யாழ் தமிழ் தீவு

யாழ் தமிழ் தீவு யாழ் நியூஸ்

25/02/2025

சிங்களப் பேரினவாதத்தின் துப்பாக்கிகள் அவர்களை நோக்கி என்றைக்கு வேண்டுமானாலும் திரும்பலாம் என்று எச்ரித்தார் தலைவர் அவர்கள்.

விடுதலைப்புலிகளை எதிர்கொள்ள சிங்களப் பேரினவாதத்திற்கு பயங்கரவாதத் தடைச்சட்டம் தேவைப்பட்டது.

இப்போது ராணுவம் /பொலிஸ்/நேவி போன்ற அரசால் பபிற்றுவிக்கப்பட்ட ஆயுததாரிகளை கட்டுபடுத்த அதிஉயர் பயங்கரவாதத்தடை சட்டத்தை அமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் அதிபர் அவர்களே.

JVP யின் ஆரம்ப கால அரசியல் ஆயுங்களால் உருவாக்கியதுதான்...

அடக்குமுறைக்கெதிரான அறம் சார்ந்த அரசியல் வேறு..

ஆயுததாரிகளால் உருவாக்கப் பட்டிருக்கும் அரசியலைத்தான் இனி இத்தேசம் எதிர்கொள்ள வேண்டியிருக்கு என்று அண்றே கணித்தார் தலைவர்.

17/02/2025

திருகோணமலை ஸ்ரீ மலை நீலியம்மன் கோவிலை தீயிட்டு அழித்து விட்டு குறித்த கோவில் வளாகத்தில் "பாசன பப்பாத ராஜமஹா விகாரை" என்கிற பௌத்த ஆலயம் ஒன்றை அமைத்து இருக்கிறார்கள்

திருகோணமலை முகத்துவாராம் பிரதேசத்தில் குஞ்சுமப்ப பெரியசாமி கோவிலை அழித்து அந்த கோவில் சூழலில் "லங்கா பட்டுன சமுத்திரகிரி" என்கிற பெயரில் விகாரை ஒன்றை கட்டி இருக்கின்றார்கள்

காங்கேசன்துறையில் உள்ள சைவ ஆலய சூழலில் "கெமுனு விகாரை" என்கிற பெயரில் பௌத்த விகாரை ஒன்றை நிறுவி இருக்கிறார்கள்

முல்ல்லைத்தீவு குருந்தூர் மலை ஆதி ஐயனார் கோவில் சூலத்தை உடைத்து வீசிவிட்டு அங்கு "குறுந்தூர் விகாரை" என்கின்ற பெயரில் விகாரை ஒன்றை நிறுவி இருக்கின்றார்கள்

முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் அத்துமீறி "குருகந்த புராண ராஜ மகா விகாரை" என்கின்ற பேரில் விகாரையொன்றை கட்டியிருக்கின்றார்கள்

வவுனியா வெடுக்குநாறி மலை சிவன் ஆலய விக்கிரங்களை சேதப்படுத்தி அது "வட்டமான பர்வத விகாரை" என்கின்ற பௌத்த தொல்லியல் நிலம் என உரிமை கோருகின்றார்கள்

தென்னவன்மரபடி கந்தசாமி மலை முருகன் ஆலய பூசை வழிபாடுகளை தடை செய்து விட்டு அது "சங்கமலை விகாரை" க்குரிய நிலம் என உரிமை கோருகின்றார்கள்

திருகோணமலை 64 ஆம் கட்டை ராஜவந்தான்மலை பிள்ளையார் ஆலயத்தை சிதைத்து விட்டு அங்கு "கொட்டியாராம ஸ்ரீ பத்ர தாது ராஜ மகா விகாரை" என்கின்ற பெயரில் விகாரையொன்றை கட்டியிருக்கின்றார்கள்

திருகோணமலை சூடைக்குடா மலை குன்றத்தூர் முருகன் ஆலயத்தை அழித்து அங்கும் விகாரையொன்றை கட்டியிருக்கின்றார்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் குசலமலை சைவ குமரன் ஆலயத்தின் பாரம்பரிய முன் கதவு , மூலஸ்தான விக்கிரம் என்பவற்றை அடித்து நொருக்கியிருக்கின்றார்கள்

வவுனியா பூவரசங்குளம் மலையிலிருந்த பிள்ளையார் சிலை, சூலம் என்பனவற்றை சேதப்படுத்தப்படுத்தியிருக்கின்றார்கள் .

இவ்வாறு தொடரும் அட்டூழியங்களின் போதெல்லாம் பாதிக்கப்படாத இன நல்லிணக்கம் தையிட்டியில் சட்டவிரோதமாக தனியார் காணியில் கட்டப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்ற கோரும் போது மட்டும் ஏற்படுகின்றது என ஜேவிபி அமைச்சர் திரு சந்திரசேகரன் சொல்லுகின்றார்

சட்டவிரோத கட்டுமானத்தை அகற்ற கோருவதை இனவாதம் என எந்த கூச்சமுமில்லாமல் சித்தரிக்கின்றார்

ஊழல் பற்றி வாய் கிழிய பேசும் ஜேவிபி திரு சந்திரசேகர் சட்டவிரோத கட்டுமாணமான தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எவ்வாறு பௌத்த சாசன அமைச்சு நிதி ஒதுக்கீடு செய்தது என்பது பற்றி பேச மறுக்கின்றார்

இது போதாதென்று தையிட்டி திஸ்ஸ விகாரை கட்ட அடிக்கல் நாட்டப்பட்ட பொது அதிகாரத்திலிருந்த ஆட்சியாளர்களின் பங்காளியாக ஜேவிபி இருந்ததை கூட மறந்து விடுகின்றார்

ஒருங்கிணைப்பு குழு தலைவராகவிருக்கும் திரு சந்திரசேகர் தையிட்டி தூபி (Stupa) கான அடிக்கல் நாட்டப்பட்ட இரண்டாம் நாளிலேயே அப்போதைய ஒருங்கிணைப்பு குழு கட்டுமானத்திற்கு தடை விதித்ததை மறைத்து விட்டு கட்டும் போது ஏன் கேட்கவில்லை என அரசியல் செய்கின்றார்

உலகம் ஐந்தாவது தொழில்துறைப் புரட்சி காலத்தில் நுழைந்துவிட்டது. ஆனால், இன்னும் இரண்டாவது தொழில்துறைப் புரட்சி காலத்தில் தடுமாறிக்கொண்டிருக்கும் இலங்கை தீவின் அமைச்சரான ஜேவிபி சந்திரசேகரனுக்கு , முன்னேற்றம் மற்றும் ஊழலற்ற சமூக அமைப்பை உருவாக்க குறைந்தபட்ச சட்டத்தின் ஆட்சியின் அவசியம் என்பதை உணர முடியாமல் இருப்பது வருத்தத்திற்குரிய செய்தியாகும்.

10/02/2025

மனித உரிமைச் செயற்பாட்டாளர் பொஸ்கோ மரியதாசின் சட்டத்துக்கு முரணான கைதினை வன்மையாகக் கண்டிப்பதோடு,அவரை உடனே விடுதலை செய்யவும் வலியுறுத்துகிறோம்!

மனித உரிமைச் செயற்பாட்டாளரும் உலகத் தமிழர் இயக்கத்தின் பன்னாட்டு இணைப்பாளருமான பொஸ்கோ மரியதாஸ் அவர்கள் கடந்த 16.01.2025 அன்று சுவிற்சர்லாந்து நாட்டில் சட்டத்துக்கு முரணான வகையில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் 15 மற்றும் 16 திகதிகளில் யெனீவாவில் இடம்பெற்ற சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான மாநாட்டில் கலந்துகொண்டிருந்த போது மாநாட்டின் இரண்டாம் நாளான யனவரி 16 அன்று மதியம் 13:30 இற்கு மாநாட்டு மண்டபத்தில் வைத்து விசாரணைக்கு என அழைத்துச் செல்லப்பட்ட மனித உரிமைச் செயற்பாட்டாளர் சட்டத்துக்கு முரணான வகையில் கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். சுவிஸ் காவல்துறையினரின் சட்டத்துக்கு முரணான இந்தக் கைதினை உலகத் தமிழர் இயக்கம் வன்மையாகக் கண்டிப்பதோடு மனித உரிமைச் செயற்பாட்டாளர் பொஸ்கோ மரியதாஸ் அவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது.

மனித உரிமைச் செயற்பாட்டாளர் பொஸ்கோ மரியதாஸ் அவர்களின் சட்டத்துக்கு முரணான கைதும் தடுத்து வைப்பும் அவரின் செயற்பாடுகளை முற்றுமுழுதாக முடக்குவதற்காக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையாகவே பன்னாட்டு மனித உரிமை அமைப்புகளும்,ஆர்வலர்களும் நோக்குகின்றனர். ஐ.நா, ஐரோப்பிய பாராளுமன்றம் உள்ளிட்ட பன்னாட்டு இராசதந்திர தளங்களில் தமிழர்களின் நீதிக்கும் உரிமைக்குமான செயற்பாடுகளை மாத்திரமல்லாது எம்மைப் போன்று விடுதலைக்காக போராடும் இனங்களின் நீதிக்கும்,உரிமைக்காகவும்
கடந்த 27 வருடங்களாக தொடர்ச்சியாக பல்வேறு காத்திரமான ஒருங்கிணைந்த செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் பொஸ்கோ மரியதாஸ் அவர்களை பலவழிகளிலும் முடக்குவதற்கு வல்லாதிக்க சக்திகளும் பேரினவாத சிறீலங்கா அரசும் தொடர்ச்சியாக பயங்கர பிரயத்தனத்தினை முன்னெடுத்துவந்திருந்த சூழலில் அவரின் கைது இடம்பெற்றுள்ளது.

பொஸ்கோ மரியதாசின் கைதின் பின்னணியில் வல்லாதிக்க சக்திகள் மற்றும் பேரினவாத சிறீலங்கா அரசு மாத்திரமன்றி அவர்களின் அடிவருடிகளின் காட்டிக்கொடுப்புகளும் சூழ்ச்சிகளும் காரணம் என்பதையும் நாம் இந்த இடத்தில் உலகத் தமிழர்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.
மேலும் பொஸ்கோ மரியதாஸ் அவர்கள் உலகத் தமிழர்களையும் எம்மைப் போன்று பாதிக்கப்பட்ட பல்வேறு இனங்களையும் ஒருங்கிணைத்து ஐ.நா உள்ளிட்ட பன்னாட்டு இராசதந்திரத் தளங்களில் செயற்படுவதற்கான ஆலோசனைகளையும் வழங்கி அதற்கான வழிகளையும் ஏற்படுத்திக் கொடுத்து அவர் முன்னெடுத்த செயற்பாடானது வல்லாதிக்க சக்திகளுக்கும் உரிமைக்காக போராடும் தேசங்களை ஆக்கிரமித்துள்ள நாடுகளுக்கும் பெரும் தலைவலியைக் கொடுத்துவந்துள்ளது. இதனால் பல வழிகளிலும் சூழ்ச்சி செய்து பல்வேறு தடைகளையும் விசாரணைகளுக்கும் உற்படுத்தி கடந்த 2020 ஆண்டில் இருந்து அவர் யெனிவாவில் அமைந்திருக்கும் ஐ. நா கட்டடத்திற்குள் செல்வதற்கான தடையை ஏற்படுத்தினர். எனினும் அவரின் செயற்பாடுகளை அவர்களினால் நிறுத்த முடியவில்லை அதனாலேயே அவரின் இந்தக் கைது தற்போது இடம்பெற்றுள்ளது.

அத்துடன் பொஸ்கோ மரியதாஸ் அவர்கள் கைதுசெய்யப்படுவதற்கு முதல்நாள் அவர் கலந்துகொண்டிருந்த குறித்த மாநாட்டில் சுவிற்சர்லாந்து நாட்டின் தமிழர் விரோதச் செயற்பாட்டினை வன்மையாக கண்டித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் கலந்துகொள்ளவதற்காக உள்நுழைவு ( விசா ) அனுமதிக்கு விண்ணப்பிக்கும் தமிழர் உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்புகள் உள்ளிட்ட பெரும்பாலான தமிழர்களுக்கு உள்நுழைவு அனுமதியினை கூடுதலாக மறுத்துவரும் சிறீலங்காவில் அமைந்துள்ள சுவிஸ் தூதுவராலயம் சிங்களவர்களுக்கு குறிப்பாக முன்னாள் சிறீலங்கா இராணுவத்தினருக்கு உள்நுழைவு அனுமதியினை தொடர்ந்து வழங்கிவருகிறது. இது குறித்து பல்வேறு ஐ.நா அங்கீகாரம்பெற்ற அமைப்புகள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர்களில் கேள்விகளை எழுப்பிய போதும் சுவிஸ் அரசானது உப்புச்சப்பற்ற பதில்களையே வழங்கியது.

மேலும் கடந்த மாதம் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் இடம்பெற்ற சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான மாநாட்டிற்கு சிறீலங்காவில் இயங்கும் சுவிஸ் தூதுவராலயத்தின் ஒருங்கிணைப்பிலேயே மூன்று தமிழர்களும் மூன்று சிங்களர்களும் பங்கெடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. அதில் அவர்கள் தெரிவித்த கருத்துகள் உலகத் தமிழர்கள் மத்தியில் விசனத்தையும் பலத்த விமர்சனங்களையும் ஏற்படுத்தியிருந்தது. இதே சுவிஸ் அரசுதான் இமாலயப் பிரகடனம் என்று சொல்லப்பட்ட நாசகார செயல்பாட்டிற்கான பொருளாதார பங்களிப்பினை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான் சூழலில் தமிழர்களின் உரிமைக்கும் நீதிக்குமான செயற்பாடுகளை முடக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட செயற்பாடாகவே மனித உரிமைச் செயற்பாட்டாளர் பொஸ்கோ மரியதாஸ் அவர்களின் சட்டத்துக்கு முரணான கைதினையும் வலுக்கட்டாய தடுத்து வைப்பையும் உலகத் தமிழர் இயக்கம் நோக்குகின்றது. அத்துடன் இது பாரிய மனித உரிமை மீறல் எனவும் தெரியப்படுத்துகிறோம். இவ்வாறான எதேச்சதிகார செயற்பாட்டிற்கு எதிராக உலகத் தமிழர்கள் அனைவரும் ஒருங்கிணைந்த செயற்பட முன்வரவேண்டும் எனவும் அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி

உலகத் தமிழர் இயக்கம்

 #ஆழ்ந்த_அஞ்சலிகள் #பாரதிஇராஜநாயகம்தினக்குரல் பாரதி என்ற பெயரும் அறிமுகமும் நந்தவனம் சந்திரசேகர் மூலமாக 2014 காலப்பகுதிக...
10/02/2025

#ஆழ்ந்த_அஞ்சலிகள்
#பாரதிஇராஜநாயகம்

தினக்குரல் பாரதி என்ற பெயரும் அறிமுகமும் நந்தவனம் சந்திரசேகர் மூலமாக 2014 காலப்பகுதிகளில் ஏற்பட்டது..
பின்னர்
நான் இலங்கை செல்லும் போதெல்லாம் கொழும்பில் உள்ள தினக்குரல் அலுவலகம் சென்று பாரதி ஐயா அவர்களைச் சந்தித்து உரையாடமல் வருவதில்லை..
அரசியல் இலக்கியம் கடந்து அவரின் அன்பும் பண்பான அரவணைப்பைக்கண்டு வியந்து இருக்கிறேன்.
இன்று இழந்து நிற்கின்றேன் ...
எனது நூல்களின் விமர்சனங்களையும் புத்தக வெளியீட்டு செய்திகளையும் தினக்குரல் பத்திரிகையில் வெளியீட்டு என்னை ஊக்கப்படுத்தியவர்..
அவரோடு இணைந்து பணியாற்றிய மற்றும் குடும்ப உறவுகள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அவரின் நினைவுகள்
நிலைபெற்று
நிலைத்திருக்கும்.

இலங்கை மூத்த ஊடகவியலாளர்பாரதி இராஜநாயகம் மறைந்தார்என்றசெய்தியை நம்பமுடியவில்லை தினக்குரல் நாளிதழில் ஆசிரியர் பொறுப்பில் ...
09/02/2025

இலங்கை மூத்த ஊடகவியலாளர்
பாரதி இராஜநாயகம் மறைந்தார்
என்றசெய்தியை நம்பமுடியவில்லை தினக்குரல் நாளிதழில் ஆசிரியர் பொறுப்பில் இருந்தபோது
2009 ஆம் ஆண்டு முதல் எனது செய்திகளைவெளியிட்டு உதவியவர், அன்போடு பழகக்கூடியவர்

இலங்கை செல்லும் போதெல்லாம்
தினக்குரல் அதுவலகம் சென்று இவரை பலமுறை சந்தித்து உரையாடியிருக்கிறேன்

அண்மையில் அந்திமழை இதழில்
தற்போதைய இலங்கைச்சூழல் பற்றிய
நேர்காணல் ஒன்றையும் வாசிக்க முடிந்தது,

ஏற்றுக்கொள்ள முடியாத துயரம்
பாரதி அண்ணாவின்மறைவு. மிகுந்த
வருத்தத்தைத் தருகிறது

Address

Colombo

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when யாழ் தமிழ் தீவு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share