A Journey Through Hinduism: Tracing the History, Beliefs, and Practices

  • Home
  • India
  • Sirkali
  • A Journey Through Hinduism: Tracing the History, Beliefs, and Practices

A Journey Through Hinduism: Tracing the History, Beliefs, and Practices “கடவுள்” அனைத்து எல்லைகளையும் கடந்த அப்பாற்பட்ட ஒன்று.

கார்த்திகை மாத ராசிபலன்கள்.
20/11/2025

கார்த்திகை மாத ராசிபலன்கள்.

சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்..! 🛕 மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ள சட்டைநாதர் கோயில் 7-ம் நூற்றாண்டைச் சேர...
08/02/2025

சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்..! 🛕

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ள சட்டைநாதர் கோயில் 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. கிபி 603ம் ஆண்டு பல்லவ மன்னன் இரண்டாம் அவனிசிம்மன் என்றழைக்கபட்ட சிம்மவிஷ்ணுவால் கட்டப்பட்டது.

மூலவர்: சட்டைநாதர் (பிரம்மபுரீஸ்வர்) சமேத சுந்தரியம்மாள் ஸ்வாமிகள்.

ஸ்தல வரலாறு பெயர்கள்:

சீர்காழி ஒரு சிறப்பு வாய்ந்த ஊர். இவ்ஊருக்கு பல பெயர்கள் உண்டு.
பிரம்மபுரம், வேணுபரம், புகலி, கழுமலவளநகர், வெங்குரு, பூந்தராய், புறவம், சண்பை, சிரபுரம், தோணிப்புரம், ஶ்ரீகாளிப்புரம், ஶ்ரீகாளி விண்ணகரம், விண்ணகரம்(சோழர் காலத்தில்), காழியூர்
சீகாழி, சீர்காழி.

காழி- Great Strength, Hardness, உறுதி.

சிறப்புகள்:

சிவன் - பார்வதி உருவ வழிபாடு கயிலாயத்திற்கு அடுத்தப்படியாக வேறு எங்கும் காண முடியாத அற்புத தரிசனம் சீர்காழி சட்டைநாதர் திருக்கோயிலில், உமாமகேஸ்வரி சமேத தோணியப்பர் ஸ்வாமி தம்பதியினர் அற்புத முழு உருவக் காட்சியளிக்கிறார்கள். சிவாமிக்கு ஆண்டுக்கு 8 முறை தைலக் காப்பு எனும் சாம்பிராணித் தைலம் சாத்தப்படுகிறது. ஆண்டுக்கு ஒரு முறை வீதியுலா உற்சவம் நடைப்பெரும்.

இந்தத் திருக்கோயில் திருஞானசம்பந்தருக்கு அம்பாள் தனது பாலை ஞானப்பால் வழங்கியருளிய ஸ்தலம்.

சட்டச் சிக்கல்கள், பில்லி, சூனியம், எதிரிகள் தொல்லைகள் நீங்க இங்கு சுக்கரவார பூஜை நடைபெறுகிறது.

தேவார தலங்கள் 274-ல் இந்தச் சீர்காழி சட்டைநாதர் கோயில் 14-வது தலமாக விளங்குகிறது.

சட்டைநாதர் வரலாறு:

இரணியனது உயிர் குடித்த நரசிங்கம் அகங்கரித்துத் திரிந்தபோது அதனை அடக்கி, அதன் எலும்பை கதையாகவும், தோலைச் சட்டையாகவும் தரித்த வடுக நாதரே சட்டைநாதர் என்று ஸ்தலம் வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தோணியப்பர் வரலாறு:

சீர்காழி பிரம்மபுரமாக இருந்த காலக்கட்டத்தில் தொடர்ச்சியாக 15நாட்கள் விடாத பேய்மழைப் பெய்தது. குளங்கள் குட்டைகள் நிரம்பி வழிந்தன தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது வீட்டுக்குள் புகுந்தது. ஆடு, மாடுகள் போன்ற வளர்ப்புபிராணிகள் இறந்தன. மக்கள் உயிருக்கே ஆபத்து உண்டாகும் நிலை உருவானது. அந்நேரத்தில் தோணியபப்பர் விண்அளவிற்கு விஸ்வரூபம் எடுத்தார். தனது பெரிய ஏர் கலப்பையால் தண்ணீர் மகா சமுத்திரத்தில் சென்றடைய ஒரு ஆறு வெட்டினார். மழை நீர் ஆறு வழியே ஆழியைச் சென்று வெள்ளம் அடங்கியது. அந்த ஆறுதான் கொள்ளிடம் ஆறு. எவ்வளவு நீர் வந்தாலும் கொள்ளும் அதனால் அதற்கு கொள்ளிடம் என பெயர்காரணமானது.

திருஞானசம்பந்தர் வரலாறு:

7-ம் நூற்றாண்டில் கி.பி 637ல் ஒரு திருவாதிரை திருநாளன்று சம்பந்தர் பிறந்தார். சம்பந்தர் மூன்று வயதாக இருந்தபொழுது ஒருநாள் தனது தந்தையுடன் சட்டைநாதர் கோயிலிலுக்குச் சென்றார். சம்பந்தரைக் கோயிலில் உள்ள பிரம்மதீர்த்தக் குளக்கரையில் அமரவைத்துவிட்டு சிவபாதகிருதயர் குளத்தில் மூழ்கி மூச்சடக்கி தரையில் அமர்ந்து மந்திரத்தை ஜெபித்தபடி நீராடினார். பசியால் வாய்பேசா சம்பந்தர் மலை மீது காட்சியளிக்கும் தோணியப்பரை நோக்கி அம்மே, அப்பா என்று அழுதார்.

இதனைக் கண்ட சிவபெருமானும், பார்வதிதேவியும் ரிஷப வாகனத்தில் அழும் குழந்தையருகே வந்தனர். அப்போது சிவபெருமான் பார்வதிதேவியிடம் உனது குமரன் அழுகிறான். இவனுக்கு உன்னுடைய தனத்திலிருந்து பாலூட்டுவாயாக என்று திருவாய் அருளினார். அதேபோன்று பார்வதிதேவியும் தனத்திலிருந்து குழந்தைக்கு ஞானப்பாலை ஊட்டினார். வாய்பேசா குழந்தை சம்பந்தர் பாலருந்தியப்பிறகு புலவராக பாடினார் அது முதல் சம்பந்தராக இருந்தவர் திருஞானசம்பந்தராக போற்றப்பட்டார். பின்னர் சுவாமி - அம்மன் ஒருசேரக் காட்சி தந்து மறைந்தனர்.

தேவாரப் பாடல் தோன்றிய தலம்

நீராடி வந்த சிவபாதகிருதயர், திருஞானசம்பந்தர் கடைவாயில் பால் ஒழுகுவதைக் கண்டு யாரிடம் பால் வாங்கிக் குடித்தாய் என்று ஒரு சிறுகுச்சியால் திருஞானசம்பந்தரை அடித்தார்.

அப்போது திருஞானசம்பந்தர் தனது சுட்டுவிரலால் அம்மையுடன் தோன்றிய அப்பனை சுட்டிக்காட்டி 'தோடுடைய செவியன்' என்று தொடங்கும் முதல் திருப்பதிகத்தைப் பாடினார். இதனை பார்த்த சிவபாதகிருதயர் தெய்வக் குழந்தையான திருஞானசம்பந்தரை வணங்கிக் கொண்டாடினார். அது முதல் வேதநெறி தழைத்தோங்க தலங்கள்தோறும் சென்று திருஞானசம்பந்தர் சிவனை நோக்கித் திருப்பதிகங்கள் பாடிவரலானார்.

ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவாதிரை தினத்தன்று ஞானப்பால் வழங்கிய நிகழ்வு திருமுலைப்பால் விழாவாக லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வெகுவிமரிசையாக 10 நாள் விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. நிவேதித்த பாலை பக்தர்கள் உண்டு மறுமுலைப்பாலுண்ட பேறு பெறுகின்றனர்.

இந்தப் பாலை வாங்கிக் குடிக்கும் கர்ப்பிணிகளுக்குப் பிறக்கும் குழந்தைகள் ஞானக் குழந்தையாகவும் அறிவாற்றலுடனும் உலகம் போற்றுபவராகவும், கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது ஐதீகம்.

ஐப்பசி மாத ராசிபலன்கள்:மீனம்: பூரட்டாதி 4 ம் பாதம் ..வாழ்க்கையை புரிந்து வாழ்ந்து வரும் உங்களுக்கு பிறக்கும் ஐப்பசி மாதம...
26/10/2024

ஐப்பசி மாத ராசிபலன்கள்:

மீனம்:

பூரட்டாதி 4 ம் பாதம் ..வாழ்க்கையை புரிந்து வாழ்ந்து வரும் உங்களுக்கு பிறக்கும் ஐப்பசி மாதம் சிந்தித்து செயல்பட வேண்டிய மாதம். ராசிநாதன் வக்ரமடைந்திருப்பதால் இதற்கு முன்பிருந்த சங்கடங்கள் இல்லாமல் போகும். நெருக்கடி நீங்கும். மனக்குழப்பம் விலகும். அதே நேரத்தில் மற்ற கிரகங்களின் சஞ்சாரம் உங்களுக்கு எதிர்மறையாக இருக்கும். ஒவ்வொரு செயலிலும் நிதானமாக, யோசித்து அடி எடுத்து வைக்க வேண்டும். ஜென்மத்தில் சஞ்சரிக்கும் ராகு தவறான பாதைக்கு அழைத்துச் செல்லலாம். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது நட்புகளால் குடும்பத்தில் குழப்பங்களை உண்டாகும். சூரியனால் நெருக்கடி அதிகரிக்கும். சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் செலவு அதிகரிக்கும். இதையெல்லாம் கவனத்தில் கொண்டு நீங்கள் செயல்பட வேண்டும். பணிபுரியும் இடத்தில் வேலையில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்க கூடாது. குடும்ப உறவுகளை அனுசரித்துச் செல்வது இக்காலத்தில் நன்மையாக இருக்கும். தவறான நட்புகளை விட்டு விலகுவது பெரும் சங்கடங்களில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வழியாகும். நவ 8 வரை சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் பொன் பொருள் சேர்க்கை இருக்கும். வரவு அதிகரிக்கும். எல்லாவற்றையும் சமாளிக்கும் சக்தி உண்டாகும். தம்பதிகள் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது இந்த நேரத்தில் அவசியம். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் அக்கறை தேவை.

சந்திராஷ்டமம்: அக் 31

அதிர்ஷ்ட நாள்: அக் 21, 30. நவ 3, 12.

பரிகாரம்: முன்னோரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.



உத்திரட்டாதி: நீதி நேர்மை நியாயம் அந்தஸ்து கௌரவம் என்ற வட்டத்திற்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதம். விரய ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் உங்கள் நட்சத்திர நாதன் சனி பகவான் நவ 4 முதல் வக்ர நிவர்த்தி அடைவதால் செலவுகள் பல வழியிலும் அதிகரிக்கும். அதனால் வரவு செலவில் கவனமாக இருப்பது அவசியம். உங்கள் ராசிநாதன் வக்ரம் அடைந்திருப்பதால் சிந்திக்காமல் செயல்படக்கூடிய நிலை ஏற்படும். அதன் காரணமாக நெருக்கடிக்கு ஆளாக நேரும். கேதுவால் வாழ்க்கைத் துணைக்கும் உங்களுக்கும் இடையே ஒரு இடைவெளி ஏற்படும். ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் ராகு ஆசைகளை அதிகரிப்பார். ஒரு சிலரை சட்டத்திற்குப் புறம்பான வேலைகளிலும் ஈடுபட வைப்பார். செவ்வாய் சாதகமாக இல்லாததால் எதிர்பார்த்த இடத்தில் இருந்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். உடல் நிலையில் சங்கடம் தோன்றும். தேவையற்ற பிரச்னை தேடி வரும். சூரியன் சஞ்சரிப்பதால் செய்து வரும் தொழிலில் பின்னடைவு ஏற்படும். ஒரு சிலருக்கு அரசு வழியில் அபராதம் கட்ட நேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளால் சங்கடம் தோன்றும். வேலையில் பிரச்னை அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்களும் எதிராக மாறக்கூடிய நிலை ஏற்படும். பெரும்பாலான கிரகம் இந்த மாதத்தில் எதிர்மறையாகவே கிரகம் சஞ்சரிப்பதால் நிதானம் அவசியம். புத பகவானால் எந்த ஒன்றிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு சாதித்துக் கொள்வீர். ஒரு சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். கேட்டிருந்த இடத்திலிருந்து பணம் வரும். அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை உயரும். உங்கள் எண்ணம் ஈடேறும். மாணவர்கள் படிப்பில் முழுமையாக கவனம் செலுத்துவது நல்லது.

சந்திராஷ்டமம்: அக் 31. நவ 1.

அதிர்ஷ்ட நாள்: அக் 21, 26, 30. நவ 3, 8, 12.

பரிகாரம்: சனீஸ்வரரை வழிபட சங்கடம் நீங்கும்.



ரேவதி:சூழ்நிலை அறிந்து செயல்படும் உங்களுக்கு பிறக்கும் ஐப்பசி மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதம். பெரும்பாலான கிரகம் இந்த மாதத்தில் எதிர்மறையாக சஞ்சரிப்பதால் இதுவரை எளிதாக நடந்து வந்த வேலை கடும் முயற்சிக்குப்பின் நிறைவேறும். புத பகவான் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். நினைப்பது நடந்தேறும். புதிய சொத்து வாங்கும் முயற்சி வெற்றியாகும். தொழிலை விரிவு செய்யும் வேலையில் ஒரு சிலர் ஈடுபடுவீர். சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் பொன் பொருள் சேர்க்கை இருக்கும். பண வரவு அதிகரிக்கும். இருந்தாலும், ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் ராகு உங்கள் மனதில் ஆசைகளை உண்டாக்குவார். அதன் காரணமாக சங்கடங்களை சந்திக்க வேண்டி வரும். சப்தம ஸ்தானத்தில் கேது சஞ்சரித்து வருவதால் தம்பதிகளுக்குள் நெருக்கடி உண்டாகும். வீண் பிரச்னை பெரிதாகும். பிற நபர்களால் குடும்பத்திற்குள் குழப்பம் ஏற்படும். தேவையற்ற நபர்களை உங்கள் நட்பில் இருந்து விலக்கி வைப்பது நல்லது. சூரியனால் உடல் ரீதியாக சில சங்கடம் தோன்றலாம். இக்காலத்தில் அனைத்திலும் கவனம் அவசியம். செய்து வரும் தொழிலில், பார்த்து வரும் உத்தியோகத்தில் எதிர்பாராத நெருக்கடி, சட்ட சிக்கல் உண்டாவதற்கு வாய்ப்புண்டு. சனி பகவான் நவ 4 முதல் வக்ர நிவர்த்தி அடைவதால் வீண் செலவும்

ஐப்பசி மாதம் ராசிபலன்:கும்பம்: அவிட்டம் 3, 4 ம் பாதம்:எந்த ஒரு நிலையிலும் சங்கடப்படாமல் தொடர்ந்து முன்னேற்றத்தை நோக்கி ந...
26/10/2024

ஐப்பசி மாதம் ராசிபலன்:

கும்பம்:

அவிட்டம் 3, 4 ம் பாதம்:எந்த ஒரு நிலையிலும் சங்கடப்படாமல் தொடர்ந்து முன்னேற்றத்தை நோக்கி நடைபோட்டு வரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் சிந்தித்து செயல்பட வேண்டிய மாதம். ஜென்ம சனியின் தாக்கம் உங்களுக்கு ஏற்படும். வாழ்க்கைத் துணையுடன் பிரச்னை உண்டாகும். உடல் நிலையில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். கூட்டுத் தொழிலில் நெருக்கடி அதிகரிக்கும். நண்பர்கள் உங்களை விட்டுப் பிரிந்து செல்லக்கூடிய நிலை ஏற்படும். அஷ்டம கேதுவின் சஞ்சாரம் உங்கள் நிலையில் சில சங்கடங்களை ஏற்படுத்தும். உங்கள் உடல் நிலையில் இருந்த பாதிப்பு விலகும். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட போட்டி நீங்கும். போட்டியாளர்கள் பலமிழப்பர். இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும். தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். குடும்ப உறவுகளை இக்காலத்தில் அனுசரித்துச் செல்வது நல்லது. வார்த்தைகளில் கவனம் தேவை. வரவு செலவில் எச்சரிக்கை அவசியம். புதன் பகவான் சாதகமாக சஞ்சரிப்பதால் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். இழுபறியாக இருந்த விவகாரம் முடிவிற்கு வரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். அரசியல்வாதிகள் இக்காலத்தில் கவனமாக செயல்படுவது நல்லது. தலைமையை அனுசரித்துச் செல்வதால் நல்லது. தனியார் நிறுவனத்தில் பணிபுரிவோர் நிதானமாக செயல்பட வேண்டும். ஒரு சிலருக்கு தேவையற்ற பிரச்னை தேடிவர வாய்ப்பிருப்பதால் அமைதியாக, வழக்கமான வேலைகளில் கவனம் செலுத்தி வருவது மட்டுமே இக்காலத்தில் நன்மை அளிக்கும்.

சந்திராஷ்டமம்: அக் 29, 30.

அதிர்ஷ்ட நாள்: அக் 18, 26, 27. நவ 8, 9

பரிகாரம்: இம்மையிலும் நன்மை தருவாரை வழிபட இன்னல் தீரும்.



சதயம்: நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் திட்டமிட்டு செயல்பட்டு வரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் முயற்சிக்கேற்ப முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் சிறு சிறு குழப்பம் ஏற்படும். வருமானத்தில் தடையும் தாமதமும் உண்டாகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத நிலை ஏற்படும். அஷ்டம ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் உடல் நிலையில் சங்கடம் தோன்றும். உங்களுடைய செல்வாக்கிற்கும் அந்தஸ்திற்கும் குறைவு ஏற்படுகிற நிலை உண்டாகும். இந்த நேரத்தில் நவ 4 ல் ஜென்ம ராசிக்குள் சஞ்சரித்து வரும் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் செய்து வரும் தொழிலில் நெருக்கடி உண்டாகும். உங்களுக்கு பக்க பலமாக இருந்தவர்கள் விலகிச் செல்லும் நிலை உண்டாகும். வாழ்க்கைத் துணைக்கும் உங்களுக்கும் எப்போதும், ஏதாகிலும் ஒரு பிரச்னை உண்டான படி இருக்கும். கூட்டுத் தொழிலில் நெருக்கடி ஏற்படும். எல்லாவிதமான சங்கடங்களையும், நெருக்கடிகளையும் வெற்றி கொள்ள முடியும். பிரச்னை எதுவாக இருந்தாலும் அதிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். அக் 25 முதல் புதன் உங்களுக்கு சாதகமாக சஞ்சரிப்பதால் தடைபட்ட முயற்சி வெற்றியாகும். இழுபறியாக இருந்த விவகாரம் முடிவிற்கு வரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். நவ 8 முதல் அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரனின் சஞ்சார நிலை சாதகமாக இருப்பதால் பொன் பொருள் சேரும். ஒரு சிலர் புதிய வாகனம் வாங்குவீர். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும்.

சந்திராஷ்டமம்: அக் 30, 31

அதிர்ஷ்ட நாள்: அக் 22, 26. நவ 4, 8, 13.

பரிகாரம்: காளியை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.



பூரட்டாதி 1, 2, 3 ம் பாதம்: நீதி நேர்மை நியாயத்தையும் மனதில் கொண்டு வாழும் உங்களுக்கு பிறக்கும் ஐப்பசி மாதம் உங்கள் வாழ்வில் புதிய பாதையைக் காட்டும் மாதம். உங்கள் நட்சத்திரநாதன் 4 ம் இடத்தில் வக்ரம் அடைந்திருப்பதால் அவருடைய பார்வைகளின் பலன்களும் இந்த நேரத்தில் உங்களுக்கு கிடைக்காமல் போகும். அதே நேரத்தில் அக் 24 முதல் ஆற்றல் காரகனான செவ்வாய் பகவான் 6 ம் இடத்தில் சஞ்சரிப்பதால் எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் அதை சமாளித்திடக்கூடிய சக்தி ஏற்படும். எந்த ஒன்றையும் எதிர்கொண்டு செயல்படுவீர்கள். உங்கள் உடல்நிலையில் இருந்த பாதிப்பு நீங்கும். வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி, போட்டி விலகும். உங்களை எதிர்த்து செயல்பட்டவர் பலமிழப்பார். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வழக்கு உங்களுக்கு சாதகமாகும். என்றாலும், அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது, தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு ஏதாகிலும் ஒரு வகையில் நெருக்கடியை வழங்கிக் கொண்டிருப்பர். பொருளாதார ரீதியாக தடை உண்டாகும். சனி வக்ர நிவர்த்தி அடைவதால் செயல்களில் தடுமாற்றம் ஏற்படும். செய்துவரும் தொழிலில் எதிர்பாராத தடை ஏற்படும். எதை நீங்கள் பலமாக நினைத்து செயல்பட்டு வந்தீர்களோ அவற்றில் பின்னடைவு உண்டாகும். வாழ்க்கைத் துணையின் உடல் நிலையில் சங்கடம் உண்டாகும். கூட்டுத்தொழிலில் நெருக்கடி தோன்றும். புதன் உங்களைப் பாதுகாப்பார். வங்கியில் கேட்டிருந்த பணம் கைக்கு வரும். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். கலைஞர்களுக்கு எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம்: அக் 31

அதிர்ஷ்ட நாள்: அக் 21, 26, 30. நவ 3, 8, 12.

பரிகாரம்: வீரட்டேஸ்வரரை வழிபட வளம் உண்டாகும்.

ஐப்பசி மாதம் ராசிபலன்கள் மகரம்: உத்திராடம் 2, 3, 4 ம் பாதம்: நீதி நேர்மை நியாயங்களுக்கு கட்டுப்பட்டு வாழ்ந்து வரும் உங்க...
25/10/2024

ஐப்பசி மாதம் ராசிபலன்கள்

மகரம்:

உத்திராடம் 2, 3, 4 ம் பாதம்: நீதி நேர்மை நியாயங்களுக்கு கட்டுப்பட்டு வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் யோகமான மாதம். குரு பகவான் வக்ரம் அடைந்திருப்பதால் செயல்களில் நிதானம் தேவை. முன்புபோல், எல்லாம் எளிதாக நடந்து விடும். உங்கள் முயற்சி எந்த அளவிற்கு இருக்கிறதோ அந்த அளவிற்கு பலன்கள் கிடைக்கும். ராகு மாதம் முழுவதும் உங்களுக்கு யோகமான நிலையினை உண்டாக்குவார். செவ்வாய் சஞ்சரிப்பதால் அதுவரை உங்கள் செயல்கள் வெற்றியாகும். எதிர்ப்பு இல்லாமல் போகும் சக்தி வெளிப்படும். வம்பு வழக்கு என்றிருந்த நிலை சாதகமாகும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். எந்த ஒன்றிலும் நிதானமாக செயல்படுவது அவசியம். வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். இயந்திரப் பணிகளில் ஈடுபட்டு இருப்பவர்கள் கவனமாக செயல்பட வேண்டும். மாதம் முழுவதும் சூரியன் 10 ம் இடத்தில் சஞ்சரிப்பதால் எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் அதை சமாளித்துக் கொள்ளக்கூடிய சக்தி ஏற்படும். தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடையும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். தடைபட்டிருந்த வேலை நடந்தேறும். இக்காலத்தில் குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது மிகவும் அவசியம். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை உங்களுக்கு நன்மையை உண்டாக்கும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டி வரும்.

சந்திராஷ்டமம்: அக் 26, 27.

அதிர்ஷ்ட நாள்: அக் 19, 26. நவ 1, 8, 10.

பரிகாரம்: வராகியை வழிபட வளம் உண்டாகும்.



திருவோணம்: திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் சக்தி பெற்ற உங்களுக்கு பிறக்கும் ஐப்பசி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதம். இதுவரை உங்களுக்கு நன்மைகளை வழங்கி வந்த குரு பகவான் வக்ரம் அடைந்திருப்பதால் இதற்கு முன்பிருந்த நிலையில் மாற்றம் உண்டாகும். மிக எளிதாக நடைபெற்ற வேலை கூட இப்போது கடும் முயற்சியால் தான் முடிவிற்கு வரும். மாதத்தின் முதல் வாரத்தில் நினைத்த வேலைகளை உங்களால் நடத்திக் கொள்ள முடியும். பூமி சம்பந்தப்பட்ட விவகாரம் சாதகமாகும். அதன் பிறகு சில நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வரும் என்பதால் அதற்குள் அனைத்தையும் முடித்துக் கொள்வது நல்லது. மாதம் முழுவதும் சூரியன் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும். அரசாங்க வழியில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். தொழிலை விரிவு செய்யும் முயற்சி வெற்றியாகும். முழு நேரமும் தொழில் பற்றிய சிந்தனையே உங்களுக்குள் ஓடிக்கொண்டிருக்கும். இந்த நேரத்தில் 3 ம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகு உங்களுக்கு யோகப் பலன்களை தொடர்ந்து வழங்கிக் கொண்டிருப்பார். நீங்கள் எடுக்கும் முயற்சியின் அளவிற்கு உங்களுக்கு லாபம் ஏற்படும். ஒவ்வொரு செயலிலும் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தினரை இக்காலத்தில் அனுசரித்துச் செல்வது நல்லது. இதற்கு முன்பு எளிதாக இருந்த வரவில் இப்போது தடையும் தாமதமும் உண்டாகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகும். இயந்திரப் பணியில் இருப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வாகனத்தை இயக்கும்போது கவனம் வேண்டும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை இக்காலத்தில் நன்மை தரும். நன்றாக பழகி வந்தவர்களும் உங்களை விட்டு விலகிச் செல்லக்கூடிய நிலைமை உண்டாகும். இதுவரை கிடைத்து வந்த முன்னேற்றம் அந்தஸ்தில் சில பின்னடைவுகள் தோன்றக்கூடும் ஒவ்வொன்றிலும் நிதானமாகவும் கவனமாகவும் செயல்படுவது இக்காலத்தில் அவசியமானதாகும். பெரியவர்கள் ஆலோசனையை ஏற்று செயல்படுவதும், அவசர செயல்களை தவிர்ப்பதும் சங்கடங்களில் இருந்து விடுவிக்கும். தினப்பணியாளர்கள், சிறு வியாபாரிகள் எந்த ஒன்றிலும் அவசரப்பட வேண்டாம். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் அக்கறை கொள்வது அவசியம்.

சந்திராஷ்டமம்: அக் 27, 28

அதிர்ஷ்ட நாள்: அக் 20, 26, 29. நவ 2, 8, 11.

பரிகாரம்: ராமநாத சுவாமியை வழிபட வளம் உண்டாகும்.



அவிட்டம் 1, 2 ம் பாதம்: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு பிறக்கும் ஐப்பசி மாதம் நன்மையான மாதம். உங்கள் நட்சத்திர நாதனால் உடல் ஆரோக்கியம் சீராகும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி விலகும். இழுபறியாக இருந்த வழக்கு முடிவிற்கு வரும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். அதன் பிறகு கவனமாக செயல்படுவது அவசியம். மாதம் முழுவதும் முயற்சி ஸ்தானமான 3 ம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகுவும், தொழில் ஸ்தானமான 10 ம் இடத்தில் சஞ்சரிக்கும் சூரியனும் உங்களுக்கு நன்மைகளை வழங்கிட உள்ளனர். எந்த அளவிற்கு நீங்கள் முயற்சிகளை மேற்கொள்கிறீர்களோ அந்த அளவிற்கு ஆதாயம் கிடைக்கும். தொழில் லாபத்தை நோக்கிச் செல்லும். புதிய ஒப்பந்தம் வரும். வேலை வாய்ப்புக்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு அங்கீகாரம் உண்டாகும். இந்த நேரத்தில் அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரனும் சாதகமாக சஞ்சரிப்பதால் பொன் பொருள் சேர்க்கை, பணவரவு என்பது இருக்கும். சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் குடும்பத்தில் சிறு சலசலப்பு உண்டாகும். பணவரவில் தடை, தாமதம் என்ற நிலை ஏற்படும், உடல்நிலையில் ஏதேனும் சங்கடம் இருந்து கொண்டே இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத அளவிற்கு சூழ்நிலை மாறும். எல்லாவற்றிலும் கவனமாக செயல்படுவது மட்டும் தான் இக்காலத்தில் உங்களுக்கு நன்மையாக இருக்கும். வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வதும் அவரின் ஆலோசனைக்கு மதிப்பளிப்பதும் அவசியம். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

சந்திராஷ்டமம்: அக் 28

அதிர்ஷ்ட நாள்: அக் 18, 26. நவ 8, 9.

பரிகாரம்: திருத்தணி முருகனை வழிபட நன்மை உண்டாகும்.

ஐப்பசி மாதம் ராசிபலன்:தனுசு: மூலம்.. உதவுவதில் முன்னிலை வகிக்கும் குணமும் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஐப்பசி மாதம் யோகமான...
25/10/2024

ஐப்பசி மாதம் ராசிபலன்:

தனுசு:

மூலம்.. உதவுவதில் முன்னிலை வகிக்கும் குணமும் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஐப்பசி மாதம் யோகமான மாதம். இதுவரை இருந்த நெருக்கடி எல்லாம் இந்த மாதத்தில் உங்களை விட்டு விலகும். உங்கள் ராசிநாதன் 6 ம் இடத்தில் வக்ரம் அடைந்திருப்பதால் குடும்பத்தில் இனி நிம்மதி உண்டாகும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். பூர்வீக சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். எதிர்ப்பு நீங்கும். வியாபாரத்தில் இருந்த போட்டியாளர் விலகுவர். 3 ம் இடத்தில் சஞ்சரித்து வரும் சனி பகவான் நவ 4 முதல் வக்ர நிவர்த்தி அடைவதால் இனி உங்கள் முயற்சி எல்லாம் வெற்றியாகும். உத்தியோகம், தொழிலில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். உங்கள் ஆரோக்கியம் மேம்படும். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். பொருளாதார வரவு திருப்தி தரும். விலகிச் சென்ற உறவினர் உங்களைத்தேடி வருவர். வழக்கு விவகாரம் சாதகமாகும். சுக்கிரன் சஞ்சாரத்தினால் வரவு திருப்தி தரும். மாதத்தின் முதல் வாரத்தில் சில நெருக்கடி ஏற்படும். விவசாயிகள் தங்கள் முயற்சியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. ரியல் எஸ்டேட், பில்டர்ஸ் தொழிலில் இருப்பவர்கள் இக்காலத்தில் கவனமாக செயல்பட வேண்டும். மாணவர்களுக்கு அக் 25 வரை யோகமாக இருக்கும் அதன் பிறகு படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த நெருக்கடி விலகி லாபம் உண்டாகும்.

சந்திராஷ்டமம்: அக் 24, 25

அதிர்ஷ்ட நாள்: அக் 21, 30. நவ 3, 7, 12,

விநாயகருகருக்கு அருகம்புல் மாலை சார்த்தி வழிபட நன்மை உண்டாகும்.



பூராடம்: உங்களை முன்னிலைப் படுத்திக் கொள்வதிலும், பிறருக்கு வழிகாட்டுவதிலும் முதன்மையானவராக இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் யோகமான மாதம். இதுவரை உங்களுக்கிருந்த நெருக்கடி எல்லாம் விலக ஆரம்பிக்கும். உங்கள் நட்சத்திர நாதன் மாதம் முழுவதும் யோக பலன்களை வழங்கிட இருப்பதால் பல வகையிலும் வரவு உண்டாகும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். பொன் பொருள், புதிய வாகனம் சேரும். ஒரு சிலர் புதிய சொத்து வாங்குவீர். குடும்பத்திலிருந்த நெருக்கடி விலகும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியனால் அரசு வழி முயற்சி லாபத்தை உண்டாக்கும். எதிர்பார்த்த பணம் வரும். அனுமதி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு உண்டாகும். மேல் அதிகாரிகளின் ஆதரவு உண்டாகும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிவோருக்கு திறமைக்கேற்ற முன்னேற்றமும் ஊதிய உயர்வும் கிடைக்கும். விவசாயத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வாழ்க்கைத் துணை இக்காலத்தில் உங்களுக்கு அனைத்து வகையிலும் உதவியாக இருப்பார். நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். மாணவர்களுக்கு மாதத்தின் முற்பகுதியில் படிப்பில் அக்கறையும் பிற்பகுதியில் அலட்சியமும் ஏற்படலாம். இந்த நேரத்தில் படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது.

சந்திராஷ்டமம்: அக் 25, 26.

அதிர்ஷ்ட நாள்: அக் 15, 21, 24, 30. நவ 3, 6, 12, 15.

பரிகாரம்: மீனாட்சி சுந்தரேஸ்வரரை வழிபட வளம் உண்டாகும்.



உத்திரம் 1 ம் பாதம்: பிறருக்கு வழிகாட்டும் திறமையும் பெற்ற உங்களுக்கு பிறக்கும் ஐப்பசி மாதம் அதிர்ஷ்டமான மாதம். இதுவரை உங்களுக்கிருந்த நெருக்கடி எல்லாம் விலக ஆரம்பிக்கும். லாப ஸ்தானத்தில் உங்கள் பாக்யாதிபதி சூரியன் சஞ்சரிப்பதால் அரசு வழி முயற்சி எல்லாம் ஆதாயத்தை ஏற்படுத்தும். சட்ட சிக்கல் முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னை விலகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். ஒரு சிலருக்கு இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரம் தொடங்குவதற்காக எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு விருப்பம் பூர்த்தியாகும். மாதம் முழுவதும் அதிர்ஷ்டக் காரகனின் சஞ்சார நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் பொன் பொருள் சேர்க்கையும் புதிய வாகனம் வாங்கும் முயற்சியும் வெற்றியாகும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். மூன்றாம் இடத்தில் சஞ்சரித்து வரும் சனி பகவான் நவ 4 முதல் வக்ர நிவர்த்தி அடைவதால் இனி நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். செயல்களில் இருந்த தடை விலகும். உடல்நிலை முன்னேற்றமடையும். சுறுசுறுப்பாக செயல்படுவீர். வாழ்க்கைத் துணை உங்கள் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வார். பிள்ளைகள் உங்களுக்கு உதவியாக இருப்பர். உறவினரிடம் இருந்த மனக்கசப்பு விலகும். எதிர்பார்ப்பு எதிர்பார்த்தபடி பூர்த்தியாகி சந்தோஷம் அடைவீர். மாணவர்கள் மாதத்தின் பிற்பகுதியில் படிப்பில் கூடுதல் அக்கறை செலுத்துவது நல்லது.

சந்திராஷ்டமம்: அக் 26

அதிர்ஷ்ட நாள்: அக். 19, 21, 28, 30. நவ 1, 3, 10, 12.

பரிகாரம்: காலையில் சூரிய நமஸ்காரம் செய்ய நன்மை உண்டாகும்.

ஐப்பசி மாத ராசிபலன்கள்:விருச்சிகம்: விசாகம் 4 ம் பாதம்.. நினைத்ததை சாதிக்கும் வலிமை கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி ம...
25/10/2024

ஐப்பசி மாத ராசிபலன்கள்:

விருச்சிகம்:

விசாகம் 4 ம் பாதம்.. நினைத்ததை சாதிக்கும் வலிமை கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதம். உங்கள் நட்சத்திர நாதன் வக்ரம் பெற்றிருப்பதால் இதுவரை அவரால் கிடைத்த நற்பலன் கிடைக்காமல் போகும். சுலபமான வேலை கூட இப்போது இழுபறி ஆகும். எதிரிகள், வியாபார போட்டியாளர் கை மேலோங்கும். உங்கள் வேலைகளில் கவனமாக இருக்க வேண்டும். பிறரை நம்பி எந்தவொரு வேலையினையும் வழங்க வேண்டும். சூரியன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எல்லாவற்றிலுமே ஒருவித நெருக்கடி இருக்கும். வரவை விட செலவு அதிகரிக்கும். அரசு வழியில் சிலர் அபராதம் கட்ட நேரும். கவனமாகவும் நேர்மையாகவும் செயல்பட்டால் மட்டும்தான் அனைத்தையும் சமாளிக்க முடியும். அனைத்து விவகாரங்களிலும் எச்சரிக்கை தேவை. உத்யோகத்தில் இருப்பவர்கள் வேலை பளுவிற்கு ஆளாவர். வரவேண்டிய பணம் இழுபறியாகும். எதிர்பார்த்த விவகாரம் தள்ளிப் போகும். என்றாலும், இந்த நேரத்தில் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது உங்களைப் பாதுகாப்பார். நெருக்கடிகளில் இருந்து மீட்டெடுப்பார். நன்மைகளை அதிகரிப்பார். தெய்வ சிந்தனையும், கோயில் வழிபாடும் இந்த மாதத்தில் உங்களைப் பாதுகாக்கும். விவசாயிகள் விளைச்சலில் கவனம் செலுத்த வேண்டும். பணியாளர் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். மாணவர்களுக்கு அக் 25 முதல் படிப்பில் அக்கறை கூடும்.

சந்திராஷ்டமம்: அக் 22

அதிர்ஷ்ட நாள்: அக் 18, 21, 27, 30. நவ 3, 9, 12.

பரிகாரம்: திருச்செந்தூர் முருகனை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.



அனுஷம்: நீதி நேர்மை நியாயம் என அனைத்திலும் யோசித்து செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் சவாலான மாதம். சுக்கிரனால் பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். என்றாலும், செயல்பாட்டில் நெருக்கடி ஏற்படும். நவ 4 முதல் உங்கள் நட்சத்திரநாதன் வக்ர நிவர்த்தி அடைவதுடன் அவருடைய 10 ம் பார்வையால் உங்கள் ராசியையும் பார்க்கிறார். அதன் காரணமாக உடல் நிலையில் எதிர்பாராத சங்கடம் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதால் கவனமாக செயல்படுவது மட்டுமே இக்காலத்தில் சங்கடங்களில் இருந்து விடுபட முடியும். அரசு வழி விவகாரம் இழுபறியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத நெருக்கடி ஏற்படும். ஒரு சிலருக்கு வெளியூர் மாற்றம் உண்டாகும். தனியார் நிறுவனத்தில் பணியாற்றுவோர் பிறரை அனுசரித்துச் சென்று செயல்படுவது அவசியம். தேவையற்ற சங்கடங்களும் நெருக்கடிகளும் இக்காலத்தில் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த நேரத்தில் வாழ்க்கைத் துணையின் ஆதரவு மட்டுமே உங்கள் பலமாக இருக்கும். விவசாயிகள் கவனமாக செயல்பட வேண்டும். மாணவர்களுக்கு மாதத்தின் முற்பகுதியில் படிப்பில் கவனம் சிதறும் பிற்பகுதி யோகமாக இருக்கும்.

சந்திராஷ்டமம்: அக் 22, 23.

அதிர்ஷ்ட நாள்: அக் 18, 26, 27. நவ 8, 9,

பரிகாரம்: சனீஸ்வர வழிபாட்டால் சங்கடம் நீங்கும்.



கேட்டை: எளிதில் வெற்றிபெறும் சக்தி கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஐப்பசி மாதம் உழைப்பால் முன்னேற்றம் அடையும் மாதம். எதிர்பாராத செலவுகள் தோன்றும். ராசிநாதன் மாதத்தின் முற்பகுதியில் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எந்த ஒன்றிலும் போராடி வெற்றிபெற வேண்டிய நிலை உண்டாகும். உறவுகள் உங்களை நெருக்கடிக்கு ஆளாக்குவர். எதிர்பார்த்த பணம் வருவதில் இழுபறியாகும். வரவேண்டிய ஒப்பந்தம் தள்ளிப்போகும். அரசு வழி முயற்சிகளில் தடையும் தாமதமும் ஏற்படும். சுக ஸ்தானமான 4 ம் இடத்தில் சஞ்சரித்து வரும் சனி பகவான் நவ 4 முதல் வக்ர நிவர்த்தி அடைவதால், உடல் நிலையில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். வெளியூர் பயணங்களில் எச்சரிக்கை அவசியம். இதுவரை சுமூகமாக சென்று கொண்டிருந்த ஒவ்வொரு வேலையும் இப்போது நெருக்கடியை உண்டாக்கும். மனம் குழப்பம் அடையும். கேது வியாபாரம் தொழிலில் இருந்த நெருக்கடிகளை நீக்கி லாபத்தை வழங்குவார். ஜென்ம ராசிக்குள்ளும், தன ஸ்தானத்திலும் சஞ்சரிக்கும் சுக்கிர பகவான் உங்கள் நிலையை உயர்த்துவார். வரவை அதிகரிப்பார். சந்தோஷத்திற்கு ஆளாக்குவார். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். எவ்வளவு நெருக்கடிகள் வந்தாலும் அதை சமாளித்து விடுவீர்கள். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதால் மனம் தெளிவடையும். ஐந்தாம் இடத்தில் ராகு சஞ்சரிப்பதால் பிள்ளைகள் நலனில் இக்காலத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருவது நல்லது. மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது அவசியம்.

சந்திராஷ்டமம்: அக் 23, 24.

அதிர்ஷ்ட நாள்: அக் 18, 27. நவ 5, 9, 14.

பரிகாரம்: பைரவரை வழிபட பயம் போகும்.

ஐப்பசி மாத ராசிபலன்கள் துலாம்: சித்திரை 3, 4 ம் பாதம்: எதையும் துணிச்சலாக செய்யும் உங்களுக்கு பிறக்கும் ஐப்பசி மாதம் நின...
25/10/2024

ஐப்பசி மாத ராசிபலன்கள்

துலாம்:

சித்திரை 3, 4 ம் பாதம்: எதையும் துணிச்சலாக செய்யும் உங்களுக்கு பிறக்கும் ஐப்பசி மாதம் நினைத்ததை சாதிக்கும் மாதம். ராசிநாதன் மாதம் முழுவதும் சாதகமாக இருப்பதால் திறமை வெளிப்படும். குடும்பத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட சங்கடம் விலகும். தடைபட்ட வரவு கிடைக்கும். ஒரு சிலருக்கு பொன் பொருள், வாகனச்சேர்க்கை உண்டாகும். நினைத்ததை சாதி்க்கும் அளவிற்கு தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். குரு பகவானின் வக்ரத்தினால் இதற்கு முன்பிருந்த நெருக்கடி இனி இருக்காது. செயல்களில் தெளிவு இருக்கும். ஒவ்வொன்றையும் யோசித்து செயல்படக்கூடிய எண்ணம் உண்டாகும். தொழிலில் முன்னேற்றம் காண்பதற்கு திட்டம் தீட்டுவீர். வரவு செலவில் நிதானம் அவசியம். பிறரை அனுசரித்துச் செல்வது நல்லது. வித்யா காரகனால் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். எதிர்பார்த்த பணம் வரும். சமூகத்தில் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். ராசிக்குள் லாபாதிபதி சஞ்சரிப்பதால் விருப்பம் நிறைவேறும். உழைப்பில் தீவிர கவனம் செல்லும். அதன் காரணமாக ஒரு சிலருக்கு உடல் நிலையில் பாதிப்பு ஏற்படும். இந்த மாதம் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். கடந்த மாதத்தை விட வருவாய் அதிகரிக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். அக் 24 முதல் செவ்வாய் பத்தாமிடத்தில் சஞ்சரிப்பதால் அரசியல்வாதிகள், அதிகாரத்தில் இருப்பவர்கள் செல்வாக்கு உயரும். ஒரு சிலருக்கு விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும்.

சந்திராஷ்டமம்: அக் 20

அதிர்ஷ்ட நாள்: அக் 18, 24, 27. நவ 6, 9, 15.

பரிகாரம்: காளிகாம்பாளை வழிபட நன்மை அதிகரிக்கும்.



சுவாதி: உங்கள் விருப்பப்படியே செயல்பட்டு வரும் உங்களுக்கு பிறக்கும் ஐப்பசி மாதம் அதிர்ஷ்ட மாதம். ஆறாமிடத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் ஆற்றல் அதிகரிக்கும். எதிர்வரும் சோதனைகளை இல்லாமல் செய்வீர். நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ளும் அளவிற்கு செல்வாக்கு உயரும். குடும்பத்தில் இருந்த பிரச்னை விலகும். இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும். உடல் நிலையில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். தொழில், வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டி இல்லாமல் போகும். உத்தியோகத்தில் எதிராக செயல்பட்டவர் பலவீனம் அடைவர். இக்காலத்தில் உங்கள் திறமை வெளிப்படும். ராசிநாதன் மாதம் முழுவதும் சாதகமாக இருப்பதால் வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதியான சூழல் உண்டாகும். பணவரவில் இருந்த தடை விலகும். பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். லாப முயற்சி வெற்றியாகும். நவ 4 முதல் சனி வக்ர நிவர்த்தி அடைவதால் ஒவ்வொன்றிலும் அக்கறை செலுத்த வேண்டி வரும். குழந்தைகளை இக்காலத்தில் கவனித்து வழிநடத்துவது அவசியம். அதிவேக வாகனங்களால் அவர்களுக்கு சங்கடம் உண்டாகும். இழுபறியாக இருந்த பூர்வீக சொத்து விவகாரம் ஒரு முடிவிற்கு வரும். ஏற்றுக்கொள்வது நல்லது. வியாபாரம் தொழிலில் ஒரு சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். கலைஞர்களுக்கு லாபம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். விவசாயிகளுக்கு முன்னேற்றம் உண்டாகும். தினப்பணியாளர்கள், தொழிலாளர்களுக்கு எதிர்பார்த்த வருவாய் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த தடை விலகும்.

சந்திராஷ்டமம்: அக் 20, 21.

அதிர்ஷ்ட நாள்: அக் 22, 24, 31. நவ 4, 6, 13, 15.

பரிகாரம்: மகாலட்சுமியை வழிபட வளம் உண்டாகும்.



விசாகம் 1, 2, 3 ம் பாதம்: நினைத்த வேலைகளை நினைத்தபடி முடிக்கும் திறனும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் முன்னேற்றமான மாதம். அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் வக்ரம் அடைந்திருப்பதால் இதற்கு முன் இருந்த நெருக்கடி விலகும். உங்கள் அந்தஸ்தும் செல்வாக்கும் உயரும். திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். 6 ம் வீட்டில் சஞ்சரிக்கும் ராகு யோகத்தை அதிகரிப்பார். நினைத்த வேலைகளை முடித்திடக்கூடிய வழிகளை உண்டாக்குவார். எதிர்ப்பு, பிரச்னை என்றிருந்த நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவார். இழுபறியான வழக்கு சாதகமாகும். தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். புதனின் சஞ்சாரத்தால் நினைத்த வேலையை நடத்தி முடிப்பீர். ராசிக்குள் சூரியன் சஞ்சரிப்பதால் பதட்டம் அதிகரிக்கும். வேகமாக செயல்படுவீர். உடல் நிலையில் சில சங்கடம் தோன்றும். நவ 4 முதல் சனி பகவான் ஐந்தாமிடத்தில் வக்ர நிவர்த்தி அடைவதால் அனைத்திலும் கவனம் தேவை. குடும்பத்தினரை இக்காலத்தில் அனுசரித்துச் செல்வது நல்லது. வாழ்க்கைத் துணையின் ஆலோசனை கேட்டு செயல்படுவதால் நெருக்கடி இல்லாமல் போகும். பண வரவு தடையில்லாமல் வரும். அதனால், எல்லா பிரச்னைகளையும் சமாளித்திடக்கூடிய சக்தி ஏற்படும். வெளிநாட்டு தொடர்பு உங்களுக்கு நன்மையை உண்டாக்கும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மையாகும்.

சந்திராஷ்டமம்: அக் 21

அதிர்ஷ்ட நாள்: அக் 24, 30. நவ 3, 6, 12, 15.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபட முன்னேற்றம் உண்டாகும்.

ஐப்பசி மாத ராசிபலன்கள்:கன்னி: உத்திரம் 2, 3, 4 ம் பாதம்:..சூழ்நிலை அறிந்து செயல்படும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம்...
25/10/2024

ஐப்பசி மாத ராசிபலன்கள்:

கன்னி:

உத்திரம் 2, 3, 4 ம் பாதம்:..சூழ்நிலை அறிந்து செயல்படும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் அதிர்ஷ்ட மாதமாக இருக்கும். இதுவரை உங்களுக்கிருந்த நெருக்கடி ஒவ்வொன்றாக விலக ஆரம்பிக்கும். லாப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சி யாவும் லாபத்தில் முடியும். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடைவீர். பணியாளர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு செய்வர். சிலருக்கு புதிய சொத்து சேரும். ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், கெமிக்கல், மருத்துவம் போன்ற துறையினருக்கு லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும் ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைந்து ஆட்சியாக சஞ்சரிப்பதால் ஆற்றல் வெளிப்படும். எதிர்ப்பு இல்லாமல் போகும். உடல் நிலையில் இருந்த சங்கடம் விலகும். போட்டியாளர் விலகிச் செல்வர். வழக்கு விவகாரம் சாதகமாகும். உற்சாகமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். சுக்கிரன் உங்களுக்கு சாதகமாக சஞ்சரிப்பதால் வரவு திருப்தியாக இருக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு அதிகரிக்கும். புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் புதிய ஒப்பந்தம் ஒரு சிலருக்கு கிடைக்கும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். சிலருக்கு செல்வாக்கு அதிகரிக்கும். பணியாளர்களுக்கு இருந்த நெருக்கடி விலகும். பணவரவு திருப்தி தரும். மாணவர்களுக்கு மாதத்தின் முற்பகுதியில் படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம்: நவ 14.

அதிர்ஷ்ட நாள்: அக் 19, 23, 28. நவ 1, 5, 10.

பரிகாரம்: சங்கர நாராயணரை வழிபட வளம் உண்டாகும்.



அஸ்தம் ; எப்போதும் குழப்பமின்றி செயல்படும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் யோகமான மாதம். இதுவரை உங்களுக்கிருந்த நெருக்கடி, பிரச்னை ஒவ்வொன்றாக விலகும். குரு பகவான் வக்ரம் அடைந்திருந்தாலும் செவ்வாயும், சனியும் உங்கள் நெருக்கடியை குறைப்பர். எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டு. செல்வாக்கு உயரும். எதிர்ப்புகள் நீங்கும். போராட்ட நிலை முடிவிற்கு வரும். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட போட்டி இல்லாமல் போகும். எல்லாவற்றிலும் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். உடல் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். வழக்கு விவகாரம் சாதகமாகும். செவ்வாய் பகவான் அக் 26 முதல் சாதகமாக சஞ்சரிப்பதால் பூமி யோகம் ஒரு சிலருக்கு உண்டாகும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் புதனால் அக் 25 வரை நீங்கள் எடுக்கின்ற முயற்சியில் முன்னேற்றம் உண்டாகும். புதிய ஒப்பந்தம் உங்களுக்கு கிடைக்கும். வங்கியில் கேட்டிருந்த பணம் கைக்கு வரும். அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் சஞ்சாரத்தினால் வருமனம் உயரும். நவீன பொருட்கள் சேரும். கணவன் மனைவிக்குள் இருந்த இடைவெளி குறையும். எதிர்பார்ப்பு உடனுக்குடன் பூர்த்தியாகும். நினைத்ததை சாதித்துக் கொள்ளக்கூடிய வாய்ப்பு இந்த நேரத்தில் ஏற்படும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். விவசாயிகளுக்கு வருமானம் கூடும்.

சந்திராஷ்டமம்: அக் 18, 19. நவ 15.

அதிர்ஷ்ட நாள்: அக் 20, 23, 29. நவ 2, 5, 11, 14.

பரிகாரம்: கபாலீசுவரரை வழிபட சங்கடம் விலகும்



சித்திரை 1, 2 ம் பாதம்: துணிச்சலும் மனவலிமையும் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஐப்பசி மாதம் நன்மையான மாதம். உங்கள் ராசி அதிபதியும் நட்சத்திராதிபதியும் போட்டி போட்டு யோகத்தை வழங்குவர். அக் 24 முதல் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாயால் எடுக்கும் முயற்சி யாவும் லாபமாகும். விவசாயம், உணவகம், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், கெமிக்கல், மருத்துவம், காவல்துறை, தீயணைப்புத்துறை, பெட்ரோலியம் போன்ற பணிகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். சகோதரர்கள் வழியில் ஏற்பட்டிருந்த பிரச்னை விலகும்.

வருமானம் அதிகரிக்கும். தினப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்த வருமானம் வரும். குடும்பத்தில் சந்தோஷமான நிலை இருக்கும். சுக்கிரனின் சஞ்சார நிலையினால் பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். வருமானம் கூடும். நவீன பொருட்கள் வாங்க முடியும். இந்த நேரத்தில் குரு பகவான் வக்ரம் அடைந்திருப்பதால் ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் கேதுவும், சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவும் நட்புகள் வழியாக உங்களைத் தவறான பாதையில் அழைத்துச் செல்லும் என்பதால் ஒவ்வொரு செயலிலும் பின் விளைவுகள் பற்றி நன்றாக யோசித்து செயல்படுவது நல்லது. மாணவர்கள் மாதத்தின் பிற்பகுதியில் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டி வரும். விவசாயிகள் நிலை உயரும்.

சந்திராஷ்டமம்: அக் 19

அதிர்ஷ்ட நாள்: அக் 18, 23, 27. நவ 5, 9, 14.

பரிகாரம்: முருகனை வழிபட உங்கள் நிலை உயரும்.

Address

Sirkali

Website

Alerts

Be the first to know and let us send you an email when A Journey Through Hinduism: Tracing the History, Beliefs, and Practices posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share