23/08/2022
மீனவ பெருமக்களுக்கு வணக்கம்
கடந்த 18.08.2022 அன்று கடல் தொழிலுக்கு சென்ற மீனவர்கள் 22.08.2022 வரை கரை திரும்பாமல் மாயமானதால் காரைக்கால் மேடு மீனவ மக்களிடையே பெரும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது, அதனை தொடர்ந்து காரைக்கால் மேடு பஞ்சாயத்தார் மற்றும் பொதுமக்கள் முழு முயற்சியால் கடலில் தேடுதல் வேட்டைக்கு காரைக்கால் மேடு கிராமத்தை சேர்ந்த படகுகள் 23.08.2022 அதிகாலை கிளம்பின, அதன் பயனால் மாயமான மீனவர்களை கண்டுபிடித்து இன்று இரவு 8.30 மணியளவில் கரைத்திரும்பி அனைவரின் மனதுக்கு பெரும் ஆறுதல் ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்க உதவிய அனைவருக்கும் மனதார நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.