WonderBees Retail Concept Inc

WonderBees Retail Concept Inc Online Store | Publications | Merchandise | Native Snacks | Coffee Shop | Library | Retail Stores

பர்பில் புக் ஹவுஸ் பப்ளிகேஷன்ஸ் புதிய வெளியீடு"கள்வனின் காதலி" "அமர வாழ்வு" (2in1)( #நாவல்  ) ஆசிரியர்: அமரர் கல்கி அட்ட...
10/12/2024

பர்பில் புக் ஹவுஸ் பப்ளிகேஷன்ஸ் புதிய வெளியீடு

"கள்வனின் காதலி" "அமர வாழ்வு" (2in1)
( #நாவல் )

ஆசிரியர்: அமரர் கல்கி
அட்டைப்படம்: Negizhan
விலை ரூ.290
முன் பதிவு தள்ளுபடிக்குப் பிறகு ரூ.232

புத்தகம் பற்றி;
கள்வனின் காதலி கல்கி எழுதிய தமிழ் புதினமாகும். இது ஒரே ஒரு பாகமும் 54 அத்தியாயங்களையும் கொண்ட புதினமாகும். ஆனந்த விகடனில் கல்கி பொறுப்பாசிரியராக இருந்தபோது எழுதிய தொடர்கதை ‘‘கள்வனின் காதலி’’. அவர் எழுதிய முதல் தொடர்கதை இதுதான். இது ஒரு சமூக நூலாகும்.

கல்கியின் ‘அமர வாழ்வு‘ – அமர வாழ்வு, அமரர் கல்கி எழுதிய புகழ் பெற்ற நாவல் வரிசைகளில் ஒன்று. இக்கதை இந்திய சுதந்திரத்திற்கு முன்பாக நடப்பது போல எழுத பட்ட கதை. கதையின் நாயகன் ராகவன், தன் தந்தையை போலவே ஒரு மருத்துவராக பணியை துவங்கியவர். அதே மருத்துவமனையில் ரேவதி என்னும் பெண் மருத்துவரை விரும்பி திருமணம் புரிந்து கொண்டு தலைமை மருத்துவரான குமரப்பவிடமிருந்தும் அவர் சூழ்ச்சியில் இருந்தும் தப்பித்து மலேஷியாவில் குடியெருகிறார்கள். அங்கு அவர்கள் பல போராட்டங்களை சந்திக்கிறார்கள், இறுதியாக நேதாஜி சுபாஷ் ச்ந்திரபோஸ் தலைமையிலான விடுதலை போராட்ட குழுவில் இணைகிறார்கள். அதன் பிறகு என்ன நேர்கிறது என்பதே கதை. இராகவன்,கர்னல் குமரப்பா, ரேவதியின் கதா பாத்திரங்கள் மிகவும் நேர்த்தியாக சொல்லப்பட்டிருந்தது. அனைவரும் படிக்க வேண்டிய ஒரு குறுங்கதை.

இந்த புத்தகத்தைத் தேர்வு செய்ய கீழே உள்ள link ஐ கிளிக் செய்யவும்;
https://www.purplebookhouse.shop/product/kalvanin-kadhali-amara-vaazhvu-book-type-novel-sirukathaigal-by-kalki

📱 வாட்ஸ்அப்-ல் ஆர்டர் செய்ய:
0091 73970 19916

#பர்பில்புக்ஹவுஸ்பப்ளிகேஷன்ஸ் #பர்பில்புக்ஹவுஸ்

#கள்வனின்காதலி #அமரவாழ்வு #அமரர்கல்கி

பர்பில் புக் ஹவுஸ் பப்ளிகேஷன்ஸ் புதிய வெளியீடு"புயலிலே ஒரு தோணி (பர்ப்பிள் புக் ஹவுஸ் பப்ளிகேஷன்ஸ்)"( #நாவல்  ) ஆசிரியர்...
17/06/2024

பர்பில் புக் ஹவுஸ் பப்ளிகேஷன்ஸ் புதிய வெளியீடு

"புயலிலே ஒரு தோணி (பர்ப்பிள் புக் ஹவுஸ் பப்ளிகேஷன்ஸ்)"
( #நாவல் )

ஆசிரியர்: ப. சிங்காரம்
அட்டைப்படம்: Negizhan
விலை ரூ.325 | தள்ளுபடிக்குப் பிறகு ரூ.302

புத்தகம் பற்றி;
'புயலிலே ஒரு தோணி' நாவலின் நாயகன் பாண்டியன் பற்றிய ப.சிங்காரத்தின் புனைவு, கெட்டிதட்டிப்போன தமிழர் வாழ்க்கையின்மீது வீசப்பட்ட பெரிய பாறாங்கல். பொதுப்புத்தி, மதிப்பீடுகளைச் சிதைக்கின்ற பாண்டியன் அடிப்படையில் சாகசக்காரன், புரட்சிக்காரன், கலகக்காரன். பூகோளத்தின் மீதான பிரமாண்டமான அனுபவங்கள் குறித்து உற்சாகத்துடன் கிளர்ந்தெழும் பாண்டியனுக்கு எதுவும் பொருட்டல்ல. சாகசச் செயலில் ஆர்வம், தொடர்ந்து மது அருந்துதல், நிறைய பெண்களுடன் தொடர்பு, மரணம் குறித்து அக்கறையின்மை, இடம் பெயர்தல், பரபரப்பான மனநிலை ஆகியன பாண்டியனின் இயல்பாக உள்ளன. தமிழில் இதுவரை எந்த நாவலாசிரியரும் தொட்டிராத சிகரத்தினைத் தனக்கான புதிய மொழியின் வழியே ப.சிங்காரம் அடைந்துள்ள சாதனை, தனித்துவமானது. புயலிலே ஒரு தோணி நாவல், தலைப்பினுக்கேற்ப கதையாடலில் அங்குமிங்கும் இடைவிடாமல் அலைபாய்ந்து கொண்டிருக்கிறது. சிம்பனி இசைக்கோர்வை போல நாவலின் கதைப்போக்கினில் பல்வேறு கதைக்கருக்கள், தோன்றி, வளர்ந்து மறைந்து, மீண்டும் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. அவை வாசகனை வெவ்வேறு தளங்களுக்கு முடிவற்று இழுத்துச் செல்கின்றன.
- ந.முருகேசபாண்டியன்

தமிழ் நாவல் கலையின் பெருமிதம், ப.சிங்காரம். நவீன தமிழ் இலக்கிய எழுத்தாளர்களில் ஓர் அபூர்வ ஆளுமை. தன்னுடைய படைப்புகளோடும் வாழ்வோடும் இவர் கொண்டிருந்த உறவு தனித்துவமானது, அலாதியானது. இரண்டே இரண்டு நாவல்கள் மட்டுமே எழுதியிருக்கிறார். இரண்டு நாவல்களுமே தமிழ் நாவல் பரப்பின் எல்லைகளை விஸ்தரித்திருப்பவை. ப.சிங்காரத்தின் படைப்பு மொழி, நவீன உரைநடைகளில் மிகவும் விசேஷமானது. கதை மாந்தர்களின் மனமொழி தமிழில் இவரளவுக்கு எவரிடமும் இவ்வளவு அநாயசமாகக் கூடி வரவில்லை. மனக்குகை வாசல்கள் தாமாகவே திறந்து கொண்டு விட்டிருக்கின்றன. உணர்வுகளின் ரகசிய முகமூடிகள் கழன்று விழுந்து, உள்ளுக்குள் நடப்பதை அப்பட்டமாகக் காட்டுகின்றன. கடலுக்கு அப்பால் நாவலில், புயலிலே ஒரு தோணியில் கடவுளின் மலர்ந்த சிரிப்பும் உள்ளுறைந்திருக்கின்றன. கடலுக்கு அப்பால் பெறுமதியான ஒரு நாவல். அதிலிருந்து சகல பரிமாணங்களிலும் விரிந்து பரந்து விகாசம் பெற்றிருக்கும் மகத்தான படைப்பு, புயலிலே ஒரு தோணி. நம் மொழியின் நவீன பொக்கிஷம்.
- சி.மோகன்

இந்த புத்தகத்தைத் தேர்வு செய்ய கீழே உள்ள link ஐ கிளிக் செய்யவும்;
https://www.purplebookhouse.shop/publications
📱 வாட்ஸ்அப்-ல் ஆர்டர் செய்ய:
0091 73970 19916



#புயலிலேஒருதோணி #சிங்காரம் #பர்பில்புக்ஹவுஸ் #பர்பில்புக்ஹவுஸ்பப்ளிகேஷன்ஸ்

பர்பில் புக் ஹவுஸ் பப்ளிகேஷன்ஸ் புதிய வெளியீடு"சோணாடு கொண்டான் பாகம் 1 - மணிமுடி - கட்டளை எழுந்தருளியப் படலம்"( #வாழ்க்க...
22/05/2024

பர்பில் புக் ஹவுஸ் பப்ளிகேஷன்ஸ் புதிய வெளியீடு

"சோணாடு கொண்டான் பாகம் 1 - மணிமுடி - கட்டளை எழுந்தருளியப் படலம்"
( #வாழ்க்கைவரலாறு #வரலாறு #பாண்டியர்வரலாறு #தமிழர்வரலாறு)
ஆசிரியர்: சேரன் செங்குட்டுவன்
அட்டைப்படம்: Negizhan
விலை ரூ.250 | Pre-Book your copy - May 27 வரை 15%-5% தள்ளுபடி

புத்தகம் பற்றி;
சோணாடு கொண்டான் பாகம் 1 - மணிமுடி - கட்டளை எழுந்தருளியப் படலம்

ஏதேனும் ஒன்று உருவாக மற்றொன்று காரணமாக அமைகிறது உலகில் உயிர்கள் உண்டாவதற்கு சூரியன் ஒரு காரணம், கடலில் அலைகள் உருவாக சந்திரன் ஒரு காரணம்!இப்படி ஒவ்வொன்றின் தோற்றத்திற்கும் ஒவ்வொரு காரணம் இருப்பது போல வலிமையற்று போனவர்கள் மீண்டெழுவதற்கு ஒரு காரணமாக இயற்கையும், காலமும் அமைந்திருக்கும். அப்படி வரலாற்றில் பல நூறு வருடங்கள் அடங்கி ஒடுங்கிப்போயிருந்த பாண்டியர்கள் மீண்டும் தன்னெழுச்சி பெற்று தங்களுக்கான அங்கீகாரத்தையும், வலிமையையும் பெற்று பிற்கால பாண்டிய பேரரசு உருவாவதற்கு முதன்மை காரணமாக இருந்த மாறவர்மன் சுந்தரபாண்டியர் எப்படி மூன்றாம் குலோத்துங்க சோழரால் உருவானான்? அவர் சோழ நாட்டின் மீது சினதெழுந்து, வீரவஞ்சினம் ஏற்று சோழ நாட்டை அழிக்க காரணம் என்ன? பிற்கால சோழப் பேரரசின் வீழ்ச்சிக்கும், பாண்டிய பேரரசின் தொடக்கத்திற்கும் வித்திட்ட மூன்றாம் குலோத்துங்க சோழர் பற்றியும் மாறவர்மன், சுந்தரபாண்டியர் பற்றியும் மிகுந்த வரலாறுகளோடு, கற்பனை கதாபாத்திரமே இல்லாது சிறு புனைவு கலந்து உருவான கதையே சோணாடு கொண்டான் மணிமுடி...

இந்த புத்தகத்தைத் தேர்வு செய்ய கீழே உள்ள link ஐ கிளிக் செய்யவும்;
https://www.purplebookhouse.shop/publications

📱 வாட்ஸ்அப்-ல் ஆர்டர் செய்ய:
0091 73970 19916



#சோணாடுகொண்டான் #மணிமுடி #கட்டளைஎழுந்தருளியப்படலம் #சேரன்செங்குட்டுவன் #பர்பில்புக்ஹவுஸ் #பர்பில்புக்ஹவுஸ்பப்ளிகேஷன்ஸ்

ஆதித்த கரிகாலன் கொலை | Aaditha Karikalan Kolaiஆசிரியர்: இரா. மன்னர் மன்னன்Buy R Mannar Books 📚👇https://www.purplebookhou...
30/05/2023

ஆதித்த கரிகாலன் கொலை | Aaditha Karikalan Kolai
ஆசிரியர்: இரா. மன்னர் மன்னன்

Buy R Mannar Books 📚👇

https://www.purplebookhouse.shop/r-mannar-mannan-books

#மன்னர் #இரா #மன்னர்மன்னன்

பர்பில் புக் ஹவுஸ் பப்ளிகேஷன்ஸ் புதிய வெளியீடு - October 2022"களம் - ஒரு அறியப்படாத வாடிவாசல்"( #நாவல்  #வாழ்வியல்) ஆசிர...
09/10/2022

பர்பில் புக் ஹவுஸ் பப்ளிகேஷன்ஸ் புதிய வெளியீடு - October 2022

"களம் - ஒரு அறியப்படாத வாடிவாசல்"
( #நாவல் #வாழ்வியல்)
ஆசிரியர்: லோகி
அட்டைப்படம்: Negizhan
அச்சுப்பொறி: நியூஸ்மேன் பிரிண்டர்ஸ்

விலை ரூ.175 | October 16 வரை - 20% to 7% தள்ளுபடி

புத்தகம் பற்றி;

களம் - ஒரு அறியப்படாத வாடிவாசல்,

ஆம், இது பலரும் அறிந்திராத வாடிவாசல். சல்லிக்கட்டு என்றதும் வாடிவாசலின் முன் சீறி பாய்ந்து வரும் காளையினையும் அதை தழுவும் வீரனையும் மட்டுமே நாம் கண்டிருக்கிறோம். அதே வாடிவாசலின் பின்பகுதி நம்மில் பலரும் அறியாத ஒன்று. அதன் பின்புறம் நாம் அறியாத பெரும் களம் சிவந்து கிடக்கிறது. அது, அன்பு, கோபம், பொறாமை, துரோகம் என பல முகங்களை காட்டிய வண்ணம் இருக்கிறது. நமது பாரம்பரியம் என்று விளையாட வேண்டிய வீர விளையாட்டு இன்று பரிசு என்ற போர்வையில் சுற்றப்பட்டுள்ளது. 90-களில் இதன் நிலை என்ன? இந்த தலைமுறை காணாத களம் யாது? காளை வளர்ப்பு பெருமை என்பதை கடந்து வளர்ப்பவர்கள் அடைவது என்ன? மதுரை மாவட்டத்தின் கடைக்கோடி கிராமத்தில் காலம் காலமாக கம்பீரமாய் நிற்கும் குருதி படிந்த களம் ஒன்று அதன் வட்டார வழக்கில் சொல்லும் கதை இது... இது ஒரு வாழ்வியல்...!

- ஆசிரியர் லோகி

இந்த புத்தகத்தைத் தேர்வு செய்ய கீழே உள்ள link ஐ கிளிக் செய்யவும்;
https://www.purplebookhouse.shop/kalam-oru-ariyappadaatha-vaadivaasal-book-type-novel-vazhviyal-by-logi

📱 வாட்ஸ்அப்-ல் ஆர்டர் செய்ய:
0091 73970 19916

#களம் #ஒருஅறியப்படாதவாடிவாசல் #லோகி #பர்பில்புக்ஹவுஸ் #பர்பில்புக்ஹவுஸ்பப்ளிகேஷன்ஸ்

பர்பில் புக் ஹவுஸ் பப்ளிகேஷன்ஸ் புதிய வெளியீடு - July 2022"அச்சிசாக்குசாமா"( #திகில்நாவல்  #அறிவியல்  #நாவல் ) ஆசிரியர்:...
27/07/2022

பர்பில் புக் ஹவுஸ் பப்ளிகேஷன்ஸ் புதிய வெளியீடு - July 2022

"அச்சிசாக்குசாமா"
( #திகில்நாவல் #அறிவியல் #நாவல் )
ஆசிரியர்: சேரன் செங்குட்டுவன்
அட்டைப்படம்: Negizhan
அச்சுப்பொறி: நியூஸ்மேன் பிரிண்டர்ஸ்

விலை ரூ.299 | ஜூலை 31 வரை - 10% தள்ளுபடி

புத்தகம் பற்றி;
இதுவரை பேய் கதை என்றால் தமிழகத்தில் காலம்காலமாக கூறப்படும் பழிவாங்கும் கதையை தான் மக்கள் படித்திருப்பார்கள். ஆனால் தமிழ் மொழியில் முதல் முதலாக ஜப்பானிய பேயான 8 அடி உயரம் கொண்ட அச்சிசாக்குசாமா என்கிற பேயை மையமாக வைத்து இந்தக் கதையை நான் எழுதி இருக்கிறேன். ஓன்ரியோ என்று அழைக்கப்படும் பழிவாங்கும் பேய்களில் ஒன்று தான் அச்சிசாக்குசாமா, இந்த பேய் 8 அடி உயரம் கொண்ட பெண்மணி என்று ஜப்பானில் அழைப்பார்கள். மேலும் இது முழுமுதல் பேய் கதை அல்ல அறிவியல் புனைவு சார்ந்த ஒரு வித்தியாசமான பேய் கதை. இந்த கதை ஜான் என்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வாலிபன் ஜப்பான் நாட்டின் பழிவாங்கும் கொடூர பேய்யான அச்சிசாக்குசாமாவிடம் தன் சிறுவயதில் சிக்கி எப்படி தப்பித்தான்?? மீண்டும் ஜானை அந்த அச்சிசாக்குசாமா பேய் துரத்த காரணம் என்ன?? ஜானுக்கு உதவிய செசூமே என்ற பெண் யார்?? செசூமேவின் குறிக்கோள் என்ன?? என்று எண்ணற்ற விறுவிறுப்பான கேள்விகளுக்கு பதில் கொடுக்கும் விதமாக அமையப்போகிற அறிவியல் சார்ந்த திரில்லர் பேய் கதை தான் இந்த அச்சிசாக்குசாமா: ஒரு ஓன்ரியோவின் எழுச்சி.

- ஆசிரியர் சேரன் செங்குட்டுவன்

இந்த புத்தகத்தைத் தேர்வு செய்ய கீழே உள்ள link ஐ கிளிக் செய்யவும்;
https://www.purplebookhouse.shop/hachishakusama-book-type-thriller-varalaru-novel-by-cheran-chenguttuvan

📱 வாட்ஸ்அப்-ல் ஆர்டர் செய்ய:
0091 73970 19916

#அச்சிசாக்குசாமா #சேரன்செங்குட்டுவன் #பர்பில்புக்ஹவுஸ் #பர்பில்புக்ஹவுஸ்பப்ளிகேஷன்ஸ்

பர்பில் புக் ஹவுஸ் பப்ளிகேஷன்ஸ் புதிய வெளியீடு - July 2022தமிழேழு வள்ளல்கள் - காலமும் வரலாறும்( #வரலாறு  #தமிழ்நாடு) ஆசி...
06/07/2022

பர்பில் புக் ஹவுஸ் பப்ளிகேஷன்ஸ் புதிய வெளியீடு - July 2022

தமிழேழு வள்ளல்கள் - காலமும் வரலாறும்
( #வரலாறு #தமிழ்நாடு)
ஆசிரியர்: சேரன் செங்குட்டுவன்
அட்டைப்படம்: Negizhan

விலை ரூ.239 | முன் பதிவு செய்யும் போது - ரூ.204

புத்தகம் பற்றி;
சங்ககால தமிழகத்தில் கொடை, வீரம் சிறப்பு, காதல் என்று அனைத்திலும் சிறந்து விளங்கிய மூவேந்தர்களை விட ஒரு காலகட்டத்தில் வேளிர்குடிகளை சேர்ந்த 7 வள்ளல்கள் சிறந்து விளங்கினார்கள்!!தமிழ் எழு வள்ளல்கள் என கூறப்படும் பேகன், அதியமான், மலையமான், ஓரி, பாரி, ஆய் அண்டிரன், கண்டீரக்கோப்பெருநள்ளி ஆகியோரின் வரலாற்றுச் சிறப்பையும் அவர்களுடைய வீரம், கொடை, சிறப்பு, என்று பல தலைப்புகளில் ஆய்வு செய்து பல சான்றுகளுடன் எழுதப்பட்டிருக்கிறது இந்த நூல். வள்ளல்களின் காலகட்டம் என்ன??? மூவேந்தர்களுக்கு படை கொடுத்த வள்ளல் யார்? தமிழகத்திற்கு கரும்பைக் கொண்டு வந்த வள்ளல் மரபினர் யார்?? கொடைத் தன்மை தான் சிறந்த தொழில் என்று தன் வாழ்நாள் சொத்துக்களையும் பிறருக்கு கொடுத்த அந்த வள்ளல் யார்?? வணிகம் செய்த வள்ளல்கள் யார்?? வணிகம் செய்ய துறைமுக நகரத்தையும் போர் செய்ய ராணுவத் தளவாடங்களையும் உருவாக்கிய வள்ளல் யார்?? என்று எண்ணற்ற கேள்விகளுக்கு சரியான பதிலை பல்வேறு ஆதாரங்களுடன் உருவான நூல் தான் தமிழேழு வள்ளல்கள் - காலமும் வரலாறும்.

- ஆசிரியர் சேரன் செங்குட்டுவன்

இந்த புத்தகத்தைத் தேர்வு செய்ய கீழே உள்ள link ஐ கிளிக் செய்யவும்;
https://www.purplebookhouse.shop/thamizh-ezhu-vallalgal-kaalamum-varalarum-book-type-tamilnadu-varalaru-by-cheran-chenguttuvan

📱 வாட்ஸ்அப்-ல் ஆர்டர் செய்ய:
0091 73970 19916

#தமிழேழுவள்ளல்கள் #காலமும்வரலாறும் #பர்பில்புக்ஹவுஸ் #பர்பில்புக்ஹவுஸ்பப்ளிகேஷன்ஸ் #சேரன்செங்குட்டுவன்

பர்பில் புக் ஹவுஸ் பப்ளிகேஷன்ஸ் புதிய வெளியீடு - July 2022கதைகள் சொல்லும் நடப்பியம்( #சிறுகதைகள்) ஆசிரியர்: ச.ப. விஜய்பி...
03/07/2022

பர்பில் புக் ஹவுஸ் பப்ளிகேஷன்ஸ் புதிய வெளியீடு - July 2022

கதைகள் சொல்லும் நடப்பியம்
( #சிறுகதைகள்)
ஆசிரியர்: ச.ப. விஜய்பிரதீப்
அட்டைப்படம்: Negizhan

விலை ரூ.199 | முன் பதிவு செய்யும் போது - ரூ.169

புத்தகம் பற்றி;
ஒரு சினிமா எடுப்பவனாலும், ஒரு எழுத்தாளனாலும் தான் பல கதைகளில் பல கதாப்பாத்திரங்களில் வாழ முடிகிறது, ஒரு சாமானியனால் கற்பனை மட்டுமே செய்ய முடிகிறது. ஆனால் ஒரு எழுத்தாளனால் அவனது எழுத்தால் அதை காட்சிப்படுத்தி பலருக்கும் அந்த அனுபவத்தை கொடுக்கவும் முடிகிறது. நான் வருங்காலத்தில் மருத்துவர் ஆனாலும், ஒரு எழுத்தாளனாகவே எனது வாழ்க்கை முழுமை பெரும் என்பதை ஆழமாக நம்புகிறேன். வாழ்க்கையில் நாம் அன்றாடம் சந்திக்கும் எதார்த்தமான மனிதர்களும் கதைகளும் தான் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. ஆகையால் தான் 'கதைகள் சொல்லும் நடப்பியம்' என்று தலைப்பு வைத்துள்ளோம். இந்த கதைகளில் வரும் ஒவ்வொரு கதாப்பாத்திரங்களும் எங்கேயோ வேறு உலகத்தில் இருந்து வந்ததல்ல, நாம் அன்றாடம் சந்திக்கின்ற, கடந்துப்போகின்ற மனிதர்கள் தான் கதாப்பாத்திரங்களாக வருகின்றனர். இங்கு எந்த தனி மனிதனின் செயலோ அவன் ஒருவனால் முடிவு செய்யப்படுவதில்லை, அவனுடைய சூழ்நிலை, அவனை சுற்றி இருக்கும் மனிதர்கள், சமூகம் என பல காரணிகள் உள்ளன. அப்படி இந்த 13 கதைக் களத்திலும் அந்தந்த சூழ்நிலைகளில் அந்தந்த கதாப்பாத்திரங்களுமகதாப்பாத்திரங்கள் எப்படி நடந்துக் கொள்கின்றனர், அவர்கள் எடுக்கும் முடிவு எத்தகையது, அந்த முடிவின் விளைவு என்ன என்பதை தெரிந்துக் கொள்ள இந்த புத்தகத்தை வாசிக்கவும். பல வகையான கதாப்பாத்திரங்களும் கதைக்களங்களும் ஒரு சேர ஒரே புத்தகமாக பல அனுபவங்களுடன் வாசகர்களாகிய உங்களிடம் வந்து சேர்கிறது இந்த புத்தகம். வாசித்து மகிழுங்கள் 😊✨.

- ஆசிரியர் ச.ப. விஜய்பிரதீப்

இந்த புத்தகத்தைத் தேர்வு செய்ய கீழே உள்ள link ஐ கிளிக் செய்யவும்;
https://www.purplebookhouse.shop/kathaigal-sollum-nadappiyam-book-type-sirukathaigal-by-vijaypradeep

📱 வாட்ஸ்அப்-ல் ஆர்டர் செய்ய:
0091 73970 19916

#கதைகள்சொல்லும்நடப்பியம் #பர்பில்புக்ஹவுஸ் #பர்பில்புக்ஹவுஸ்பப்ளிகேஷன்ஸ் #சபவிஜய்பிரதீப்

Address

Roja Street
Chennai
600091

Telephone

+917397019916

Website

Alerts

Be the first to know and let us send you an email when WonderBees Retail Concept Inc posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category