Salamath Book House

Salamath Book House The Biggest Colection of Islamic Books Tamil -English - Arabic - Urdu - Hindi - Malayalam - Telugu

PRODUCT ID:- 00014
20/04/2022

PRODUCT ID:- 00014

Product id :- SP06371
20/04/2022

Product id :- SP06371

How to Promote an Islamic Lifestyle at Home?Islam is not just a belief but a complete life system for the Muslim communi...
04/02/2022

How to Promote an Islamic Lifestyle at Home?

Islam is not just a belief but a complete life system for the Muslim community. It includes practicing those habits that separate Muslims from others, distinguishing our religion as one with unmatchable faith.

That’s why it is essential for Muslim families, especially those living in non-Muslim countries, to find the right ways of promoting an Islamic lifestyle at home.

That way, not only do we bring Barakah into our lives but also inspire others to do the same. Here are four tips that we can follow to encourage such a lifestyle at home:

1- Be More Active During Prayer Times

The first thing we can do is make a habit of observing Salah on time every day and engage in frequent recitation of the Holy Qur’an during prayer times.

When your family watches you doing Dhikr and consistently remembering Allah Subhanahu wa Ta’ala, they eventually follow your habits.

2- Let Your Trust In Allah (SWT) Inspire Others

When you have complete faith in Allah (SWT)’s plans, your trust in Him and confidence in yourself seep into all parts of your life.

This confidence motivates others to learn more about Islam, especially the little ones who look up to you.

3- Foster a Respective Culture Inspired By Islamic Teachings

There are rights and responsibilities associated with all relationships in Islam, be it between a wife and a husband, a parent and a child, or even among neighbors.

When you foster a respective culture in your family, inspiring others to fulfill their duties respectively, it automatically promotes an Islamic lifestyle at home.

4- Educate Your Family About Islamic Events

While Muslims must celebrate Eid and observe fasts in Ramadan, enunciating such Islamic events’ importance is just as essential. It’s when we know our traditions and obligations right that we understand how beautiful Islam is.

May Allah Subhanahu wa Ta’ala grant us the opportunity to become better Muslims, taking every day as an inspiration to do more for others while earning countless rewards that take us closer to Jannah. Ameen.

ISBN             :-  08265No.of.pages:-  112Weight.         :- 0.120 KgHadiya          :-  ₹ 70Dimension   :- 217 * 140 ...
27/01/2022

ISBN :- 08265
No.of.pages:- 112
Weight. :- 0.120 Kg
Hadiya :- ₹ 70
Dimension :- 217 * 140 mm

பெண்கள் மத்ரஸாக்களில் இந்நூலை கற்பிக்கும்போது இதன் மூல நூலாகிய முன்மாதிரி முஸ்லிம் பெண்மணியை தலைப்புக்கு ஏற்ப ஒரு முறை வாசித்துவிட்டு கற்பித்தால் மிகவும் அருமையாக இருக்கும். மாணவிகளுக்கு பாடத்தை புரிய வைப்பதற்கும் பல கருத்துகளை அவர்களுக்கு முன் வைப்பதற்கும் ஆசிரியருக்கு இலகுவாக இருக்கும்.
தாங்களும் இதை படித்துப் பயன்பெறுவதோடு எல்லா மக்களுக்கும் இந்நூலை பெறுமாறு அன்போடு கோருகிறோம். அறிமுகப்படுத்தி நன்மைகளை அல்லாஹ்வே எங்களிடமிருந்து இதை ஏற்றுக் கொள்வாயாக! மேலும், இஸ்லாமிய கல்வி நூல்களை அதிகம் வெளியிடுவதற்கு உதவுவாயாக! அல்லாஹ்வே! நீதான் நன்கு செவியுறுபவன். பிரார்த்தனைகளை அங்கீகரிப்பவன்.

-உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

wa.me/919600012039

நான் புகைபிடிப்பதில்லை ஆனால் என் பையில் தீப்பெட்டியை வைத்திருக்கிறேன். என் இதயம் ஒரு பாவத்தை நோக்கிச் செல்லும் போது. நான...
26/01/2022

நான் புகைபிடிப்பதில்லை ஆனால் என் பையில் தீப்பெட்டியை வைத்திருக்கிறேன். என் இதயம் ஒரு பாவத்தை நோக்கிச் செல்லும் போது. நான் ஒரு தீப்பெட்டியை எரித்து என் உள்ளங்கையை சூடாக்குகிறேன்.
பிறகு நான் என்னிடம் சொல்கிறேன், இந்த வெப்பத்தை கூட உன்னால் தாங்க முடியவில்லையே, நீ எப்படி தாங்குவாய் நரகத்தின் தாங்க முடியாத வெப்பத்தை என்று?
-முஹம்மது அலீ (குத்துச்சண்டை வீரர்)

I Don't Smoke But I Keep A Match Box In My Pocket. When My Heart Slips Towards A Sin. I Burn A Match Stick And Heat My Palm .Then I Say To Myself Ali, You Can't Bear Even This Heat How Would You Bear The Unbearable Heat Of Hell?
- Muhammed Ali (Professional boxer).

ISBN             :-  08642No.of.pages:-  32Weight.         :- 0.040 KgHadiya          :-  ₹ 20Dimension   :- 213 * 138 m...
25/01/2022

ISBN :- 08642
No.of.pages:- 32
Weight. :- 0.040 Kg
Hadiya :- ₹ 20
Dimension :- 213 * 138 mm

இந்தியாவில் ஆட்சி செய்த முஸ்லிம் மன்னர்களை நாகரிகம் தெரியாதவர்களாகவும் கொடுங்கோலர்களாகவும் சித்தரிக்கும் முயற்சி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோயில்களை இடித்தார்கள், கோயில் சொத்துகளை கொள்ளையடித்தார்கள், இந்துக்களை கொத்துக் கொத்தாக கொலை செய்தார்கள்' என்று ஆதாரம் இல்லாத செய்திகள் இன்று வரலாறுகளாக திணிக்கப்படுகின்றன. இவற்றை அடிப்படையாக வைத்து திரைப்படங்களும் எடுக்கப்படுகின்றன.

இதனை மையப்படுத்தி பிரபல எழுத்தாளர்களின் நூல்களும் வந்துள்ளன. மதன் எழுதிய 'வந்தார்கள் வென்றார்கள்'

அதில் முக்கியமானது.

ஆனால், முஸ்லிம் மன்னர்களை வரவழைத்தது யார் என்ற உண்மையை மதன் தனது புத்தகத்தில் சொல்லவில்லை. மதன் சொல்ல மறந்த அல்லது மறைத்த செய்திகளை வரலாற்று ஆதாரங்களுடன் அழகாக இப்புத்தகத்தில் பதிவு செய்துள்ளார் வரலாற்றாய்வாளர் செ. திவான்.

ISBN             :-  00095No.of.pages:-  80Weight.         :- 0.060 KgHadiya          :-  ₹ 30Dimension   :- 178 * 123 m...
24/01/2022

ISBN :- 00095
No.of.pages:- 80
Weight. :- 0.060 Kg
Hadiya :- ₹ 30
Dimension :- 178 * 123 mm

https://salamathbooks.com/index.php?route=product/product&product_id=262

என் நாடும் போற்றும் தென்னாட்டுச் சோதரீர்!

உணர்வூட்டும் உபதேசங்கள்' என்ற இந்நூலின் ஒரு பகுதியை ஈராண்டுகளுக்கு முன் வெளியிட்டிருந்தேன். அதன் கருத்துக்கள் காண்போரின் மனதைக் கவர்ந்தமையால் வெகு விரைவிலேயே அவை தீர்ந்து விட்டன. அந்தப் பாணியிலேயே விரிவாக வெளியிட்டால் மக்களுக்கு தக்க பலனளிக்கும் எனப்பலர் நம்மை வேண்டவும், தூண்டவும் செய்தனர். அத்தகையோரில் பிரபல மார்க்க மேதை திருப்பூர், மவ்லானா மவ்லவி ஏ.எம். ரபீஉத்தீன் ஆலிம் அவர்களும் ஒருவராவார்கள். அவர்களின் ஆலோசனைப்படி இதில் சில சம்பவங்களை யும் சேர்த்து நாற்பது தலைப்புகளில் அமைத்து வெளியிட்டுள்ளேன்.

மேலும் இந்நூல் இவ்வளவு தூரம் விரிவடைவதற்குத் தக்க உதவியாக இருந்து ஒத்துழைத்த எனது சிறிய தந்தையின் மகனாரும், திருநெல்வேலி பேட்டை ரியாளுல் ஜினான் அரபிக் கல்லூரியின் ஆசிரியருமான மவ்லவி. எஸ். அப்துல்கனி பாகவீ அவர்களுக்கும் என் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்நூலின் முழு பதிப்புரிமையையும் ‘டில்லி குதுப்கானா' நிர்வாகத்தினருக்குக் கொடுத்து விட்டேன் என்பதையும் மகிழ்ச்சியுடன் அறிவித்துக் கொள்கிறேன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் இந்நூலின் நல்லுபதேசங் களைக் கடைப்பிடித்து நடக்க நம் அனைவருக்கும். நல்லருள் நல்குவானாக. ஆமீன்.

ISBN             :-  SP07721No.of.pages:-  176Weight.         :- 0.220 KgHadiya          :-  ₹ 130Dimension   :- 217 * 1...
24/01/2022

ISBN :- SP07721
No.of.pages:- 176
Weight. :- 0.220 Kg
Hadiya :- ₹ 130
Dimension :- 217 * 131 mm

அறவே கணிதத் தொடர்பு இல்லாதவர்களும் கூட படிப்படியாக தேவையான கணிதத்தைத் தெரிந்துகொள்ளும் வகையில் மிக இலகுவாக புரியும்படியான வழிகாட்டுதல்கள், உதாரணங்களுடன் "எளிய வழியில் கணிதம்" என்ற இச்சிறு நூலினை அல்ஹாஃபிழ் மௌலவி. அஹ்மது இப்ராஹீம் காஷிஃபி அவர்கள் தொகுத்துள்ளார்கள்.

கண்ணியமிகு மெளலானா மௌலவி, முஹம்மது அலி பாகவி ஹழ்ரத்

பேராசிரியர் காஷிஃபுல் ஹுதா மத்ரஸா, சென்னை.

கணிதம் பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லாத எந்த ஒரு நபரும் மிக எளிதாக விளங்கிக் கொள்ளுமளவுக்கு, தெள்ளத்தெளிவாக புரிந்து கொள்ளும் விதமாக ஹஜ்ரத் அவர்கள் (இந்நூலை) வடிவமைத்துள்ளார்கள்.

மௌலானா மெளலவி, காஜாநிஜாமுத்தீன் யூசுஃபி ஹழ்ரத்

பேராசிரியர் யூகஃபிய்யா மத்ரஸா, திண்டுக்கல்.

ஓர் ஆய்வாளர், குறிப்பாக ஆலிம் ஒருவர் தனது ஆய்வுகளை நடத்தும்போது, கணிதத்தோடு தொடர்புடைய சட்டப்பிரச்சனைகளை விடுவிக்க கணித அறிவு மிகவும் இன்றியமையாதது. அறிவு நுணுக்கம் பெறுவதற்கும் கணித அறிவு உதவுகிறது. கணிதம் சிரமமானது என்று பலருக்கு மனதில் பதிய வைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படை சூத்திரங்களைக் கற்றுக் கொண்டால் மற்ற கலையை விட கணிதம்தான் எளிமையானது. இந்நூலாசிரியர் தனது இந்நூலில் கணிதத்தின் இந்த எளிமையை காட்டியிருக்கிறார்.

ISBN             :-  01579No.of.pages:-  140Weight.         :- 0.130 KgHadiya          :-  ₹ 40Dimension   :- 212 * 136 ...
24/01/2022

ISBN :- 01579
No.of.pages:- 140
Weight. :- 0.130 Kg
Hadiya :- ₹ 40
Dimension :- 212 * 136 mm

வட இந்தியப் பெரியார்களின் உருது மொழி நூல்களை தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்க வேண்டும் என்ற பேராவலால் ஹகீமுல் உம்மத் மௌலானா அஷ்ரப் அலி தானவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் கலீபாவும், உத்தரபிரதேச மாநிலம் ஹர்தோயி என்ற ஊரில் 'தஃவத்துல் ஹக்' பல்கலை மதரஸாவின் நிறுவனருமான முஹ்ஹிஸ் ஸுன்னா மௌலானா அப்ராருல் ஹக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் பொன்னுரைகளின் நூல் "மல்பூஜாத்தே அப்ரார்' முதல் வெளியீடாக வெளியிடப்பட்டது. சுன்னத்தான நடைமுறைகளைப் பின்பற்றுவதின் செயல்பாடுகள் விளக்கப்பட்டு மக்களுக்குப் பயனுள்ள நூலாக அமைந்தது. இரண்டு பதிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன; அல்ஹம்துலில்லாஹ்!

ஹஜ்ரத் முஹ்யுஸ் ஸுன்னா அப்ராருல் ஹக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் 'ஏக் மினிட் கா மத்ரஸா' தமிழில் 'ஒரு நிமிட மத்ரஸா' என்ற பெயரில் நான்கு பதிப்புகள் வெளியிடப் பட்டுள்ளன.

உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உலகின் பல மஸ்ஜிதுகளில் தொழுகைக்குப் பின்பு தஃலீமாக வாசிக்கப்படுகிறது. நிஸ்வான் மதரஸாக்களில் பாடத்திட்டமாக உள்ளது. 4 மாதம் ஜமாஅத்களில் செல்பவர்கள் தஃலீம் ஹல்கா முடிந்ததும் தினமும் படித்தால் முழுமையாக தொழுகை செயல் முறை விளக்கம், பெரும்பாவம் தவிர்த்தல். சுன்னத்தான விஷயங்களைத் தெரிந்து கொள்ளுதல் முழுமைபெறும்

டில்லி மர்கஸ் நிஜாமுத்தீன் பெரியார் மௌலானா முஹம்மது உமர் பாலன்பூரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களும் அவர்களது மகனார் மௌலானா முஹம்மது யூனுஸ் பாலன்பூரி அவர்களும் தொகுத்த 'பிக்ரே மோத்தி' எனும் உருது நூலின் தொகுப்பி லிருந்து அவ்ராதுகள், துஆக்கள் தொகுக்கப்பட்டு, 'ரிதறிய முத்துக்கள்’ எனும் தலைப்பில் தமிழில் தற்போது வரை பதினைந்து பதிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நூலில் குர்ஆன், ஹதீஸ் துஆக்கள் எந்தந்தப் பிரச்னைக்கு எவ்வாறு து.ஆ மூலம் தீர்வு காண்பது என்பது விளக்கப்பட்டுள்ளது குறிப்பாக, இதிலுள்ள துஆக்கள் நபிமார்கள். வலிமார்களால் ஓதப்பட்டு அனுபவப்பூர்வமான துஆக்களாகும். பயனைக் கண்டறிந்த

ஆயுதம் இாஜ்ரத் மெளலானா முஹம்மத் உமர் பாலன் பூரி (ரஹ்) அவர்கள் தங்களது வாழ்க்கையில் ஓதிவந்த அவ்ராதுகளின் தொகுப்பு முஃமின் கா ஹத்யார்' என்ற நூல் தமிழில் 'து.ஆ முஃமினின் . என்று மொழிபெயர்க்கப்பட்டு 4 பதிப்புகள் வெளியிடப்பட் டுள்ளன.

மௌலானா ஸஅத்ஹஸன் சாஹிப் அவர்கள் தொகுத்த 'நபவி லைல் வந்நஹார்' என்ற இறுதிநபியின் இரவும் பகலும் என்ற பெயரில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நடைய உடை, பாவனையின் அமல்கள் தொகுப்பு மூன்று பதிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

குர்ஆனில் அல்லாஹ் தமது அடியார்களிடம் தன்னிடமே கேட்க வேண்டும் என்று 40 இடங்களில் ரப்பனா என்று கூறி அடியானின் தேவைகளைக் கேட்கக் கூறும் 40 ஆயத்துகள் சிறப்பு மொழி யாக்கத்துடன் ‘குர்ஆன் கூறும் 40 ரப்பனா துஆக்கள்' எனும் பெயரில் இரண்டு பதிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்நூல்களை இஸ்லாமியப் பெருமக்கள் தாங்களும் படித்து மற்றவர்களுக்கும் ஆர்வமூட்டி படிக்கச் செய்வதுடன் ரமலான் அன்பளிப்பு, திருமண அன்பளிப்பு மற்றும் ஈசால் தவாபு போன்ற நிகழ்ச்சிகளுக்கு இந்நூலை பொதுமக்கள் மொத்தமாக வாங்கி அனைவரும் படித்துப் பயன்பெறச் செய்ய வேண்டுகிறோம்.

ISBN             :-  00436No.of.pages:-  212Weight.         :- 0.170 KgHadiya          :-  ₹ 60Dimension   :- 212 * 136 ...
22/01/2022

ISBN :- 00436
No.of.pages:- 212
Weight. :- 0.170 Kg
Hadiya :- ₹ 60
Dimension :- 212 * 136 mm

https://salamathbooks.com/index.php?route=product/product&product_id=2287

அல்லாஹுதஆலா மனிதனை இரண்டு பொருட்களால் படைத்துள்ளான். ஒன்று: உடல். மற்றொன்று : உயிர். நபி (ஸல்) அவர்கள் ஆன்மீக நோய்களுக்கு மருந்துகளைக் கூறி இருப்பதுடன் உடல் சம்பந்தமான நோய்களுக்கும் மருந்தைக் கூறியுள்ளார்கள். ஆகையால்தான் நபிமார்கள் மருந்து, துஆ இரண்டைக் கொண்டும் உம்மத்தில் உள்ள நோய்களைக் குணப்படுத்தியுள்ளார்கள். ஏனெனில் பலவித நோய்கள் வெறும் மருந்தால் மட்டும் குணமாவதில்லை. உதாரணமாக சூனியம், கண்திருஷ்டி ஏற்படுதல் இந்த நோய்கள் அல்லாஹ்வின் திருநாமங்கள் மற்றும் துஆவால் தான் குணமாக முடியும். மேலும் மனிதர்களுக்கு சில அமல்களை முன்கூட்டியே கற்றும் கொடுத்துள்ளார்கள். அவைகளின் பரக்கத்தால் எந்த சோதனையும் வருவ தில்லை. ஆகையால் முஸ்லிம்கள் தங்களின் நோய்களுக்கு மருந்தாலும் துஆவாலும் மருத்துவம் செய்ய வேண்டும். ஆனால் பொதுவாக மருத்துவத்திற்காக பலவித திட்டங்களைக் கையாளுகிறோம். மருத்துவர்களிடம் செல்கிறோம். ஆயிரக் கணக்கில் பணம் செலவு செய்கிறோம். ஆனால் அல்லாஹ்வும் நபி (ஸல்) அவர்களும் கூறிய வழிமுறை களின் பால் கவனம் செலுத்துவதில்லை. ஆனால் நோயைக் கொடுப்பதும் நோயைக் குணப்படுத்துவதும் அல்லாஹ்தான்.
அல்லாஹ்வும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்களும் மற்ற துறைகளில் நமக்கு வழிகாட்டியதுபோன்று மருத்துவம் சம்பந்தமாகவும் வழிகாட்டியுள்ளார்கள்.

இவைகளைக் கொண்டு பலன் ஏற்படுவதற்கு நம்பிக்கை இருப்பது அவசியமாகும். நம்பிக்கை இல்லாமல் இவைகளைக் கொண்டு பயன் அடைய முடியாது.

மௌலானா உமர் பாலன் பூரி (ரஹ்) அவர்களின் மகனார் ஹஜ்ரத் மௌலானா முஹம்மது யூனுஸ் ஸாஹிப் தாமத் பரகாதுஹும் அவர்கள். (B) பிக்ரே மோத்தி (சிதறிய ஆக்களை முத்துக்கள்) என்ற தன்னுடைய நூல்களில் அரிய துஆக் பல நூல்களிலிருந்து எடுத்து எழுதியுள்ளார்கள். அதிலிருந்து இந்த நூலில் துஆக்கள், ஆயத்துக்களின் பலன்களை தர்ஜமா செய்யப்பட்டுள்ளது. சிலவற்றை மற்ற நூல்களிலி ருந்தும் எழுதியுள்ளேன். இதன் மூலம் நம் அனைவருக்கும் ஈருலக பயன்களை அல்லாஹ் தந்தருள்வானாக. ஆமீன்!

இந்த நூல் வெளிவர காரணமாகவும் உதவியாகவும் இருந்த அனைவருக்கும் அல்லாஹு தஆலா சிறந்த நற்கூலியை வழங்குவானாக!

Wa.me/919600012039

ISBN             :-  08640No.of.pages:-  96Weight.         :- 0.125 KgHadiya          :-  ₹ 65Dimension   :- 216 * 140 m...
21/01/2022

ISBN :- 08640
No.of.pages:- 96
Weight. :- 0.125 Kg
Hadiya :- ₹ 65
Dimension :- 216 * 140 mm

https://salamathbooks.com/index.php?route=product/product&product_id=2404

அன்பான அறிவுத் தேடலின் வாசகப் பெருமக்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால் அறிவுத்தேடல் இவ்வறிவார்ந்த சமூகத்திற்கு மத்தியில் மார்க்க அறிவைப் பரப்பிடும் நோக்கில் தொடர்ந்து பல அறிவுச்சார் சேவைகளை முன்னெடுத்து வருகிறது. (அல்ஹம்துலில்லாஹ்) அதன் ஒரு முயற்சியாக அறிவுத்தேடல் வெளியீட்டகம் என்ற பெயரில் சிறந்த புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து பகுப்பாய்வு செய்து வெளியிடுவது, இளம் எழுத்தாளர்களின் படைப்புகளை மார்க்க அறிஞர்களின் ஆய்வுக்குட்படுத்தியப்பின் நன்முறையில் வெளியிட்டு அவர்களின் எழுத்துப்பணியைத் தொடர ஆர்வப்படுத்துவது, காலம் சென்ற அறிஞர்கள் விட்டுச் சென்ற பயனுள்ள கட்டுரைகள், தொகுப்புகள், மொழியாக்கங்கள் போன்றவற்றின் பதிப்புரிமையைப் பெற்று சிறந்த முறையில் புத்தகங்களாக வெளியிட்டுக் கொடுப்பது போன்ற பணிகளை மேற்கொள்வது, புத்தக விமர்சனம், புத்தக அறிமுகவுரை, புத்தக வெளியீட்டு விழாக்கள் போன்றவைகளின் மூலம் நல்ல புத்தகங்களை உலகெங்கிலும் வாழும் வாசககர்களிடம் கொண்டு சேர்ப்பது, மேலும் மனிதகுலத்திற்கு நல்லொழுக்கத்தையும், நற்பண்புகளையும் போதிக்கின்ற இவ்வுலகில் அமைதியையும், சமத்துவத்தையும் நிலைநாட்டும் நோக்கில் எழுதப்படுகின்ற பலதரப்பட்ட மக்களும் படித்து பயன்பெறுகின்ற பற்சமயத்து அறிஞர்களின் புத்தகங்களும் இன்ஷா அல்லாஹ் நமது அறிவுத்தேடல் வெளியீட்டகத்தின் சார்பாக வெளியிடப்படவுள்ளது.

வாசகர்கள் மற்றும் எழுத்தாளர்கள் தங்களின் பேராதரவை எங்களின் வெளியீட்டகத்திற்கு வழங்கிடுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம். எல்லாம் வல்ல அல்லாஹ் எங்களின் இச்சிறு முயற்சியின் பெரும்பலனாக மனித குலத்திற்கு சீரான அறிவையும், சிறந்த வழியையும் தந்தருள்வானாக! ஆமீன்.

ISBN             :-  SP00094No.of.pages:-   48Weight.         :- 0.040 KgHadiya          :-  ₹ 20Dimension   :- 177 * 11...
21/01/2022

ISBN :- SP00094
No.of.pages:- 48
Weight. :- 0.040 Kg
Hadiya :- ₹ 20
Dimension :- 177 * 118 mm

https://salamathbooks.com/index.php?route=product/product&product_id=135

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

புகழனைத்தும் எல்லாம் வல்ல அல்லாஹ்விறீகே! ஸலவாத்தும் ஸலாமும் அல்லாஹுத் தஆலாவின் இறுதித் 'தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் அவர்களின் தோழர்கள் மற்றும் முஃமினானவர்கள் மீதும் என்றென்றும் உண்டாவதாக!

அல்லாஹுத் தஆலாவின் மாபெரும் கிருபையினால் நமது மார்க்க சம்பந்தமான பல நூல்களை இதற்கு முன் தொகுத்து வெளியிட்டதை வாசகர்கள் அறிவீர்கள். நாற்பது ஹதீஸ்கள் அரபியிலும் அதன் பொருள் தமிழிலும் மூன்று பாகங்கள் வெளிவந்து பல மத்ரஸாக்களில் மாணவ மாணவிகளுக்கான பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டிருப்பதையும் வாசகர்கள் அறிவீர்கள். ஆனால் அரபி வார்த்தைகளை சரிவர புரிந்து கொள்ளாத மாணவ மாணவிகளுக்கு தமிழில் மட்டும் ஹதீஸ்களைத் தொகுத்து வெளியிட்டால் பலன் உண்டாகும் என்று பல நண்பர்களின் ஆலோசனையின்படி அருள் நபியின் அன்பு மொழிகள்' என்று இந்நூல் தொகுத்து வெளியிடப்பட்டிருக்கிறது. எல்லாம் வல்ல அல்லாஹுத் தஆலா இம்முயற்சியை ஏற்றுக் கொள்வதுடன் இதைத் தொகுத்தவனுக்கும். படிக்கத் கூடியவர்களுக்கும் ஹிதாயத் கிடைக்க இந்நூலையும் காரணமாக்கி வைப்பானாக! ஆமீன்.

Address

90, Linghi Chetty Street, Mannady
Chennai
600001

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Friday 9am - 9pm
Saturday 9am - 9pm
Sunday 9am - 2pm

Telephone

+919600012039

Alerts

Be the first to know and let us send you an email when Salamath Book House posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Salamath Book House:

Share