06/11/2013
சந்தை - The Online Market
சந்தை - இத்தளத்தில் நீங்கள் விரும்பும் எந்தப் பொருளையும் விற்கலாம் / வாங்கலாம். நீங்கள் விரும்பும் எந்தப் பொருளையும் வாங்க / விற்க விளம்பரம் கொடுக்கலாம்!
1. உங்களின் வியாபாரத்தில் நேர்மையாக இருங்கள். யாரையும் ஏமாற்ற வேண்டும் என்று நினைக்காதீர்கள். நீங்கள் நேர்மையாய இருந்தால் வாழ்நாள் முழுவதும் ஒரே ஒரு வாடிக்கையாளர் உங்களிடம் வியாபாரத் தொடர்பில் இருப்பார். ஏமாற்ற நினைத்தால் உங்களுக்கு அந்த ஒருமுறைதான் பிசினஸ் கிடைக்கும். அப்புறம் உங்களின் பிசினசுக்கு மூடு விழா மட்டுமே நடக்கும்.
2. பண பரிவர்த்தனைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது வியாபாரிகளின் கடமையும், வாடிக்கையாளர்களின் கடமையும் ஆகும். சந்தை எனும் முக நூல் பக்கம், உங்களின் பயிற்சிக்கான ஒரு களம் மட்டுமே. உங்களின் எந்த விதமான வியாபாரத்திற்கும், பணப் போக்குவரத்திற்கும், வியாபாரத்தால் உண்டாகும் இலாப நஷ்டங்களுக்கும் நானோ, இந்த 'சந்தை' வலைத்தளமோ சட்ட ரீதியாக பொறுப்பேற்க மாட்டோம்.
3. நீங்கள் உங்கள் பழைய பொருட்களில் இருந்து, உங்களின் சுய ஆற்றல் தொழில்கள் (அதாவது எம்பிராய்டரி, அழகுக் கலைகள், சமையல் குறிப்புகள் என்று பலதும்) இங்கே விற்கலாம் வாங்கலாம்.
4. உங்கள் பகுதியில் உள்ள மிகவும் மலிவான பொருள்களை இங்கே சந்தைக்குக் கொண்டு வரலாம். விற்பனை பொருள் பற்றிய தெளிவான புகைப்படம், தெளிவான விளக்கம், செய்முறை, இயக்கம், எப்படி அந்தப் பொருளை அனுப்பப் போகிறீர்கள், யார் இதற்க்கான பார்சல் கூலியைக் கொடுடுப்பது என்பது வரை தெளிவாக, உங்கள் வியாபாரத்தொடர்பில் குறிப்பிடுங்கள்.
5. உங்கள் வீட்டிற்குத் தேவையான பொருள்கள், உங்களுக்குத் தேவையான பொருள்கள், அல்லது உங்கள் வணிகத்திற்குத் தேவையான பொருள்கள் என்று உங்களின் தேவைகளையும் இங்கே பதிவிடலாம். அதைப்பார்க்கும் மற்றொரு நண்பர் உங்களுக்கு அதை விற்க உதவிடலாம்.
6. இந்த பக்கம் மூலம் செய்யப் படும் வியாபாரம் வளர்ச்சி அடைந்தால், அது உங்களின் வெற்றி மட்டுமே.
நீங்கள் எதையும் விற்கலாம். பட்டுத் துணி முதல் பட்டாசு வரை, கட்டில் முதல் கரும்பு வரை, மிளகாய், மஞ்சள், முருங்கை, மருதாணி, வளையல், கம்ப்யூட்டர், காலணிகள், தரை விரிப்பு, செங்கல், சிமெண்ட், துணி, T ஷர்ட்கள், பேன்ட் துணிகள், பழைய நகை, கற்கள், எதையும் நீங்கள் விற்கலாம்.
7. வெளி ஊர்களில் உள்ளவர்கள் சென்னை மும்பாய் போன்ற பெருநகரங்களுக்கு வர முடியாமல் இருப்பவர்கள் இங்கே தேவை என்று விளம்பரம் செய்தால் உங்களுக்கு வாங்கித் தர நிச்சயம் மற்ற உறுப்பினர்கள் உதவுவார்கள்.
8. இந்தப் பக்கத்தைப் பகிர்வதால் உங்களுக்கான சந்தை மிகவும் விரிவு படுத்தப் படும்.....எனவே பகிருங்கள்...அதை விட முக்கியம், நீங்கள் இந்தப் பக்கத்தை லைக் செய்ய வேண்டும். அப்படி செய்தால் தான் இங்கு நடக்கும் தினசரி வணிகம் குறித்த பதிவுகள் உங்களுக்குச் செய்திகளாக கிடைக்கும்.