Akkaraipattu Book Fair

Call

Akkaraipattu Book Fair Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Akkaraipattu Book Fair, Book shop, akkaraipattu, Akkaraipattu.

15/06/2025
15/06/2025

அக்கரைப்பற்று புத்தகக்காட்சி இறுதி நாள் இன்று.
காலை 10 மணி தொடக்கம் இரவு 10 மணி வரை

14/06/2025

அக்கரைப்பற்று புத்தகக்காட்சியில் தற்போது
📚இஸ்லாமிய மறுமலர்ச்சி வரலாறு:
4 பாகங்கள்

♦Special Offer: 40% Discount♦

💥இந்த சலுகை ஜூன் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் மாத்திரமே

💥ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய அரிய நூல்!

✨அபுல் ஹஸன் அலி நத்வி
✨அறபியிலிருந்து தமிழில்: ஷாஹுல் ஹமீத் உமரி
✨சீர்மை வெளியீடு
✨4 பாகங்களுக்குமான மொத்த விலை: 16,170 ரூபா

40% விலைக்கழிவு: ♦விலைக்கழிவின் பின்னர் 9900 ரூபா♦

தொடர்புக்கு:
Page Book House
0757440505

வரலாற்றில் இஸ்லாம் சந்தித்துவந்துள்ள நெருக்கடிகளில் ஒரு பாதியை மட்டும் வேறெந்த மதமோ கருத்தியலோ சந்தித்திருந்தால், அது இந்நேரம் கடந்தகால வரலாறாக பாடநூல்களில் சுருங்கிப் போயிருக்கும்.

ஆனால் இஸ்லாமோ, இன்றும் மனிதகுல வரலாற்றின் போக்கினைத் தீர்மானிக்கும் மாபெரும் உலக சக்தியாகத் திகழ்ந்துகொண்டுள்ளது. தன்னைத்தானே தொடர்ச்சியாகப் புதுப்பித்துக்கொள்ளும் அதன் உள்ளார்ந்த ஆற்றலே அதற்குக் காரணம்.

ஒவ்வொரு நூற்றாண்டிலும் அல்லாஹ்வின் மார்க்கத்தை உயிர்ப்பிக்கும் ஆளுமைகள் தோன்றுவார்கள் என்ற பிரபல நபிமொழிக்கு ஒப்ப, அறுபடாத சங்கிலி போல் இஸ்லாமிய மறுமலர்ச்சியாளர்கள் அடுத்தடுத்து தோன்றி, இம்மார்க்கத்தின் உயிரோட்டத்தைக் காக்கும் தீரமிகு போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி வந்துள்ளார்கள்.

அந்த மறுமலர்ச்சி வரலாற்றின் முக்கியமான அத்தியாயங்கள்தாம் இந்நூலில் வரைந்து காட்டப்பட்டுள்ளன.

அரசர்கள், போர்த் தளபதிகளை மையமிட்டதாகச் சொல்லப்படும் பொதுவான வரலாற்றுக்குப் பதில் இந்நூல், அறிஞர்களையும் அறப்போராளிகளையும் மையமிட்ட ஒரு மாற்று வரலாற்றை முன்வைக்கிறது. தமிழில் இதுபோல் இன்னொன்றில்லை.

💥நூலின் முதல் பகுதியில்

✨உமர் இப்னு அப்துல் அஸீஸ், ✨ஹசன் அல்பஸரீ,
✨அஹ்மது இப்னு ஹம்பல்,
✨அபுல் ஹசன் அல்அஷ்அரீ.
✨அபூ ஹாமிது அல்கஸ்ஸாலீ ✨அப்துல் காதிர் ஜீலானீ, ✨ஸலாஹுத்தீன் அய்யூபி, ✨ஜலாலுத்தீன் ரூமி ஆகியோரின் அரசியல், ஆன்மிக, அறிவுத்துறைப் போராட்ட வரலாறுகள் அபாரமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன

💥நூலின் இரண்டாம் பகுதி

✨இப்னு தைமிய்யா வாழ்ந்த காலகட்டம், அவரது
வாழ்க்கை, சிறப்பியல்புகள், அவரது நூல்களின் தனித்தன்மைகள், அவர் எதிர்க்கப்பட்டதற்கான காரணிகள், அவரது ஆன்மீகப் பரிமாணம். அவரது பல் பரிமாண மறுமலர்ச்சிப் பணிகள், அவரின் முதன்மை மாணவர்கள் என விரிவாகப் பேசியுள்ளது.

💥நூலின் மூன்றாம் பகுதி 'இரண்டாம் ஆயிரமாண்டின் மறுமலர்ச்சியாளர்'

✨அஹ்மது சர்ஹிந்தீயின் சீர்திருத்த, மறுமலர்ச்சி வரலாற்றை விரிவாகப் பேசுவதுடன் சர்ஹிந்தீயின் காலகட்டம், இந்தியாவில் பரவியிருந்த சிந்தனை ரீதியான, மார்க்க ரீதியான தடுமாற்றங்கள், இஸ்லாத்தைச் சுற்றிப் பின்னப்பட்ட சூழச்சி வலைகள் அனைத்தையும் விரிவாகப் படம்பிடித்துக் காட்டுகிறது.

💥நூலின் இந்த இறுதிப் பகுதி (நான்காம் பாகம்) அரசியல் குழப்பங்கள் மிகுந்திருந்த அன்றைய இந்தியாவில்
✨ஷாஹ் வலீயுல்லாஹ் தெஹ்லவீ ஆற்றிய சீர்திருத்தப் பணிகள் பற்றியும், வீழ்ந்துகொண்டிருந்த இஸ்லாமிய அரசுக்கு அவர் வழங்கிய தலைமைத்துவ வழிகாட்டல்கள் பற்றியுமான விரிவான பகுப்பாய்வினை முன்வைக்கிறது.

இஸ்லாமிய அழைப்பு, சீர்திருத்தம், மறுமலர்ச்சி ஆகியவற்றின் வரலாற்றினை அறிந்து அதனால் உணர்வூக்கம் பெற விரும்பும் அனைவருக்கும் இது இன்றியமையாத வாசிப்பு.

13/06/2025

இன்று மாலை 6.30 தொடக்கம் அக்கரைப்பற்று புத்தகக் காட்சியில் கலை, கலாச்சார நிகழ்ச்சிகள் இடம்பெறும்.
அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.

13/06/2025

அக்கரைப்பற்று புத்தகக் காட்சியின்
6 நாட்களில் 3 நாட்கள் இதுவரை நிறைவடைந்துள்ளன.
இன்னும் 3 நாட்களே மீதம் உள்ளன.

அருமையான இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நம் மத்தியில் புத்தகங்கள், வாசிப்பு பற்றிய பிரக்ஞையை ஏற்படுத்துவதில் ஆர்வம் காட்டுங்கள்.

குடும்ப சகிதம் கலந்துகொள்ளுங்கள்.
புத்தகங்களை வாங்குங்கள். முடியாவிட்டால் வந்து பார்த்து விட்டாவது செல்லுங்கள்.

வளரும் தலைமுறையினருக்கு புத்தகங்களை அறிமுகப்படுத்துங்கள்.

புத்தகப் பண்பாட்டை ஓங்கச் செய்யுங்கள்.

✨இணைக்கப்பட்டுள்ள வீடியோவிற்காக வசந்தம் தொலைக்காட்சி செய்திப் பிரிவினருக்கும் ஊடகவியலாளர்களுக்கும் நன்றிகள்.

அக்கரைப்பற்று புத்தகக் காட்சியின் 1வது நாள் நிகழ்வுகளில் சில…
11/06/2025

அக்கரைப்பற்று புத்தகக் காட்சியின் 1வது நாள் நிகழ்வுகளில் சில…

Address

Akkaraipattu
Akkaraipattu
32400

Telephone

+94757440505

Website

Alerts

Be the first to know and let us send you an email when Akkaraipattu Book Fair posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category