வரலாற்றுச் செய்திகளைப் புதிய எழுச்சியுடன், மேலான சமூக நோக்குடன் நம் நினைவில்கொண்டு வந்து நிறுத்தக்கூடியவை. ஒவ்வொரு
கல்லூரியிலும் இந்த நூல் பாடப் புத்தகமாக வைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு உரையிலும் ஒரு நூறு புதிய செய்திகள்

பூத்துக் குலுங்குகின்றன. வரலாற்று நூல்களை நுணுக்கமாக
வாசிப்பவர்கள்கூட இதுவரை அறிந்திராத செய்திகளை இந்த 'உரை
நூல்' அறிமுகப்படுத்துகிறது.
காந்தியடிகள் தமிழகத்திற்கு வந்த வரலாற்று நிகழ்வுகளோடு
தொடங்கும் இந்நூல் சுபாஷ் சந்திர போஸ், பாரதியார், பகத்சிங்,
வ.உ.சி., ஜி.சுப்பிரமணிய ஐயர் எனத் தொடர்ந்து விடுதலைப் போரில்
தமிழ் இதழ்கள் என்பதாக 15 உரைகள் இதில் இடம்பெற்றுள்ளன.
ஒவ்வொரு உரையும் தனித்த சிறப்புகளோடு அமைந்திருப்பது
இந்நூலின் தனித்துவமாகும்.

இந்திய விடுதலைப் போரில் மறைக்கப்பட்ட, மறக்கப்பட்ட,
அறியப்படாத பல வரலாற்றுத் தகவல்களைக் கொண்ட களஞ்சியமான
இந்நூல் தேசத்தை நேசிக்கும் ஒவ்வொருவர் இல்லத்திலும் இருக்க
வேண்டியது அவசியமாகும்.

எமது நியூசெஞ்சுரி புத்தக நிறுவனத்தின் வெளியீடு

கெட்டி அட்டை பதிப்பு
விலை ரூபாய் 600 மட்டும்

புத்தகத் தேவைக்கான தொடர்புக்கு
இரா.மு.தனசேகரன்
என்.சி.பி.எச், அம்பத்தூர்
சென்னை
081249 49491

 #காலம்_தோறும்_கம்யூனிஸ்டுகள்  #உடனே_முன்பதிவு_செய்வீர்!_______________________________காலம் தோறும் கம்யூனிஸ்ட்கள் நூல் ...
11/07/2025

#காலம்_தோறும்_கம்யூனிஸ்டுகள்
#உடனே_முன்பதிவு_செய்வீர்!
_______________________________

காலம் தோறும் கம்யூனிஸ்ட்கள்
நூல் வெளியீட்டு விழா
28.07.2025 திங்கட்கிழமை
மாலை 4.00 மணிக்கு காமராஜர் அரங்கம், தேனாம்பேட்டை, சென்னையில் நடைபெற உள்ளது.

காலம் தோறும் கம்யூனிஸ்ட்கள் நூலை முன்பதிவு செய்து ரூ.400 தள்ளுபடி செய்து ரூ.1600/- நூலை பெற்றுக் கொள்ளலாம்.

**************************

கீழே உள்ள வங்கி கணக்கிற்கு பணத்தை செலுத்தி விவரத்தை 94433 23840 என்ற whatsapp நம்பருக்கு அனுப்பவும்.

Central Bank
A/C : 1035208923
IFSC : CBIN0282161
BRANCH : AMBATTUR
Current account

நூல் வெளியீட்டு விழா அன்று அரங்கில் புத்தகங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் விபரங்கள் மற்றும் தொடர்புக்கு,

இரா.மு.தனசேகரன்,
என்.சி.பி.எச், அம்பத்தூர்,
சென்னை.
8124949491

அன்பான தோழர்களுக்கு வணக்கம்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டை முன்னிட்டு எமது நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின்வரல...
10/07/2025

அன்பான தோழர்களுக்கு வணக்கம்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டை முன்னிட்டு எமது
நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின்
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பு வெளியீடாக,

#காலம்தோறும்_கம்யூனிஸ்டுகள்

நூல் வெளியீட்டு விழா 28.07.2025 அன்று சென்னை தேனாம்பேட்டை காமராசர் அரங்கத்தில் இனிதே நடைபெற உள்ளது.

நூலினை மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டு சிறப்பிக்க உள்ளார்.

விழாவில் முதல் தொகுதியை தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்களும்,

இரண்டாம் தொகுதியை கவிப்பேரரசு வைரமுத்து அவர்களும் பெற்றுக் கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் தாங்களும், சக தோழர்களோடும்,
உறவுகளோடும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்து தருமாறு அன்புடன் அழைப்பதில் மகிழ்கிறது எமது நிறுவனம்.

தோழமையுடன்,
இரா.மு.தனசேகரன்,
என்.சி.பி.எச்,
அம்பத்தூர்,சென்னை.
081249 49491

இன்றைய 27.06.2025 நிகழ்வு♥நியூ செஞ்சுரி மெட்ரிகுலேஷன் பள்ளியின் குழந்தைகளுக்கான புதிய கட்டிட திறப்பு விழா இனிதே நடைபெற்ற...
27/06/2025

இன்றைய 27.06.2025 நிகழ்வு♥

நியூ செஞ்சுரி மெட்ரிகுலேஷன் பள்ளியின் குழந்தைகளுக்கான
புதிய கட்டிட திறப்பு விழா
இனிதே நடைபெற்றது.

புதிய கட்டிடத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் முத்தரசன் அவர்கள் திறந்து வைத்து சிறப்பித்தார்.

விழாவில் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் தோழர் க.சந்தானம் மற்றும் நியூ செஞ்சுரி மருத்துவமனையின் மருத்துவர்கள், பெற்றோர்கள்,மாணவ மாணவிகள்,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அண்ணா அறிவாலயத்தில்திமுகவின் அமைப்புச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான திரு.டி.கே.எஸ் இளங்கோவன் அவர்களைச் சந்தித்து...
27/06/2025

அண்ணா அறிவாலயத்தில்
திமுகவின் அமைப்புச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான
திரு.டி.கே.எஸ் இளங்கோவன் அவர்களைச் சந்தித்து அம்பேத்கர் நூல் தொகுப்பை வழங்கினோம்.

பனுவல் புத்தக நிலையத்தில் இயக்குநர் சீனு ராமசாமி அவர்களைச் சந்தித்து அவருடைய புதிய நூலாகிய  #மேகங்களின்_பேத்தி நூலைப் பெ...
24/06/2025

பனுவல் புத்தக நிலையத்தில் இயக்குநர் சீனு ராமசாமி அவர்களைச் சந்தித்து அவருடைய புதிய நூலாகிய
#மேகங்களின்_பேத்தி நூலைப்
பெற்றுக் கொண்டோம்.

தேனீரைத் தவிர்த்து
சிறிது கவிதை பருகினோம்...♥

Address

41/B Siddco Industrial Estate Ambattur
Chennai
600050

Opening Hours

Monday 9:30am - 8:30pm
Tuesday 9:30am - 8:30pm
Wednesday 9:30am - 8:30pm
Thursday 9:30am - 8:30pm
Friday 9:30am - 8:30pm
Saturday 9:30am - 8:30pm

Telephone

+918124949491

Alerts

Be the first to know and let us send you an email when NCBH Tamilnadu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NCBH Tamilnadu:

Shortcuts

Share

Category