JASIM மருந்தகம்

JASIM மருந்தகம் விழிப்புணர்வு

https://youtu.be/7cnEEgs5-4s
06/01/2021

https://youtu.be/7cnEEgs5-4s

எங்கள் சேனல் தீவின் வரலாறு, தொழில் வளங்கள், ஆன்மீகம், கலாச்சாரம், தீவோட அதிசயம் மற்றும் ஆச்சரியம் & தீவின் தகவல்.....

01/09/2020
ஸ்வீட் சாப்பிட பயமா? சீத்தாப்பழம் சாப்பிடுங்கள்!சாப்பாடு சாப்பிட்ட பிறகு ஒரு ஸ்வீட் சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறதா? ...
29/08/2020

ஸ்வீட் சாப்பிட பயமா? சீத்தாப்பழம் சாப்பிடுங்கள்!

சாப்பாடு சாப்பிட்ட பிறகு ஒரு ஸ்வீட் சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறதா? உடல் எடை கூடி விடும், கொழுப்புச் சத்து, சர்க்கரை ஏறி விடும் என்ற பயம் ஸ்வீட் சாப்பிட விடாமல் உங்களைத் தடுக்கிறதா? ஸ்வீட்டிற்குப் பதில் ஒரு சீத்தாப்பழம் சாப்பிடுங்கள். இனிப்பு சுவையும் கிடைக்கும், நார்ச்சத்து மிகுந்திருப்பதால் சர்க்கரை அளவும் கூடாது, நல்லதைப் பயக்கும் சத்துக்களும் கிடைக்கும்.

நச்சுப் பொருட்களை உடலிலிருந்து வெளியேற்ற உதவும் சீத்தாப்பழம்!
'கஸ்டர்ட்' என்ற ஐஸ்கிரீம் போன்ற சுவை இந்தப் பழத்திற்கு இருப்பதால் இதற்கு இப்பெயர் வந்தது.

வைட்டமின்கள், புரதம், தாதுப் பொருட்கள், சக்தி தரும் இனிப்பு, கொழுப்புச் சத்து, நார்ச்சத்து என அனைத்தையும் கொண்டது சீத்தாப்பழம். நம் உடலில் உள்ள திசுக்களுக்கு பாதிப்பு தரக்கூடிய நச்சுப் பொருட்களை உடலிலிருந்து வெளியேற்ற ஆன்டிஆக்ஸிடென்ட் தேவை. இதை உடலுக்குத் தருவது வைட்டமின் சி தான். ஆனால் இந்த வைட்டமின் உடலில் அதிக நேரம் தங்குவதில்லை. அதனால் ஒருவர் தினமும் வைட்டமின் சி அடங்கிய உணவைக் கட்டாயம் சாப்பிட வேண்டும்.

சமைத்த உணவில் இந்த வைட்டமின் விரயமாகிவிடுவதால் பழங்களைச் சாப்பிடுவதன் மூலமே நாம் இந்த வைட்டமினை அன்றாடம் பெற முடியும்.
சமயத்தில் நம் உடலுக்கு வைட்டமின் சி அதிக அளவில் தேவைப்படுகிறது. நம் மனதில் அதிக அழுத்தம் ஏற்படும்போது, உடலில் ஏதேனும் தொற்றுநோய்(இன்பெக்ஷன்) ஏற்பட்டிருக்கும்போது, அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கும்போது, புகை பிடிப்பது அல்லது மது அருந்தும் பழக்கமிருக்கும்போது வைட்டமின் சி யின் தேவை அதிகமாகிறது. அந்த சமயத்தில், சமய சஞ்சீவினியாகக் கை கொடுக்கிறது சீத்தாப்பழம்.

ஜீரண சக்தியை அதிகரிக்கும்:

சீதாப்பழம் ஜீரண சக்தியை அதிகரிப்பதால் பித்தம், வாந்தி, பேதி, தலைசுற்றல் ஆகியவற்றையும் குணப்படுத்தும்.

மன அழுத்தத்தை சரி செய்யும் சீத்தாப்பழம்
இரவில் ஒரு சீதாப்பழம் சாப்பிட்டுப் பாருங்கள், நல்ல ஆழ்ந்த தூக்கம் வரும். இதற்குக் காரணம் இப்பழத்தில் உள்ள கால்சியம் மற்றும் மக்னீசியம் தாதுப் பொருட்கள்தான். இவை இரண்டிற்குமே மன அழுத்தத்தை சரிப்படுத்தும் குணம் உண்டு. அதோடு இந்த தாதுப் பொருட்கள், நம் உடலிலுள்ள எலும்புகளுக்கும், தசைகளுக்கும், இருதயத்திற்கும் வலுவளிக்கக் கூடியவை.

சிலர் நிறைய பதப்படுத்தப்பட்ட உணவுகளைச் சாப்பிடுவார்கள். சிலருக்கு புகை பிடிக்கும் பழக்கமிருக்கும். அதிக அளவு டீ, காபி சாப்பிடுவர் சிலர். இன்னும் சிலருக்கு மது அருந்தும் பழக்கம் இருக்கும். இவர்கள் அனைவருக்குமே, இவற்றின் பாதிப்பு உடலில் ஏற்படாமலிருக்க பொட்டாசியம் சத்து அன்றாடம் தேவைப்படுகிறது. ஏனெனில் இந்த சத்தினையும் உடலில் தேக்கி வைக்க முடியாது. எனவே தினமும் சாப்பிட வேண்டியுள்ள போது, இந்த சத்தினை நிறைய கொண்டிருக்கும் சீதாப்பழத்தை சாப்பிடலாமே!

சீத்தாப்பழம் 'கஸ்டர்ட் ஆப்பிள்' என்று அழைக்கப்படுவதன் காரணம் என்ன?

நம் நாட்டில் சீதாப்பழம் என்று அழைக்கப்படும் இப்பழம் ஆங்கிலத்தில் 'கஸ்டர்ட் ஆப்பிள்' என்றழைக்கப்படுகிறது. 'கஸ்டர்ட்' என்ற ஐஸ்கிரீம் போன்ற சுவை இந்தப் பழத்திற்கு இருப்பதால் இதற்கு இப்பெயர் வந்தது.

சீத்தாப்பழம் - மேலும் சில சுவாரஸ்ய தகவல்கள்!

சீத்தாப்பழம் வருடம் முழுவதும் கிடைப்பதில்லை. குறிப்பிட்ட பருவத்தில்தான் மரத்தில் காய்க்கும். அடர்ந்து, உயரம் குறைவாக உள்ள சீதாப்பழ மரத்தின் முற்றிய கிளைகளில் காய்க்கும் காய்களை, நன்கு வளர்ந்த பிறகு காயாகவே பறித்து விடுவார்கள். பறித்த பிறகே பழுக்க வைப்பார்கள்.

சீதாப்பழத்தை பலர் சாப்பிடத் தயங்குவது அதில் அதிகமாக உள்ள விதைகளின் காரணமாகத்தான். இந்த விதைகளை விதைத்து மட்டுமல்லாமல், பதியன் வைத்தும் சீதாப்பழ மரங்களை வளர்க்கலாம். முதன் முதலில் மேற்கு இந்தியத் தீவினர்களால்தான் சீதாப்பழ மரங்கள் வளர்க்கப்பட்டன. இதன் சுவையும், மணமும் எல்லோரையும் கவரவே இன்று உலகில் எல்லா இடங்களிலும் இப்பழ மரம் வளர்க்கப்படுகிறது. இதன் மணமும் சுவையும் எல்லோருக்கும் பிடித்திருப்பதால், இதனை ஜாம், ஜெல்லி மற்றும் ஐஸ்கிரீம், பழரசங்கள் செய்யப் பயன்படுத்துகிறார்கள்.

சீத்தாப்பழத்தில் உள்ள சத்துக்கள்:

விட்டமின், புரதம் மற்றும் இரும்புச்சத்துக்கள் சீத்தாப்பழத்தில் அதிகமாக உள்ளன. இது அதிக அளவு மருத்துவ பயன்களைக் கொண்டுள்ளது.

சீத்தாப்பழத்தில் உள்ள நன்மைகள்:

இதய நோய் வராமல் தடுக்கலாம்.
நினைவாற்றலை அதிகரிக்கும்.
ஆரம்ப நிலை காசநோயை உடலில் இருந்து நீக்கும். மற்ற வகை காசநோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் உடையது.
உடல் எடையைக் குறைக்கும்.
கோடைக்காலத்தில் ஏற்படக் கூடிய நாவறட்சியை நீக்கும் மற்றும் உடலுக்கு குளிர்ச்சி தரும் தன்மை உடையது.
உடல் உள்உறுப்புக்களில் ஏற்படும் புண்களை ஆற்றும் தன்மை இதில் உள்ளது.
ஊற வைத்த வெந்தயத்துடன் சீத்தாப்பழத்தை சாப்பிட்டு வந்தால் குடல் புண்கள் ஆறும்.
சீத்தாப்பழம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.
உடலில் உள்ள இரத்தத்தை சுத்திகரித்து இரத்த சோகை நோயைப் போக்கும். அதுமட்டுமின்றி உடல் சோர்வைப் போக்கி உடலுக்கு புத்துணர்வைத் தரும்.
பித்தம் தெளிந்து மனநோய் குணமாக சீத்தாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.
உடல் வலிமை பெற சீத்தாப்பழத்தை திராட்சைப் பழச்சாற்றுடன் கலந்து ஜூஸாக குடித்து வரலாம்.
சீத்தாப்பழத்துடன் எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் சிறுநீர் கடுப்பு நீங்கும்.

இவ்வளவு நன்மை நிறைந்த இந்த பேரிச்சம் பழத்தை இதுவரை மிஸ் பண்ணிருக்கோமே..!  பேரிச்சை சிறந்த டயட் உணவுகளில் ஒன்றாக இருக்கிற...
09/08/2020

இவ்வளவு நன்மை நிறைந்த இந்த பேரிச்சம் பழத்தை இதுவரை மிஸ் பண்ணிருக்கோமே..!

பேரிச்சை சிறந்த டயட் உணவுகளில் ஒன்றாக இருக்கிறது. அதிக அமினோ அமிலங்கள், நார்ச்சத்து போன்றவை அதிகம் உள்ளது. பொதுவாக ரத்த சோகைக்கு பரிந்துரை செய்வார்கள். ஆனால் அது உடல் எடையை கணிசமாக குறைக்கிறது. பேரிச்சை இனிப்பாக இருப்பதால் அதிக கலோரி இருக்கும் என நிறைய பேர் ஒதுக்கி விடுவார்கள். ஆனால் சர்க்கரை வியாதி இருப்பவர்களும் பேரிச்சை சாப்பிடலாம்.
பேரிச்சைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டியது

பேரிச்சை ஆசியா, இந்தியா, அரேபிய நாடுகள், பங்களாதேஷ், பாகிஸ்தான், மத்திய கிழக்கு பகுதியில் விளைகிறது.

இதில் முக்கியமாக ஃப்ரக்டோஸ், குளுகோஸ், சுக்ரோஸ், ஆகியவைகள் இருக்கின்றன.

அதிலுள்ள சத்துக்கள் :

கார்போஹைட்ரேட் 44 %,
நார்ச்சத்து 11.5%,
புரதம் 5.6 %,
கொழுப்பு 0.5 %,

அது தவிர கால்சியம், காப்பர், மெக்னீசியம், சோடியம், உப்பு, விட்டமின், ஏ, பி1, பி12, சி, நியாசின் மற்றும் எண்ணெய் சத்துக்கள் இருக்கின்றன.

4 பேரிட்சை எப்படி உடல் எடையை குறைக்கும்?

வெளி நாடுகளில் பேரிச்சை டயட் என்றே பெயரிட்டு அதனை பின்பற்றி உடல் எடையை குறைக்கிறார்கள். உங்கள் உடல் எடையை குறைக்கும்படி மிக எளிதான டயட் ஒன்று உள்ளது. தினமும் 4 பேரிச்சை காலை 2 மாலை 2 என சாப்பிட வேண்டும். அதனை சாப்பிடும் முறையை பார்க்கலாம்

தேவையானவை :

பேரிட்சை -2
பசும் பால்- 1 கப்
மஞ்சள் - 1 சிட்டிகை
தேன் - 1 ஸ்பூன்.

பயன்படுத்தும் முறை :

காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான பசும் பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடிக்க வேண்டும். பின்னர் இரண்டு பேரிச்சைப் பழத்தை சாப்பிட வேண்டும். இது போலவே இரவும் குடிக்க வேண்டும். இப்படி தினமும் செய்யும்போது 15 நாட்களிலேயே உங்களுக்கு பலன் தெரிய ஆரம்பிக்கும்.

பேரிட்சை டயட்;

பேரிட்சையை உங்கள் அன்றாட டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பழங்களுடன் துண்டு துண்டாக நறுக்கி கலந்து சாப்பிடலாம். இனிப்பு வகைகளில் கலந்து செய்யலாம். ஐஸ்க்ரீமில் கலந்து சாப்பிடுங்கள். பின் அவ்வப்போது கொறிப்பதற்கு கண்ட நொறுக்குத்தீனிகளுக்கு பதில் பேரிச்சையை சாப்பிடலாம். அதுவும் மீறி முழு மனதாக பேரிச்சை டயட்டை மட்டும் நீங்கள் பின் தொடர்ந்தால் உடல் எடை, தொப்பை கரைந்து விடும்.

பின்பற்றும் முறை :

காலை - 2 பேரிட்சை மற்றும் மஞ்சள் பால். மதியம் - பச்சைக் காய்கறிகளுடன் குறைவாக அரிசி சாதம், மாலை - தே நீர் மற்றும் கோதுமை நிறைந்த பிஸ்கட், இரவு - 2 பேரிட்சை மற்றும் மஞ்சள் பால் அத்னுடன் வேக வைத்த பீன்ஸ் அல்லது மீன். இந்த டயட் எளிதான முறைதான். பெரிதாக செலவுமில்லை. வீட்டிலேயே பின்பற்றலாம்.

எப்படி உடல் எடையை குறைக்கிறது?
பசியை தூண்டாது :

பேரிச்சையில் அதிக டயட்ரி புரதங்கள் இருக்கின்றது. புரதமோ, நல்ல கார்போஹைட்ரேட்டோ ஜீரணத்தை தாமதப்படுத்துகிறது. இதனால் பசி விரைவில் உணர மாட்டீர்கள். அப்படி பேரிச்சையை காலை ப்ரேக் ஃபாஸ்டாக சாப்பிடும்போது உங்களுக்கு பசியை தூண்டாது. அதோடு முழுச் சத்துக்களும் உங்கள் உடலில் இருக்கும்.

உள்ளுறுப்புகளை பாதுகாக்கும் :

பேரிச்சம் பழத்தில் இருக்கும் நல்ல கொழுப்புக்கள் உங்கல் உடல் பாதிப்புகளை சரி செய்கிறது. உள்ளுறுப்பு காயங்கள், அடிபடுவதால், கண்ட உணவுகளை சாப்பிடுவதால் ஏதாவது நோயினால் என பல காரணங்களால் ஏற்படுவதுண்டு. இந்த காயங்களை ஆற்றி ஆரோக்கியமான வாழ்க்கை வாழ தினமும் பேரிட்சை சாப்பிட வேண்டும்.

தசை வடிவம் தரும் :

பேரிச்சையில் உள்ள புரதச் சத்துக்கள் உங்களின் தசை வடிவத்தையே மாற்றும் திறன் கொண்டது. தேவையற்ற கொழுப்புகள் மறைந்து ஆரோக்கியமான தசைக் கட்டமைப்பு உருவாகும்.

சர்க்கரை வியாதி தடுக்கும் :

சர்க்கரை வியாதியை தடுக்கும். இனிப்புள்ள எல்லா உணவுகளும் சர்க்கரை வியாதியை தரும் என நினைக்க வேண்டாம். பேரிச்சை பழத்திலுள்ள ஃபீனாலின் பண்புகள் இன்சுலினை சுரக்க தூண்டுகின்றன. இவை சர்க்கரையை ஒழுங்குபடுத்தி சர்க்கரை வியாதியை தடுக்கிறது.
சர்க்கரை பதிலாக பயன்படுத்தலாம் :
சர்க்கரையை வேண்டாம் என பல மருத்துவர்கள் அலறுகிறார்கள். ஆனால் சர்க்கரை இல்லாமல் காபி, டீ அருந்த முடியவில்லை என நீங்கள் கவலைப் பட்டால் உங்களுக்கு இந்த விஷயம் வரப் பிரசாதம். பேரிட்சையை உருக்கி, பாகு பதத்தில் காய்ச்சி ஒரு டப்பாவில் போட்டு, சர்க்கரைக்கு பதிலாக இதனை பயன்படுத்தலாம். இதனால் புற்று நோய் முதல் பல ஆபத்தான நோய்கள் தடுக்கப்படுகின்றன.

பேரிட்சையை சாப்பிட்ட பின் உண்டாகும் மாற்றங்கள்

கொழுப்பை கரைக்கும் :

பேரிச்சை உடலில் விடாப்படியாக தங்கி இருக்கும் கொழுப்பை உடைத்து முற்றிலும் செரிமானத்திற்கு உட்படுத்துகிறது. இதனால் கொழுப்பு வேகமாக கரைந்து விடுகிறது.

நோய் எதிர்ப்பு திறன் :

உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்பெற ஆரம்பிக்கும். ரத்த சோகையை தடுக்கும். சாதரண சளி, காய்ச்சலிலிருந்து டெங்கு காய்ச்சல் வரை உங்களை நெருங்காது.

அலர்ஜிகள் வராது :

சிலருக்கு எதற்கெடுத்தாலும் அலர்ஜி உண்டாகும். தூசி, புகை, சின்ன பூச்சி கடித்தாலும் கூட உடலில் அலர்ஜி உண்டாகும். அவர்கள் எல்லாம் தினமும் பேரிட்சைப் பழத்தை சாப்பிட்டால் இந்த பாதிப்பு அறவே போய்விடும்.

இதய நலன் கியாரெண்டி :

இதய நோய்கள் இந்த காலத்தில் மிகவும் சாதாரணமாகிப் போய்விட்டது. ஆனால் நீங்கள் தினமும் பேரிச்சையை சாப்பிடுபவர்கள் என்றால் உங்கள் இதயம் பலமடங்கு பாதுகாப்போடு
இருக்கும்.

ரத்த ஓட்டம் :

உங்கள் ரத்த ஓட்டத்தை துரிதப்படுத்துகிறது. இதனால் எங்கும் கழிவுகளோ நச்சுக்களோ தங்காது. தேவையற்ற கட்டிகள், நீர்க்கட்டிகள் உருவாகாது. சுறுசுறுப்போடு இருப்பீர்கள்.

சிறந்த பேரிச்சை எது?

பேரிச்சை பிளவு படாமல் இருப்பது நல்லது. சுருக்கங்களோடு இருக்கும் பேரிச்சை தரமானதாக இருக்கும். அவைகளில் நாற்றம் அல்லது வாசனை வரக் கூடாது.
வாங்கிய பின் செய்ய வேண்டியவை :
வாங்கிய பின் பேரிட்சை சாப்பிடுவதற்கு முன் அதனை கழுவ வேண்டும். இதனால் இனிப்புகளின் மேல் உருவாகும் பேக்டீரியாக்கள் நம் உடலுக்குள் செல்லாமல் தடுக்கலாம். அதனை குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக் கொள்வது நல்லது. தினம் 4- 6 சாப்பிடுங்கள். உங்கள் உடல் எடை மற்றும் தொப்பை குறைவது உறுதி.

ஆண்களுக்கு ஏன் நல்லது?

ஆண்களுக்கு வேலைப் பளு, வீட்டுச் செலவு, நெருக்கடியான சூழ் நிலைகள் என பல பிரச்சனைகள் இருக்கிறது. எனவே பேரிச்சம் பழம் சாப்பிட்டால் மன அழுத்தங்கள் குறையும். ஆரோக்கியமான மன நிலையில் சிந்திக்கும்படி நரம்பு மண்டலம் வலுப்பெறுகிறது.
ஆண்களின் விந்தணு விருத்திக்கு சுத்தமான பேரிச்சம் பழங்களைச் சாப்பிட்டு விட்டு பால் குடித்தால்போதும். தாது விருத்தியுண்டாகும். இரவில் படுக்கும் பொழுது இதை சாப்பிட வேண்டும். காலை உணவுக்குப் பின் 3 பேரிச்சம் பழங்களைச் சாப்பிட்டு ஒரு டம்ளர் வெந்நீர் குடிக்க வேண்டும். அதேபோல் இரவு உணவுக்குப்பின், 12 பேரிச்சம் பழங்களைச் சாப்பிட்டு ஒரு கப் பசும்பால் குடிக்க வேண்டும். இதை குறைந்தது 2 மாதங்கள் பின்பற்ற வேண்டும்

காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள்
காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இழந்த உடல் வலிமையை மீண்டும் பெற பேரிச்சம் பழம் உதவும். பேரிச்சம் பழத்தை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் விரைவில் இழந்த பலத்தை பெறுவார்கள்.

வலியில்லா பிரசவம்

கர்ப்பிணிகளுக்கு உண்டாகும் கவலைகளில் ஒன்று பிரசவத்தின் போது உண்டாகும் வலி இன்னொன்று பிரசவத்திற்கு பின் உண்டாகும் பருமன். இரண்டிற்குமே பதில் தருகிறது பேரிட்சை. கர்ப்பம் தரித்தபின் தினமும் 4 பேரிட்சைகளை சாப்பிட்டால் வலியில்லாத பிரசவத்தை தருகிறதாம். அதோடு பிரசவத்திற்குப் பின் வரும் உடல் பருமனை குறைக்கிறது.

மந்த புத்தியை மாற்றும்

தினமும் 2 பேரிட்சை சாப்பிட்டால் அதில் இருக்கும் வைட்டமின் பி6 மூளையின் செயலாற்றலை அதிகரித்து, அறிவாற்றல், நினைவாற்றலை ஊக்குவிக்கிறது.

🌿  #முருங்கை vs  #கொரோனா🌿 *எந்த மாதிரி வைரஸையும் சமாளிக்கும்.  எதிர்ப்பு சக்தியில் முதலிடம் இந்த முருங்கை*🌿நோய் எதிர்ப்ப...
06/08/2020

🌿 #முருங்கை vs #கொரோனா

🌿 *எந்த மாதிரி வைரஸையும் சமாளிக்கும். எதிர்ப்பு சக்தியில் முதலிடம் இந்த முருங்கை*

🌿நோய் எதிர்ப்பு சக்தி நன்றாக இருந்தால் எந்த வைரஸும் நம்மை ஒன்றும் செய்ய இயலாது.

🌿நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ள என்னவெல்லாம் சாப்பிடலாம் என பெரிய லிஸ்ட் போட்டு யோசிக்க வேண்டிய அவசியமே இல்லை.

🌿பத்து ரூபாய்க்கு கிடைக்கும் முருங்கைகீரை அல்லது இரண்டு முருங்கைக்காய் போதும். வாரம் இரண்டு அல்லது மூன்று முறை உபயோகித்தால், நாம் நமது நோய் எதிர்ப்பு சக்தியை பல மடங்கு உயர்த்திக் கொள்ளலாம்.

🌿முருங்கையில் வைட்டமின் C ஆனது ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதை விட 7 மடங்கு அதிகமாக உள்ளது.

🌿முருங்கையில் வைட்டமின் A ஆனது கேரட்-ல் உள்ளதை விட 4 மடங்கு அதிகமாக உள்ளது.

🌿முருங்கையில் வைட்டமின் B2 ஆனது வாழைப்பழத்தில் உள்ளதை விட 50 மடங்கு அதிகமாக உள்ளது.

🌿வைட்டமின் B3 ஆனது வேர்க்கடலையில் உள்ளதை விட 50 மடங்கு அதிகமாக
உள்ளது.

🌿முருங்கையில் கால்சியம் சத்து பாலில் உள்ளதை விட 4 மடங்கு அதிகமாக உள்ளது.

🌿முருங்கையில் புரோடீன்(புரத) சத்து பாலில் உள்ளதை விட 2 மடங்கு அதிகமாக உள்ளது.

🌿முருங்கையில் மெக்னேஷியம் சத்து முட்டையில் உள்ளதை விட 36 மடங்கு அதிகமாக உள்ளது.

🌿முருங்கையில் இரும்பு சத்து மற்ற கீரைகளில் உள்ளதை விட 25 மடங்கு அதிகமாக உள்ளது.

🌿முருங்கையில் பொட்டாசியம் சத்து வாழைப்பழத்தில் உள்ளதை விட 3 மடங்கு அதிகமாக உள்ளது.

🌿இவ்வளவு சத்துக்களையும் விட்டமின்களையும் உள்ளடக்கிய முருங்கைக்காயையும் கீரையையும் நாம் கண்டுகொள்வதே இல்லை.

🌿முருங்கை உண்ட கிழவன் கூட வெறும் கையோடு தான் நடப்பான் என்ற பழமொழிக்கு ஏற்ப முருங்கையை உண்டு என்றும் இளமையுடன் வாழ்வோம்.🌿

03/08/2020

அறிகுறிகள் தென்படும் முதல் சில நாட்கள்
கொரோனா வைரஸ் மூக்கு / நாசி / தொண்டை பகுதிகளில் இருக்கும்

நாம் எடுக்கும் RTPCR பரிசோதனை மூக்கு நாசிக்குள் மேல் தொண்டைப்பகுதியில் அல்லது தொண்டைப்பகுதியில் எடுக்கப்படுகின்றது

அந்த இடத்தில் கொரோனா வைரஸ் இருக்கிறதா? என்பதை அறிவதே இந்த RTPCRஇன் நோக்கம்.

இந்த பரிசோதனை அறிகுறிகள் தோன்றிய முதல் சில நாட்களில் RTPCR பரிசோதனை செய்தால் மட்டுமே பாசிடிவ் ரிசல்ட் வரும் வாய்ப்பு அதிகம்

அந்த முதல் சில நாட்களை கழித்து RTPCR டெஸ்ட் எடுத்தால் பலருக்கும் நெகடிவ் என்று ரிசல்ட் வருவதற்கு காரணம்

கொரோனா வைரஸ் தொண்டைப்பகுதியில் இருந்து பல்கிப்பெருகி கீழிறங்கி சுவாசப்பாதையின் கீழ்ப்பகுதிக்கு நகர்ந்திருக்கும்.

அங்கிருந்து நுரையீரலுக்கு சென்று தனது வேலையை தொடங்கும் நேரத்தில்
இருமல் / மூச்சு விடுவதில் சிரமம் போன்றவை தென்படும்

அப்போது தொண்டையில் வைரஸ் இருக்கிறதா என்று பார்த்தால் பெரும்பாலும் நெகடிவ் என்றே ரிசல்ட் வரும்

எனவே சிடி ஸ்கேன் நெஞ்சுப்பகுதிக்கு எடுக்கப்படுகின்றது

நெஞ்சுப்பகுதி சிடி ஸ்கேனில் நுரையீரலில் தனது வேலையை செவ்வனே செய்த கொரோனா வைரஸ் தொற்றின் வரைபடங்கள் தெரிய ஆரம்பிக்கின்றன

இதை CORAD (Covid RADiological features) என்ற அலகு கொண்டு நுண்கதிரியில் சிறப்பு நிபுணர்கள் வழங்குகிறார்கள்

அதில் CORAD 3 முதல் 5 என்ற நிலை என்பது உள்ளே வந்திருப்பது கொரோனா தொற்று என்பதை கிட்டத்தட்ட உறுதி செய்கின்றது

அதிலும் CORAD 4 மற்றும் 5 என்பன உறுதியான நுரையீரல் கொரோனா தொற்று நிலை ஆகும்.

எனவே சிடி ஸ்கேன் மூலம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு கட்டாயம் RTPCR பரிசோதனை பாசிடிவ் வர வேண்டும் என்ற அவசியமில்லை

அவர்களுக்கு RTPCR நெகடிவ் என்று வந்தால்
அதனால் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது அவசியமில்லை

கொரோனா தொற்று தொண்டையில் இல்லை

நுரையீரலில் இருக்கிறது என்று அர்த்தம்

அதாவது
ஒருவன் காலை ஐந்து மணிக்கு எழுந்திருக்க அலாரம் வைக்கிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள்

அலாரம் அடிப்பதை அவன் கவனிக்காமல் தூங்கிவிடுகிறான்

ஜன்னல் வழியாக வெயில் கண்ணைப்பறிக்கிறது..
அதிரடியாக எழுந்திருக்கும் அவன்
தனது அலாரம் க்ளாக்கை மீண்டும் எடுத்து ஐந்து மணி ஆகிவிட்டதா என்று பார்ப்பதற்கு சமம்...

நுரையீரலில் சிடி ஸ்கேன் மூலம் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள்
RTPCR நெகடிவ் என்று கூறுவது..

Dr.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை

பழங்கள் மற்றும் காய்கறி வகையை சார்ந்த பீன்ஸ் நமது உடலின் செரிமான மாக எடுத்து கொள்ளும் நேரம்
29/07/2020

பழங்கள் மற்றும் காய்கறி வகையை சார்ந்த பீன்ஸ் நமது உடலின் செரிமான மாக எடுத்து கொள்ளும் நேரம்

Address

Mandapam

Telephone

+19003409524

Website

Alerts

Be the first to know and let us send you an email when JASIM மருந்தகம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to JASIM மருந்தகம்:

Shortcuts

Share