13/08/2025
அந்நியரின் ஆதிக்கத்தை எதிர்த்து, மண்ணை காக்கும் போரில் மானமே பெரிதென வீரத்தின் அடையாளமாக திகழும் அகமுடையார்களான மாமன்னர்கள் மருது பாண்டிய சகோதரர்களின் திருவுரு வெண்கலச் சிலையை முதலியார் சொந்தங்கள் படைசூழ இன்று ஆந்திர மாநிலம், சித்தூர் மாநகரில் திறந்து வைத்தார் நம் இன தோன்றல் புதிய நீதிக்கட்சியின் தலைவர் திரு AC. சண்முகம்.
ஆந்திர மாநில முதலியார் சங்கத் தலைவர் திரு. புல்லட் சுரேஷ் அவர்கள் ஏற்பாட்டில், தமிழகத்தைக் கடந்து ஆந்திராவில் கம்பீரமாகத் திகழ்கிறார்கள் மருதிருவர்கள்!
ஆங்கிலேய ஆட்சியாளர்களை எதிர்த்து 145 நாட்கள் போரில் ஈடுபட்ட வீரத்திற்கும், உயிர் போனாலும் மண்டியிட மாட்டோம் என உயிர்தந்த தியாகத்திற்கும் அடையாளங்களாக வாழ்ந்து, நம் மண்ணுக்கு உரமாகியுள்ள மருது சகோதரர்கள் புகழ் வாழ்க!