Zero Degree Publishing

Zero Degree Publishing A publishing company that aims to introduce to the world some of the finest specimens of Indian literature.

Zero Degree Publishing aims to introduce to the world some of the finest specimens of modern Indian literature, to begin with, we take great pride in introducing Tamil literature in English translation because, as Henry Gratton Doyle said, “It is better to have read a great work of another culture in translation than never to have read it at all.”

வாழ்த்துகள் நர்சிம்… புத்தகம் வாங்கும் சுட்டி மறுமொழியில்…
07/09/2026

வாழ்த்துகள் நர்சிம்… புத்தகம் வாங்கும் சுட்டி மறுமொழியில்…

வாழ்த்துகள் கயல்…
01/09/2026

வாழ்த்துகள் கயல்…

தூரிகை கவிதை விருது 2025: கவிஞர்கள் கயல், பூவிதழ் உமேஷ் தேர்வு! 🎉
சென்னை தூரிகை அறக்கட்டளை வழங்கும் இந்த ஆண்டிற்கான கவிதை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
🏆 விருது பெறுபவர்கள்:

* கயல் ('மீன் கண் பெண்' படைப்பிற்காக)
* பூவிதழ் உமேஷ் ('பெயரிடப்படாத மகிழ்ச்சி' படைப்பிற்காக)

விருது பெறும் கவிஞர்களுக்கு தூரிகை அறக்கட்டளையின் நிறுவனர் கபிலன் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 👏

இந்த மாத புதிய வெளியீடு***அம்மாச்சிபகுஇம்பிரிண்ட்: ZDP Specifics***ஒரு குழந்தையின் முதல் உலகம் அதன் வீடு மற்றும் சூழல். ...
21/08/2026

இந்த மாத புதிய வெளியீடு
***
அம்மாச்சி
பகு
இம்பிரிண்ட்: ZDP Specifics
***
ஒரு குழந்தையின் முதல் உலகம் அதன் வீடு மற்றும் சூழல். அந்த உலகின் முதல் கதையாளர் பாட்டி. குழந்தையின் கற்பனை, மொழி, உணர்வு, நினைவு, வாழ்க்கையைப் புரிந்துகொள்ளும் பார்வை – இவை அனைத்தும் யாரும் எழுதித் தராத பாடங்களாக அம்மாச்சியின் கதைகளில் விதைக்கப்படுகின்றன. இந்த நூல், அம்மாச்சியை ஒரு குடும்ப உறவாக மட்டுமல்லாமல், ஒரு பண்பாட்டு நினைவகமாகவும், கற்பனையின் முதல் ஆசிரியராகவும் வாசகருக்கு அறிமுகப்படுத்துகிறது. கதைகள், அனுபவங்கள், நாடகப் பார்வை, கலையின் மூலம் கல்விச் சிந்தனை ஆகியவற்றின் வழியே, மறக்கப்பட்ட ஒரு கற்றல் மரபை மீட்டெடுக்கும் முயற்சியாக இது உருவாகியுள்ளது. கல்வி சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களின் பங்கு சிறார்களின் மீது எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்துகிறது. கலை வடிவில் மூடநம்பிக்கையை உடைக்க முடியும் என்பதை நாடகச் செயல்பாடுகள் நிரூபித்துக் காட்டியுள்ளன. குழந்தைப் பருவத்தை நினைவுகூர விரும்புபவர்களுக்கும், குழந்தைகளின் உலகைப் புதிதாகப் புரிந்துகொள்ள விரும்புபவர்களுக்கும் இந்த நூல் ஒரு புதிய வாசிப்பனுபவமாக அமையும்.

இந்த மாத புதிய வெளியீடு***பேயுருபா. ராகவன்இம்பிரிண்ட்: எழுத்து பிரசுரம்***பா. ராகவனின் இந்தப் பேய்க்கதைகளை அவரது முந்தைய...
20/08/2026

இந்த மாத புதிய வெளியீடு
***
பேயுரு
பா. ராகவன்
இம்பிரிண்ட்: எழுத்து பிரசுரம்
***
பா. ராகவனின் இந்தப் பேய்க்கதைகளை அவரது முந்தைய குறுங்கதைத் தொகுப்பான ‘ஜென் கொலை வழக்கி’ன் தலைகீழ்த் தொடர்ச்சி எனக் கொள்ளலாம். சராசரி மனிதர்களின் அன்றாட வாழ்வில் நேரும் அபத்தங்களின் ருசியை ஜென் கொலை வழக்கு தொகுப்பில் இருந்த கதைகள் காட்டித் தந்தன. இந்தத் தொகுப்பு, சராசரி மனிதர்களின் அன்றாட வாழ்வில் நேரும் அபத்தங்களின் அடிப்படைகளைப் புரட்டிப் போட்டு, அவற்றின் காரணங்களின் மீது பூசப்பட்ட வண்ணங்களைச் சுரண்டி எடுத்து ஆராய்கின்றன. இத்தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கதையையும் ஓரிரு நிமிடங்களுக்குள் படித்துவிட முடியும். ஆனால் ஒன்றை நிறைவு செய்த உடனேயே அடுத்த கதைக்குள் புக முடியாது. இக்கதைகளில் வரும் பேய்கள் சுமக்கும் மாயப் பொதிகளுக்கு உள்ளே உள்ள வசிய மையின் தன்மை அத்தகையது. பேய்க்கதைகள் என்றால் அஞ்சி நடுங்கியபடிதான் படிக்க வேண்டுமென்பதில்லை. இந்தப் பேய்களின் தோள்களில் நீங்கள் கைபோட்டு உலவியபடியே படிக்கலாம். அவற்றின் கன்னங்களை வருடித் தரலாம். உதிரும் சொட்டுக் கண்ணீரைத் துடைக்க முடிந்தால் இப்பேய்கள் உங்களுக்கு நன்றி சொல்லும்.

17/08/2026
இந்த மாத புதிய வெளியீடு (புத்தகம் வாங்க, சுட்டி மறுமொழியில்) ***வெளிச்சத்தின் பிரதி (சிறுகதைகள்)அசோக்குமார்இம்பிரிண்ட்: ...
09/08/2026

இந்த மாத புதிய வெளியீடு (புத்தகம் வாங்க, சுட்டி மறுமொழியில்)
***
வெளிச்சத்தின் பிரதி (சிறுகதைகள்)
அசோக்குமார்
இம்பிரிண்ட்: பிறகு
***
நாளைய உலகம் எப்படி இருக்கும்? ஜெமினி, சாட்ஜிபிடி, கிளாட் போன்ற செயற்கை நுண்ணறிவுச் செயலிகள் உலகில் தலையெடுத்த பின்னர், மனிதனுக்கும் இயந்திரத்திற்குமான இடைவெளி குறைந்து வருகிறது. நாம் அவற்றிற்கு எல்லாவற்றையும் கற்றுத்தருகிறோம். நம்மை நேசிப்பதைத் தவிர. அப்படியிருக்க, அவை தனித்துச் சிந்தித்துச் செயல்படத் தொடங்கினால், நமது நிலை என்ன? நாளைய அறிவியலுக்கான இன்றைய கேள்விகள் இத்தொகுப்பில் கதைகளாய் உருவெடுத்துள்ளன. இவை எதிர்காலத் தொழில்நுட்பங்களின் சாத்தியங்களையும், அவற்றால் எழும் சிக்கல்களையும், மனித உணர்வுகளின் ஆழங்களையும் ஆராய்கின்றன. செயற்கை நுண்ணறிவு, மரபணு அறிவியல், காலநிலை மாற்றம், நினைவுகளின் மிச்சம் போன்றவையே இக்கதைகளின் கருப்பொருள்கள். சுருங்கச் சொன்னால், எதிர்காலம் இக்கதைகளில் ஏற்கனவே காத்திருக்கிறது. ஆனால் ஒவ்வொரு கண்டுபிடிப்பிற்கும் ஒரு விலை உண்டு. அதைக் கொடுப்பது யார்? எதிர்காலத்தைக் கற்பனை செய்யும் கதைகள் இவை. ஆனால் ஒவ்வொரு கதையின் இதயத்திலும் துடிப்பது மனித இதயமே. ஏனெனில் காலம் மாறலாம். தொழில்நுட்பம் மாறலாம். ஆனால், மனிதரின் கனவுகளும் கேள்விகளும் மாறுவதில்லை. நாளைய உலகைப் பற்றிய இந்தப் பயணம், உண்மையில் மனித மனத்தின் ஆழங்களை நோக்கிய பயணமே.

- அசோக்குமார்

Address

Chennai
600040

Opening Hours

Monday 11am - 6pm
Tuesday 11am - 6pm
Wednesday 11am - 6pm
Thursday 11am - 6pm
Friday 11am - 6pm
Saturday 11am - 6pm

Telephone

9840065000

Alerts

Be the first to know and let us send you an email when Zero Degree Publishing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Zero Degree Publishing:

Shortcuts

Share