Geetham Publications

Geetham Publications Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Geetham Publications, Book shop, 3/3 PADMAVATHI Avenue, THIRUMALAINAGAR ANNEX, PERUNGUDI, Chennai.

எழுத்தாளர் ஜெயகாந்தனின் அனைத்து புத்தகங்களும் கிடைக்குமிடம்கீதம் பப்ளிகேஷன்ஸ்,தொலைபேசி:044-24960231, 9381033303.3/3, பத்...
25/07/2015

எழுத்தாளர் ஜெயகாந்தனின் அனைத்து புத்தகங்களும் கிடைக்குமிடம்

கீதம் பப்ளிகேஷன்ஸ்,
தொலைபேசி:044-24960231, 9381033303.
3/3, பத்மாவதி அவென்யூ, திருமலை நகர் அனெக்ஸ்,
பெருங்குடி,
சென்னை - 96.

தேவைப்படுவோர் தொடர்புகொள்க...
V.P.P. மற்றும் Courier இல் அனுப்பி வைக்கிறோம்...

************************************************************************************

ஜெயகாந்தன் அவர்கள், மிகுந்த ஆற்றலும், ஆளுமையும், வேகமும், உயர்வும், தனித்துவமும் கொண்ட தலைச்சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவராவார். அவர் ஓரளவே படித்திருந்தாலும், தமிழ் இலக்கியத்தைக் கரைத்துக் குடித்து, தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களைத் தன் எழுத்துக்களால் கொள்ளைக் கொண்டவர். ஒரு எழுத்தாளராக மட்டுமல்லாமல், கட்டுரையாளர், பத்திரிகையாளர், துண்டு வெளியீடுகளை எழுதுபவர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் விமர்சகர் எனப் பல்வேறு முகங்கள் கொண்டு, தமிழ் இலக்கியத்திற்கு அருட்தொண்டாற்றியவர் ஜெயகாந்தன் என்று சொன்னால் அது மிகையாகாது. இலக்கியத்திற்காக இந்திய அரசு வழங்கும் மிக உயர்ந்த விருதான ‘ஞான பீட விருதைப்’ பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர் என்ற பெருமைக்குரியவர். மேலும், இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்ம பூஷன் விருதை’ தமிழ் இலக்கியத்திற்காக முதல்முறைப் பெற்றார். ‘சாஹித்ய அகாடமி விருது’, ‘ரஷ்ய விருது’ என்று பல்வேறு விருதுகளுக்குத் தகுதியான ஜெயகாந்தன் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் தமிழ் இலக்கியத்திற்கு அவர் ஆற்றிய சாதனைகள் பற்றியறிய மேலும் தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு: ஏப்ரல் 24, 1934

பிறப்பிடம், கடலூர், தமிழ்நாடு, இந்தியா

பணி: எழுத்தாளர், பத்திரிகையாளர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் விமர்சகர்

நாட்டுரிமை: இந்தியன்



பிறப்பு

ஜெயகாந்தன் அவர்கள், தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் இருக்கும் கடலூரில் ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி, 1934 ஆம் ஆண்டில் ஒரு வேளாண் குடும்பத்தில் பிறந்தார்.

ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்

ஜெயகாந்தன் அவர்களுக்கு, சிறு வயதிலிருந்தே பள்ளிப்படிப்பில் நாட்டமில்லாமல் இருந்தது. எனவே, அவர் ஐந்தாம் வகுப்பு வரையே பள்ளிக்குச் சென்றார். இதன் காரணமாக, அவருக்கும், அவரது தந்தைக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அவர் தனது தாயார் மற்றும் தாத்தாவிடம் மிகவும் நெருக்கமாக இருந்தார். வீட்டில் அவருக்கும், அவரது தந்தைக்கும் சுமூகமானப் பேச்சுவார்த்தை இல்லாமல், இருவரும் எதிரும், புதிருமாக இருந்தனர். அவர் பள்ளிச் செல்லவில்லை என்ற ஒரே காரணத்தால், அவரது தந்தை அவருக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கினார். சிறுவனாக இருந்து இதனை சற்றும் தாங்கிக் கொள்ள இயலாததால், அவர் தனது 12 வது வயதில் வீட்டை விட்டு ஓடி, விழுப்புரத்தில் உள்ள அவரது மாமாவின் வீட்டிற்கு வந்து சேர்ந்தார். அங்கு, அவரது மாமா அவருக்கு கம்யூனிச கொள்கைகளையும், சுப்ரமணிய பாரதி படைப்புகளையும் அறிமுகப்படுத்தி வைத்தார்.

இலக்கியம் மீது ஆர்வம்

சிறிது காலம் கழித்து, ஜெயகாந்தன் அவர்களுடைய தாயார் அவரை சென்னையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரான அவரது உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தனது பிள்ளைப் பருவத்தைக் கழித்த அவர், தமிழ்நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுக்குப் பரிச்சயமானார். அக்கட்சி அலுவலகத்தைத் தனது வீடாகவும், அக்கட்சி உறுப்பினர்களைத் தனது குடும்ப அங்கத்தினர்களாகவும் கருதிய அவர், அவர்களின் கலந்துரையாடல்களைக் கேட்க கேட்க, இலக்கியத்தின் மீது அவருக்கு நாட்டம் ஏற்பட்டது. இதனால், கட்சியின் அங்கத்தினரான ஜீவானந்தம் என்பவர், அவருக்குத் தமிழாசிரியர் ஒருவரை அவருக்குக் கல்வி கற்றுத் தருமாறு பணியில் அமர்த்தினார். தமிழ் இலக்கிய, இலக்கணங்களை முறையாகக் கற்றுத் தேர்ந்த அவர், பல இடங்களில் முழுநேரம் மற்றும் பகுதிநேர வேலைகளில் வேலைப் பார்த்தார். 1949ல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தடைவிதிக்கப்பட்டதால், அக்கட்சிக்குத் தடை உத்தரவு விதிக்கப்பட்டது. இதன் பொருட்டாக, அவர் தஞ்சாவூரிலுள்ள ஒரு காலணிகள் விற்கும் கடையில் தற்காலிகமாகப் பணியில் சேர்ந்தார். அவருக்குக் கிடைத்த ஓய்வு நேரங்களில், எழுதும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். மேலும், புதிய கட்சிகளின் வருகையால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முழுவதுமாக அழிந்ததால், காமராஜரின் கொள்கைகள் மீது அவருக்குப் பற்று ஏற்பட்டதால், அவரது தொண்டனாக மாறி, அவர் இருந்த தமிழகக் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

எழுத்துலக வாழ்க்கை

ஜெயகாந்தன் அவர்கள், அவரது இலக்கிய வாழ்க்கையை 1950களில் தொடங்கினார். பல்வேறு தினசரி மற்றும் மாத நாளிதழ்களான சரஸ்வதி, தாமரை, கிராம ஊழியன், ஆனந்த விகடன் போன்றவற்றில் அவரது படைப்புகள் வெளியாயின. அவரது படைப்புகளனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதால், அவருக்குப் புகழும், அவரது படைப்புகளுக்கு அங்கீகாரமும் கிடைத்தது. இதனால், அவர் தலைச்சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகப் போற்றப்பட்டார். எழுத்துலகில் கொடிக்கட்டிப் பறந்த அவர், தமிழ்த் திரையுலகிலும் வலம் வந்தார். அவரது மிகவும் வெற்றிப்பெற்ற படைப்புகளான “உன்னைப் போல் ஒருவன்” மற்றும் “சில நேரங்களில் சில மனிதர்கள்” போன்ற நாவல்கள் படமாக்கப்பட்டன. “உன்னைப் போல் ஒருவன்” என்ற படம், சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான ‘குடியரசுத் தலைவர் விருதில் மூன்றாம் விருதான பத்ம பூஷன் விருதை’ பெற்றது.

அவரது படைப்புகள்

ஜெயகாந்தன் அவர்கள், பல்வேறு வாழ்க்கை வரலாறு, நாவல்கள், குறுநாவல்கள், சிறுகதைகள் தொகுப்பு, கட்டுரைகள், போன்றவற்றைப் படைத்துள்ளார். அதில் சில குறிப்பிடத்தக்கப் படைப்புகள்:

‘வாழ்விக்க வந்த காந்தி 1973’, ‘ஒரு கதாசிரியனின் கதை’, ‘பிரம்ம உபதேசம்’, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’, ‘சினிமாவுக்குப் போன சித்தாளு’, ‘கண்ணன்’, ‘உன்னைப் போல் ஒருவன்’, ‘ரிஷிமூலம்’, ‘கருணையினால் அல்ல’, ‘கங்கை எங்கே போகிறாள்’, ‘ஒவ்வொரு கூரைக்கும் கீழே…’, ‘சுந்தர காண்டம்’ மற்றும் பல.

தமிழ்த் திரையுலகில் இவருடைய கதைகள் பல திரைப்படங்களாகத் தயாரிக்கப்பட்டன. அவை: ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’, ‘ஊருக்கு நூறு பேர்’, ‘உன்னைப் போல் ஒருவன்’, ‘யாருக்காக அழுதான்’, மற்றும் ‘புதுச் செருப்பு’.

அவர் இயக்கிய திரைப்படங்கள்: ‘உன்னைப் போல் ஒருவன்’, ‘யாருக்காக அழுதான்’, மற்றும் ‘புதுச்செருப்பு கடிக்கும்’

விருதுகள்

1972 - சாஹித்ய அகாடமி விருது
2002 – இலக்கியத்திற்காக இந்திய அரசு வழங்கும் மிக உயர்ந்த விருதான ‘ஞான பீட விருதைப்’ பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர்.
2009 – இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்ம பூஷன் விருதை’, இலக்கியத்துறைக்காக முதல்முறை வென்றார்.
2011 – ரஷ்ய விருது
காலவரிசை

1934: தமிழ்நாட்டில் இருக்கும் கடலூரில் ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி, 1934 ஆம் ஆண்டில் ஒரு வேளாண் குடும்பத்தில் பிறந்தார்.

1950: அவரது இலக்கிய வாழ்க்கையை 1950களில் தொடங்கினார்.

2002: இலக்கியத்திற்காக இந்திய அரசு வழங்கும் மிக உயர்ந்த விருதான ‘ஞான பீட விருதைப்’ பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர்.

2009: இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்ம பூஷன் விருதை’, இலக்கியத்துறைக்காக முதல்முறை வென்றார்.

Indra Soundar Rajan (இந்திரா சௌந்தர்ராஜன்) born. 13 November 1958) is the pen name of P. Soundar Rajan, a well-known Tam...
18/05/2015

Indra Soundar Rajan (இந்திரா சௌந்தர்ராஜன்) born. 13 November 1958) is the pen name of P. Soundar Rajan, a well-known Tamil author of short stories, novels, television serials, and screenplays.

He is something of an expert on South Indian Hindu traditions and mythological lore. His stories typically deal with cases of supernatural occurrence, divine intervention, reincarnation, and ghosts, and are often based on or inspired by true stories reported from various locales around the state of Tamil Nadu.

எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜனின் அனைத்து புத்தகங்களும் கிடைக்குமிடம்

கீதம் பப்ளிகேஷன்ஸ்,
தொலைபேசி:044-24960231, 9381033303.
3/3, பத்மாவதி அவென்யூ, திருமலை நகர் அனெக்ஸ்,
பெருங்குடி,
சென்னை - 96.

தேவைப்படுவோர் தொடர்புகொள்க...

V.P.P. மற்றும் Courier இல் அனுப்பி வைக்கிறோம்...

Sandilyan (Tamil: சாண்டில்யன்) is the Pen name of Bhashyam Iyengar, a noted Tamil writer of historical fiction. He is kn...
25/04/2015

Sandilyan (Tamil: சாண்டில்யன்) is the Pen name of Bhashyam Iyengar, a noted Tamil writer of historical fiction. He is known for his historical romance and adventure novels, often set in the times of the Chola and Pandya empires.

எழுத்தாளர் சாண்டில்யனின் அனைத்து புத்தகங்களும் கிடைக்குமிடம்

கீதம் பப்ளிகேஷன்ஸ்,
தொலைபேசி:044-24960231, 9381033303.
3/3, பத்மாவதி அவென்யூ, திருமலை நகர் அனெக்ஸ்,
பெருங்குடி,
சென்னை - 96.

தேவைப்படுவோர் தொடர்புகொள்க...
V.P.P. மற்றும் Courier இல் அனுப்பி வைக்கிறோம்...

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் காஞ்சிபுரம் கங்காகுலத்தலைவராகிய சேக்கிழார் கோத்திரம் தெய்வசிகாமணிப் புலவர் அருளிச் செய்த குல...
21/04/2015


சிவமயம்
திருச்சிற்றம்பலம்

காஞ்சிபுரம் கங்காகுலத்தலைவராகிய சேக்கிழார் கோத்திரம் தெய்வசிகாமணிப் புலவர் அருளிச் செய்த
குலால புராணம்

குலாலர் புராணம்
தொகுப்பாசிரியர் : ரா. அருள்நிதி
விலை: 150/-

வெளியீடு: கீதம் பப்ளிகேஷன்ஸ்,
3/3, பத்மாவதி அவென்யூ,
திருமலை நகர் அனெக்ஸ்,
பெருங்குடி, சென்னை- 96.
தொலைபேசி:044-24960231, 9381033303.

பொதுவாழ்வில், வணிகத்தில், கலைத் துறையில் வெற்றியை ருசித்தவர்களின் சுயசரிதை என்றால் அதில் சர்ச்சைகளும் எதிர்பாராத சம்பவங்...
17/04/2015

பொதுவாழ்வில், வணிகத்தில், கலைத் துறையில் வெற்றியை ருசித்தவர்களின் சுயசரிதை என்றால் அதில் சர்ச்சைகளும் எதிர்பாராத சம்பவங்களும் நிறைந்திருக்கலாம். ஆனால், அதுபோன்ற மாயக் கவர்ச்சி எதுவும் தேவைப்படாமல் ஆனால் இப்படியும் ஒரு ஆசிரியர் தன் வாழ்க்கையை மாணவர்களுக்காக அர்ப்பணிக்க முடியுமா என்று ஆச்சரியப்படவும் நெகிழவும், சமயங்களில் கலங்கவும் வைத்துவிடுகிறது கல்வித் துறையிலிருந்து வந்திருக்கும் இந்தச் சுயசரிதை.

மகன் கப்பல் கேப்டனாக வேண்டும் என்று விரும்பி அவனை நுழைவுத் தேர்வு எழுத வைக்கிறார்கள் பெற்றோர்கள். அந்தத் தேர்வில் முதல் வகுப்பில் வெற்றிபெற்றும் கப்பலுக்கு கேப்டனாக விரும்பாமல் மாணவர்களுக்கு கேப்டனாக விரும்பியிருக்கிறார் இந்த நூலின் நாயகர். கிறிஸ்தவ இறையியலில் குருத்துவம் பெற்று ஆசிரியராக மாறுகிறார். தன்னை நம்பி விடுதியில் விட்டுச்செல்லப்படும் மாணவர்களுக்குக் கல்வியைப் புகட்டுவதோடு தன் கடமை முடிந்தது என்று இவர் போய்விடவில்லை. தாய் தந்தையரைப் பிரிந்து விடுதியில் தங்கிப் பயிலும் மாணாக்கர் அனைவருக்கும் தாயாகவும் தந்தையாகவும் இருந்து அவர்களைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக்கொள்கிறார்.

அவர்களது முன்னேற்றங்களை அணுஅணுவாக உயர்த்தி அழகு பார்த்திருக் கிறார். தங்கள் ஆசிரியரின் இந்தத் தாயுள்ளம் பற்றிய பெருமைகளை இந்தச் சுயசரிதை நூலில் மதம், இனம் கடந்து அவரது மாணவர்களைத் தனித்தனி அனுபவக் கட்டுரைகளாக எழுதி உணர்ச்சிப் பகிர்வுகளாக இணைத்திருக்கிறார்கள். சுயசரிதையைத் தொகுத்தவர்,

‘பிரம்படி பிரம்மா’ அவரது மாணவர்களால் வருணிக்கப்படும் ஒரு பள்ளி ஆசிரியருக்கு அப்படி என்ன சிறப்பு இருந்துவிட முடியும் என்று கேட்கிற யாருக்கும் இந்தப் புத்தகம் ஓர் அரிய பொக்கிஷம். இந்த நூலின் நாயகர் வரலாற்றுப் பெருமை மிக்க கடலூரில் கடந்த 145 ஆண்டுகளாகக் கல்விப்பணியை நிறைவு செய்திருக்கும் ‘கர்னல் கார்டன்’ புனித வளனார் மேல்நிலைப் பள்ளியின் முதல்வரான பீட்டர் அடிகளார்.

கர்னல் தோட்டத்தின் கருணை ஒளி!
நூலாசிரியர்: கே. எஸ். இளமதி
விலை: 150/-

வெளியீடு: கீதம் பப்ளிகேஷன்ஸ்,
3/3, பத்மாவதி அவென்யூ,
திருமலை நகர் அனெக்ஸ்,
பெருங்குடி, சென்னை- 96.
தொலைபேசி:044-24960231, 9381033303.

- சொல்லாளன்

நன்றி : TAMIL.THEHINDU.COM

17/04/2015

பொதுவாழ்வில், வணிகத்தில், கலைத் துறையில் வெற்றியை ருசித்தவர்களின் சுயசரிதை என்றால் அதில் சர்ச்சைகளும் எதிர்பாராத சம்பவங்களும் நிறைந்திருக்கலாம்

இந்த புத்தகம் தேவைப்படுவோர் தொடர்புகொள்க...044 - 2496 0231, 044 - 3200 1503, 9381033303கீதம் பப்ளிகேஷன்ஸ்,3/3, பத்மாவதி ...
16/04/2015

இந்த புத்தகம் தேவைப்படுவோர் தொடர்புகொள்க...
044 - 2496 0231, 044 - 3200 1503, 9381033303

கீதம் பப்ளிகேஷன்ஸ்,
3/3, பத்மாவதி அவென்யூ, திருமலை நகர் அனெக்ஸ்,
பெருங்குடி,
சென்னை - 96.

V.P.P. மற்றும் Courier இல் அனுப்பி வைக்கிறோம்...

பக்கங்கள் : 335
விலை ரூ. 100/-

தென்கச்சி...இந்தப் பெயரைக் கேட்டாலே நமக்குள் ஒரு மலர்ச்சி உண்லாகும். உற்சாகம் தொற்றி கொள்ளும்.அவரின் திடீர் மறைவு நமக்கு...
13/04/2015

தென்கச்சி...

இந்தப் பெயரைக் கேட்டாலே நமக்குள் ஒரு மலர்ச்சி உண்லாகும். உற்சாகம் தொற்றி கொள்ளும்.

அவரின் திடீர் மறைவு நமக்கு பெரிழப்பு. ஒருவர் இருக்கும் போதை விட அவர் இல்லாத போது தான் அவரை முழுவதுமாக எல்லோரும் அறிந்து கொள்கிறார்கள்.

அந்த வகையில் அமரர் தென்கச்சியாரின் குணங்கள் பலருக்கும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தின. வணக்கத்திற்குரியவர் என்று போற்றினார்கள். சிலர் கடவுலைக் கூட நிந்தித்தார்கள். உலக நாட்டின் அனைத்து தமிழர்களும் அவரின் மறைவுக்கு வருந்தினார்கள். அவருடைய நினைவாக இந்தப் புத்தகம் வெளி வருவது அவருடைய இழப்பை சற்று ஈடுகட்டும் முயற்சியே.

அந்த பாக்கியத்தை தந்த அவரது குடும்பத்தாருக்கு எனது நன்றி மலர்கள். அதற்கு உறுதுணையாக இருந்த எமது இனிய நண்பர் மாருதி பவர் திரு. செல்வக்குமார் அவர்களுக்கும் நன்றி.

இதில் பல கட்டுரைகள், மல்லிகை மகளில் வெளிவந்தவைகள். அதன் ஆசிரியர் திரு. ம. கா. சிவ ஞானம் அவர்கள் விடுபட்ட சில கட்டுரைகளையும் கொடுத்து உதவினார். அவர்கட்கும் எமது நன்றி மலர்கள்.

இந்த புத்தகம் அவரின் நினைவாக வெளியிடப்படுகின்றது. அவருடைய நினைவில் அவர் காட்டிய வழியில் எங்கள் பயணம் தொடரும்.

நன்றியுடன்.
ஞா. முத்துசாமி (ஞானசி)

****************************************************************************

இந்த புத்தகம் தேவைபடுவோர் தொடர்புகொள்க...
044 - 2496 0231, 044 - 3200 1503, 9381033303

கீதம் பப்ளிகேஷன்ஸ்,
3/3, பத்மாவதி அவென்யூ, திருமலை நகர் அனெக்ஸ்,
பெருங்குடி,
சென்னை - 96.

V.P.P. மற்றும் Courier இல் அனுப்பி வைக்கிறோம்...

பக்கங்கள் : 128
விலை ரூ. 60/-

நூலை பற்றி ஆசிரியர் (தென்கச்சி கோ சுவாமிநாதன்)நல்லது நடக்கட்டும்'இன்று ஒரு தகவல்' என்கிற நிகழ்ச்சி ஒன்று சென்னை வானொலியி...
13/04/2015

நூலை பற்றி ஆசிரியர் (தென்கச்சி கோ சுவாமிநாதன்)

நல்லது நடக்கட்டும்

'இன்று ஒரு தகவல்' என்கிற நிகழ்ச்சி ஒன்று சென்னை வானொலியில் பதினான்கு ஆண்டுகள் தொடர்ந்து நாள்தோறும் ஒலிபரப்பாயிற்று.

அந்தச் செய்திகளை எல்லாம் அவ்வப்போது சில புத்தகங்களாகவும் வெளிவந்தன. ஒரு ஐம்பது தகவல்களைத் தேர்ந்தெடுத்து அதை ஒரு புத்தகமாகக் கொண்டு வந்தால் என்ன...? என்கிற எண்ணம் எனக்கும் தோன்றியது.

என்னுடைய நண்பர் ஞானசி (முத்துசாமி) அவர்களுக்கும் தோன்றியது. அதன் விளைவுதான் இந்த நூல்.

நல்ல செய்திகள் நாலுபேர் காதில் விழுவது நல்லது. அதுபோல் அவை நாலுபேர் கண்ணில் படுவதும் நல்லதுதான்.

வாழ்க வளமுடன்.

அன்புடன்
தென்கச்சி.
****************************************************************************

இந்த புத்தகம் தேவைபடுவோர் தொடர்புகொள்க...
044 - 2496 0231, 044 - 3200 1503, 9381033303

கீதம் பப்ளிகேஷன்ஸ்,
3/3, பத்மாவதி அவென்யூ, திருமலை நகர் அனெக்ஸ்,
பெருங்குடி,
சென்னை - 96.

V.P.P. மற்றும் Courier இல் அனுப்பி வைக்கிறோம்...

பக்கங்கள் : 224
விலை ரூ. 90/-

ஜோதிட ரீதியாக திருமணம் சம்பந்தப்பட்ட முக்கிய விபரங்கள்  அடங்கிய நூல்ஆசிரியரை பற்றி...ஆசிரியர் பி. எஸ். கேசவன் அவர்கள் ஜோ...
12/04/2015

ஜோதிட ரீதியாக திருமணம் சம்பந்தப்பட்ட முக்கிய விபரங்கள் அடங்கிய நூல்

ஆசிரியரை பற்றி...

ஆசிரியர் பி. எஸ். கேசவன் அவர்கள் ஜோதிடத்தில் 26 வருடங்களாக ஆராய்ச்சி செய்து வருபவர்.
கைரேகை, நியூமராலஜி மற்றும் வாஸ்து சாஸ்திர வல்லுனர்.
திருமணம் பற்றி இதுவரை வெளிவராத சில அற்புதக் கருத்துகளை இந்நூலில் சொல்லியுள்ளார்.

நூலின் பெயர் : ஏழாம் பாவம் (களத்திர பாவம்)
ஆசிரியர் : ஜோதிட விசாரத் பி. எஸ். கேசவன் (K.P)
விலை : ரூ. 100.00
பக்கங்கள் : 208

இந்த புத்தகம் தேவைபடுவோர் தொடர்புகொள்க...
044 - 2496 0231, 044 - 3200 1503, 9381033303

கீதம் பப்ளிகேஷன்ஸ்,
3/3, பத்மாவதி அவென்யூ, திருமலை நகர் அனெக்ஸ்,
பெருங்குடி,
சென்னை - 96.

V.P.P. மற்றும் Courier இல் அனுப்பி வைக்கிறோம்...

Book Day (23-04-2015) Special Discount : 20% Discount ******************************************************************...
08/04/2015

Book Day (23-04-2015) Special Discount : 20% Discount
***********************************************************************
தகவல்கள் - 47 (பாகம் - 1) - (விலை ரூ. 110) - (விலை ரூ. 88)
தகவல்கள் - 42 (பாகம் - 2) - (விலை ரூ. 110) - (விலை ரூ. 88)
தகவல்கள் - 43 (பாகம் - 3) - (விலை ரூ. 110) - (விலை ரூ. 88)
தகவல்கள் - 44 (பாகம் - 4) - (விலை ரூ. 90) - (விலை ரூ. 88)
தகவல்கள் - 45 (பாகம் - 5) - (விலை ரூ. 110) - (விலை ரூ. 88)
வானொலி தகவல்கள் - 1 (பாகம் - 6) - (விலை ரூ. 110) - (விலை ரூ. 88)
வானொலி தகவல்கள் - 2 (பாகம் - 7) - (விலை ரூ. 110) - (விலை ரூ. 88)
வானொலி தகவல்கள் - 3 (பாகம் - 8) - (விலை ரூ. 110) - (விலை ரூ. 88)

பாகங்கள் (9 - 20) - அச்சில்....

வானொலியில் தென்கச்சி கோ சுவாமிநாதன் அவர்கள் 14 ஆண்டுகாலம் 'இன்று ஒரு தகவல்' என்ற தலைப்பில் உரையாற்றிய உரையாடலின் தொகுப்பு 20 பாகங்களாக...

இந்த புத்தகங்கள் தேவைபடுவோர் தொடர்புகொள்க...
044 - 2496 0231, 044 - 3200 1503, 9381033303

கீதம் பப்ளிகேஷன்ஸ்,
3/3, பத்மாவதி அவென்யூ, திருமலை நகர் அனெக்ஸ்,
பெருங்குடி,
சென்னை - 96.

V.P.P. மற்றும் Courier இல் அனுப்பி வைக்கிறோம்...

வானொலியில் தென்கச்சி கோ சுவாமிநாதன் அவர்கள் 14 ஆண்டுகாலம் 'இன்று ஒரு தகவல்' என்ற தலைப்பில் உரையாற்றிய உரையாடல்களின் தொகு...
08/04/2015

வானொலியில் தென்கச்சி கோ சுவாமிநாதன் அவர்கள் 14 ஆண்டுகாலம் 'இன்று ஒரு தகவல்' என்ற தலைப்பில் உரையாற்றிய உரையாடல்களின் தொகுப்பு...
படங்களுடன்...

வானொலி தகவல்கள் - 3 (பாகம் - 8) - (விலை ரூ. 110)

45 தகவல்களை உள்ளடக்கிய நூல்... படங்களுடன்...

இந்த புத்தகம் தேவைபடுவோர் தொடர்புகொள்க...
044 - 2496 0231, 044 - 3200 1503, 9381033303

கீதம் பப்ளிகேஷன்ஸ்,
3/3, பத்மாவதி அவென்யூ, திருமலை நகர் அனெக்ஸ்,
பெருங்குடி,
சென்னை - 96.

V.P.P. மற்றும் Courier இல் அனுப்பி வைக்கிறோம்...

Address

3/3 PADMAVATHI Avenue, THIRUMALAINAGAR ANNEX, PERUNGUDI
Chennai
600096

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Friday 9am - 9pm
Saturday 9am - 9pm
Sunday 9am - 9pm

Telephone

+914432990231

Website

Alerts

Be the first to know and let us send you an email when Geetham Publications posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category