Heritager.in The Cultural Store

Heritager.in The Cultural Store Heritager Store | Handloom Sarees, Heritage Decor & Crafts from Tamil Nadu. Handmade. Small-batch. Ships across continents. WhatsApp to order. Books and Crafts

Chennai-based since 2005.

14/08/2026

அறிவிப்பு: வாசகர்களின் கவனத்திற்கு,
​Heritager.in தளம் அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணிப்பதால், வரலாற்றுப் புத்தகங்களுக்கான ஆர்டர்களைச் சில வாரங்களுக்குத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம்.

வரலாற்றுப் பொக்கிஷங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் உயரிய நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டதே நமது தளம். சமூக வலைத்தளங்களில் மேலோட்டமான தகவல்கள் பெருகி வரும் இக்காலத்தில், அறிஞர்கள் தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்து உருவாக்கிய ஆழமான வரலாற்று நூல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது முன்னிலும் அவசியமாகிறது. அதனைத் தான் நாம் செய்ய முயல்கிறோம்.

​இந்த பணியை இன்னும் சிறப்பாகச் செய்ய, விருப்பு வெறுப்பின்றி இயங்கும் நமது தளம் தன்னை அடுத்தகட்டத்திற்கு மேம்படுத்திக்கொள்ள, தன்னிறைவாக செயல்பட, சுயப் பரிசோதனைக் செய்துகொள்ள, ஒரு சிறிய இடைவெளியை எடுத்துக்கொள்கிறது.

​மரபுசார் நூல்களைத் தேடிக் கொண்டுவருவதில் ஏற்படும் சப்ளை சிக்கல்கள், நேர விரயம் மற்றும் காலதாமதத்தைத் தவிர்த்து, உங்களுக்குத் தடையற்ற மற்றும் சிறந்த வாசிப்பனுபவத்தைத் தர நாங்கள் விரும்புகிறோம்.

​தொடர்ந்து ஆதரவளிக்கும் வரலாற்று ஆர்வலர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!

Heritager.in பற்றி உங்கள் கருத்துக்களையும், ஆதரவையும் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்..

புதிய பரிமாணத்தில் விரைவில் இணைவோம்!

நூல் அறிமுகம்: இந்துப் பண்பாட்டு மரபில் ஆகமங்கள்இந்துப் பண்பாட்டுப் பெருவெளியில், சைவ சமயத்தின் ஆணிவேராகத் திகழ்பவை வேதங...
12/08/2026

நூல் அறிமுகம்: இந்துப் பண்பாட்டு மரபில் ஆகமங்கள்

இந்துப் பண்பாட்டுப் பெருவெளியில், சைவ சமயத்தின் ஆணிவேராகத் திகழ்பவை வேதங்களும் ஆகமங்களும் ஆகும். "வேதமோடு ஆகமம் மெய்யாம் இறைவன் நூல்" எனத் திருமூலர் போற்றியபடி, இவை இரண்டுமே இறைவனின் திருவாக்காகக் கருதப்படுகின்றன. வேதங்கள் தத்துவங்களை உரைக்க, ஆகமங்களோ இறைவனை வழிபடும் முறைகளையும், ஆலய நிர்மாண விதிகளையும், சமய ஆசாரங்களையும் மிகத் துல்லியமாக வரையறுக்கின்றன. வழிபாட்டினை ஓர் உன்னத நெறியாக மாற்றி, சாதாரண மனிதனையும் பக்தி மார்க்கத்தின் வழியே முக்திக்கு அழைத்துச் செல்லும் மாபெரும் வழிகாட்டியாகச் சிவாகமங்கள் விளங்குகின்றன.

இருப்பினும், இத்தகைய சிறப்பு வாய்ந்த சிவாகமங்கள் பெரும்பாலும் சமஸ்கிருத மொழியிலேயே அமைந்திருப்பதாலும், காலவோட்டத்தில் பல சுவடிகள் அழிவுற்றதாலும் சாதாரண மக்களுக்கும், ஏன் மாணவர்களுக்கும் கூட அவை நீண்டகாலமாக எட்டாக்கனியாகவே இருந்து வந்துள்ளன. திருக்கோயில்களில் நடைபெறும் கும்பாபிஷேகம், மகோற்சவம் முதல் நித்திய பூசைகள் வரை அனைத்திற்கும் அடிப்படையாக ஆகமங்களே திகழ்கின்றன என்பதை நாம் அறிவோம். ஆனால், அந்த ஆகமங்கள் எவற்றைக் கூறுகின்றன, அவற்றின் மெய்ப்பொருள் என்ன என்பதைத் தாய்மொழியான தமிழில், எளிய நடையில் அறிந்துகொள்வதற்கான வாய்ப்புகள் நம்மிடையே மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன. இக்குறையினைப் போக்க ஒரு சிறந்த கையேடு காலத்தின் கட்டாயமாக இருந்தது.

அந்தப் பெரும்பணியைச் செவ்வனே நிறைவேற்றும் விதமாகவே, "இந்துப் பண்பாட்டு மரபில் ஆகமங்கள்" என்னும் இந்தச் சீரிய நூல் உதித்துள்ளது. ஆகமங்களின் தோற்றம், சிவாகமங்களின் அமைப்பு, திருக்கோயில் நிர்மாணம், கும்பாபிஷேக விதிகள், சிவாலயக் கிரியைகள் எனத் தொடங்கி, ஆகமங்களில் பொதிந்துள்ள நுண்கலைகள் வரை பதினெட்டுத் தலைப்புகளில் மிக விரிவாக இந்நூல் கட்டமைக்கப்பட்டுள்ளது. வெறுமனே தகவல்களை மட்டும் தராமல், ஆகமங்கள் கூறும் சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நாற்பாதங்களையும் மிகத் தெளிவாகவும், அனைவரும் சுலபமாகப் புரிந்துகொள்ளும் வகையிலும் இந்நூல் எடுத்துரைக்கிறது.

இந்நூலின் மற்றுமொரு சிறப்பம்சம், ஆகமங்களோடு சைவ சித்தாந்தத் தத்துவங்களை இணைத்து விளக்குவதாகும். 'ஆகமம்' என்ற சொல்லிற்கே ஆ-பாசம், க-பசு, ம-பதி எனப் பொருள்கொண்டு, பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள் கோட்பாட்டின் அடிப்படையில் ஆகமங்கள் எவ்வாறு ஆன்ம ஈடேற்றத்திற்கு வழிகாட்டுகின்றன என்பதை இந்நூல் ஆழமாக அலசுகிறது. அத்துடன் சிவதீட்சையின் மகத்துவம், வேதாகமத் தொடர்புகள், ஆகமப் பண்பாட்டு வளர்ச்சியில் யாழ்ப்பாணத்துச் சைவ அறிஞர்களின் பங்களிப்புகள், சத்தியஜோதி சிவாச்சாரியாரின் பணிகள் போன்ற வரலாற்றுப் பதிவுகளையும் உள்ளடக்கி, ஈழத்துச் சைவ மரபிற்கும் ஆகமங்களுக்குமான தொடர்பை மிக நேர்த்தியாகப் பதிவு செய்துள்ளது.

இத்தகையதொரு கனதியான நூலைத் தமிழுலகுக்குப் படைத்தவர், மட்டக்களப்பு மண்ணைச் சேர்ந்த சைவப்புலவர், சைவ பண்டிதர் சுந்தரமூர்த்தி துஷ்யந்த் அவர்கள் ஆவார். கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டமும், பல உயரிய சைவப் பட்டங்களும் பெற்ற இவர், கனடா தென்னாசிய நுண்கலைக் கற்கை மையத்தின் அண்ணாமலை வளாகத்தின் சைவசித்தாந்த விரிவுரையாளராகவும், இந்து சமய கலாசார திணைக்களத்தின் ஆலோசனை சபை அங்கத்தவராகவும் விளங்குகின்றார். இந்து நாகரிகம், பண்பாடு சார்ந்து பல நூல்களைத் தமிழுக்கு வழங்கியுள்ள இவரின் ஆழமான புலமையும், இறைபக்தியும், பலமணிநேரம் ஈர்ப்புடன் கற்பிக்கும் போதனாசிரியருக்குரிய அனுபவமும் இந்நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் மிளிர்வதைக் காண முடிகிறது.

சுருக்கமாகக் கூறின், "இந்துப் பண்பாட்டு மரபில் ஆகமங்கள்" என்னும் இந்நூல் வெறும் வாசிப்புக்கானது மட்டுமல்ல; ஒவ்வொரு சைவரும் தமது சமயத்தின் வேர்களை அறிந்துகொள்ளத் தவறாமல் கற்க வேண்டிய ஒரு பொக்கிஷமாகும். இந்து நாகரிகம், சைவ சித்தாந்தம் பயிலும் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும், தர்மாசிரியர் பரீட்சார்த்திகளுக்கும், சமய ஆர்வலர்களுக்கும் இதுவொரு சிறந்த வழிகாட்டியாகும்.

சிவாகமங்களின் சாரத்தை எளிய தமிழில் அள்ளி வழங்கும் இந்நூல், சைவத் தமிழ் உலகில் காலங்கடந்தும் நிலைத்து நின்று அறிவொளி வீசும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

உள்ளடக்கம்

ஆகமம் பற்றிய அறிமுகம்
சிவாகமங்களின் உற்பத்தியும் உபதேசக் கிரமமும்
சிவாகம அமைப்பும் பொருண்மரபும்
சிவாகமங்கள் கூறும் திருக்கோவில் அமைப்பு
திருக்கோவிற் கிரியைகள்
கும்பாபிஷேகம்
மஹோத்ஸவம்
சிவாலயக் கிரியையில் இடம் பெறும் அம்சங்கள்
ஆகமங்களில் சைவசித்தாந்த தத்துவம்
சிவாகமங்களில் சிவதீட்சை
ஆகம விதிப் பூசையும் பூசகரும்
சிவாகமங்கள் நெறிப்படுத்தும் பக்தி நெறி
சிவாகமங்கள் நெறிப்படுத்தும் முக்தி நெறி
சிவாகமங்களில் நுண்கலைகளின் நுட்பங்கள்
வேதாகமத் தொடர்புகள்
திருக்கோயில் வழிபாட்டின் மகத்துவமும் பயன்களும்
ஆகமப் பண்பாட்டு வளர்ச்சியில் யாழ்ப்பாணத்துச் சைவ அறிஞர்களின் பங்களிப்புக்கள்
சிவாகம நோக்கில் சைவசித்தாந்த வளர்ச்சி -சத்தியயோதி சிவாசாரியார் பற்றி ஓர் நோக்கு

நூல்: இந்துப் பண்பாட்டு மரபில் ஆகமங்கள்
ஆசிரியர்: சுந்தரமூர்த்தி துஷ்யந்த்

பக்கங்கள்: 160

இப்புத்தகம் வாங்க வேண்டுவோர் "Book" என பின்னூட்டத்தில் பதிவிடவும். Or WhatsApp us 097860 68908

கௌடில்யர் எனப்படும் சாணக்கியரால் எழுதப்பட்ட 'அர்த்தசாஸ்திரம்', அரசியல், பொருளாதாரம் மற்றும் ராஜதந்திரம் குறித்து விளக்கு...
11/08/2026

கௌடில்யர் எனப்படும் சாணக்கியரால் எழுதப்பட்ட 'அர்த்தசாஸ்திரம்', அரசியல், பொருளாதாரம் மற்றும் ராஜதந்திரம் குறித்து விளக்கும் ஒரு பழமையான மற்றும் உன்னதமான படைப்பாகும். சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இந்த நூல், ஒரு நாட்டை எவ்வாறு ஆள வேண்டும், தலைவர்கள் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதைத் தெளிவாகக் கூறுகிறது. அதிகாரம், செல்வம் மற்றும் நீதி ஆகியவற்றை நிர்வகிக்கும் கலைகளை ஒருங்கே கற்பிக்கும் இந்தப் புத்தகம், அன்றைய சாம்ராஜ்யங்களுக்கு மட்டுமின்றி இன்றைய காலகட்டத்தின் அரசியல் மற்றும் நிர்வாகக் கட்டமைப்புகளுக்கும் ஒரு சிறந்த வழிகாட்டியாகத் திகழ்கிறது.

இது வெறும் வரலாற்றுப் பெட்டகம் மட்டுமல்ல; நவீன கால மனிதர்களுக்கான வாழ்வியல் மற்றும் கார்ப்பரேட் மேலாண்மைத் தத்துவங்களையும் தன்னுள் அடக்கியுள்ள ஒரு அறிவுக்கருவூலமாகும். எதிரிகளை வெல்வது, நம்பகமானவர்களைத் தேர்ந்தெடுப்பது, மற்றும் செல்வத்தைப் பெருக்குவது எனப் பல நடைமுறைச் சிக்கல்களுக்கான தீர்வுகளை சாணக்கியர் இதில் மிக நுட்பமாகப் பதிவு செய்துள்ளார். சிறந்த ஆளுமைத் திறனை வளர்த்துக்கொள்ளவும், அதிகாரத்தின் நுணுக்கங்களை ஆழமாகப் புரிந்துகொள்ளவும் விரும்பும் ஒவ்வொருவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய ஈடு இணையற்ற காலப்பொக்கிஷம் இந்த நூல்.

இந்நூலைப் பெற விரும்புவோர் Comment-இல் 'BOOK' எனத் தெரிவிக்கவும்

Price : ₹ 399+50 shipping

Order on WhatsApp : 097860 68908

சக்கம்மாள் சாமி: ஒரு நாட்டுப்புறத் தெய்வத்தின் வரலாறுஇல்லற வாழ்வுசக்கம்மாள், கல்லுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஓர் அருந்த...
11/08/2026

சக்கம்மாள் சாமி: ஒரு நாட்டுப்புறத் தெய்வத்தின் வரலாறு
இல்லற வாழ்வு

சக்கம்மாள், கல்லுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஓர் அருந்ததியப் பெண். இவளை அக்கேடம்பட்டியைச் சேர்ந்த ஓர் இளைஞர் மணமுடித்தார். திருமணத்திற்குப் பிறகு இருவரும் அக்கேடம்பட்டியில் மிகவும் மகிழ்வுடன் வாழ்ந்து வந்தனர். சக்கம்மாள் தன் கணவர் மீது அளவற்ற அன்பும் காதலும் கொண்டிருந்தாள்.

பொதிமாட்டு வியாபாரம் செய்து வந்த அவளது கணவர், தொழில் நிமித்தமாக அடிக்கடி வெளியூர் செல்வது வழக்கம். அந்தச் சமயங்களில் சக்கம்மாள் தன் மாமியாருடன் வீட்டில் இருப்பாள். தன் மகன் மீது மருமகள் அதீத அன்பு செலுத்துவது மாமியாருக்குப் பிடிக்கவில்லை. இதனால், கணவன் - மனைவி இருவரையும் பிரிக்க அவள் தக்க சமயத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தாள்.

சந்தேகமும் பிரிவும்

அக்காலத்தில் 'தண்டுமாதேவார்' என்றொரு சமூகத்தினர் இருந்தனர். ஊர் ஊராகச் சென்று யாசகம் பெறுவதும், பழைய துணிகளைத் தைத்துக் கொடுப்பதும் இவர்களது வழக்கம். சக்கம்மாளின் கணவர் வெளியூர் சென்றிருந்த ஒரு நாளில், தண்டுமாதேவார் ஒருவர் அவள் வீட்டுக்கு வந்து யாசகம் கேட்டார். இயல்பிலேயே இரக்க குணம் கொண்ட சக்கம்மாள் அவரிடம் அன்பாகப் பேசினாள்.
மேலும், கிழிந்திருந்த தன் சேலை முந்தானையைத் தைத்துக் கொடுக்கும்படி கேட்டு, அவர் தைக்கும்போது அவர் அருகிலேயே அமர்ந்திருந்தாள்.

இதனைச் சந்தேகக் கண்ணோடு பார்த்தாள் மாமியார். வெளியூரிலிருந்து மகன் திரும்பி வந்ததும், நடந்ததைத் தவறாகத் திரித்துக் கூறினாள். உண்மையறியாமல் கடும் கோபமடைந்த கணவன், சக்கம்மாளைக் கடுமையாக அடித்து அவளது பிறந்த வீட்டிற்கே விரட்டி விட்டான். கணவனின் இந்தச் செயலால் மிகுந்த மனவேதனை அடைந்த சக்கம்மாள், தன் தாய் வீட்டிற்கே திரும்பிச் சென்றாள்.

கணவனின் மரணம்

சில காலத்திற்குப் பிறகு, தன் மனைவியின் மீது எவ்விதத் தவறும் இல்லை என்ற உண்மையை உணர்ந்த கணவன், அவளைத் திரும்ப அழைத்து வரச் சென்றான். ஆனால், ஆழமான காயம்பட்டிருந்த சக்கம்மாள் அவனுடன் செல்ல மறுத்துவிட்டாள். இவ்வாறு இரண்டு முறை நிகழ்ந்தது. மூன்றாம் முறையாக அவன் வந்து அழைத்தபோதும், சக்கம்மாள் அவனுடன் செல்லச் சம்மதிக்கவில்லை.

ஏமாற்றத்துடன் கணவன் தனியே ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தான். செல்லும் வழியில் 'உப்போடை' என்ற இடத்தின் அருகே அவனைப் பாம்பு கடித்துவிட்டது. உடலில் விஷம் வேகமாகப் பரவி, அவன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தான். இதைக் கேள்விப்பட்ட ஊர் மக்கள் பதறியடித்துக் கொண்டு அங்கு சென்றனர். செய்தியறிந்த சக்கம்மாளும் ஓடோடி வந்தாள்; ஆனால், அவள் வருவதற்குள் அவளது கணவன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டான்.

பத்தினித் தன்மையை நிரூபித்தல்

இறந்த உடலை இனி ஊருக்குள் எடுத்துச் செல்வது சிரமம் எனக் கருதிய பெரியவர்கள், அங்கேயே உடலைத் தகனம் செய்ய முடிவு செய்தனர். பெண்கள் ஊருக்குத் திரும்பியதும், ஆண்கள் சிதை அடுக்கித் தீ மூட்டினர். ஆனால், என்ன முயன்றும் விறகில் தீப்பற்றவே இல்லை.
இச்செய்தியைக் கேள்விப்பட்ட சக்கம்மாள், உடனடியாகச் சிதை இருந்த இடத்திற்கு விரைந்து வந்தாள். தான் ஒரு பத்தினி என்பதை நிரூபிக்க உடன்கட்டை ஏறப் போவதாகவும், தன் கணவனின் சிதைக்குத் தானே தீ மூட்டப் போவதாகவும் கூறினாள்.
ஆனால், இப்போதே கணவனின் உடலை எரித்துவிட்டால், பின்னர் அவள் எப்படி உடன்கட்டை ஏற முடியும் என்று அங்கிருந்தவர்கள் சந்தேகமடைந்தனர்.

அப்போது சக்கம்மாள், தன் கணவனின் சுண்டு விரலை மட்டும் வெட்டி எடுத்து, அதைத் தன் சேலை முந்தானையில் பத்திரமாக முடிந்து கொண்டாள். (அருந்ததியர் சமுதாயத் திருமணங்களில், மணமகன் மற்றும் மணமகளின் சுண்டு விரல்களை இணைத்து அக்னியை வலம் வரும் வழக்கம் இதனால்தான் உருவானது என்று கூறப்படுகிறது). பின்னர் அவள் சிதைக்குத் தீ மூட்டினாள்; அதுவரை பற்றாத நெருப்பு, உடனடியாகப் பிடித்து எரிந்து கணவனின் உடலைச் சாம்பலாக்கியது. அவளது பத்தினித் தன்மையைக் கண்டு ஊர் மக்களே வியந்து நின்றனர்.

பாளையக்காரரின் சவால்

அதன் பிறகு, கணவனை நினைத்துச் சக்கம்மாள் 21 நாட்கள் விரதமிருந்தாள். தீச்சட்டி ஏந்திப் பல ஊர்களுக்கும் சென்ற அவள், இறுதியாக எட்டையபுரத்தை அடைந்தாள். அங்குள்ள பாளையக்காரரைச் சந்தித்து, தன் விரதத்திற்காக எலுமிச்சைப் பழங்களைக் கேட்டாள். பாளையக்காரரின் தோப்பில் எலுமிச்சை மரங்கள் ஏராளமாக இருந்தும், அவை காய்க்காமலேயே இருந்தன.

அதனால் அவர் அவளிடம், "நான் உனக்கு விலை கொடுத்து எலுமிச்சை வாங்கித் தர முடியாது. நீ உண்மையிலேயே பத்தினியாக இருந்தால், இந்த மரங்களைக் காய்க்கச் செய். அப்படிக் காய்த்துவிட்டால், உனக்குத் தேவையான அளவு பழங்களைப் பறித்துக் கொள்" என்று சவாலாகக் கூறினார். சக்கம்மாளும் அதற்குச் சம்மதித்துத் திரும்பினாள்.

உடன்கட்டை ஏறுதல்

தனது 21 நாள் விரதம் முடிந்ததும் உடன்கட்டை ஏற அவள் முடிவு செய்திருந்தாள். 21-ஆம் நாளன்று எட்டையபுரம் பாளையக்காரரைச் சந்தித்து மீண்டும் எலுமிச்சைப் பழம் கேட்டாள். அவர் சென்று தோப்பைப் பார்த்தபோது, காய்ந்திருந்த எலுமிச்சை மரங்கள் முழுவதும் பழங்கள் பழுத்துத் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தார். சக்கம்மாளின் மகிமையையும் பத்தினித் தன்மையையும் உணர்ந்து வியந்த அவர், அவளுக்குத் தேவையான எலுமிச்சைப் பழங்களுடன் ஒரு துப்பட்டா, ஒரு பானைச் சோறு, வீரியநல்லூர் பட்டு மற்றும் மூன்றேகால் ரூபாய் காணிக்கை ஆகியவற்றை வழங்கி, மேள தாளங்கள் முழங்க அவளை மரியாதையுடன் வழியனுப்பி வைத்தார்.

அங்கிருந்து, தன் கணவனின் உடல் தகனம் செய்யப்பட்ட உப்போடைப் பகுதிக்குச் சக்கம்மாள் வந்தாள். தான் பாதுகாப்பாக வைத்திருந்த கணவனின் சுண்டு விரலைத் தன்னோடு சேர்த்துக் கொண்டு, சிதையில் அமர்ந்து உடன்கட்டை ஏறினாள். தன் உயிரை நீப்பதற்கு முன், "என்னை வழிபடும் மக்களுக்குச் சகல நன்மைகளையும் வழங்கி, அவர்களைக் காலமெல்லாம் காப்பேன்" என்று அருளாசி வழங்கிச் சென்றாள்.

தெய்வமாகச் சக்கம்மாள்

அவள் உடன்கட்டை ஏறிய அதே இடத்தில், உறவினர்கள் சக்கம்மாளுக்கு ஒரு சிலை அமைத்து அவளைத் தெய்வமாக வழிபடத் தொடங்கினர். அவளது நினைவாக, தங்கள் குடும்பங்களில் பிறக்கும் முதல் குழந்தைக்கு 'சக்கையா' என்றும், 'சக்கம்மாள்' என்றும் பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.

காலப்போக்கில், அந்த இடத்தில் சக்கம்மாளுக்கு ஒரு பெரிய கோயில் கட்ட அவளது பக்தர்களும் உறவினர்களும் ஆசைப்பட்டனர். ஆனால், அதற்காக முயற்சி செய்யும் ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு தடை வந்து கோயில் கட்டும் பணி நின்றுபோனது. "என் மக்களே இன்னும் வசதியான வீடுகள் இல்லாமல் குடிசைகளில் வாழும்போது, எனக்கு மட்டும் எதற்குக் கோயில்?" என்று சக்கம்மாளே தன் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக மக்கள் நம்புகின்றனர். எனவே, அவளுக்குக் கோயில் கட்டப்படவில்லை.

தற்போது சக்கம்மாளுக்கு 56 பங்காளி குடும்பங்கள் உள்ளன. இவர்கள் அனைவரும் ஆண்டுக்கு ஒருமுறை ஒன்றுதிரண்டு வந்து சக்கம்மாளைப் பயபக்தியுடன் வழிபடுகின்றனர். மேலும், மடத்துப்பட்டிக்கு அருகில் உள்ள சத்திரப்பட்டியைச் சேர்ந்த அருந்ததியர் மக்களும் சக்கம்மாளைத் தங்கள் குலதெய்வமாகப் போற்றி வணங்கி வருகின்றனர்.

இந்நூலைப் பெற விரும்புவோர் Comment-இல் 'BOOK' எனத் தெரிவிக்கவும்

Price : ₹ 560+50 shipping

இன்றைய வரலாற்று நூல்கள் தங்களுக்கு தேவையான நூல்களை Comment-இல் தெரிவிக்கவும் எங்கள் முயற்சியை ஆதரிக்க:பகிரவும்: எங்கள் ப...
11/08/2026

இன்றைய வரலாற்று நூல்கள்

தங்களுக்கு தேவையான நூல்களை Comment-இல் தெரிவிக்கவும்

எங்கள் முயற்சியை ஆதரிக்க:

பகிரவும்: எங்கள் பக்கங்களை Subscribe செய்து, பதிவுகளைப் பகிருங்கள்.

பரிசளிக்கவும்: உங்களுக்குத் தேவையான நூல்களை வாங்குங்கள்; விசேஷ நாட்களில் நண்பர்களுக்குப் பரிசளியுங்கள்.

பரிந்துரைக்கவும்: வரலாற்று ஆர்வலர்களுக்கு Heritager.in-ஐ அறிமுகம் செய்யுங்கள்.

Social Media Handles:

Website: Buy online: www.heritager.in

Facebook: https://www.facebook.com/heritagerstore/

Instagram: https://www.instagram.com/heritager.in/

Youtube: https://www.youtube.com/

WhatsApp Channel: https://whatsapp.com/channel/0029VbCCIR2AYlULUGp6cv37

Call to Order: 097860 68908

Visit our Shop @: https://share.google/8czWDosOCG7g7FqKh

தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:

Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/

உங்களின் தொடர் ஆதரவுக்கும், அன்புக்கும் நன்றிகள்

#தமிழ்நூல்கள் #புத்தகங்கள் #வரலாறு #தமிழ் #வாசிப்பு

பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்துதமிழ் மொழியின் அமிழ்தனைய இனிமையையும், சமூக சீர்திருத்தக் கருத்துகளையும் தன் கவிதைகள...
11/08/2026

பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து

தமிழ் மொழியின் அமிழ்தனைய இனிமையையும், சமூக சீர்திருத்தக் கருத்துகளையும் தன் கவிதைகளில் எரிமலையாய் வெடிக்கச் செய்த மாபெரும் புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் படைப்புகளைப் பருக வந்திருக்கும் ஓர் அற்புதமான தொகுப்பே 'பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து' என்னும் இந்நூல். தமிழ்க் காதல், பகுத்தறிவு, சாதி ஒழிப்பு, பெண் விடுதலை என அவர் தொட்ட துறைகளெல்லாம் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தின. அந்த வகையில், பாவேந்தரின் பரந்துபட்ட இலக்கிய ஆளுமையின் பல்வேறு பரிமாணங்களையும், அவரது உணர்ச்சிமிக்க கவிதை வரிகளின் ஆழத்தையும் ஒருசேர உணரும் வகையில், வாசகர்களுக்குப் பலசுவை கலந்த ஓர் இலக்கிய விருந்தாக இந்த நூல் நேர்த்தியாகப் படைக்கப்பட்டுள்ளது.

இனிக்கும் காதல், வீரம் செறிந்த தமிழ் உணர்வு, இயற்கையின் எழில், சமுதாய ஏற்றத்தாழ்வுகளைச் சாடும் சீற்றம் என பாவேந்தரின் எழுத்துகளில் உள்ள அத்தனை சுவைகளையும் தேர்ந்தெடுத்து, அதை வாசிப்பாளர்களின் நெஞ்சங்களில் விதைக்கும் நோக்கில் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. ஒரு சிறப்பான விருந்தில் எப்படி அறுசுவைகளும் ஒன்றிணைந்து முழுமையான நிறைவைத் தருமோ, அதேபோல பாரதிதாசனின் கவிதை வீச்சையும், அவரது முற்போக்குச் சிந்தனைகளையும் முழுமையாக உள்வாங்கிக் கொள்ள இந்த நூல் ஒரு சிறந்த கையேடாக அமைகிறது. தமிழ் இலக்கியத்தின் மீதும், சமூக மாற்றத்தின் மீதும் தீராத காதல் கொண்ட ஒவ்வொருவரும் தவறாமல் சுவைக்க வேண்டிய ஓர் அறிவார்ந்த இலக்கியப் பெட்டகம் இதுவாகும்.

இந்நூலைப் பெற விரும்புவோர் Comment-இல் 'BOOK' எனத் தெரிவிக்கவும்

Price : ₹ 140+50 shipping

Order on WhatsApp : 097860 68908

நீதிக்கட்சி வரலாறுநவீன தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றை முழுமையாகப் புரிந்துகொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் வாசிக்க வே...
10/08/2026

நீதிக்கட்சி வரலாறு

நவீன தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றை முழுமையாகப் புரிந்துகொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய மிக முக்கியமான நூல் 'நீதிக்கட்சி வரலாறு'. சமூகத்தில் பல நூற்றாண்டுகளாக ஆழமாக வேரூன்றியிருந்த ஏற்றத்தாழ்வுகள், ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமை மறுப்பு ஆகியவற்றிற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த மாபெரும் சமூக நீதிக்கான புரட்சியின் தொடக்கமே நீதிக்கட்சி (தென்னிந்திய நல உரிமைச் சங்கம்). கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரம் ஆகியவை சமூகத்தில் ஒரு சிலருக்கு மட்டுமே சொந்தம் என்றிருந்த இறுக்கமான நிலையை உடைத்தெறிந்து, அதை அனைவருக்குமான உரிமையாக மாற்றியமைத்த டாக்டர் சி. நடேசனார், சர். பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம். நாயர் போன்ற தலைவர்களின் ஈடு இணையற்ற பங்களிப்பையும், சமூகநீதி, இடஒதுக்கீடு போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கருத்தியல்களின் ஆணிவேரையும் இந்நூல் மிக விரிவாகவும் ஆதாரங்களுடனும் பேசுகிறது.

சிறப்பான மொழிநடையில் வெளிவந்துள்ள இந்நூல், ஒரு வறண்ட அரசியல் ஆவணமாக இல்லாமல், வாசிப்பவர்களை அக்காலகட்டத்திற்கே அழைத்துச் செல்லும் உயிரோட்டமான வரலாற்றுப் பதிவாக அமைந்துள்ளது. இன்றைய இளம் தலைமுறையினர் தாங்கள் தற்போது எளிதாக அனுபவித்து வரும் சமூக உரிமைகள் மற்றும் கல்வி வாய்ப்புகள் ஆகியவை எவ்வாறு பலரின் தியாகங்களாலும், அறிவுப்பூர்வமான அரசியல் போராட்டங்களாலும் போராடிப் பெறப்பட்டன என்பதை ஆழமாக உணர்த்தும் ஒரு சிறந்த கையேடாக இது விளங்குகிறது. திராவிட இயக்கத்தின் தொடக்கக் காலப் பயணமாகவும், நீதிக்கட்சியின் சாதனைகள் மற்றும் சவால்களை எவ்வித சமரசமுமின்றி வரலாற்றுத் தரவுகளுடன் முன்வைக்கும் நேர்மையான படைப்பாகவும் விளங்கும் இந்நூல், தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரின் புத்தக அடுக்கிலும் கட்டாயம் இடம்பெற வேண்டிய ஒரு விலைமதிப்பற்ற பொக்கிஷமாகும்.

இந்நூலைப் பெற விரும்புவோர் Comment-இல் 'BOOK' எனத் தெரிவிக்கவும்

Price : ₹ 100+50 shipping

Order on WhatsApp : 097860 68908

முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள்முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் என்பது தமிழ் மொழிக்கும், இஸ்லாமிய இலக்கியத்திற்கும் அரும்பெரும் தொண...
10/08/2026

முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள்

முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் என்பது தமிழ் மொழிக்கும், இஸ்லாமிய இலக்கியத்திற்கும் அரும்பெரும் தொண்டாற்றிய கவிஞர்கள் மற்றும் ஞானிகளின் வரலாற்றை ஆவணப்படுத்தும் ஒரு சிறப்பான நூலாகும். இந்தப் புத்தகம், தமிழ் இலக்கியப் பரப்பில் இஸ்லாமியப் புலவர்கள் ஆற்றிய பங்களிப்பை இளைய தலைமுறைக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் எடுத்துரைக்கும் ஒரு வரலாற்றுப் பெட்டகமாக விளங்குகிறது.

உமறுப் புலவர், காசிம் புலவர், சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர் உள்ளிட்ட 17 முக்கிய முஸ்லிம் தமிழ்ப் புலவர்களின் வாழ்க்கை வரலாற்றையும், குணங்குடி மஸ்தான், பீர்முகம்மது சாகிபு போன்ற 12 ஞானிப் புலவர்களின் ஆன்மீக மற்றும் இலக்கியப் பயணங்களையும் இந்த நூல் விரிவாகப் பதிவு செய்துள்ளது. மதங்களைக் கடந்து, தமிழ் மொழி எவ்வாறு அனைவரையும் ஒன்றிணைத்து இலக்கியம் படைக்கச் செய்தது என்பதை உணர, தமிழார்வலர்கள் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய மிக முக்கியமான வரலாற்று மற்றும் இலக்கிய நூல் இது.

இந்நூலைப் பெற விரும்புவோர் Comment-இல் 'BOOK' எனத் தெரிவிக்கவும்

Price : ₹ 500+50 shipping

Order on WhatsApp : 097860 68908

முதல் சுதந்திரப் போர் வீரர் குஞ்சாலி மரைக்காயர்முதல் சுதந்திரப் போர் வீரர் குஞ்சாலி மரைக்காயர் என்பது இந்திய விடுதலைப் ப...
10/08/2026

முதல் சுதந்திரப் போர் வீரர் குஞ்சாலி மரைக்காயர்

முதல் சுதந்திரப் போர் வீரர் குஞ்சாலி மரைக்காயர் என்பது இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் மறைக்கப்பட்ட, ஆனால் போற்றப்பட வேண்டிய வீரர்களைப் பற்றிய ஒரு வரலாற்று நூலாகும்.இந்தப் புத்தகம், இந்தியாவிற்குள் போர்ச்சுக்கீசியர்கள் நுழைந்த காலத்தில், அவர்களை எதிர்த்துப் போரிட்ட கள்ளிக்கோட்டை கடற்படைத் தளபதிகளான குஞ்சாலி மரைக்காயர்களின் ஒப்பற்ற தீரத்தையும், கடல் போர்த்திறனையும் மிகத் தெளிவாக விளக்குகிறது. நெல்சன், டிரேக் போன்ற உலகப் புகழ்பெற்ற ஆங்கிலேய கடற்படை வீரர்களுக்கும் சற்றும் குறையாத, சொல்லப்போனால் ஒருபடி மேலான வீரத்துடன் போர்ச்சுக்கீசியர்களை கோவாவிற்குள் முடக்கிய குஞ்சாலி மரைக்காயர்களின் 100 ஆண்டுகால நீண்ட போராட்டத்தை இந்நூல் விவரிக்கிறது.

வரலாற்றுப் பின்னணியோடு எழுதப்பட்டுள்ள இந்த நூல், வாசிப்பவர்களின் நெஞ்சில் நாட்டுப்பற்றையும் பெருமிதத்தையும் விதைக்கும் வண்ணம் அமைந்துள்ளது. போர்ச்சுக்கீசியரின் வலிமையான கடற்படையை, தங்கள் கடல் அனுபவத்தினாலும், அசாதாரண வீரத்தினாலும் குஞ்சாலி மரைக்காயர்கள் எவ்வாறு சிதறடித்தார்கள் என்பதை ஒவ்வொரு பக்கமும் உயிரோட்டத்துடன் சொல்கிறது. இந்தியக் கடற்படை வரலாற்றையும், சுதந்திரப் போராட்டத்தின் ஆதி வேர்களையும் தெரிந்துகொள்ள விரும்பும் ஒவ்வொருவரும், குறிப்பாக இளைய தலைமுறையினரும் வாசிக்க வேண்டிய ஒரு சிறப்பான புத்தகம் இது.

இந்நூலைப் பெற விரும்புவோர் Comment-இல் 'BOOK' எனத் தெரிவிக்கவும்

Price‌ : ₹ 80+50 shipping

Order on WhatsApp : 097860 68908

புதிய வரவு - ஃபேபுலஸ் மயூரி ஒரு பக்க பெரிய பார்டர் மீனாட்சி கோபுரம் டிசைன் மற்றும் பிளெயின் & பிரிண்டட் சேலைகள் (Fabulou...
10/08/2026

புதிய வரவு - ஃபேபுலஸ் மயூரி ஒரு பக்க பெரிய பார்டர் மீனாட்சி கோபுரம் டிசைன் மற்றும் பிளெயின் & பிரிண்டட் சேலைகள் (Fabulous Mayuri one side big border Meenakshi gopuram design and Mayuri plain and printed sarees)

100% சுத்தமான காட்டன் புடவைகள் (💯% Pure Cotton Sarees)

புடவை விவரங்கள்:

நூல் அளவு: 80 கவுண்ட் (80 count)

நீளம்: 5.5 மீட்டர் (Saree length 5.5 mtrs).

வடிவமைப்பு: நேர்த்தியான ஒரு பக்க பெரிய பார்டர் மீனாட்சி கோபுரம் டிசைன் மற்றும் மயூரி பிளெயின்/பிரிண்டட் டிசைன்கள்.

பராமரிப்பு: சாதாரண முறை சலவை (Normal wash).

குறிப்பு: இது பிளவுஸ் இல்லாத புடவை (without blouse).

விலை விவரம் (Pricing):

புடவை மட்டும் (Saree only): ₹1050 +shipping

கூடுதல் பிளவுஸ் தேவைப்படுவோருக்கு (Extra Blouse):

வேள்தாரி பிளவுஸ் (Velthari blouse): ₹150 மட்டும்.

ஜாக்கார்டு பிளவுஸ் (Jaguard blouse): ₹100 மட்டும்.

(📸 குறிப்பு: டிஜிட்டல் புகைப்படம் காரணமாக நிறங்களில் சிறிய மாறுபாடுகள் இருக்கலாம் / Due to digital photography colours may vary slightly).

முன்பதிவிற்கு (Confirm your booking soon):

இவை மிகவும் டிமாண்ட் உள்ள டிசைன்கள் என்பதால், தற்போதைய இருப்பில் ஒவ்வொரு நிறத்திலும் சில புடவைகள் மட்டுமே உள்ளன. எனவே, உங்கள் விருப்பமான புடவையை உடனே முன்பதிவு செய்து கொள்ளுங்கள்!

Heritager.in தளம் மூலமாகவோ அல்லது கீழே உள்ள WhatsApp எண்ணிலோ வாங்குவதற்குத் தொடர்பு கொள்ளவும்... தங்களின் ஆதரவுக்கு நன்றிகள்!

#மயூரிகாட்டன் #பருத்திசேலை #மீனாட்சிகோபுரம்டிசைன் #பெரியபார்டர் #புதியவரவு #கைத்தறிசேலைகள் #ஆன்லைன்விற்பனை

Address

38, Nerkundram
Chennai
600107

Opening Hours

Monday 9am - 6pm
Tuesday 9am - 6pm
Wednesday 9am - 6pm
Thursday 9am - 6pm
Friday 9am - 6pm
Saturday 9am - 6pm

Alerts

Be the first to know and let us send you an email when Heritager.in The Cultural Store posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Heritager.in The Cultural Store:

Shortcuts

Share