Coimbatore Saibaba Colony Multi Brand Ice Creams & Dairy Products Outlet

  • Home
  • India
  • Coimbatore
  • Coimbatore Saibaba Colony Multi Brand Ice Creams & Dairy Products Outlet

Coimbatore Saibaba Colony Multi Brand Ice Creams & Dairy Products Outlet KANNA FOODS's
MULTI BRAND ICE CREAMS PARLOUR AND DAIRY PRODUCTS OUTLET
540, PULIYAMARA BUS STOP,
N

❤️🧡💛💚💙💜🤎❤️🧡💛💚💙💜🤎❤️தந்தை ஒருவர் ஒரு பெரிய ஆட்டை வெட்டி நெருப்பினில் வதக்கி, தன் மகனிடம் சொன்னார்."மகனே, நம்முடன் சாப்பிட ...
17/06/2022

❤️🧡💛💚💙💜🤎❤️🧡💛💚💙💜🤎❤️
தந்தை ஒருவர் ஒரு பெரிய ஆட்டை வெட்டி நெருப்பினில் வதக்கி, தன் மகனிடம் சொன்னார்.

"மகனே, நம்முடன் சாப்பிட என் நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைக்கவும்.

நாம் எல்லோரும் சேர்ந்து சாப்பிடுவோம் என்றார்.

அவருடைய மகன் தெருவுக்கு வந்து கத்த ஆரம்பித்தான்.

"தயவுசெய்து எங்கள் வீட்டில் எரியும் தீயை அணைக்க எங்களுக்கு உதவுங்கள்!".

சில நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு சில மக்கள் வெளியே வந்தனர், மீதமுள்ளவர்கள் உதவிக்கான கூக்குரலைக் கேட்காதது போல் செயல்பட்டனர்.

வந்தவர்கள் நள்ளிரவு வரை நன்றாக சாப்பிட்டு கொண்டாட்டமாக கழித்தனர்.

திகைத்த தந்தை! தன் மகனிடம் திரும்பி, அவனிடம் கேட்டார்.

"வந்த மக்களை எனக்கு தெரியாது, இதுவரை அவர்களைப் பார்த்ததில்லை, எனவே என்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் எங்கே.?".

மகன் சொன்னான்,

"தங்கள் வீடுகளில் இருந்து வெளியே வந்தவர்கள் நம் வீட்டில் எரிவதாக நினைத்த தீயை அணைப்பதர்க்கே அன்றி, விருந்து உண்ண அல்ல. இவர்களே நம்முடைய தாராள மனப்பான்மைக்கும் விருந்தோம்பலுக்கும் தகுதியானவர்கள். "

நீங்கள், வாழ்க்கையில் துன்பப்படுகிறீர்கள் என்று தெரிந்தும்,

உங்களுக்கு உதவாதவர்கள், ஒருநாள் நீங்கள் வெற்றி அடையும் போது அந்த மகிழ்ச்சியில் பங்கு கொள்ள எப்படி தகுதியானவர்களாக இருக்கக்கூடும்.!?

'அன்பான சினேகிதனை ஆபத்தில் அறி'

அன்புடன்,
கண்ணா புட்ஸ்
https://wa.me/919843072171

14/04/2022
❤️🧡💛💚💙💜🤎❤️🧡💛💚💙💜🤎❤️"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்."- மகாகவி சுப்பிரமணிய பாரதியார்."தமிழர்கள் அனை...
14/04/2022

❤️🧡💛💚💙💜🤎❤️🧡💛💚💙💜🤎❤️
"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்."

- மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.

"தமிழர்கள் அனைவருக்கும்
இனிய சுபகிருது தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்."

❤️🧡💛💚💙💜🤎❤️🧡💛💚💙💜🤎❤️               மூன்று விஷயங்கள்.!1.மூன்று விஷயங்கள் யாருக்காகவும் காத்திருப்பது இல்லை.👉நேரம்👉இறப்பு👉வா...
06/04/2022

❤️🧡💛💚💙💜🤎❤️🧡💛💚💙💜🤎❤️
மூன்று விஷயங்கள்.!

1.மூன்று விஷயங்கள் யாருக்காகவும் காத்திருப்பது இல்லை.

👉நேரம்
👉இறப்பு
👉வாடிக்கையளர்கள்

2.மூன்று விஷயங்கள் சகோதர சகோதரிகளையும் விரோதியாக்கும்.

👉நகை
👉பணம்
👉சொத்து

3.மூன்று விஷயங்கள் யாராலும் திருடமுடியாது.

👉புத்தி
👉கல்வி
👉நற்பண்புகள்
Https://wa.me/919843072171

4.மூன்று விஷயங்கள் ஞாபகம் வைத்திருப்பது அவசியம்.

👉உண்மை
👉கடமை
👉இறப்பு

5.மூன்று விஷயங்கள் வெளிவந்து திரும்புவதில்லை.

👉வில்லிலிருந்து அம்பு
👉வாயிலிருந்து சொல்
👉உடலிலிருந்து உயிர்

6.மூன்று பொருள்கள் வாழ்க்கையில் ஒருமுறைதான் கிடைக்கும்.

👉தாய்
👉தந்தை
👉இளமை

7.மூன்று பொருள்கள் திரை மறைவுக்கு உகந்தது.

👉சொத்து
👉ஸ்திரி
👉உணவு

8.இந்த மூன்று பேர்களுக்கும் மரியாதை கொடு.

👉தாய்
👉தந்தை
👉குரு
Kanna Foods Coimbatore
Https://wa.me/919843072171

04/04/2022

❤️🧡💛💚💙💜🤎❤️🧡💛💚💙💜🤎❤️
பெண்மையை போற்றுவோம்.!

மாந்தரிடத்தில்
இருப்பதோ
இரு கைகள்
மட்டுமே.!

ஆனாலும்...!!!

இருபது கையுடையால்போல்
பல, பல பணியை செய்வால்
இன்முகத்தோடு..!!

போற்றும் இடங்களில் எல்லாம்...!!!

பெண்ணினத்தை தவறாது கருமித்தனம் இன்றி
பாராட்டி மகிழ்வோம்.

ஏனெனில்...!!!

பெண்மையை
எவ்வளவு
பாராட்டினாலும்
அவர்கள்
செய்யும்
அன்றாட
பணிவிடைக்கு
ஈடாகாது.

ஆகையால்...!!!

இன்று முதலாவது
அனுதினமும் அவர்களை
அளவின்றி பாராட்டி
போற்றி மகிழ்வோம்.

❤️🧡💛💚💙💜🤎❤️🧡💛💚💙💜🤎❤️மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் விசயங்கள் :-01. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.02. மனது புண்படும்படி...
29/03/2022

❤️🧡💛💚💙💜🤎❤️🧡💛💚💙💜🤎❤️
மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் விசயங்கள் :-

01. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.

02. மனது புண்படும்படி பேசக் கூடாது.

03. கோபப்படக்கூடாது.

04. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது.

05. பலர் முன் திட்டக்கூடாது.

06. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக்
கொடுக்க கூடாது.

07. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.

08. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.

09. சொல்வதைப் பொறுமையாகக்
கேட்க வேண்டும்.

10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க
வேண்டும்.

11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வேண்டும் பாராட்ட வேண்டும்.

12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம்
இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து
கொள்ள வேண்டும்.

13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச
வேண்டும்.

14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.

15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.

16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க
வேண்டும்.

17. ஒளிவு மறைவு கூடாது.

18. மனைவியை நம்ப வேண்டும்.

19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.

20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.

21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.

22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.

23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க
வேண்டும்.

24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய
வேண்டும்.

25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.

26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் ‘இது
உன் குழந்தை ‘ என்று ஒதுங்கக் கூடாது.

27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும்.

ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா,
தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.

28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.

29. சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.

30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.

31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.

32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.

33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.

34. மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.

36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக்கூடாது.
Https://wa.me/919843072171

சரி...!

மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன?.

எப்போதும் சிரித்த முகம்.

எப்போதும் சிரிப்பதற்கு நாங்கள் என்ன காமெடி பீஸ்சா.?

மாமியாரை தாயாக மதிக்க வேண்டும்.

அவர்கள் எங்களை மகளாக நினைபதில்லையே.?

காலையில் முன் எழுந்திருத்தல்.

ஆமா.! இப்போ மட்டும் என்ன நீங்களா எழுந்திருகிறீங்க.?

பள்ளி அலுவலக நேரம் தெரிந்து அதற்கு முன் உணவு தயாரித்தல்.

எப்போ சேவல் கூவும் முன்பேவா.?

நேரம் பாராது உபசரித்தல்.

உங்களுக்கே இது ஓவரா தெரியல.?

கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும்.

அப்போ எங்க குடும்பத்தரோடு நீங்கள் அனுசரிக்க தயாரா.?

எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக் கூடாது.

குறை சொல்லற போல ஏன் நடக்குறீங்க.?

அதிகாரம் பண்ணக் கூடாது.

பண்ணிட்டா மட்டும்.?

குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது.

பார்டா...! பெரிய மாயாண்டி குடும்பத்தார், பிரிக்கிறாமாம்.!
Kanna Foods Coimbatore
Https://wa.me/919843072171

அப்போ எங்களையும் அம்மா வீட்டில் இருந்து பிரிக்க கூடாது சொல்லிட்டேன்.

கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.

எவ்ளோ நாளைக்கு தான் அன்பாவே சொல்றது, அதிரடி தான் வேலைக்கு ஆகும்.!

கணவனை சந்தேகப்படக் கூடாது.

ஹி ஹி ஹி அப்போ போன் கால் வந்தா வெளியே போய் தனியா பேச கூடாது.!

குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக் கூடாது.

அதை எதுக்கு சொல்லணும், அதான் ஊருக்கே தெரியுமே.!

பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும்.

நீங்களும் நண்பரோடு வெளியே சுத்துவதை குறைக்கணும்.!

வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்துப் பேசக் கூடாது.

அப்போது தானே வாயை திறக்காமல் கேட்பீர்கள்.!

கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும்.

உங்க குடும்பத்தை உபசரிப்பதே பெருசு, இதுல உறவினர் வேற.?

இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.

என்ன இருக்கு திருப்தி அடைய.?

அளவுக்கு மீறிய ஆசை கூடாது.

ஏன் அதற்கு மேல் சம்பாதிக்க முடியாதா.?

குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

இவ்ளோ நாள் அதானே நடக்குது.

கொடுக்கும் பணத்தில் சீராகக் குடும்பம் நடத்த வேண்டும்.

அதெப்படி சொல்லி கொடுங்களேன்.!

கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது.

ஏன் வேறு ஏதாவது மேட்டர் தெரிஞ்சிடும்னு பயமா.?

தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும்.

எப்போ ஒரு வருசத்துக்கு முன்னாடியே வா.?

எதிர்காலத் திட்டங்களைச் சிந்திக்கும் போது ஒத்துழைக்க வேண்டும்.

ஒ எதிர்கால திட்டம் கூட இருக்கா.!? சொல்லவே இல்லை.!

தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும்.

ஏன், அப்போ தானே கதையை கேட்டு நல்லா குறட்டை விட்டு தூங்க முடியும்.!

தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேச வேண்டும்.

உண்மையை சொன்னால் ஏன் மறுக்கனும் ?

அடக்கம், பணிவு தேவை.

கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற் போல் ஆடை, அலங்காரம் செய்ய வேண்டும்.

உடைகளை கூட எங்கள் விருப்பத்திற்கு உடுத்த கூடாதுன்ணா என்ன வாழ்க்கைடா.?!

குழந்தையைக் கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது.

நாங்களும் அதையே தான் சொல்றோம்.!

விதவிதமாக, சுவையாகச் சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும்.

அதுக்கு ஹோட்டல்ல போய் சாப்பிடுங்க.!

கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும் படி வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.

நீங்கள் எடுத்ததை எடுத்த இடத்தில் வைக்க முதலில் பழகுங்கள் !

பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஏன் உங்களுக்கு இல்லைன்னா.?

உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன், பொருத்தமான முறையில் எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும்.

தெளிவா சொல்லிட்டா செஞ்சிடுவீங்களாக்கும்.!

தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது.

முதலில் தம், தண்ணி இதை நீங்கள் விடுங்கள் பணம் மிச்சமாகும்.!

உடம்பை சிலிம் ஆக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஆமா இவங்க பெரிய 6 பேக்கு வச்சிருகாங்க பாரு. முதலில் தொந்தியை குறைங்க பா.!

இந்த எதிர்பார்ப்புக்கள் ஒவ்வொன்றையும் கணவன்-மனைவி இருவரும் பின்பற்றும் பட்சத்தில் அந்தக் குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.!

❤️🧡💛💚💙💜🤎❤️🧡💛💚💙💜🤎❤️
17/03/2022

❤️🧡💛💚💙💜🤎❤️🧡💛💚💙💜🤎❤️

❤️🧡💛💚💙💜🤎❤️🧡💛💚💙💜🤎❤️                               பெண்.!❤️🧡💛💚💙💜🤎❤️🧡💛💚💙💜🤎❤️ஆண் உட்பட எல்லா உயிர்களையும் படைத்து விட்ட கடவு...
16/03/2022

❤️🧡💛💚💙💜🤎❤️🧡💛💚💙💜🤎❤️
பெண்.!
❤️🧡💛💚💙💜🤎❤️🧡💛💚💙💜🤎❤️
ஆண் உட்பட எல்லா உயிர்களையும் படைத்து விட்ட கடவுள்,
இறுதியாக பெண்ணை படைக்க ஆரம்பித்தார்.

ஒரு நாள், இரு நாள் அல்ல. தொடர்ந்து 6 நாட்களாக பெண்ணை படைத்துக் கொண்டிருந்தார் கடவுள்.
இதை பார்த்துக் கொண்டிருந்த தேவதை ஒன்று,
“ஏன் இந்த படைப்புக்கு மட்டும் இவ்வளவு நேரம்?” என்றது.

அதற்கு கடவுள்,
“இந்த படைப்புக்குள் நான் நிறைய விஷயங்களை ஸ்டோர் செய்ய வேண்டும்.
இந்த பெண் படைப்பு பிடித்தது, பிடிக்காதது என்று எதையும் பிரிக்காமல் கிடைப்பதை சாப்பிட்டாக வேண்டும்.
அடம் பிடிக்கும் குழந்தையை நொடியில் சமாளிக்க வேண்டும். சின்ன காயத்திலிருந்து உடைந்து போன மனது வரைக்கும் எல்லாவற்றுக்கும் அவள் மருந்தாக இருக்க வேண்டும். அவளுக்கு உடம்பு சரியில்லாத போதும் அவளே அவளை குணப்படுத்திக் கொண்டு ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்க வேண்டும்.
இது அத்தனையும் செய்ய அவளுக்கு இரண்டே இரண்டு கைகள் மட்டும் தான் இருக்கும்,” என்று விளக்கமாகச் சொன்னார்.

“இது அத்தனைக்கும் இரண்டே கை மட்டும்?” என்று ஆச்சரியப்பட்டது தேவதை.

ஆர்வத்துடன் லேசாக பெண்ணைத் தொட்டுப் பார்த்து விட்டு,
“ஆனால் இவளை ரொம்ப மென்மையாக படைத்திருக்கிறீர்களே?” என்றது தேவதை.

அதற்கு கடவுள்,
“இவள் உடலளவில் மென்மையானவள்.
ஆனால் மனதளவில் ரொம்ப பலமானவள். அதனால் எல்லாப் பிரச்னைகளையும் சமாளித்து விடுவாள்.
அது மட்டுமல்ல, அவளால் எல்லா பாரத்தையும் தாங்க முடியும்.

கஷ்டம், அன்பு, கோபம் என்று எல்லா உணர்வுகளையும் அவளுக்குள்ளேயே அடக்கிக் கொள்ளத் தெரியும்.

கோபம் வந்தாலும் அதை சிரிப்பு மூலமாக உணர்த்துகிற தன்மை இந்தப் படைப்பிடம் உண்டு.

தனக்கு நியாயமாகப் படுகிற விஷயத்துக்காக போராடி ஜெயிக்கவும் செய்வாள்.
மற்றவர்களிடம் எதையும் எதிர்பார்க்காமல் அன்பை மட்டும் கொட்டுவாள்,” என்றார்.

“ஓ……… இந்தளவுக்கு பெண்ணால் யோசிக்க முடியுமா?” தேவதை கேட்டது.

“எல்லா விஷயங்களைப் பற்றி யோசிக்க மட்டுமல்ல. அவற்றுக்கு தீர்வையும் அவளால் சொல்ல முடியும்,” என்று விவரித்தார் கடவுள்.
Kanna Foods Coimbatore
Https://wa.me/919843072171

அந்த தேவதை பெண்ணின் கன்னங்களை தொட்டுப் பார்த்து விட்டு, “இவள் கன்னத்தில் ஏதோ வழிகிறதே?” என்றது.

“அது அவளுடைய கண்ணீர். அவளுடைய சந்தோஷம், துக்கம், கவலை, ஆச்சரியம் என்று எல்லா உணர்வுகளையும் வெளியே காட்டுகிற விஷயம் அது,” என்று பதிலளித்தார் கடவுள்.

ஆச்சரியமான தேவதை, “உங்க படைப்பிலேயே சிறந்தது இதுதான்.
இந்த படைப்பில் எந்த குறையுமே கிடையாதா?”
என்றது தேவதை.

“தன்னுடைய மதிப்பு என்னவென்று அவளுக்கு எப்போதுமே தெரியாது,"

கடவுள் சிம்பிளாக பதிலளித்தார்.

❤️🧡💛💚💙💜🤎❤️🧡💛💚💙💜🤎❤️தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்...!1. நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கு...
15/03/2022

❤️🧡💛💚💙💜🤎❤️🧡💛💚💙💜🤎❤️
தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்...!

1. நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள். யாரும் சொன்னாலும் ரசித்தாலும் தான், நான் அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்களை நீங்களே ரசியுங்கள்.

2. எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள் இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று.

3. உங்களால் எது முடியாது. உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும், அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித் தனமாய் முயற்சி செய்யுங்கள்.

4. என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள். எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை என்பதே உண்மை.

5. உங்களுக்கு எதுவும் தெரியாது. எதிரில் நிற்பவருக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள். இந்த எண்ணம் இருந்தால் நீங்கள் சொல்ல வந்ததை சரியாக தடுமாற்றம் இன்றி சொல்லி முடிக்க முடியாது.

6. கேள்வி கேட்பதற்கும் உங்களை முன் நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம் என்று நினைக்காதீர்கள். உலகில் சரியாக சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறையப் பேர் மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு தங்கள் கேள்விகளை சரியாக புரியவைத்தவர்கள்.

7. அழும் போது தனியாக அழுங்கள். நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ இங்கு யாரும் வரப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். கண்ணீரில் துக்கத்தை கரைத்து தூர எறிந்து விட்டு முன் செல்லுங்கள்.

8. உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில்லை, நிராகரித்த்வருக்கே என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.

❤️🧡💛💚💙💜🤎❤️🧡💛💚💙💜🤎❤️உன் கோபத்தை சீமைக்கருவேல மரத்தின் மீது காட்டு.உன் அன்பை தென்னை மரத்தின் மீது காட்டு.வெற்றியடைந்தால் ஒர...
14/03/2022

❤️🧡💛💚💙💜🤎❤️🧡💛💚💙💜🤎❤️
உன் கோபத்தை சீமைக்கருவேல மரத்தின் மீது காட்டு.

உன் அன்பை தென்னை மரத்தின் மீது காட்டு.

வெற்றியடைந்தால் ஒரு வாழைமரம் நடு.

தோல்வியடைந்தால் கறிவேப்பிலை மரம் நடு.

சும்மாயிருக்கும் நேரங்களில் காய்கறி விதைகளை நடு.

கையில் பணம் இருந்ததால் பூச்செடிகள் நடு.

உன்னைவிட்டு யாரும் பிரிந்தால் மாடித்தோட்டம் நடு.

எதிர்கால சந்ததியினருக்காக மாமரம் நடு.

பலனை எதிர்பாராமல் கடமை செய்ய நினைத்தால் பனை நடு.

சந்தோஷமாக இருக்கும்போது வேப்பமரம் நடு.

கவலையுடன் இருக்கும்போது செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சு.

வீட்டில் இடம் இருந்தால் முடிந்தவரை மரம் நடு.

இடமில்லையென்றால் முடிந்தவரை இதனைப் பகிரு.

ஒரு நாள் நாமிருக்க மாட்டோம்.

ஆனால்...

நாம் நட்ட மரங்கள் இருக்கும்...!
நம் பேர் சொல்லிக்கொண்டு.

Address

Coimbatore
641011

Opening Hours

Monday 6am - 10pm
Tuesday 6am - 10pm
Wednesday 6am - 10pm
Thursday 6am - 10pm
Friday 6am - 10pm
Saturday 6am - 10pm
Sunday 9am - 10pm

Alerts

Be the first to know and let us send you an email when Coimbatore Saibaba Colony Multi Brand Ice Creams & Dairy Products Outlet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share