Magizh Books Sellers

Magizh Books Sellers Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Magizh Books Sellers, Book shop, 3/425 Meekshi Street, Madurai.

தமிழக நாட்டுப்புறவியல் ; வரலாறும் போக்குகளும் விலை =ரூ =125இந்த புத்தகம் தேவைப்படுவோர் அழைக்கவும் 7397604036.VPP அல்லது ...
12/08/2017

தமிழக நாட்டுப்புறவியல் ; வரலாறும் போக்குகளும்

விலை =ரூ =125

இந்த புத்தகம் தேவைப்படுவோர் அழைக்கவும் 7397604036.
VPP அல்லது India Post மூலம் புத்தகம் உங்கள் இல்லம் தேடி வரும்.....

சிலப்பதிகாரம் ஓர் எளிய அறிமுகம் பாரதி ‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்’ என்று சொன்னது மிகப் பொருத்தமான வருணனை, ஆனால் தற்கால...
12/08/2017

சிலப்பதிகாரம் ஓர் எளிய அறிமுகம்

பாரதி ‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்’ என்று சொன்னது மிகப் பொருத்தமான வருணனை, ஆனால் தற்கால அவசரத்தில் இருக்கும் எஸ்எம்எஸ் - ‘லாஸ்ட் டச் வித் டமில் யார்’ - இளைஞர்களின் நெஞ்சை அள்ள சிலப்பதிகாரத்தின் கதையையும், அழகான அமைப்பையும், உவமைகளையும் எளிய முறையில் சொல்ல வேண்டியது தேவை என்று எண்ணினேன். அதன் விளைவுதான் இந்நூல்.

விலை=ரூ =300

இந்த புத்தகம் தேவைப்படுவோர் அழைக்கவும் 7397604036.
VPP அல்லது India Post மூலம் புத்தகம் உங்கள் இல்லம் தேடி வரும்.....

இரத்தப்பூ இதழ்கள்கென்ய மக்களின் வாழ்வையும் வலிகளையும் படம் பிடித்துக் காட்டுகிறது இந்நாவல். இதில் எளிய மக்களின் வாழ்க்கை...
12/08/2017

இரத்தப்பூ இதழ்கள்

கென்ய மக்களின் வாழ்வையும் வலிகளையும் படம் பிடித்துக் காட்டுகிறது இந்நாவல். இதில் எளிய மக்களின் வாழ்க்கை அந்நாட்டு அரசால் எவ்வாறு சிதைவுண்டது என்று உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் விவரிக்கப்பட்டுள்ளது. இல்மொராகு என்ற பகுதியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர்தான் கதையின் நாயகன். நகரமயமாக்கல், வளர்ச்சித் திட்டங்களுக்காக விவசாயிகள் மற்றும் ஏழைகளின் நிலங்களை அரசு கையகப்படுத்திய பிறகு, வாழ்வாதாரத்தை இழந்த சாமானிய மக்கள் சந்தித்த பெருந்துயரம்தான் கதை. கென்யாவில் ஊழலையும் நம்பிக்கை தகர்ப்பையும் பேசிய இந்நாவல் ஆப்பிரிக்காவில் வெளியிடப்பட்டவுடன் பெரும் தாக்கத்தையும் விற்பனையில் சாதனையையும் ஏற்படுத்தியது. தனது நாடகத்திற்காகவும் இரத்தப்பூ இதழ்கள் நாவலுக்காகவும் எந்தவித விசாரணையும் இன்றி கூகி ஒரு வருடம் சிறையில் அடைக்கப்பட்டார்.

விலை =ரூ =500

இந்த புத்தகம் தேவைப்படுவோர் அழைக்கவும் 7397604036.
VPP அல்லது India Post மூலம் புத்தகம் உங்கள் இல்லம் தேடி வரும்.....

நாவலின் மையமாய் இருப்பவை மூன்று புள்ளிகள். அறிவின் துணைகொண்டு, இறையியலின் இடைவெளிகளை நிரப்ப முற்படும் ஸென்யோர். அவருக்கு...
12/08/2017

நாவலின் மையமாய் இருப்பவை மூன்று புள்ளிகள். அறிவின் துணைகொண்டு, இறையியலின் இடைவெளிகளை நிரப்ப முற்படும் ஸென்யோர். அவருக்கு எதிர்முனையில், முழுமையான கடவுள் நம்பிக்கை கொண்ட அவரது மனைவி. இருவருக்குமிடையில் சேவகனாக, செயலாளனாக, பாதிரியாக, வளர்ப்பு மகனாக இருந்து அல்லாடும் கதைசொல்லி ஜோன் மயோல். கடனில் மூழ்கிக்கொண்டிருக்கும் எஸ்டேட்டுடைய சொத்து நிர்வாகத்தில், அதன் பணவிவகாரங்களை முறைப்படுத்துவதில் மட்டுமல்ல அவனுடைய அல்லாட்டம்; சதை இச்சைக்கும் ஆன்மாவுக்குமான போராட்டத்தில் ஸென்யோர் எடுக்கும் நிலைப்பாடுகள் தொடர்பாகவும்தான். அவருடைய செயல்பாடுகள்மீது இவனுக்கு ஏற்படும் விமர்சனங்கள் அத்தனையுமே, தான் ஒரு பாதிரியாக இருக்கிறோம் என்ற போதம் காரணமாகவே வெளிப்படுகிறவை.

வாக்னர் பற்றியும் மொஸார்ட் பற்றியும் டச்சு குறுஓவியங்கள் பற்றியும் திறந்த விசாரணையும் விமர்சனங்களும் வெளியாகின்றன. விக்டர் ஹ்யூகோ, அலெக்ஸாண்டர் ட்யூமா என்று சமகால, முந்தையகால எழுத்தாளர்கள் பற்றிய கருத்துக்களும் பதிவாகின்றன. தமிழ்ச்சூழலில் ஜெயகாந்தனையும் தி. ஜானகிராமனையும் லா.ச.ராவையும் ஜி. நாகராஜனையும் அவர்களின் நேரடிப் பெயர்களுடன், படைப்புகளுடன் ஒப்பிட்டுப் பேசுகிற ஒரு நாவல் எழுதப்பட்டிருக்கிறதா என்ன!

விலை =ரூ =295
இந்த புத்தகம் தேவைப்படுவோர் அழைக்கவும் 7397604036.
VPP அல்லது India Post மூலம் புத்தகம் உங்கள் இல்லம் தேடி வரும்.....

வெண்ணிறக் கோட்டை ஓரான் பாமுக்கின் ஆரம்ப கால நாவல்களில் ஒன்று ‘வெண்ணிறக் கோட்டை’. துருக்கியரல்லாத அயல்மொழி வாசகர்கள் இந...
12/08/2017

வெண்ணிறக் கோட்டை

ஓரான் பாமுக்கின் ஆரம்ப கால நாவல்களில் ஒன்று ‘வெண்ணிறக் கோட்டை’. துருக்கியரல்லாத அயல்மொழி வாசகர்கள் இந்த நாவல் மூலமே முதலில் அவரை அறிந்துகொண்டனர். பாமுக்கின் இலக்கிய அறிமுகத்தை அமெரிக்க எழுத்தாளர் ஜே. பரினி ‘கிழக்கிலிருந்து ஒரு புதிய நட்சத்திரத்தின் உதயம்’ என்று குறிப்பிட்டார். ஆங்கிலத்தில் வெளியான ‘வெண்ணிறக் கோட்டை’யை முன்வைத்து அவரை ஜார்ஜ் லூயிஸ் போர்ஹேவுக்கும் இதாலோ கால்வினோவுக்கும் நிகரானவராக மதித்தார். ஆனால் தனது படைப்பாக்கத்தில் மூளையை இதயமாக மாற்றும் விந்தைக் கலைஞர் ஓரான் பாமுக்.

‘வெண்ணிறக் கோட்டை’யின் கதை சிக்கலானது; அறிவுப்பூர்வமானது. ஆனால் உணர்வின் பெரும் ததும்பல் கொண்டது. பதினேழாம் நூற்றாண்டின் இஸ்தான்புல் நகரத்தைப் பின்புலமாக வைத்து உருவாக்கப்பட்ட கதை. ஒரு மனிதனின் இருமை பற்றிய குழப்பங்களும் தெளிவுகளுமே கதையாடல். தனக்குள் இருக்கும் பிறத்தியானை அல்லது பிறனுக்குள் இருக்கும் தன்னை ஒரு மனிதன் எதிர்கொள்வதே நாவலின் மைய இழை.

விலை =ரூ =195

இந்த புத்தகம் தேவைப்படுவோர் அழைக்கவும் 7397604036.
VPP அல்லது India Post மூலம் புத்தகம் உங்கள் இல்லம் தேடி வரும்.....

அவலங்கள்இந்தக் கதைகளை ஊன்றிக் கவனித்தால், இவற்றில் ஒரு வரலாற்று அடையாளத்தைக் காண முடியும். அதேவேளை ஒருகாலகட்டத்தின் முகத...
12/08/2017

அவலங்கள்

இந்தக் கதைகளை ஊன்றிக் கவனித்தால், இவற்றில் ஒரு வரலாற்று அடையாளத்தைக் காண முடியும். அதேவேளை ஒருகாலகட்டத்தின் முகத்தையும் உணரலாம். சாத்திரி போராளியாகவும் தனித்தும் உலாவிய இடங்களின் தடங்கள் தெரிகின்றன. அதில் ஒளியும் இருளும் உண்டு. இவையெல்லாம் இணைந்து புனைவாகவும் நிஜமாகவும் இணைந்திருக்கின்றன. மறுவளமாகச் சொன்னால் உண்மை மனிதர்களின் கதைகள் இவை என்பதால் வலியும் துயரும் மகிழ்வும் வாசனையும் அழுக்கும் தூய்மையும் விருப்பும் வெறுப்பும் இனிப்பும் கசப்பும் இவற்றில் உண்டு.

விலை =ரூ -180

இந்த புத்தகம் தேவைப்படுவோர் அழைக்கவும் 7397604036.
VPP அல்லது India Post மூலம் புத்தகம் உங்கள் இல்லம் தேடி வரும்.....

பயங்கரவாதி என புனையப்பட்டேன் கடந்த, 1998ல் கடத்தப்பட்டு, வதைக்கு உள்ளாக்கப்பட்டு, 24 குண்டு வெடிப்புகள் தொடர்பாக, 19 வழக...
12/08/2017

பயங்கரவாதி என புனையப்பட்டேன்

கடந்த, 1998ல் கடத்தப்பட்டு, வதைக்கு உள்ளாக்கப்பட்டு, 24 குண்டு வெடிப்புகள் தொடர்பாக, 19 வழக்குகளில் சேர்க்கப்பட்டவர், ஆமிர் கான். 14 ஆண்டு சிறைத் தண்டனைக்கு பின், தன்னை குற்றமற்றவன் என்பதை நிரூபித்து, விடுதலையாகிறான். தந்தையை இழந்து, தாயை நோயாளியாக பார்க்கும் அவனை, சமூகம் எப்படி நடத்துகிறது என்பது தான், இந்நூல். இது, போலீஸ் உள்ளிட்ட துறைகளின் தப்பித்தல், தப்ப வைத்தல், தப்பு செய்தல் என்னும் முடிச்சுகளை நேரடியாக அவிழ்க்கிறது.

விலை =ரூ =200

இந்த புத்தகம் தேவைப்படுவோர் அழைக்கவும் 7397604036.
VPP அல்லது India Post மூலம் புத்தகம் உங்கள் இல்லம் தேடி வரும்.....

இதயத்தை நோக்கித் திரும்புதல்சூஃபி வழியில் விழிப்படைதல்: நாற்பது கேள்விகளும் பதில்களும்ஓர் உண்மையான குருவின் தந்தையாகவும்...
12/08/2017

இதயத்தை நோக்கித் திரும்புதல்
சூஃபி வழியில் விழிப்படைதல்: நாற்பது கேள்விகளும் பதில்களும்

ஓர் உண்மையான குருவின் தந்தையாகவும் சிறந்த ஞானாசிரியராகவும் இருந்த ஹஸ்ரத் ஆஸாத் ரஸூல் அவர்களிடம் வெளிநாட்டவர்கள், குறிப்பாக மேற்கத்தியர்கள், கேட்ட கேள்விகளும் அவற்றிற்கு அவர் கொடுத்த பதில்களையும் கொண்ட தொகுப்பு-தான் இந்த நூல். நாற்பது கேள்விகளும் பதில்களும் அடங்கிய இந்நூல் சூஃபித்துவம் பற்றிய சந்தேகங்கள் அனைத்தையும் தீர்த்துவைக்கிறது. இந்நூலில் சிக்கலான சொற்களில் ஆஸாத் ரஸூல் பேசவில்லை. எனினும், அவரது சொற்களில் வெளிப்படும் ஆழம் விவரிக்கப்பட்ட பாதையின் பிரத்தியேகமான தன்மையை நோக்கி வாசகரை இழுக்கிறது. முழுமையான ஆன்மிக மாற்றம் பெறுவது எப்படி, அதற்கான வழிமுறைகள் என்ன என்பதையெல்லாம் இதயத்தை நோக்கித் திரும்புதல் என்ற இந்த நூல் எடுத்துரைக்கிறது. சூஃபித்துவம் பற்றி ஒன்றுமே தெரியாதவர்களுக்கும், ஏற்கெனவே அதில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் இந்நூல் பயனளிக்கும். இந்த நூலில் காணப்படும் உரையாடல்கள் மூலம் புதியவர்களுக்கு சூஃபித்துவம் பற்றிய அறிமுகம் கிடைக்கும். தசவ்வுஃப் எனும் பாதையில் வெற்றிகரமாகப் பயணித்த ஒருவரின் ஒளியிலிருந்து இரு சாராருக்குமே உள்ளுணர்வுப் பூர்வமான ரத்தினங்கள் கிடைக்கும். இஸ்லாம் என்ற ரோஜாச் செடியிலிருந்து சூஃபித்துவம் என்ற ரோஜாவைப் பிரிக்கவே முடியாது. இந்த நூலில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கங்கள் அந்தத் தெளிவையும் புரிந்துகொள்ளலையும் ஏற்படுத்தும். இன்ஷா அல்லாஹ்.

விலை =ரூ =180

இந்த புத்தகம் தேவைப்படுவோர் அழைக்கவும் 7397604036.
VPP அல்லது India Post மூலம் புத்தகம் உங்கள் இல்லம் தேடி வரும்.....

தனிமையின் நூறு ஆண்டுகள்லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் காப்ரியேல் கார்சியஸ் மார்க்கேஸ் அவர்களின் புகழ்பெற்ற நாவலான One Hundr...
11/08/2017

தனிமையின் நூறு ஆண்டுகள்

லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் காப்ரியேல் கார்சியஸ் மார்க்கேஸ் அவர்களின் புகழ்பெற்ற நாவலான One Hundred Years of Solitude தமிழில் 'தனிமையின் நூறு ஆண்டுகள்' என வெளிவந்துள்ளது. உலக இலக்கியத்தை ஆழமாகப் பாதித்த பெரும் படைப்புகளில் ஒன்று. ஏழு தலைமுறைகளின் வாழ்க்கையை விரிவாகச் சொல்லும் இந்நாவல் இதுவரை 37 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. 1982-ல் நோபல் பரிசு பெற்ற இந்நாவல் இதுவரை இரண்டு கோடி பிரதிகளுக்குமேல் விற்பனையாகியுள்ளது. ஒரு நகரத்தின் நூறு ஆண்டுத் தனிமையையும் ஒரு மக்கள் கூட்டத்தின் தனிமையான நூறு ஆண்டுகளையும் சொல்லுகிறது இந்த நாவல்.

விலை =ரூ =390

இந்த புத்தகம் தேவைப்படுவோர் அழைக்கவும் 7397604036.
VPP அல்லது India Post மூலம் புத்தகம் உங்கள் இல்லம் தேடி வரும்.....

மனவளமான சமுதாயம்லட்சியங்களும் நம்பிக்கைகளும் இல்லாத மானிட சமுதாயங்கள் வரலாற்றில் எப்போதும் இல்லாமல் இருந்ததில்லை. மானிட...
11/08/2017

மனவளமான சமுதாயம்
லட்சியங்களும் நம்பிக்கைகளும் இல்லாத மானிட சமுதாயங்கள் வரலாற்றில் எப்போதும் இல்லாமல் இருந்ததில்லை. மானிடப் பரிணாமத்திற்கு இவை இன்றியமையாத ஊக்கங்கள்; பிடிமானங்கள்; அகவயமான உந்துதல்கள். இந்திய - தமிழகம் போன்ற பின்னடைந்த கலாச்சாரம், பற்றாக்குறையான அறிவியல் நோக்கு, பொறுப்பற்ற பொருளாதார அமைப்பு, அரைநாகரிகம், புராதனமான இனக்குழு மரபு மாறாத குருதி, மண், சாதி, கடவுள், பால் சார்ந்த உறவுகள் ஆகியவை நிலவுகிற எதார்த்தத்தில், இவற்றைக் கடந்து சென்று, பொதுவான மாந்தவிய உறவுகளின் மேன்மையை எடுத்துக் கூறுவது இன்றியமையாச் செயல்பாடாக இருக்கிறது.
இந்தச் செயல்பாட்டிற்கு ஆக்கம் தருவதாக எரிக் ஃபிராம் படைப்புகள் அமைந்துள்ளன. இருபதாம் நூற்றாண்டின் முதல் முக்கால் கால அளவில் வாழ்ந்து மறைந்த இவருடைய நூல்களில் குறிப்பிடும்படியான ‘மனவளமான சமுதாயம்’ (The Sane Society - 1955) என்ற நூல் முழுமையாகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

விலை =ரூ =350
இந்த புத்தகம் தேவைப்படுவோர் அழைக்கவும் 7397604036.
VPP அல்லது India Post மூலம் புத்தகம் உங்கள் இல்லம் தேடி வரும்.....

ஜெயபாலனின் இரண்டாவது கவிதைத் தொகுதியான ‘நமக்கென்றொரு புல்வெளி’யை க்ரியா பதிப்பகம் வெளியிட்டது. கால் நூற்றாண்டுக்குப் பின...
08/08/2017

ஜெயபாலனின் இரண்டாவது கவிதைத் தொகுதியான ‘நமக்கென்றொரு புல்வெளி’யை க்ரியா பதிப்பகம் வெளியிட்டது. கால் நூற்றாண்டுக்குப் பின்னர் தெரிவுசெய்யப்பட்ட அவரின் கவிதைகளை ‘குறுந்தொகை’ என்ற தலைப்பில் க்ரியா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. அவர் இளமையில் நாட்டுப்பாடல்கள், தேவார திருவாசகங்கள், சித்தர் பாடல்கள், கம்பராமாயணம், சிலப்பதிகாரம், நந்தனார் சரித்திரத்தின் சில பகுதிகள், மறுமலர்ச்சிக் கால ஆங்கிலக் கவிதைகள் என அங்குமிங்குமாக அகப்பட்ட கவிதைகள், பாடல்கள் எல்லாவற்றையும் ஈடுபாட்டுடன் வாசித்தார். அவர் தன்னுடைய முதல் கவிதையான ‘பாலி ஆறு நகர்கிறது’ கவிதையை எழுதும் முன்னர் பக்கம்பக்கமாகக் கவிதைகள் எழுதியிருந்தார். அவற்றுள் பாரதியாரின் சாயல் இருந்தது. ‘பாலி ஆறு நகர்கிறது’ கவிதையை எழுதி முடித்தபோதுதான் அவர் தன்னை ஒரு கவிஞனாக உணர்ந்தார். இன்றுவரை சங்கப் புலவர்களின் அஞ்சலோட்ட தீபத்தை முன் னெடுத்துச் செல்வதில் அவர் எவ்வளவு வெற்றி பெற்றிருக்கிறார் என்பதை இந்த நூலுக்கான விமர்சனங்களை வாசிப்பதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.

வ. ஐ. ச. ஜெயபாலன்கவிதை

விலை =ரூ = 180

இந்த புத்தகம் தேவைப்படுவோர் அழைக்கவும் 7397604036.
VPP அல்லது India Post மூலம் புத்தகம் உங்கள் இல்லம் தேடி வரும்.....

க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி வெளிவந்து பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு விரிவாக்கித் திருத்தி வெளியிடப்பட்டிருக்கும் புத...
08/08/2017

க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி வெளிவந்து பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு விரிவாக்கித் திருத்தி வெளியிடப்பட்டிருக்கும் புதிய பதிப்பு. இந்தப் புதிய பதிப்பில் புதிய சொற்கள், பழைய சொற்களில் கூடியுள்ள புதிய பொருள்கள், பழைய சொற்களில் புதிதாக இனம்காணப்பட்ட பொருள்கள், தனிச்சொற்களுக்கு அப்பால் பொதுத் தமிழின் பகுதியாகச் சேர்ந்துகொண்டிருக்கும் தொடர்கள் என்று பல கூடுதல் அம்சங்களைக் காணலாம். 1990க்குப் பிறகு தமிழ்ச் சொற்களில் நிகழ்ந்த மாற்றங்களைப் பதிவுசெய்யும் புதிய பதிப்பு இது. தற்காலத் தமிழில் வழங்கும் 75 லட்சம் சொற்களைக் கொண்ட சொல்வங்கியின் உதவியுடன் உருவாக்கப்பட்ட புதிய பதிப்பு இது.

விலை =ரூ = 610

இந்த புத்தகம் தேவைப்படுவோர் அழைக்கவும் 7397604036.
VPP அல்லது India Post மூலம் புத்தகம் உங்கள் இல்லம் தேடி வரும்.....

Address

3/425 Meekshi Street
Madurai
625014

Telephone

+917397604036

Website

Alerts

Be the first to know and let us send you an email when Magizh Books Sellers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category