Barter Organics

Barter Organics PURE ORGANIC FOODS AND PRODUCTS AVAILABLE

08/01/2023
26/07/2019

இந்தச் செய்தியை இரண்டு நாட்களுக்கு முன் நண்பர் ஒருவருடன் வாசித்து அதைக் குறித்து இருவரும் கலந்துரையாடிக்கொண்டும் இருந்தோம். இதைப் படித்ததும்,

படித்ததில் வந்த கேள்விகளும் எங்களின் புரிதல்களும் இங்கே:

1. வீரிய ஒட்டு ரகத்தால் (Hybrid Seeds) விற்பனைச் சிக்கலை விவசாயிகள் ஏற்றுமதிகளில் மட்டுமே சந்திக்கின்றனர்.
உள்ளூர் மக்கள் மத்தியில் நாட்டு ரகங்கள் (Native Seeds) விற்பனையாவதிலும் விலை கிடைப்பதிலும் விவசாயிக்கு சிக்கல் உள்ளது.
ஆக, உள்ளூரில் வீரிய ஒட்டு ரகங்களே அதிகமாக மக்கள் விரும்பி வாங்கின்றனர்.

2. வீரிய ஒட்டுக்கும் நாட்டு ரகங்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

விதை:
-- விதையின் தன்மையைப் பொருத்து இரண்டு வெவ்வேறு ரகங்களுடன் ஒட்டு சேர்த்து பெரும்பாலும் அதிக மகசூலை முன்னிறுத்தி புதிதாக ஒரு விதைத் தலைமுறையை உருவாக்குவது ஒட்டு ரகங்கள்.
பல ஆண்டு காலமாக விதையை சேகரித்து பண்டை மாற்றமும் செய்து நம் சூழலுக்கு ஆதாரமாக இருப்பது நாட்டு ரக விதைகள்.

மகசூல்:
-- வெங்காயத்திற்கு வீரிய ரகத்திற்கு ஏக்கருக்கு 7டன் எனவும் நாட்டு ரகங்களுக்கு 3.5 டன் எனவும் மகசூல் கிடக்கிறது.

இதனால் விவசாயிகள் உள்ளூர் சந்தையில் சந்திக்கு பிரச்சினைகள்?
-- நாட்டு ரக வெங்காயம் சிறிதாகவும் உரிப்பதற்கு சிரமாமகவும் மக்கள் மனநிலை இந்த அவரச காலங்களில் மாறியுள்ளது. ஆகையால் இயற்கை பற்றி களத்தில் பேசுபவர்கள் உட்பட சராசரி குடும்பங்களில் உள்ளவர்கள் வேறுபாடு இருப்பதென்று தெரிந்தும் வீரிய ரகத்தையே விரும்பி வாங்குகின்றனர். இயற்கை முறையில் மருந்தில்லாமல் விளைத்தவருக்கும் இதே நிலை தான்.

3. நாட்டு விதை ஏன் விவசாயிகள் விளைவிக்காமல் ஒட்டு வீரிய ரகங்களை விளைவிக்கின்றனர்?

-- அனைவருக்கும் எளிதாக இருக்க வேண்டும், பெரிதாக பார்க்க நன்றாக, உரிக்க எளிமையா இருக்கணும், விலை குறைவாக இருக்க வேண்டும். இத்தனையும் உள்ளடக்கிய கலவை ஒட்டு ரகமே.

4. ஏன் நாட்டு ரகம் விலை அதிகம்?

-- வேளாண்மை நம் வாழ்வியலாக அதாவது ஓவ்வொருவரும் தனக்கு வேண்டிய உணவை உற்பத்தி செய்துக்கொள்ளும் நிலையில் இருக்கும் வரை விலை பற்றிய உணர்வு இல்லாது வேண்டியதை விளைவித்து உண்ணலாம்.

-- பொருளாதாரமாக ஒரு விவசாயிக்கு அவர் உற்பத்தி இருக்கும் பொழுது, மக்களின் தேவையும் (demand), பிடித்தமும் விசாயியிடம் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

-- ஒரு பொருளை விளைவித்தால் அதற்கேற்ற விலையில் விற்க வேண்டுமல்லவா? ஒட்டு ரகத்தை விரும்பும் மன நிலையில் இருக்கும் சந்தையில் எப்படி ஒருவர் நாட்டு ரகத்தை விற்றிட முடியும். (A producer is dependent on market's demand isn't?)

-- ஒரு ஏக்கரில் 7 டன் ஒட்டு ரகத்தை உற்பத்தி செய்யப்படும் வெங்காயத்தையும் அதே ஒரு ஏக்கரில் 3 டன் உற்பத்தியாகும் வெங்காயத்திற்கும் சந்தை ஒரே விலையை அல்லவா நிர்ணயம் செய்கிறது? பின்பு எப்படி விவசாயிகள் நாட்டு ரகத்தை தேர்ந்தெடுப்பார்கள்? அப்படியே தேர்ந்தெடுப்பவரும் நல்ல விலைக்கு வெளிநாட்டு சந்தையில் விற்க மட்டும் தானே?

5. இதில் எது சரி எது தவறு?

-- நாட்டு ரகமே ethically சரி. ஆனால் அதற்கு நல்ல தேவையை (demand) உருவாக்காது விவசாயியை குறைக் கூறுவது தவறு.

-- நாட்டு ரகமே சரி என நம்பும் தலைமுறையாவது அதற்கு preferences வைக்காது நல்லது என்னும் புரிதலுடன் அதைத் தேடி வாங்கி அதற்கு ஒரு நல்ல சந்தையை உருவாக்கிட வேண்டும். இல்லாது நாட்டு விதை, விதை முக்கியத்துவம் என்று பேசிவிட்டு அவரவர் வீட்டுக்கு வெங்காயம் பெரிதாக இப்படி தான் இருக்க வேண்டும் விலை குறைவா இருக்க வேண்டும் என்று பேசி விட்டு இந்த வெங்காயத்திற்கு சந்தை வாய்ப்பு கொடுக்காமல் வாயால் வடை சுடுவது தவறு.

6. ஆக என்ன தான் சொல்ல வரோம்னா!

-- முதலில் மாற்றம் நிகழ வேண்டிய இடம் விவசாயிகளிடமோ இடைத் தரங்கர்களோ கூட இல்லை. மக்களே, நாமே, நாம் ஒவ்வொருவருமே. பேசுபவர்கள் (என்னையும் சேர்த்து) முதலில் நம்ம தட்ல என்ன சோறுனு பார்ப்பது அவசியம்.

பி.கு: இங்கு சொல்லியிருக்கும் வெங்காய உதாரணம் போல் அனைத்து பயிருக்கும் பொருத்திப் பார்த்துக் கொள்க.

நல்லதே நடக்கட்டும்!

29/03/2018

நீங்கள் உண்ணும் உணவே உங்களை வாழவும் வைக்கும் சாகவும் வைக்கும் , நல்ல உணவுகளை தேடி உயிரை தக்க வைத்து கொள்ளுங்கள்

பனை வெல்லம் - கருப்பட்டி  fresh stock arrived
04/03/2018

பனை வெல்லம் - கருப்பட்டி fresh stock arrived

New introduction organic cake varieties made from Organic jaggery and other organic ingredientsNo white sugar / No prese...
01/03/2018

New introduction organic cake varieties made from Organic jaggery and other organic ingredients

No white sugar / No preservative/ No Maida / No Egg

கம்பு கப் CAKE
RAGI CHOCOLATE CUP CAKE
CHOLAM ROSE CUP CAKE
WHEAT DRY FRUIT CUP CAKE

corporate orders / Birthday party cakes / family pack cakes will be introduced soon
Organic cookies / biscuits will be introduced soon
Contact - 9600072790

28/02/2018
Fresh BADAM available price 750 Rs per KG Dont call if needed for lower price
28/02/2018

Fresh BADAM available price 750 Rs per KG
Dont call if needed for lower price

Address

No 24 Thanikachalam Road , T Nager
Chennai
600017

Opening Hours

Monday 10am - 9pm
Tuesday 10am - 9pm
Wednesday 10am - 9pm
Thursday 10am - 9pm
Friday 10am - 9pm
Saturday 10am - 9pm
Sunday 11am - 12:45pm

Telephone

+919941220044

Website

Alerts

Be the first to know and let us send you an email when Barter Organics posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Barter Organics:

Share