Tamil Books Online - London Bookstore

Tamil Books Online - London Bookstore Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tamil Books Online - London Bookstore, Retail Company, London.

உலகை உலுக்கிய பத்து நாட்கள் - அலைகள் வெளியீட்டகம் கொடுங்கோலன் ஜார் மன்னனை வென்று புரட்சியாளர்கள் ஆட்சியை கைப்பற்றினர் என...
24/05/2014

உலகை உலுக்கிய பத்து நாட்கள் - அலைகள் வெளியீட்டகம்

கொடுங்கோலன் ஜார் மன்னனை வென்று புரட்சியாளர்கள் ஆட்சியை கைப்பற்றினர் என்ற அளவுக்கு சிலருக்கு தெரிந்து இருக்கும்.. ஆனால் அன்று அவர்களுக்கு ஜார் மன்னர்களை தவிர பல்வேறு எதிர்ப்புக்ள் இருந்தன.. அவற்றை மீறித்தான் அங்கு கம்யூனிச ஆட்சி வந்தது என்பது பரவலாக அறியப்படாத ஒன்று..

வரலாற்றின் அந்த முக்கியமான கணத்தை படம் பிடிக்கும் புத்தகம்தான் உலகை உலுக்கிய பத்து நாட்கள்... இதை எழுதியவர் ஒரு ரஷ்யர் அல்லர்... ஜான் ரீடு என்ற அமெரிக்கர்... அமெரிக்கராக இருந்தாலும் ரஷ்யாவை நேசித்தவர் . அவரை கவுரவிக்கும் பொருட்டு, அவர் மறைந்ததும் , செஞ்சதுக்கத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.( கிரெம்ளின் சுவர் அருகே )

ரஷ்யாவில் மன்னர் ஆட்சி நடந்தபோது விவசாயிகளும் , தொழிலாளிகளும் எந்த உரிமைகளும் இல்லாத ஓர் உடமைப்பொருட்களாகத்தான் கருதப்பட்டு வந்தனர். மன்னர்களில் நல்லவர்களும் இருந்தனர். கெட்டர்வர்களும் இருந்தனர். ஆனால் எளிய மக்களை பற்றி கவலைப்பட அவர்களுக்கு நேரம் இல்லை.. விழிப்புணர்வும் இல்லை. இதை எதிர்த்து அவ்வப்போது கிளர்ச்சிகள் நடந்தாலும், தெளிவான திட்டங்கள் இல்லாமை , வலுவான தலைமை இல்லாமை போன்ற காரணங்களால் எதிர்ப்பு வலுவாக இல்லை..

இந்த நிலையில்தான் , மார்க்சீய தத்துவத்தில் ஈடுபாடும் , என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவும் கொண்ட லெனின் , டிராட்ஸ்கி போன்றோர்களின் தலைமையில் புரட்சி வடிவம் பெற்றது..

மன்னர் ஆட்சியை பற்றி சொல்ல வேண்டும் என்றால் பல நேரங்களில் மன்னர்களை பொம்மையாக வைத்து விட்டு, வேறு ப்லரின் மறைமுக ஆட்சி நடந்த்தது. குறிப்பாக கடைசி மன்னர் நல்லவராக இருந்தாலும் , அவர் கட்டுப்பாட்டில் எதுவும் இல்லை. அவர் அனுமதி இல்லாமலேயே , ரத்த ஞாயிறு என்ற கொடூரம் நிகழ்ந்தது. மேலும் முதலாம் உலகப்போரில் பல இன்னல்களை ரஷ்யா சந்த்தித்து வந்தது.

ரஸ்புட்டின் என்ற சாமியார் பற்றியும் கொஞ்சம் சொல்ல வேண்டும். அரச குடும்பத்தில் சிலருக்கு , தீர்க்க முடியாத நோய்களை தீர்த்து வைத்து , அரசருடன் நெருக்கமானார் அவர் .அந்த நெருக்கம் அதிகாரிகள் சிலருக்கு பிடிக்கவில்லை . கொல்ல முயற்சித்தனர் . முடியவில்லை . என்னை அரச குடும்பம் கொன்றால் , அந்த குடும்பம் கூண்டோடு அழியும் என சொன்னார் ரஸ்புட்டின் . கடைசியில் விஷம் வைத்து , துப்பாக்கியால் சுட்டு , ஆற்றில் வீசி கொன்றனர் . அவரது பிணம் மீட்க பட்டு எரியூட்டப்பட்டது . அப்போது அந்த பிணம் எழுந்து உட்கார்ந்தது என்பார்கள் .
அவர் சொன்னது போலவே விரைவில் அரச குடும்பம் அழிக்கப்பட்டு மாற்று அரசாங்கம் ஏற்பட்டது . இந்த இடைக்கால அரசிடம் இருந்து போல்ஷேவிக்குகள் ஆட்சியை கைப்பற்றியதுதான் புகழ் பெற்ற அக்டோபர் புரட்சி . இந்த புரட்சியின் முக்கிய கணங்களை கண் முன் நிறுத்துகிறது புத்தகம் . டிராஸ்கியின் மேதமையை ஜான் ரீடு குறிப்பிடுகிறார் . அதை மறைக்காமல் வெளியிட்டு இருக்கும் அலைகள் பதிப்பகம் பாராட்டுக்குரியது. சில நாடுகளில் அவற்றை சென்சார் செய்து விட்டனர் . தமிழாக்கம் மிக அருமை
புரட்சி என்பது ஒட்டு மொத்தமாக ஏற்பட வேண்டும் . தனியொரு நாட்டில் புரட்சி நடந்தால் அது வெகுநாள் நீடிக்காது என்ற டிராட்ஸ்கியின் கருத்து அன்று கிண்டல் செய்யப்பட்டது. சோவியத் யூனியன் வீழ்ந்த நிலையில் அது சிந்திக்க வைக்கிறது.

முறிந்த பனைஇரு பகுதிகளாக அமைந்துள்ள இந்நூலின் முதற்பாகம் 1987 இல் இலங்கை இந்திய ஒப்பந்தமும் இந்தியப் படையின் வருகையும் ந...
22/05/2014

முறிந்த பனை

இரு பகுதிகளாக அமைந்துள்ள இந்நூலின் முதற்பாகம் 1987 இல் இலங்கை இந்திய ஒப்பந்தமும் இந்தியப் படையின் வருகையும் நிகழ்ந்த காலகட்டத்தில் நின்று ஈழத்து இனப்பிரச்சினையின் ஒரு பரிமாணத்தை- ஈழத்தமிழர் போராட்டத்தின் வரலாற்றை வெளிக்கொண்டுவரும் நோக்கில் எழுதப்பட்ட ஆங்கில நூலின் தமிழாக்கமாகவும், இரண்டாம் பகுதி இக்காலகட்டத்தில் இந்தியப்படையினரின் தாக்குதல் பற்றிய பல்வேறு அறிக்கைகளும் ஆய்வுகளும் கொண்டதாகவும் அமைந்துள்ளது. The Broken Palmyrah என்ற தலைப்பில் இதன் மூல நூல் ஆங்கிலத்தில் வெளியான சிறிது காலத்தில் இந்நூலின் முக்கிய பங்காளியான ராஜினி திரணகம அவர்கள் யாழ்ப்பாணத்தில் இனந்தெரியாத இளைஞர்களால் படுகொலை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

மரணம் இழப்பு மலர்தல் - Meera Bharathy
22/05/2014

மரணம் இழப்பு மலர்தல் - Meera Bharathy

High Quality Laptop Bag
21/05/2014

High Quality Laptop Bag

அராஜகம் 1000 | அராத்துவின் ட்வீட் தொகுப்பு
17/05/2014

அராஜகம் 1000 | அராத்துவின் ட்வீட் தொகுப்பு

சின்ன விஷயங்களின் கடவுள் | அருந்ததி ராய் | தமிழில் ஜி. குப்புசாமிGod of Small Things அருந்ததிராய் எழுதியிருக்கும் ஒரே நா...
17/05/2014

சின்ன விஷயங்களின் கடவுள் | அருந்ததி ராய் | தமிழில் ஜி. குப்புசாமி

God of Small Things அருந்ததிராய் எழுதியிருக்கும் ஒரே நாவல். ஒரே நாவலில் உலகப் புகழ் பெற்றிருக்கிறார் என்பதுதான் அவருடைய தகுதியின் சிறப்பாகவும் குறையாகவும் பார்க்கப்படுகிறது. ஒற்றை நாவல் மூலம் இலக்கியப் பிரபலமாகி விட்டார் என்று பாராட்டப்படுகிறார். ஒரு நாவல்தானே எழுதியிருக்கிறார். அடுத்த ஒன்றையும் எழுதி வெளியிடட்டும். அதன் பிறகுதான் அவருடைய இலக்கியத்தரம் தீர்மானிக்கப்படும் என்றும் விமர்சிக்கப்படுகிறார். இந்த இரண்டு கருத்துகளுக்கும் இடையில் அருந்ததி ராயின் நாவல் முப்பத்தியொன்பது மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. நாற்பதாவது மொழியாக இப்போது தமிழிலும் வெளிவந்திருக்கிறது. ஜி. குப்புசாமி சின்ன விஷயங்களின் கடவுள் என்ற பெயரில் தமிழாக்கம் செய்துள்ள நாவலை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

பனி - ஓரான் பாமுக்தமிழில் ஜி.குப்புசாமி
17/05/2014

பனி - ஓரான் பாமுக்
தமிழில் ஜி.குப்புசாமி

Dear Friends, வெட்டுக்கிளிகளை உற்றுக் கேட்டல் back in stock | Get your copy soon
13/05/2014

Dear Friends, வெட்டுக்கிளிகளை உற்றுக் கேட்டல் back in stock | Get your copy soon

SIGNUP to our Newsletter
10/05/2014

SIGNUP to our Newsletter

Tamil Bookstore Offers Email Forms

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்எந்த ஊர்,பெற்றோர், என்ன சாதி,என்ன இனம் என்று எதுவும் தெரியாத,அது பற்றிக் கவலைய...
08/05/2014

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்
எந்த ஊர்,பெற்றோர், என்ன சாதி,என்ன இனம் என்று எதுவும் தெரியாத,அது பற்றிக் கவலையும் கொள்ளாத ஒரு உலகப் பொதுமனிதனைக் கதாபாத்திரமாக்கி, அவன் எதிர்கொள்ளும் அனுபவங்களின் மூலம் இந்த வாழ்க்கையின் போக்கு குறித்த புரிதலை உணர்த்த முனையும் நாவல் இது. எழுதப்பட்டு ஏறத்தாழ முப்பத்தைந்தாண்டுகளாகிவிட்ட பின்னரும் இன்றைய சூழலுக்கு பொருந்துவதான வாசிப்பனுபவத்தைத் தருவதன் மூலம் இந்த நாவல் ஒரு கலைப்படைப்பாக நிமிர்ந்து நிற்கிறது.

இரண்டாம் ஜாமங்களின் கதை / சல்மா1980களின் முற்பகுதியில் ஐந்தாறு தமிழ் முஸ்லிம் குடும்பங்களைக் களமாகக் கொண்டு எழுதப்பட்டுள...
28/04/2014

இரண்டாம் ஜாமங்களின் கதை / சல்மா

1980களின் முற்பகுதியில் ஐந்தாறு தமிழ் முஸ்லிம் குடும்பங்களைக் களமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள, முழுக்க முழுக்கப் பெண்களை மட்டுமே பேசுகிற புத்தகம் "இரண்டாம் ஜாமங்களின் கதை". ஒரு ரம்ஜான் நோன்புக் காலத்துக்கு முன்னர் தொடங்குகிற நாவல் அடுத்த ரம்ஜான் நோன்பு வருவதற்குள் முடிந்துவிடுகிறது. நாவலின் பெரும்பகுதியும் ராபியா என்னும் சிறுமியின் வாயிலாகவும் அவளைவிட நான்கைந்து வயது மூத்தவளாக இருக்கக்கூடிய அவளது அக்காவான (பெரியப்பா மகள்) வஹிதா என்னும் சிறுமியின் வாயிலாகவும் சொல்லப்படுகிறது. கதையில் காதர், கரீம், சையது, சிக்கந்தர், சுலைமான், பஷீர் என்னும் ஆண்கள் வருகிறார்கள். எந்த ஆணுடைய சித்திரத்துக்கும் ஓரிரு தீற்றலுக்கும் கூடுதலாகக் கவனம் கிடைப்பதில்லை. அவர்கள் கவனமாகத் தவிர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

அறியப்படாத வாழ்வுமுறையைக் களமாகக் கொண்டு அறியப்படாத பெண் கதாபாத்திரங்கள் மூலம் பெண்ணின் நிலையை, பெண்ணின் பாடுகளைப் பேசுகிற புத்தகம் இது.

நொருங்கிய குடியரசு / அருந்ததி ராய்‘THE BROKEN REPUBLIC’ ன் தமிழாக்கம்
28/04/2014

நொருங்கிய குடியரசு / அருந்ததி ராய்
‘THE BROKEN REPUBLIC’ ன் தமிழாக்கம்

Address

London

Alerts

Be the first to know and let us send you an email when Tamil Books Online - London Bookstore posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category