10/12/2020
நாட்டு சர்க்கரை (Country Sugar)
கரும்புச்சாறு பாகாக காய்ச்சப்பட்டு அவை குறிப்பிட்ட கொதிநிலை வரும்போது அதன் சத்துகளில் மாற்றம் ஏற்படுகிறது.
அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் என்று மாற்றம் அடைந்த பின்னர் பிரவுன் நிறத்தில் கிடைக்கும் பொருளே கரும்புச் சர்க்கரையாகும்.
இந்தக் கரும்புச் சர்க்கரையில் வெல்லத்தைக் காட்டிலும் உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்கக் கூடிய அனைத்துச் சத்துகளும் உள்ளன. மேலும் அது உடலில் தேங்கும் கழிவுகளை வெளியேற்றும் செயலையும் செய்கிறது.
நாட்டு சர்க்கரையை நாம் உண்ணும் உணவுகளில் அதிகம் பயன்படுத்துவதால் ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை நீக்கி ரத்தம் சுத்தமாகிறது.
மேலும் நாட்டு சர்க்கரையை அதிகம் உபயோகிப்பதன் மூலம் இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.
பொதுவாக இனிப்பு உணவுகளை அதிகளவு உண்பவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். அதிலும் வெள்ளை சர்க்கரை அல்லது “அஸ்கா சர்க்கரை” பயன்படுத்தி செய்யப்படும் இனிப்புகள் இந்த பிரச்சனையை ஏற்படுத்தும்.
நாட்டு சர்க்கரையை வெள்ளை சர்க்கரைக்கு பதில் பயன்படுத்துவதால் குடல்களுக்கு வலுவூட்டி மலச்சிக்கல் போன்றவை ஏற்படாமல் காக்கும்.
1) நாட்டு சர்க்கரை கிலோ - ரூ. 70
கருப்பட்டி எனும் பனை வெல்லம் (Natural Palm Jaggery)
பனை மரத்தில் இருந்து எடுக்கப்படும் பதநீரை காய்ச்சுவதன் மூலம் கருப்பட்டி என்பது கிடைக்கின்றது. இதனை பனை வெல்லம், பனாட்டு, பனை அட்டு என்று சொல்வார்கள். தென் மாவட்டங்களில் அதிகமாக காணப்படும் பனை மரங்கள் மூலம் தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி போன்ற 6 மாதம் மட்டுமே பதனீர் கிடைக்கும். பங்குனி, சித்திரை மாதங்கள் பதநீர் இறக்குவது அதிகமாக இருக்கும். அந்த சமயங்களில் கருப்பட்டி அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது.
கருப்பட்டியில் மருத்துவ குணங்கள்
கருப்பட்டியை காபி, டீ போன்றவைகளில் கலந்து தினசரி அருந்தி வரலாம். சர்க்கரை நோயாளிகள் கூட கருப்பட்டி காபியை குடிக்கலாம். ஏனெனில் உடல் செயல்பாட்டிற்கு ஏற்ற கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளதால் அதிக கலோகரிகள் இன்றி உடல் ஆற்றலை அதிகரிக்க செய்கிறது. அதிக இரும்புச்சத்து நிறைந்துள்ளது என்பது ரத்த சோகை ஏற்படுவதை தடுக்கிறது.
கல்லீரலில் சேரும் நச்சுகளை வெளியேற்றி கல்லீரல் செயல்பாட்டை அதிகரிக்கும். பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து களி செய்து கொடுப்பதன் மூலம் இடுப்பு எலும்பு வலு பெறுவதுடன், கருப்பைக்கு வலுவைத் தருகிறது.
கருப்பட்டியை உணவு உட்கொண்ட பின் சிறிய துண்டு எடுத்து சாப்பிட்டால் செரிமான சக்தியை தூண்டி எளிதில் உணவு செரிமானம் அடைய செய்கிறது. குடலின் இயக்கம் சீராகி மலச்சிக்கல் போன்றவை ஏற்படாதவாறு செயல்படுகிறது.
கருப்பட்டியில் உள்ள பொட்டாசியம் சத்து இதய ஆரோக்கியத்தை பராமரிக்க செய்கிறது. ரத்த அழுத்தத்தை குறைத்து அதன் மூலம் இதய பாதிப்பு ஏற்படாமல் தடுக்கிறது. அதுபோல் பொட்டாசியம் சத்து மூலம் நரம்பு மண்டலமும் ஆரோக்கியம் பெறுகிறது.
1) ஒரிஜினல் நாட்டு கருப்பட்டி (பனை வெல்லம்) கிலோ - ரூ. 350
2) ஒரிஜினல் உடன்குடி கருப்பட்டி கிலோ ரூ.450/-
ஊட்டி தேயிலை (Nilgiris Tea Powder)
ஊட்டியில் இருந்து நேரடியாக தேயிலை தோட்டத்திற்கு எந்த கலப்படம் இல்லாமல் இயற்கையாகவே உள்ள தரத்தில் உள்ள டீ தூள் 100 கிராம் பாட்டில் மற்றும் 500 கிராம் பேக்கிங் டைப் எங்களிடம் கிடைக்கும்.
1) 100 கிராம் (ஊட்டி தேயிலை) டீ தூள் - ரூ.30
2) 500 கிராம் டீ தூள் பேக்கிங் - ரூ. 150
டார்ஜிலிங் டீ தூள் மற்றும் டீ இலை
(Darjeeling tea powder and tea leaf)
நாம் பொதுவமாக குடித்து வரும் டீ. தேயிலை என்ற தாவரத்தின் இலைகளை ஆக்சிஜனேற்றம் செய்து தயாரிக்கப்படுவது ஆகும். இது மருத்துவ குணம் கொண்ட ஒரு வகை பசுமை தேயிலை.
இந்தியாவில் டீ குடிக்காத நாட்களே இல்லாத நிலை தற்போது உள்ளது. அந்த அளவுக்கு டீ (தேநீர்) அன்றாட வாழ்வில் இரண்டற கலந்துவிட்ட ஒரு பானமாக திகழ்கிறது. சீனாவில் இருந்து வந்ததாக கருதப்படும் இந்த மலைப்பயிர் நம் நாட்டில் பிரிட்டீஷ் காலத்தில் வடகிழக்கு மாநிலமான டார்ஜிலிங் புகழ்பெற்றதாகும்.
1) 30 கிராம் (டார்ஜிலிங் ) டீ இலை - ரூ.10
2) 250 கிராம் டீ இலை பேக்கிங் - ரூ. 75
3) 2.5 கிலோ (டார்ஜிலிங் ) டீ தூள் - ரூ.875
கொடைக்கானல் மிளகு (Kodaikanal Black Pepper)
கோடைக்கானல் மலை பகுதியில் அதிகம் விளையும் உள்ள சிறு விவசாயிகளிடம் நேரடியாக உற்பத்தி செய்து கொள்முதல் செய்யும் அதிக உடலுக்கு நன்மை பயக்கும் மிளகு கிடைக்கும்.
கொடைக்கானல் மிளகு 100 கிராம் - ரூ.65
ஒரு கிலோ ரூ. 600
தமிழகத்தில் உள்ளவர்கள் உங்கள் பகுதியில் டீ கடைகள், வியாபார ஏஜென்சி வைத்திருப்பவர்கள், மளிகை கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட் வைத்திருப்பவர்கள், வாங்கி விற்பனை செய்பவர்களுக்கு அவர்களுக்கு தகுந்த ரேட்டில் கொடுக்கிறோம்.
மேலும் விவரங்களுக்கு எங்களை 90872 59009 தொடர்பு கொள்ளலாம்.
Free Delivery Madippakkam, Ullagaram, Kilkattalai, Velacherry, Nanganallur.
மடிப்பாக்கம், வேளச்சேரி, உள்ளகரம், கீழ்கட்டளை, வேளச்சேரி, நங்கநல்லூர் Free டெலிவரி.
JOANNA ENTERPRISES
28, Selvaganapathi Koil Street,
Ullagaram,
Madippakkam,
Chennai - 600 091
India