You&me

You&me Dealing with direct manufacturers and suppliers of Saree and dress materials and offering at best quality at reasonable price.

We are good at Saree collection and providing you the best to fit it to any occasion and events.

...அன்பால் வந்தஉறவு..🌹துணையிடம் சொல்ல முடியாத ரகசியங்களை,பிள்ளைகளிடம் பகிர முடியாத சுமைகளை,அதிகாரிகளிடம் அடக்கி வைத்த கோ...
24/06/2022

...அன்பால் வந்தஉறவு..🌹

துணையிடம் சொல்ல முடியாத ரகசியங்களை,
பிள்ளைகளிடம் பகிர முடியாத சுமைகளை,
அதிகாரிகளிடம் அடக்கி வைத்த கோபங்களை,
அதிகார வர்க்கத்தின் அடக்கு முறைகளின் வேதனைகளை,
உறவுகளின் முன்மொழியாத விழுமியங்களை..🎻

என அனைத்தையும் மனம் விட்டு
பேச இடம் தரும்
ஒரே உறவாய் தோழமை ...🍁
அவளிடம் மட்டும்
தான் என்னை மறைக்காமல்
இயல்பாய் இருக்கிறேன்..🍁

உறவால் வந்த அன்பை தாண்டி அவள் அன்பால் வந்தஉறவு ...✍️
அவள் இல்லாது போனால்
வாழ்க்கை வசந்தத்தை இழக்கும்
வாழ்நாட்கள் உயிர்ப்பின்றி
தவிக்கும்...🏰

@அன்புடன்...... நானும் என் வரிகளும்....✍️

11/06/2022
என்னிடம் பேசி என்னை வருந்தவைக்க நீ விரும்பவில்லை...🌹என்னிடம் பேசினால் நீ வருந்துவாயோஎன்று நினைத்துதான்...🕊️உன்னைவிட்டு த...
27/05/2022

என்னிடம் பேசி என்னை வருந்த
வைக்க நீ விரும்பவில்லை...🌹

என்னிடம் பேசினால் நீ வருந்துவாயோ
என்று நினைத்துதான்...🕊️

உன்னைவிட்டு தூரம் நானும்
விலகியே நிற்கிறேன்...🍂

விக்களில் சிக்கி
தவிக்கும் நேரத்தில் கூட...🍁🍁

உன்னைத்தான்
நான் நினைக்கிறன்...✍️

என்னை வெறுத்தாலும் விடாமல்
என்னை நினைப்பது நீதான் என்று...

தள்ளி நின்று ஜாடை
மொழியில் பேசும் வார்த்தைகள்...🌷

எத்தனை
சுகம் எனக்கு...🕊️

உன்னால் என்
மனம் காயம் பட்டாலும்...👣

உன்னை கண்டாலே
ஒட்டி கொள்கிறது...💐

என் மனம்
உச்சகட்ட சந்தோஷத்தில்...🍁

உன் கூந்தலில்
வாடிய மலரைக்கூட...🕊️🎻

நீ
தூக்கி எறிந்ததில்லை...🎻

உன் வெட்டு ஜன்னலில்
அதற்கும் ஒரு இடம் உண்டு...🪹

நேசித்த
எனக்கு மட்டும் ஏனோ...🎻

யாருக்காகவோ
இடமில்லாமல் போனது...👣

உன் மனதில்
உள்ளுக்குள் கலங்கும்...🍒🕊️

கண்ணீரின் வலிகளுக்கு எப்படி
உனக்கு ஆறுதல் சொல்வேன்...🍁

கண்மணியே காலங்கள்
விதியை மாற்றுமா தெரியவில்லை...🍁

என்னை காலன்
அழைக்கும்வரை காத்திருப்பேன்...

நானும் என் அன்பும்.....!

@சில நேரங்களில் சில சிந்தனைகள்...✍️

21/05/2022

!...தோழி நீ உன் நட்பு நான் ..!

✒️...நட்பு என்ற வார்த்தைக்கு

இலக்கணம் தெரியாது

என் இதயத்தில் அன்பு என்றும்

குறையாது...🍁

உன் பெயரை என் பெயர் உடன்

சேர்ந்து எழுதிய காலம் மறக்காதே

அழகான நினைவுகள் கண்களை

விட்டு மறையாதே....🌷

உன் முகவரி எனக்கு தெரியாதே

கனவில் உன்னை பார்க்கிறேன்..✈️

இதயத்தில் உன்னோடு பேசுகிறேன்

சேர்ந்து இருந்த நாட்கள் கொஞ்சம்

தான் அது கொள்கை இன்பம் தான்

என் தோழியின் ஞாபகம் தான்...🍁

கண்ணீன் ஒரம் வரும் ஈரம் தான்

அது நட்பின் வாசம் என்றும்
விசும்....🍂

@சில நேரங்களில் சில சிந்தனைகள்..✍️

.......நட்பென்ற மழையிலேநனைய மனம் ஏங்குதடிநடு சாமம் என்றாலும்நடு வீதி என்றாலும்...நினைத்ததை உடன் கூறும்நிலையான சுதந்திரம்...
16/05/2022

.......நட்பென்ற மழையிலே
நனைய மனம் ஏங்குதடி
நடு சாமம் என்றாலும்
நடு வீதி என்றாலும்...

நினைத்ததை உடன் கூறும்
நிலையான சுதந்திரம் வேண்டும்
நிமிடமும் சிந்திக்காத வார்த்தை
பரிமாறல் வேண்டும்...

நட்பிற்ச் சிறந்த மந்திரமில்லை
நட்பின் தோள் சாய்ந்திட
நாடுது நைந்த மனம்
இயலாது கலங்குது தினம்...

@சில நேரங்களில் சில சிந்தனைகள்....✍️

அழகு....!அழகானவர்களை எல்லாம்பிடிப்பதில்லை...பிடித்தவர்கள்எல்லாம்அழகாகி விடுகிறார்கள்..@நான்....✍️
01/05/2022

அழகு....!

அழகானவர்களை எல்லாம்
பிடிப்பதில்லை...
பிடித்தவர்கள்
எல்லாம்
அழகாகி விடுகிறார்கள்..

@நான்....✍️

✍️....,உன் கண்சிமிட்டல்கள் குறில் நீ முறைத்தால் நெடில் கண் அயரும் பொழுது மெல்லினம் உன் கோபங்கள் வல்லினம் -prem பேச்சின் ...
26/04/2022

✍️....,உன் கண்சிமிட்டல்கள் குறில் நீ முறைத்தால் நெடில் கண் அயரும் பொழுது மெல்லினம் உன் கோபங்கள் வல்லினம் -prem பேச்சின் இடையிடையே இடைமறித்து பேசும் உன் விழிகள் இடையினம்...

விழியிலக்கணம் !

@நான்...✍️

23/04/2022

.......

...................................................உனக்காக.......வெள்ளைப் பனி கோர்த்துகாலைவாசற்கோலம்போட்டு வைப்பேன்,ஒளிப...
23/04/2022

...................................................
உனக்காக.......

வெள்ளைப் பனி கோர்த்து
காலை
வாசற்கோலம்
போட்டு வைப்பேன்,
ஒளி
பனியில் பட்டுத்
தெறிக்கும் அழகை
உனைத் தட்டி எழுப்பிக்
காட்டிடவே !☃️☃️☃️☃️

நீ நட்டு வைத்தப்
பூச்செடிகள்
பூத்திருக்கா என
பார்த்திருக்க,

பறித்த பூக்களை எல்லாம்
மீண்டும்
மலரச் சொல்லிக்
கேட்டிருந்தேன் !🌷🌷🌷

ரோஜாச் செடியில், மாறி
மல்லிகைப் பூத்திருக்க,
நீ குலுங்கிச்
சிரித்ததிலே
உன் முகத்தில்
ரோஜா பூத்திருச்சே !🌹🌹🌹

உதிர்ந்த இலைகள்
உலரும் முன்னே
ஊன்றி வைத்துக்
களைத்திடுவேன் !

இலை இசைந்தாடி
தரை வீழாதிருக்க
தரைக்காற்று வீசத்
தடைப் போட்டிருந்தேன் !
மரம் கண்டு ரசித்து, நீ
திரும்பும் வரை !🍂🍂🍂🍂🍂

முப்பது நாளும் முழுமதி
வானில்
முடிச்சுப் போட்டு
முடக்கிடுவேன் !

கட்டில் மேலமர்ந்து
கவித்துவமாய்,
கதைகள் பல
கதைத்திடவே !🌕🌕🌕🌕

மூச்சடக்கக்
கற்றுக் கொண்டேன்
நெஞ்சில் நீ
உறங்கையிலே !❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹

புரண்டு நீ
படுக்கையிலே
அனிச்சையாய்
கையில் அள்ளப்
பழகிக் கொண்டேன் !🪹🪹🪹

@உன் அப்பா 🫣

புலம்பாதே செயல்படு புன்னகையால் உலகையே வெல்லலாம்!🍁கலங்காதே பொறுத்திடுகனிந்திடும் காலம்தீயோரை அழித்திட!🍁வெறுக்காதே விரும்ப...
10/04/2022

புலம்பாதே செயல்படு புன்னகையால் உலகையே வெல்லலாம்!🍁

கலங்காதே பொறுத்திடு
கனிந்திடும் காலம்
தீயோரை அழித்திட!🍁

வெறுக்காதே விரும்பிடு
பகைவரையும் நல்வழிக்கு
மாற்றிடலாம் ஒருநாள்!🍁

நடுங்காதே துணிந்திடு
உலாவரும் வதந்திகள்
பனித்துளியாய்ப் பறந்துவிடும்!🍁

மறவாதே போற்றிடு
உயிருனக்கு இருக்கும்வரை
உடனிருக்கும் தாய்மொழியை!🍁

நினைந்திடு நன்றியுடன்
உன்தேவை அறிந்து
நன்மை செய்தோரை!🍁

படித்திடு பயன்பெற்று
வாழ்க்கையில் முன்னேற
வழிகாட்டும் நூல்களை!🍁

@நான்..✍️

......தனிமை.....!நிஜமோடு நிழலும்பகலைத் தொடர்ந்து இரவும்வசந்தம் பின் கோடையும்வருவது போல வாழ்வில்தனிமையும் வந்துருத்தும்தன...
09/04/2022

......தனிமை.....!

நிஜமோடு நிழலும்
பகலைத் தொடர்ந்து இரவும்
வசந்தம் பின் கோடையும்
வருவது போல வாழ்வில்
தனிமையும் வந்துருத்தும்
தனிமையும் இன்மையே
என்றெண்ணி நற்பணியில்
ஈடுபட்டால் தனிமையையும்
வென்று வாழ்ந்திடலாம்🍁

@நான்..✍️

தமிழும் அவளும்...🌹🌹"ழ"கரம் தமிழின் அழகு"மௌனம்" அவளின் அழகு...❣️@நான்..✍️✍️✍️
09/04/2022

தமிழும் அவளும்...🌹🌹

"ழ"கரம் தமிழின் அழகு

"மௌனம்" அவளின் அழகு...
❣️

@நான்..✍️✍️✍️

Address

Chennai
600099

Alerts

Be the first to know and let us send you an email when You&me posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to You&me:

Share