Baqavi Book Centre

Directions

Baqavi Book Centre Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Baqavi Book Centre, Book shop, Angappan Street, Chennai.

உங்கள் பாகவி புக் சென்டரில்

📘 ஹதீஸ் நூல்கள்,

📗 இஸ்லாமிய வரலாறுகள்,

📘 மத்ரஸா பாடநூல்கள்,

📗 இஸ்லாமிய ஆய்வு & சட்ட நூல்கள்

என அனைத்து வகையான நூல்களையும் வாட்ஸப் மூலமாக ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம்.

ஏகத்துவ நூல்ஆசிரியர்:அப்துல் காதிர் அஸ்ஸூஃபிதமிழில்: ரமீஸ் பிலாலி‘படைப்பு இறைவனுக்கு வேறானது; இறைவன் ஒருபோதும் படைப்பாகி...
28/01/2026

ஏகத்துவ நூல்

ஆசிரியர்:அப்துல் காதிர் அஸ்ஸூஃபி
தமிழில்: ரமீஸ் பிலாலி

‘படைப்பு இறைவனுக்கு வேறானது; இறைவன் ஒருபோதும் படைப்பாகிவிட மாட்டான்; படைப்பு ஒருபோதும் இறைவனாகிவிடாது' என்னும் அடிப்படையான ஸூஃபித்துவப் புரிதலை வலியுறுத்தி, அப்புள்ளியிலிருந்து மேலும் ஆழங்கள் நோக்கிப் பயணித்து, 'படைப்புகளுடன் இறைவன் இருக்கும் நிலை எத்தகையது? இறைவனுக்கும் படைப்புக்குமான தொடர்பு எத்தகையது? இறைவனின் இருத்தலும் படைப்பின் இருத்தலும் எப்படி வேறுபடுகின்றன? இறைவன், படைப்பு ஆகியோரின் எதார்த்தம் என்ன?' என்றெல்லாம் எழும் வினாக்களுக்கு இவ்வுரைகள் விளக்கமாக விடை சொல்கின்றன.

இஸ்லாமிய இறையியலை ஸூஃபிகள்தாம் சரியாக விளங்கியிருக்கின்றனர் என்றும், அவ்விளக்கங்களை உள்வாங்கிக்கொண்டோர்தாம் இஸ்லாத்தின் அரசியல் பரிமாணத்தையும் சரியாகச் செயல்படுத்த முடியும் என்றும் ஆசிரியர் நம்புகிறார். ஆதலால், அவரின் போதனைகள் ஸூஃபிகளிடம் அரசியல் செயல்பாட்டைத் தூண்டும் நோக்கிலும் அமைந்திருப்பதைக் கவனிப்பது சுவாரஸ்யமானது.

இந்நூலை பெற கீழ்காணும் இணைப்பை க்ளிக் செய்து வாட்ஸப் மூலமாக ஆர்டர் செய்யுங்கள்.

https://wa.me/p/25689002044082460/917448888336


ஆன்மாவின் படித்தரங்கள்ஆசிரியர்: அப்துல் ஃகாலிக் அஷ்ஷப்றாவீதமிழில்: ரமீஸ் பிலாலிஅனைத்து நன்மைகளும் அகத்தூய்மையில்தான் அமை...
18/01/2026

ஆன்மாவின் படித்தரங்கள்

ஆசிரியர்: அப்துல் ஃகாலிக் அஷ்ஷப்றாவீ
தமிழில்: ரமீஸ் பிலாலி

அனைத்து நன்மைகளும் அகத்தூய்மையில்தான் அமைந்திருக்கின்றன. எனவே, மனத்தைத் தூய்மை செய்யும் வழிமுறைகளை ஒருவர் அறிய வேண்டியது அவசியமாகிறது. ஸூஃபித்துவம் அதனைச் சொல்லிலும் செயலிலும் கற்பிக்கிறது.

அந்த அகக் கல்விக்காக திருமறையின் வழிகாட்டுதல்படி மனிதனின் மனநிலைகளை ஆழ்ந்து கண்டு, அதன் வகைப்பாடுகளுக்குரிய தன்மைகளையும் ஓதுமுறைகளையும் வகுத்து, முழுமையான ஒரு செயல்திட்டம் ஆக்கியுள்ளது.

அந்த வகையில், இந்நூல் ஸூஃபிப் பாதையில் மனித ஆன்மா அடையும் மாற்றங்களை விவரிப்பதன் வழியாக மனிதன் ஆன்மிகத்தில் அடைய வேண்டிய ஏற்றங்களை நமக்கு உணர்த்துகிறது. தன்னுடைய ஆன்மாவை, திருக்குர்ஆன் கூறும்படியான திருப்தியுற்ற, பூரண, செம்மையான ஆன்மாவாக மாற்றியமைக்க விரும்பும் ஒவ்வொருவரும் பயிலவேண்டிய ஆன்மிகக் கையேடு இது.

இந்நூலை பெற கீழ்காணும் இணைப்பை க்ளிக் செய்து வாட்ஸப் மூலமாக ஆர்டர் செய்யுங்கள்.

https://wa.me/p/25737434619276513/917448888336


கோட்சேயின் குழந்தைகள்இந்துத்துவ தீவிரவாதம் என்பது வெறும் ஒரு பகுதி சார்ந்ததோ அல்லது அரிதான விஷயமோ அல்ல என்பதை இந்த புத்த...
16/01/2026

கோட்சேயின் குழந்தைகள்

இந்துத்துவ தீவிரவாதம் என்பது வெறும் ஒரு பகுதி சார்ந்ததோ அல்லது அரிதான விஷயமோ அல்ல என்பதை இந்த புத்தகம் உணர்த்துகிறது. இந்த தீவிரவாத அமைப்புகள் பயன்படுத்தும் முறைகளில் உள்ள ஒற்றுமைகளை விளக்குவதுடன் வரலாற்று பின்னணியையும் இதுவரை வெளிவராத ஆதாரங்களையும் இப்புத்தகம் சமர்ப்பிக்கிறது. போதிய ஆதாரங்கள் உள்ள போதும் தீவிரவாத தாக்குதல்களை திட்டமிட்டவர்கள், அதன் சூத்திரதாரிகள், பொருளாதார உதவி செய்தவர்கள் மற்றும் கொள்கையை வகுப்பவர்களை இதுவரை கைது செய்யாத விசாரணை ஏஜென்சிகள் எதிர்நோக்கும் இமாலய பணியையும் இப்புத்தகம் கோடிட்டு காட்டுகிறது.

இந்நூலை பெற கீழ்காணும் இணைப்பை க்ளிக் செய்து வாட்ஸப் மூலமாக ஆர்டர் செய்யுங்கள்.

https://wa.me/p/25634460616235552/917448888336


கோளாறு எங்கே...ஒருவரை ஒருவர் விமர்சித்துக் கொண்டிருக்கும் நம் எல்லோரையும் உள்ளடக்கியதே இஸ்லாமிய சமுதாயம். கோளாறுகள் உள்ள...
14/01/2026

கோளாறு எங்கே...

ஒருவரை ஒருவர் விமர்சித்துக் கொண்டிருக்கும் நம் எல்லோரையும் உள்ளடக்கியதே இஸ்லாமிய சமுதாயம். கோளாறுகள் உள்ள இடங்களைக் கவனமாக இனங்காண்பதும் அதற்குப் பரிகாரம் காண்பதுமே விமோசனத்திற்கான வழியாகும். அதை விடுத்து வெற்று விமர்சனம் எதையும் சாதித்து விடாது.

இஸ்லாமிய சமூக மாற்றத்திற்காக உழைக்கின்ற இயக்கங்களை மட்டும் எப்போதும் குறை கூறுவதும் அடுத்தவர்களே எல்லாவற்றையும் செய்து விடுவார்கள் என்று எதிர்பார்த்து ஒதுங்கிக் கொள்வதும் தான் நமது வீழ்ச்சியின் தொடக்கம். சுயவிமர்சனம் இல்லாத தனிமனிதனும், சுயவிமர்சனம் அற்ற சமூகமும் ஒரு போதும் மாற்றத்தை நோக்கி நகர முடியாது. ஆனால், வெறும் சுயவிமர்சனங்களும் செயற்களத்தில் ஒன்றும் செய்து விடுவதில்லை. கருத்துக்களும் சிந்தனைகளும் செயல் வடிவம் பெறும் போது மாற்றம் நிகழ்கின்றது.

சமகால இஸ்லாமிய இயக்கங்கள், உலகளாவிய இஸ்லாமிய சமூகம் ஆகியன குறித்து சுயமதிப்பீடு செய்வதன் தேவையை உணர்ச்சி ததும்பும் நடையில், ஆனால் அறிவுப்பூர்வமான வாதங்களுடன் கருத்துக்களை நகர்த்திச் செல்கிறார் யூசுஃப் அல் கர்ளாவி

இந்நூலை பெற கீழ்காணும் இணைப்பை க்ளிக் செய்து வாட்ஸப் மூலமாக ஆர்டர் செய்யுங்கள்.

https://wa.me/p/25650407057947822/917448888336


திராட்சைகளின் இதயம்ஆசிரியர்: நாகூர் ரூமி இந்த நாவலுக்கு முன்பு ஸூஃபிப் பள்ளியின் குரு-சீடர் உறவை வரைந்து காட்டிய ஒரு நாவ...
08/01/2026

திராட்சைகளின் இதயம்

ஆசிரியர்: நாகூர் ரூமி


இந்த நாவலுக்கு முன்பு ஸூஃபிப் பள்ளியின் குரு-சீடர் உறவை வரைந்து காட்டிய ஒரு நாவல் தமிழில் வந்ததில்லை. அவ்வகையில் தமிழுக்கு இந்த நாவல் ஒரு புதிய திறப்பு, ஒரு முன்னோடி. இந்நாவல் வெளியாகி இருபது ஆண்டுகள் ஆகியிருக்கும் இத்தருணத்திலும் இந்தப் பொருண்மையில் இன்னொரு நாவல் தமிழில் எழுதப்படவில்லை என்னும் நிலையே நீடிக்கிறது.

உண்மையான ஞானிகளைச் சந்திப்பது அரிதினும் அரிது. அத்தகையோரைச் சரியாக இனம்கண்டு, அவர்களின் போதனைகளைப் பின்பற்றுவது எளிதாக இருப்பதில்லை. அப்படி ஒரு உண்மை ஞானியைச் சந்தித்த ஒரு மனிதனைப் பற்றியும், அவனுக்கு அவர் எப்படி குருவானார்.

உண்மைகளின் பின்னால் மறைந்து நிற்கின்ற உண்மையான உண்மையை எப்படி அடையாளம் காட்டினார், அதை அவன் கண்டுகொண்டானா என்பதுதான் கதை.

ஆன்மிகத்தில் நான்-நீ என்பது அற்றுப் போகிறது. இருப்பது ஒரே ஒரு 'நான்' மட்டுமே என்பதைக் கண்டுகொள்ளும்போது 'திராட்சைகளின் இதயம்' அடையப்படுகிறது. அதற்கான பயிற்சியில் தன் சாதகர்களை ஈடுபடுத்திய ஒருவரின் கதையே இந்நாவல்

இந்நூலை பெற கீழ்காணும் இணைப்பை க்ளிக் செய்து வாட்ஸப் மூலமாக ஆர்டர் செய்யுங்கள்.

https://wa.me/p/25622538907414256/917448888336


ஏகாதிபத்தியத்தின் எதிரி சதாம் ஹுஸைன்சதாம் ஹுஸைன் தொடக்கத்தில் தேசியவாதியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டாலும் 1990-களில்...
06/01/2026

ஏகாதிபத்தியத்தின் எதிரி சதாம் ஹுஸைன்

சதாம் ஹுஸைன் தொடக்கத்தில் தேசியவாதியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டாலும் 1990-களில் இஸ்லாத்தை நோக்கி எட்டுகள் வைத்தார். 2000 & தொடங்கிய போது அவர் இஸ்லாத்தில் முழுவதுமாக நுழைந்திருந்தார். இஸ்லாமிய உணர்வும் அல்குர்ஆனின் உறவும் அவரை ஆலிங்கனம் செய்த போதுதான் சுகந்தத் தென்றல் சூறாவளியாக மாறியது.

தப்புகள், தவறுகள், பிழைகள், தீமைகள் எல்லாவற்றுக்குமாக மன்னிப்புக் கேட்கும் போதே இறைவன் ஒருவனை மன்னித்து விடுகிறானே. அவ்வாறு மன்னிக்கப்பட்ட மனிதரை மனிதர்கள் மன்னிக்காமலிருக்க முடியுமா?

மன்னிக்கப்பட்ட மாமனிதர் சதாம் ஒரு மாபெரும் வீரன் என்பதை கழுமரத்தின் முன் நிறுத்தப்பட்ட போதும் நிரூபித்தார்.

அப்போது சதாமின் முகத்தை ஒருவன் கறுப்புத் துணியால் மூட முயன்ற போது அவனைத் தடுத்தார்.

"நான் ஏகாதிபத்தியவாதிகளின் எதிரி. அல்லாஹ்வுக்காக உயிரைப் பலி கொடுக்கும் நான் நாளைய ஈராக்கின் வாள்" என முழங்கிய சதாமை நினைவுகூர்ந்து ஏகாதிபத்தியத்திற்கு எதிரான வாளாக நாமும் மாற இந்நூல் கட்டாயம் அழைத்துச் செல்லும்.

இந்நூலை பெற கீழ்காணும் இணைப்பை க்ளிக் செய்து வாட்ஸப் மூலமாக ஆர்டர் செய்யுங்கள்.

https://wa.me/p/26719557084314217/917448888336


ஒளிமிகு கற்பனையின் ஆழங்கள்ஆசிரியர்: அஹ்மது ஹில்மிதமிழில்: ரமீஸ் பிலாலி பல கதைகளால் கோர்க்கப்பட்ட ஒரு நாவல் இது. வாழ்க்கை...
05/01/2026

ஒளிமிகு கற்பனையின் ஆழங்கள்

ஆசிரியர்: அஹ்மது ஹில்மி
தமிழில்: ரமீஸ் பிலாலி


பல கதைகளால் கோர்க்கப்பட்ட ஒரு நாவல் இது. வாழ்க்கையின் அர்த்தம் என்ன என்று தேடும் ஒருவர், ஸூஃபி மகான் ஒருவரின் சகவாசத்தில் ஆழ்ந்த உறக்கநிலையில் மனத்தின் கீழ் அடுக்குகளுக்குள் பயணிக்கிறார். அங்கு கற்பனையில் திறக்கும் காட்சிகளால் எவ்வாறு அவர் வாழ்வின் அர்த்தபாவங்களை அடைகிறார் என்பதே நாவலின் கரு.

கனவுகளாகக் கற்பனையின் ஆழங்களில், வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு இடங்களில் அவர் உலவுகிறார். அவ்வகையில் மனித வரலாற்றின் மறுவாசிப்பு ஒன்று இதன் வழி நிகழ்கிறது. இந்தக் கதையில்தான் எத்தனை விதமான மனிதர்கள்! இதில் பைத்தாகோரஸ், சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில், பிளாட்டோ ஆகியோர்கூட வருகின்றனர். புத்தர் காலத்து இந்தியாவும் இலங்கையும் சீனாவும் வருகின்றன. இதிலுள்ள ஒரு கதை பூமியைவிட்டுப் பல்லாயிரம் ஒளியாண்டுகளுக்கு அப்பால் எங்கோ நிகழ்கிறது. இந்தப் பன்மியம்தான் இதன் கதையுலகை சுவாரஸ்யமாக்குகிறது.

சத்தியக் கவலையில் லயமான பிரக்ஞைகளுக்கும், நித்தியம் பற்றிய உரையாடல்களில் கிளர்ச்சியுறும் ஆன்மாக்களுக்கும் இந்நூலின் வாசிப்பில் அலாதியான ஓர் இன்பம் காத்திருக்கிறது.

இந்நூலை பெற கீழ்காணும் இணைப்பை க்ளிக் செய்து வாட்ஸப் மூலமாக ஆர்டர் செய்யுங்கள்.

https://wa.me/p/25409359478721233/917448888336


எனது தலைவர் ஓர் இஸ்லாமியர்நான் கொண்டிருப்பது போன்ற நம்பிக்கைகள், என்னுடைய குணம், நான் நம்புவதன்பால் காட்டுகிற அர்ப்பணிப்...
04/01/2026

எனது தலைவர் ஓர் இஸ்லாமியர்

நான் கொண்டிருப்பது போன்ற நம்பிக்கைகள், என்னுடைய குணம், நான் நம்புவதன்பால் காட்டுகிற அர்ப்பணிப்பு இவற்றை வைத்துப் பார்த்தால், நான் மற்றவர்களைப் போல் முதுமை அடைந்து அதற்குப் பிறகே மரணமடைவேன் எனக் கூற முடியாது.

-மால்கம் X

இந்நூலை பெற கீழ்காணும் இணைப்பை க்ளிக் செய்து வாட்ஸப் மூலமாக ஆர்டர் செய்யுங்கள்.

https://wa.me/p/25931578803126598/917448888336


பின் காலனிய நினைவேக்கம்ஆசிரியர்:நிஷாந்த்நவீனத்துவம், பின் நவீனத்துவம் என்றெல்லாம் ஆகாயத்தில் நடந்துகொண்டிருந்த பண்பாட்டு...
29/12/2025

பின் காலனிய நினைவேக்கம்
ஆசிரியர்:நிஷாந்த்

நவீனத்துவம், பின் நவீனத்துவம் என்றெல்லாம் ஆகாயத்தில் நடந்துகொண்டிருந்த பண்பாட்டு வாள்சுழற்றல்களைப் புறந்தள்ளிவிட்டு, முதலில் அரசியல் நவீனத்தைப் புரிந்துகொள்வோம் என்று இப்புத்தகம் அழைக்கிறது... மம்தானி உள்ளிட்ட வெளிப்புலத்துச் சிந்தனையாளர்கள் தாண்டி தமிழ் அறிவுஜீவி மரபில் தேசியம் குறித்த விவகாரத்தில் தமிழில் முதன்மையாகப் பங்களிப்பு செய்த மார்க்சிய, பெரியாரிய, பெண்ணியச் சிந்தனையாளர்களுடன் உடன்பட்டும் முரண்பட்டும் உரையாடுகிறது. அந்த வகையில் இது சமகால மேற்கத்தியக் கல்விப்புலச் சூழலில் நிலவிக்கொண்டிருக்கும் விமர்சனப் போக்குகளை தமிழ்ப்புலத்தில் உருவான விவாதங்களோடு இணைத்து, இரண்டையுமே அடுத்த நிலையிலான விவாதங்களுக்கு வளர்த்தெடுக்க முயல்கிறது. இது உண்மையிலேயே தமிழ்ச்சூழலில் நிகழ்ந்துள்ள மிக முக்கியமான சிந்தனை நிகழ்வாகும். இவ்வாறான முயற்சிகளே கோட்பாட்டை நாம் காலூன்றியுள்ள பூமியில் உலவ விடும். அவ்வகையில், இப்புத்தகம் குறிப்பாக விமர்சன முஸ்லிம் சிந்தனையையும் காலனிய நீக்கச் சிந்தனையையும் கோட்பாட்டு ஆழத்தோடு அறிமுகப்படுத்தியிருப்பதிலும், பொதுவாக சமகால அரசியல், மானுடவியல், சமூகக் கோட்பாடுகளை எளிமைப்படுத்தல் இல்லாது, ஆனால் எளிதில் புரிபடும் வகையிலான தெளிவோடு அறிமுகப்படுத்தியிருப்பதிலும் பெரிய முன்னுதாரணங்களற்ற தமிழ்ச்சூழலில் அசலான பங்களிப்பை நிகழ்த்தியிருக்கிறது என்பதை சந்தேகத்திற்கு இடமின்றிக் கூற முடியும்.

-அணிந்துரையிலிருந்து..

இந்நூலை பெற கீழ்காணும் இணைப்பை க்ளிக் செய்து வாட்ஸப் மூலமாக ஆர்டர் செய்யுங்கள்.

https://wa.me/p/25245247831822413/917448888336


உலக பயங்கரவாதத்தின் ஊற்றுக் கண் மொஸாத்உலக வரலாற்றின் 'மிகப்பெரிய திருட்டு' என்று வரலாற்றாய்வாளர்களால் வருணிக்கப்படுவது ஃ...
21/12/2025

உலக பயங்கரவாதத்தின் ஊற்றுக் கண் மொஸாத்

உலக வரலாற்றின் 'மிகப்பெரிய திருட்டு' என்று வரலாற்றாய்வாளர்களால் வருணிக்கப்படுவது ஃபலஸ்தீன ஆக்கிரமிப்பாகும். நாடோடிகளாய் திரிந்த நாடற்ற யூதர்களுக்காக நாடாண்ட ஃபலஸ்தீனர்கள் நாதியற்ற அகதிகளாய் மாற்றப்பட்ட வரலாறு காலச்சக்கரத்தில் ஏதேச்சையாக நடைபெற்ற நிகழ்வல்ல. இதன் பின்னணியில் நன்கு திட்டமிடப்பட்ட சதிச் செயல்களின் கூட்டணி இருந்ததை வரலாறு பதிவு செய்ய மறக்கவில்லை.

பொதுவாக ஒரு நாட்டின் பாதுகாப்பிற்காக உளவு அமைப்புகளை அந்நாடுகள் உருவாக்குவது உலக நியதி. ஆனால் ஒரு உளவு அமைப்பின் மூலம் ஒரு நாடு உருவாக்கப்பட்டது என்பது உலகில் இஸ்ரேலை தவிர வேறெங்கும் நிகழவில்லை.

இறை நியதிக்கும் உலக நியதிக்கும் கட்டுப்படாத இஸ்ரேல் தனது ஆக்டோபஸ் கரங்களால் "இஸ்ரேலின் நன்மை” என்ற ஒற்றை குறிக்கோளை மட்டுமே மையப்படுத்தி, மொஸாத் நிகழ்த்தியிருக்கும் படுபாதக செயல்களை பட்டியலிட்டுள்ளது இந்நூல்.

இந்நூலை பெற கீழ்காணும் இணைப்பை க்ளிக் செய்து வாட்ஸப் மூலமாக ஆர்டர் செய்யுங்கள்.

https://wa.me/p/25102472286122158/917448888336


Address

Angappan Street
Chennai
600001

Opening Hours

Monday 8am - 10pm
Tuesday 8am - 10pm
Wednesday 8am - 10pm
Thursday 8am - 10pm
Friday 8am - 10pm
Saturday 8am - 10pm
Sunday 8am - 10pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Baqavi Book Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category