GoGreen Organic store

GoGreen Organic store Gogreen is one of the best oraganic store in chennai.

04/01/2017
04/01/2017

Beets are extremely healthy as they have potent medicinal properties and offer relief in the case of various ailments and diseases. The anthocyanins give them the red color and have strong anti-cancer properties. Moreover, beets contain betaine, which is a natural anti-inflammatory agent that suppor...

28/12/2016

உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறத. இவ்விரு நாடுகளின்
மக்கள்பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கிய காரணமாகும்...
இந்தியாவில் குழந்தைப் பேறுக்கான மருந்துகளின் விற்பனைவாய்ப்புக்கு நிலக்கடலை உண்ணும் வழக்கம் தடையாக
இருக்கிறது மற்றும் சில இதய நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்ய முடியவில்லை. எனவே அமெரிக்கா இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்றும் நிலக்கடலைஎண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்துவிட்டார்கள். இதன் காரணமாக குழந்தையில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள்.
கடந்த 20 வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலை பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில்நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடிஇருக்கிறது. இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள் நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து சாப்பிட வேண்டும் என்று கருதியும் இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது.
பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறது. பெண் களுக்கு பெரிதும் தேவையான போலிக்அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம்,இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.
100கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.
கார்போஹைட்ரேட்- 21 மி.கி.
நார்சத்து- 9 மி.கி.
கரையும்(நல்ல HDL) கொழுப்பு – 40 மி.கி.
புரதம்- 25 மி.கி.
ட்ரிப்டோபான்- 0.24 கி.
திரியோனின் – 0.85 கி
ஐசோலூசின் – 0.85 மி.கி.
லூசின் – 1.625 மி.கி.
லைசின் – 0.901 கி
குலுட்டாமிக் ஆசிட்- 5 கி
கிளைசின்- 1.512 கி
விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி
கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) – 93.00 மி.கி.
காப்பர் – 11.44 மி.கி.
இரும்புச்சத்து – 4.58 மி.கி.
மெக்னீசியம் – 168.00 மி.கி.
மேங்கனீஸ் – 1.934 மி.கி.
பாஸ்பரஸ் – 376.00 மி.கி.
பொட்டாசியம் – 705.00 மி.கி.
சோடியம் – 18.00 மி.கி.
துத்தநாகச்சத்து – 3.27 மி.கி.
தண்ணீர்ச்சத்து – 6.50 கிராம்.
போன்ற சத்துக்கள் மற்றும் போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பி உள்ளது.
நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா,முந்திரிப்பருப்புகளில்தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம்.
அது தவறு.
நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய்எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு.
நாகரீகம் பகுத்தறிவு என்ற பெயரில் படிக்காதவர்களை விட படித்தவர்களை எளிதில் ஏமாற்றிவிடலாம் என்பதை பிற நாடுகள் இன்றும் நம்மிடம் நிரூபித்துகொண்டிருகிறது.
வேறு உதாரணம் - மேகி நூடுல்ஸ், குளிர் பானங்கள் மற்றும் பல......

28/12/2016

2 மாதம் வெந்தய நீரில் தேன் கலந்து குடித்தால், எந்த பகுதியில் உள்ள கொழுப்பு கரையும் என்று தெரியுமா?

இன்றைய மோசமான உணவுப் பழக்கவழக்கத்தாலும், வாழ்க்கை முறையாலும் ஏராளமான நோய்கள் உடலை தாக்குகின்றன. முக்கியமாக உடலில் நச்சுக்களின் அளவும அதிகரிக்கிறது. குறிப்பாக இரத்த குழாய்களினுள் கொழுப்புக்கள் படித்து இரத்த குழாய்களை அடைத்து, இதயத்திற்கு இரத்தம் செல்வதில் இடையூறு ஏற்பட்டு, இதய பிரச்சனைகள் மற்றும் மூளை பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.
இப்படி இரத்த குழாய்களினுள் தேங்கும் கொழுப்புக்களைக் கரைக்க மருந்து மாத்திரைகள் மட்டுமின்றி, பல்வேறு உணவுகளும், பானங்களும் உதவுகின்றன. மருந்து மாத்திரைகள் கூட சில சமயங்களில் பக்க விளைவுகளை உண்டாக்கும். ஆனால் இயற்கை பானங்களும், உணவுகளும் எந்த பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது.
இப்போது நாம் இரத்த குழாய்களில் தேங்கியுள்ள கொழுப்புக்களைக் கரைக்க உதவும் ஓர் இயற்கை பானம் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
வெந்தயம்
இரத்தக் குழாய்களில் அடைப்பை உண்டாக்கும் கொழுப்புக்களின் தேக்கத்தைக் கரைக்க வெந்தயம் பெரிதும் உதவியாக இருக்கும்.
ஆய்வுகள்
பல்வேறு ஆய்வுகளில் வெந்தயத்தில் உள்ள ஏராளமான நார்ச்சத்து, உடலில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதாகவும் மற்றும் இந்த கரையக்கூடிய நார்ச்சத்து கொலஸ்ட்ராலை உடல் உறிஞ்சுவதை தடுப்பதாகவும் கண்டறியப்பட்டள்ளது.
வெந்தயத்தின் இதர நன்மைகள்
வெந்தயத்தில் இருக்கும் நார்ச்சத்து உண்ணும் உணவுகளை எளிதில் செரிமானமடையச் செய்வதோடு, பித்தநீரின் உற்பத்தியைச் சீர்செய்யும். மேலும் உடலின் மூலை முடுக்குகளில் உள்ள தீங்கு விளைவிக்கும் டாக்ஸின்களை முழுமையாக வெளியேற்றச் செய்யும்.
வெந்தய நீர் தயாரிப்பு முறை #1
ஒரு கப் நீரில் 1 டீஸ்பூன் வெந்தயத்தைப் போட்டு 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, தேன் கலந்து தினமும் இருமுறை குடிக்க வேண்டும்.


வெந்தய நீர் தயாரிப்பு முறை #2
வெந்தயத்தை இரவில் படுக்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
குறிப்பு
மேலே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு முறைகளில் ஏதேனும் ஒன்றை 1-2 மாதங்கள் தினமும் குடித்து வந்தால், நிச்சயம் இரத்தக் குழாய்கள் சுத்தமாகி, இதயம் மற்றும் மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
கீழே இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் இருக்க சில டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை மனதில் கொண்டு பின்பற்றினால், இரத்த குழாய்களில் கொழுப்புக்கள் படிவதைத் தடுக்கலாம்.
டிப்ஸ் #1
எண்ணெயில் பொரித்த உணவுகள், சர்க்கரை உணவுகள் போன்றவற்றை அதிகம் உட்கொள்வதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். மேலும் பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.
டிப்ஸ் #2
புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்ற கெட்ட பழக்கங்களை விட்டுவிட வேண்டும்.
டிப்ஸ் #3
பிரகாசமான நிறங்களைக் கொண்ட பழங்களான தர்பூசணி, மாம்பழம், ஆரஞ்சு மற்றும் ப்ளூபெர்ரி போன்றவற்றை அன்றாடம் சிறிது உட்கொண்டு வந்தால், கொழுப்புக்கள் படிவதைத் தடுக்கலாம்.
டிப்ஸ் #4
தினமும் காலை மற்றும் மாலையில் 1 கப் க்ரீன் டீ குடித்து வருவதன் மூலம், உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்புக்கள் கரைக்கப்படும். இதனால் உடல் எடையும் குறையும்.
டிப்ஸ் #5
அன்றாட சமையலில் சுத்தமான தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தி சமைத்து வர, இரத்த குழாய்களில் கொழுப்புக்கள் படிவது தடுக்கப்படும்.
டிப்ஸ் #6
கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள், கிரான்பெர்ரி ஜூஸ் கிடைக்கும் போது, தவறாமல் வாங்கிப் பருகுங்கள். ஏனெனில் இது கொழுப்புக்களின் அளவைக் குறைத்து, கொழுப்புக்கள் இரத்த குழாய்களில் படிவதைத் தடுக்கலாம்.

மாதுளையின் மகத்துவம் மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட...
22/12/2016

மாதுளையின் மகத்துவம்

மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது. புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. இரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. எந்த வகையான குடல் புண்ணையும் குணமாக்குகிறது. மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் இரத்தவிருத்தி ஏற்படும். சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கும். தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும். தொண்டை, மார்பு, நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது. ஆண் தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது. மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும், அதிக தாகத்தைப் போக்கும். மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும். மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய இரத்தம் உற்பத்தியாகிவிடும். மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும். மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும். மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும். மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப் படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும். மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி, வெப்பநோய் தீரும்.

21/12/2016

Here, we’re going to present you an old German cure combined of numerous healthy ingredients! It has an amazing effect of your whole body! This old German cure can cleanse your arteries and prevent calcification in the body like no other cure. Don’t worry about your breath because of the garlic, bec...

21/12/2016

மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை:-

பச்சைக் கீரைகளில் எவ்வளவோ எண்ணிலடங்கா பயன்கள் இருக்கின்றன. நாம்தான் அதனை முறையாகப் பயன்படுத்துவதில்லை. கீரை வகைகளை உணவோடு சேர்க்கச் சொல்லி சும்மாவா சொன்னார்கள் நம் மூதாதையர்கள்.

கீரை வகைகளில் இரும்புச் சத்து கணிசமாக உள்ளது.அந்த வகையில் முருங்கைக் கீரையின் பயன்களைப் பார்ப்போம். முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது.

முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும்.வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை.

சாதாரணமாக வீட்டுக் கொல்லைகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது. அதுபற்றி சற்று விரிவாக காண்போம்.

இது ஒரு சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதன் சுபாவம் சூடு. ஆதலால் சூட்டு உடம்புக்கு ஆகாது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும்.

எனவேதான், இக்கீரைக்கு 'விந்து கட்டி' என்ற பெயரும் இருக்கிறது. கோழையை அகற்றும். முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவாகும். இதை நெய் சேர்த்தோ அல்லது புளி சேர்த்தோ சமைப்பது நலம்.

முருங்கைப் பட்டையை நீர்விட்டு அரைத்து வீக்கங் களுக்கும் வாயு தங்கிய இடங்களுக்கும் போடலாம். முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும்.

மரம் முழுவதும் மருந்தாக இருக்கும் முருங்கையை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள மறவாதீர்கள்.

Address

Chennai
600034

Telephone

7550103968

Website

Alerts

Be the first to know and let us send you an email when GoGreen Organic store posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share