Thiru Quran Narcheydhi Malar

Thiru Quran Narcheydhi Malar அனைத்து மத அன்பர்களுக்கும் திருக்கு?

 #ஒழுக்கம்_பேணுவோம் #திருக்குர்ஆன்_நற்செய்தி_மலர்
05/06/2026

#ஒழுக்கம்_பேணுவோம்
#திருக்குர்ஆன்_நற்செய்தி_மலர்

செய்தி: பாலியல் தொழில் சட்ட விரோதம் அல்ல - இந்திய உச்சநீதி மன்றம் உ...

நாளை திருடர்களும் கொள்ளையர்களும் கொலைகாரர்களும் காமவெறியர்களும் சங்கம் அமைத்து தங்கள் உரிமை கோரி போராடலாம். ....அவர்களுக...
03/06/2026

நாளை திருடர்களும் கொள்ளையர்களும் கொலைகாரர்களும் காமவெறியர்களும் சங்கம் அமைத்து தங்கள் உரிமை கோரி போராடலாம். ....
அவர்களுக்கும் உரிமங்கள் (licence) வழங்கப்படுவதும் "அக்கலைகளை" கற்றுக்கொடுப்பதற்காக தொழில் நுட்பக் கல்லூரிகள் துவங்கப்படுவதும் பட்டங்கள் வழங்கப்படுவதும் அரசாங்க கவுரவம் கொடுக்கப்படுவதும் நடைமுறையில் வரலாம்.

திருடன் ஒருவன் துப்பாக்கியோடு வந்து தன் உரிமத்தைக் காட்டி உங்கள் பீரோவை உரிமையோடு திறக்கச் சொல்லி உங்கள் பொருட்களை வாரிச் செல்லலாம். போலீஸ் பரிவாரங்கள் துணை வரவும் வாய்ப்பு உண்டு!

காமுகன் ஒருவன் நம் வீடுவந்து நமது மகளையோ மனைவியையோ புணர்வதற்கு தக்க உரிமத்தோடு வந்து தன் காரியத்தை நிறைவேற்றிச் செல்லலாம்!

இது மிகைப்படுத்தப்பட்ட கற்பனையா?
.... இல்லை என்பதற்கு இன்று நம் முன் நடக்கும் வழக்குகளும் நீதி மன்றங்கள் வழங்கும் தீர்ப்புகளுமே சாட்சி பகர்கின்றன. விபச்சாரத்துக்கு அரசாங்கங்கள் உரிமங்கள் வழங்கியுள்ளதைக் கண்கூடாகக் காண்கிறோம். இதைக் காரணம் காட்டி நாளை திருடர்கள் தங்கள் வக்கீல்களின் வாதத் திறமையைக் கொண்டு வெல்வதற்கும் வாய்ப்புகள் தாராளமாகவே உள்ளன!
சரி, மேற்கூறியவை கற்பனைகளாகவே ஆனாலும் நாம் விழித்தெழ வேண்டிய தருணம் இன்னும் வரவில்லையா அன்பர்களே!

காலம் கடந்துவிட வில்லை...

தடுப்பு நடவடிக்கை என்ன?

மேற்கண்ட விபரீதங்கள் நிகழாமல் தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும்? https://www.quranmalar.com/2015/02/blog-post.html

| பாலியல் தொழில் சட்டவிரோதமல்ல - உச்ச நீதிமன்றம்

| | |

https://youtu.be/JRKgDuEwMG0?si=Mi8ESJ9hhqOwk7Va
03/06/2026

https://youtu.be/JRKgDuEwMG0?si=Mi8ESJ9hhqOwk7Va

பகுத்தறிவு கொண்டு ஆராயும் எவரும் தனக்கு மீறிய சக்தி ஒன்று தன்னையும்...

https://youtu.be/JRKgDuEwMG0 #கடவுளை_வணங்க_காசு_எதற்கு?
02/06/2026

https://youtu.be/JRKgDuEwMG0
#கடவுளை_வணங்க_காசு_எதற்கு?

பகுத்தறிவு கொண்டு ஆராயும் எவரும் தனக்கு மீறிய சக்தி ஒன்று தன்னையும்...

https://youtu.be/qy7QjOV0zQI #பெண்ணுரிமை_பேணுவோம் #திருக்குர்ஆன்_நற்செய்தி_மலர்
02/06/2026

https://youtu.be/qy7QjOV0zQI
#பெண்ணுரிமை_பேணுவோம்
#திருக்குர்ஆன்_நற்செய்தி_மலர்

பாலியல் வன்கொடுமைகள் நாட்டில் கொந்தளிப்பை உண்டாகும்போது மக்கள் குற்...

 #பக்ரீத்_ஜீவகாருண்யம்பாசிச ஏகாதிபத்திய ஆட்சியாளர்களும் அவர்களின் அடிவருடிகளும் மேற்கொண்டு வரும் தவறான பிரச்சாரத்தினால் ...
30/05/2026

#பக்ரீத்_ஜீவகாருண்யம்
பாசிச ஏகாதிபத்திய ஆட்சியாளர்களும் அவர்களின் அடிவருடிகளும் மேற்கொண்டு வரும் தவறான பிரச்சாரத்தினால் நாட்டின் நலிந்த மக்கள் - குறிப்பாக கிராமத்து ஏழை விவசாயிகள் - இன்று சந்தித்து வரும் பொருளாதார சிக்கலை தவிர்க்க இதை அதிகமாகப் பகிருங்கள் சகோதர, சகோதரிகளே.

ஏழை விவசாயிகளுக்கு தங்கள் வயதான பால்கறக்காத பசுக்களை அல்லது பலவீனமாக மாடுகளை விற்றால்தான் புதிய இளைய பிராணியை வாங்க முடியும். அப்போதுதான் அவர்களால் தொழிலை தொடர முடியும். வயதான பிராணிகளை வாங்கும் ஒரே வாடிக்கையாளர்கள் இஸ்லாமியர்களும் மாட்டிறைச்சி விற்கும் வணிகர்களும் தான். பாசிச வாதிகள் அவர்களைத் தடுத்தால் அந்த அப்பாவி விவசாயிகளும் வாயில்லா ஜீவன்களும் பசியில்தான் வாடி இறக்க நேரிடும். இக்கொடுமையை தவிர்க்க உங்களால் முடிந்த அளவு இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பங்கு கொள்ளுங்கள்.

பக்ரீத் பண்டிகையால் ஒவ்வொரு வருடமும் நாடு அடையும் பயன்கள் இவை: # ரூ 40 ஆயிரம் கோடி மதிப்புள்ள வணிகம் - # 40 கோடி மக்கள.....

 #படைத்தவனை_அறிவதற்கே_பகுத்தறிவு
22/01/2026

#படைத்தவனை_அறிவதற்கே_பகுத்தறிவு

This video visually explores the complexity and capabilities of the human hand, showcasing its intricate skeletal and muscular structures. We examine the det...

' #யாதும்_ஊரே_யாவரும்_கேளிர்தீதும் நன்றும் பிறர்தர வாராநோதலும் தணிதலும் அவற்றோர் அன்னசாதலும் புதுவது அன்றே, வாழ்தல்........
22/01/2026

' #யாதும்_ஊரே_யாவரும்_கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்.....’
என்று தொடங்கி...
'பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே’ என்று முடிகிறது கணியன் பூங்குன்றனாரின் பாடல்.
--------------------------------------------------------
இங்கு சொல்லப்படும் யாதும் ஊரே, யாவரும் கேளிர்! என்ற இந்த அருமையான வாழ்வியல் இலக்கணம் எங்கும் எப்போதும் பின்பற்றப்பட வேண்டும் என்பது உலகெங்கும் வாழும் அனைத்து மனிதர்களும் ஆசைப்படும் ஒன்றாகும்.

இந்த ஆசை நிறைவேற வேண்டுமானால் அதற்கான ஆக்கபூர்வமான செயல்திட்டம் தேவை. வெறுமனே இவ்வார்த்தைகளை கவிதை நயம் ததும்ப உருவிடுவதாலோ அவற்றைப் பாராட்டி எழுதுவதாலோ ஒன்றும் நிகழ்ந்துவிடப் போவதில்லை. அது வெறும் ஆசையோடும் ஏக்கத்தோடும் நின்றுவிடும்.

ஒரே மண்ணிலிருந்து உருவாகி, ஒரே தாய் தந்தையில் இருந்து உருவான நமது மானிடக் குடும்பத்தின் அங்கத்தினர்கள் உலகெங்கும் பல்கிப் பெருகிப் பரவி உள்ளோம். ஆனால் இன்று நாட்டின் பெயராலும், இனத்தின் பெயராலும் மொழியின் பெயராலும் நிறத்தின் பெயராலும் ஜாதிகளின் பெயராலும் ஒருவரை ஒருவர் பயங்கரமான முறைகளில் தாக்கிக் கொண்டு நம்மை நாமே அழித்துக் கொண்டு வருகிறோம்.

தடைகளைத் தகர்த்தெறிய வழி என்ன?

இந்நிலைமை ஏற்படுவதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று மனிதனிடம் குடிகொண்டுள்ள குழப்பம் நிறைந்த கடவுள் கொள்கைகளும் மூட நம்பிக்கைகளுமே!
பூமியில் மீணடும் தர்மம் நிலைநாட்டப்பட வேண்டுமானால் நன்மையையும் அமைதியும் நிலைபெற வேண்டுமானால் மனித இதயங்களில் இறைவனைப் பற்றியும் இவ்வுலக வாழ்க்கையைப் பற்றியும் தெளிவான மற்றும் அறிவார்ந்த நம்பிக்கை விதைக்கப் பட வேண்டும்.

அதாவது என்னைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் ஒருவன் உள்ளான். அவன் சர்வ வல்லமை உள்ளவன். இந்த தற்காலிக வாழ்க்கையை முடித்துக் கொண்டு அவனிடமே நான் திரும்ப வேண்டியுள்ளது. அவன் நான் செய்த புண்ணியங்களுக்கு பரிசு தருவான். அதே போல் நான் பாவங்கள் செய்தால் தண்டிக்கவும் செய்வான் என்ற அடிப்படை உணர்வு ஒவ்வொரு மனித மனங்களுக்குள்ளும் ஆழமாக விதைக்கப் பட வேண்டும். அப்போதுதான் மனிதன் பாவம் செய்யாமல் இருப்பான், புண்ணியங்கள் செய்வதற்கு ஆர்வம் கொள்வான்.

ஒன்றே குலம், ஒருவனே இறைவன், அவனிடமே நமது மீளுதல் என்ற இந்த மூன்று உண்மைகளை மனித மனங்களில் விதைத்துதான் எல்லாக் காலங்களிலும் பூமியின் பல்வேறு பாகங்களுக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் மக்களை சீர்திருத்தினார்கள். தர்மத்தை நிலைநாட்டினார்கள். இது காலகாலமாக நிரூபிக்கப்பட்ட ஒரு வழிமுறை.

இனியும்பூமியில் தர்மம் நிலைநாட்டப்படவேண்டும் என்று நாம் நினைப்போமேயானால் அந்த இறைத்தூதர்களும் மற்றும் இறைவேதங்களும் கற்றுத்தந்த அதே வழிமுறையையே நாம் கையாள வேண்டும்.

அந்த அடிப்படையில் முறையான இறையச்சம் வளர கலப்படமற்ற முறையில் இறைநம்பிக்கையை சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் போதிக்க வேண்டும். இறைவன் எவ்வாறு தன்னைப் பற்றி அறிமுகம் செய்கிறானோ அவ்வாறே மக்களுக்கு கற்றுக் கொடுக்கவேண்டும். வாழ்க்கையின் நோக்கத்தைப் பற்றியும் மரணம் பற்றியும் மரணத்திற்குப் பிறகு உள்ள மனிதனின் நிலைகளைப் பற்றியும் பகுத்தறிவு பூர்வமாக கற்பிக்க வேண்டும்.

எந்த வேதத்தை பின்பற்றுவது?
இன்று பல மதங்களும் வேதங்களும் உள்ள நிலையில் ஒவ்வொருவருக்கும் அவரவர் மதமும் வேதங்களும் பெரிதாகப்படும். அவ்வாறெனில் நாம் எதை அடிப்படையாகக்கொண்டு இறைநம்பிக்கையை போதிப்பது? இந்த ஒரு கேள்வி அனைவர் உள்ளத்திலும் எழுவது இயல்பே.

இங்கு நாம் நினைவுகூர வேண்டிய உண்மை என்னவென்றால் நமது மனித குலம் என்பது ஒன்றே ஒன்று. நமது இறைவனும் ஒரே ஒருவன். எக்காலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் எங்கு பிறந்தோரானாலும் நாம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே என்பதே! இதை நாம் ஒரு போதும் மறக்கக்கூடாது. நம் குடும்பத்துக்கு வழி காட்ட இறைவன் அவ்வப்போது தன் தூதர்களை அனுப்பி உள்ளான். அவர்கள் அனைவரும் நம்மவர்களே என்பதுதான் உண்மை. அதேபோல அனைத்து வேதங்களும் நம் வேதங்களே. இந்த பரந்த மனப்பான்மையோடு அணுகினால் இதற்கு ஓர் தீர்வு ஏற்படும். நாம் இன்று இழந்து விட்ட சகோதரத்துவ உணர்வை மீண்டும் நிலை நாட்டவும் முடியும். அந்த வகையில் முன்னாள் வேதங்களும் இந்நாள் வேதங்களும் அந்தந்த காலகட்டத்தின் தேவைகளுக்கேற்ப நமது குடும்ப நலன் நாடி இறைவனால் அனுப்பப்பட்டவை என்பதையும் இன்றைய காலகட்டத்திற்காக அனுப்பப்பட்ட வேதம் எதுவோ அதையே நாம் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்பதையும் சமூக நலன் நாடும் ஒவ்வொருவரும் தங்களின் மனமாச்சரியங்களையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு ஏற்றுக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதை உணர வேண்டும். இன்று நாம் பின்பற்றவேண்டிய வேதம் எது மற்றும் யார் இக்காலகட்டத்தின் இறைத்தூதர் என்பதையும் மனம்திறந்த ஆராய்ச்சிகள் மேற்கொள்வதன் மூலம் அறியலாம்.

அவ்வாறு ஒரு நடுநிலையான ஆராய்ச்சி மேற்கொள்ளும்போது இறுதி இறைவேதம் திருக்குர்ஆனும் அதற்கு விளக்கமாக வாழ்ந்த இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுமே நாம் பின்பற்றவேண்டிய வழிகாட்டிகள் என்பதை உணர முடியும்.

மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும்,பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:1)

(அரபு மொழியில் அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)
அந்த இறைவன் நம்மை விசாரிக்க உள்ளான் என்பதையும் தன் வேதத்தில் தெளிவுபடுத்துகிறான்.
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;.இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (திருக்குர்ஆன் 3:185)
இதை விடுத்து சிதைக்கப்பட்ட நிலையில் காணப்படும் முன்னாள் வேதங்களை அடிப்படையாகக் கொள்வோமேயானால் ஒருபுறம் மக்களின் கடவுள் உணர்வைச் சிதைத்து பாவம் செய்ய அஞ்சாத தலைமுறைகள் உருவாக வித்திடுகிறோம். மறுபுறம் இதையெல்லாம் கண்டுகொண்டிருக்கும் சர்வ வல்லமையும் ஞானமும் கொண்ட இறைவனைச் சிறுமைப் படுத்துவதால் அவனது கடும் கோபத்திற்கும் ஆளாகிறோம்.

நம் கற்பனையில் உதித்தவற்றை எல்லாம் கடவுள் என்று கற்பித்தால் ஒரே இறைவனுக்கு பதிலாக பல போலிக் கடவுள்கள் உருவாகி ஒவ்வொன்றையும் வணங்குவோர் தனித்தனி குழுக்களாகவும் ஜாதிகளாகவும் பிரிந்து தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளும் நிலைமை உருவாகிறது. ஆனால் இறைவனை அவன் எவ்வாறு கற்றுத்தருகிறானோ அவ்வாறு புரிந்துகொண்டு வணங்கும் போது மொழி, இனம், நிறம், மாநிலங்கள், நாடுகள் போன்ற தடைகளைக் கடந்து மனித சமத்துவமும் உலகளாவிய சகோதரத்துவமும் உருவாகிறது.
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற நம் கனவு நனவாகும்.

இது ஒரு வெற்றுப்பேச்சு அல்ல. இதை நீங்கள் இந்த சத்திய இறைமார்க்கத்தை ஏற்றுக்கொண்ட மக்களிடையே நிதர்சனமாகக் காணலாம். உதாரணமாக, நமது நாட்டில் உள்ள முஸ்லிம் சமுதாய மக்களைப் பாருங்கள். இவர்கள் யாருமே அரபு நாடுகளிலிருந்தோ அல்லது துருக்கியிலிருந்தோ வந்தவர்கள் அல்ல. இவர்களின் முன்னோர்கள் ஒரு காலத்தில் இந்துக்களாகவோ கிருஸ்துவர்களாகவோ இருந்து இம்மார்க்கத்தை ஏற்றுக் கொண்டவர்கள்தான். இன்று இவர்கள் தீண்டாமை மறந்து பள்ளிவாசல்களில் ஒரே வரிசையில் தோளோடு தோள் சேர்ந்து அணிவகுப்பதையும் ஒரே தட்டில் உணவு உண்பதையும் காண்கிறீர்கள். ஒவ்வொரு வருடமும் ஹஜ்ஜின் போது உலக மக்கள் ஒரே சீருடையில் அணிவகுப்பதையும் காண்கிறீர்கள்.

*6 நூல்கள் வாங்குங்கள்! அழகிய குர்ஆனை அன்பளிப்பாகப் பெறுங்கள் !*= ரூ.340 மதிப்புள்ள 6 புத்தகங்கள் ரூ 290 க்கு = கூடவே இல...
13/10/2025

*6 நூல்கள் வாங்குங்கள்! அழகிய குர்ஆனை அன்பளிப்பாகப் பெறுங்கள் !*
= ரூ.340 மதிப்புள்ள 6 புத்தகங்கள் ரூ 290 க்கு
= கூடவே இலவசமாக Tamil Quran Hard bind (Arabic-Tamil) பெறுங்கள்!*
= மிகவும் உறுதியான பைண்டிங் - உறுதியான அட்டை- அரபி தெளிவான கொட்டை எழுத்துக்களில்- அன்றாட பயன்பாட்டுக்கும் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதற்கும் மிகவும் உகந்தது. தள்ளுபடி மற்றும் STOCK CLEARANCE SALE!
*1. #உலகம்_இப்படித்தான்_அழியும்* (pages 101)
சாட்ஜிபிடி துணையோடு ஆதாரங்களுடன்
- மகத்தான் யதார்த்தத்தை எதிர்கொள்ள துணை செய்யும் தெளிவான நூல்!
*2. #நாம்_ஏன்_பிறந்தோம்?* (pages 32)
நம் வாழ்க்கைக்கு பின்னால் நோக்கம் உள்ளதா அல்லது வீணுக்காக நாம் உள்ளோமா? தெளிவை ஏற்படுத்தும் சிறு நூல்!
*3. #தவறான_புரிதல்கள்* (pages 258)
- இஸ்லாததின் மீது தொடுக்கப்படும் குற்றச்சாட்டுகளும் அவற்றுக்கான தெளிவான பதில்களும்.
4. * #இல்லறத்தை_நல்லறமாய்_துவங்கிடவே* .. (p 24)
-- இஸ்லாமிய திருமணம், வழிமுறைகள், ஒழுங்குகள், வாழ்க்கைத் துணை தேர்வு, வரதட்சணைக்கு மாற்றாக வதுதட்சனை, திருமண விருந்து, இன்னும் இவை பற்றிய புத்தகம்.
(திருமண அழைப்பிதழோடு அன்பளிப்பாக கொடுக்கத் தகுந்த புத்தகம்)
*5. #அமைதிக்கு_வழி* (p 32)
- தனி மனித மற்றும் சமூக அமைதிக்கான வழி இஸ்லாம்தான் என்பதை தெளிவாக விளக்கும் நூல்.
6. *மது - தீமைகளின் தாய்!* - குடும்பங்களில் கலகம் , உற்பத்தித் திறன் குறைவு, சாலை விபத்துக்கள், இன்னும் இவைபோன்ற அனைத்து தீமைகளுக்கும் தாயாக விளங்கும் மதுவை எப்படி உறுதியான முறையில் ஒழிப்பது? இஸ்லாம் எவ்வாறு உலகில் நான்கில் ஒரு பங்கு மக்களை மதுவின் தீமையில் இருந்து பாதுகாக்கிறது போன்ற விவரங்கள் அடங்கிய சிறு நூல்!
=========
தேவைப்படுவோர் *9886001357* என்ற நம்பருக்கு '6BQ' என்று வாட்சப் மெசேஜ் அனுப்புங்கள்!

6 நூல்கள் மற்றும் திருக்குரான் பெற கீழ்கண்ட லிங்க்கை கிளிக் செய்து ஆர்டர் செய்யுங்கள்

Buy Islamic Books Combo-1 online at the best price in India on tayyib-hope

When righteousness spreads, those who have embraced unrighteousness rise in anger.= When people feel that they can appro...
06/11/2024

When righteousness spreads, those who have embraced unrighteousness rise in anger.

= When people feel that they can approach God directly, it makes the intermediaries lose their peace! Those who spread superstitions among the people and exploit them over time will not like this policy spreading!

= Those who live by claiming the superiority of their color, race, language, and caste and treating other people as slaves and dominating them will not like this policy spreading.

= This policy encourages people to live with a sense of self-respect, and as a result, people become aware and turn against the dominant powers. They fight to free their countries from them and prevent the plunder of their national resources.

Thus, this doctrine is making the guardians of unrighteousness all over the world sick. That is why they are working together to prevent this religion from spreading. They criticize it in every way they can, both nationally and internationally. They portray those who accept this religion and those who fight against unrighteousness as terrorists through the media.

But the Lord of this world says in His Holy Quran that this religion has been revealed as a blessing for the people of the worlds, and no one can prevent it:

'They wish to extinguish the light of Allah with their mouths - but Allah will not fail to perfect His light, even though the disbelievers may abhor it.' (Al-Quran 9:32)

But no one needs to worry about its growth. It has not come to destroy or elevate a race or nation. Rather, if one realizes that it has come to establish Dharma and spread peace on earth, then the opposition will disappear. Today's enemies will become tomorrow's guardians of this religion. That is what the growth of this religion in America, Europe and other countries today indicates.

What is Islam? The Arabic word for Islam means submission. Another meaning is peace. In other words, living in submission to God brings pe...

Address

501, 3rd Cross, Syed Block, Anna Sandra Palya
Bangalore
560017

Alerts

Be the first to know and let us send you an email when Thiru Quran Narcheydhi Malar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Thiru Quran Narcheydhi Malar:

Shortcuts

Share