புத்தக உலகம்

Directions

புத்தக உலகம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from புத்தக உலகம், Book shop, nandhanam, Teynampet.

பாரதி புத்தகாலயத்தின் புதிய வெளியீடுகள்.
25/04/2024

பாரதி புத்தகாலயத்தின் புதிய வெளியீடுகள்.

சர்வதேச மகளிர் தின வாழ்த்துகள்
08/03/2024

சர்வதேச மகளிர் தின வாழ்த்துகள்

01/03/2024

திருவண்னாமலை புத்தகத் திருவிழா:
2024 மார்ச் 07 -16

சிவப்பு புத்தக தினம்: 21 பிப்ரவரிஇந்திய மொழிகளில் காரல் மார்க்சு பிரெடெரிக் எங்கெல்சு எழுதிய ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’...
21/02/2024

சிவப்பு புத்தக தினம்: 21 பிப்ரவரி

இந்திய மொழிகளில் காரல் மார்க்சு பிரெடெரிக் எங்கெல்சு எழுதிய ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ வங்க மொழியில் தான் முதன்முதலில் மொழியாக்கம் செய்யப் பட்டது. வங்காளத்தில் கம்யூனிஸ்ட் குழுவை நிறுவிய முசாபர் அகமதுவை ஆசிரியராகக் கொண்டிருந்த கணவாணி என்னும் ஏடு, சவுமயேந்திரநாத் தாகூரால் (இரவீந்திரநாத் தாகூரின் நெருங்கிய உறவினர்) மொழியாக்கம் செய்யப்பட்ட அறிக்கை 1926இல் ஆறு இதழ்களில் வெளியிடப்பட்டது.

வங்க மொழிக்கு அடுத்ததாக உருது மொழியில் கம்யூனிஸ்ட் அறிக்கை மொழியாக்கம் செய்யப்பட்டது. காங்கிரசுக் கட்சித் தலைவர்களில் ஒருவரும், இஸ்லாமிய அறிஞருமாகிய மவுலானா அபுல் கலாம் ஆசாத்தால் நிறுவப்பட்டதும் அவரை ஆசிரியராகக் கொண்டிருந்ததுமான அல்-ஹிலால் எனும் வார ஏட்டின் 1927 நவம்பர் 4, 11, 18ஆம் நாளைய இதழ்களில் அறிக்கையின் முதல் இரு பிரிவுகளின் (பூர்ஷ்வாக்களும் பாட்டாளிகளும், கம்யூனிஸ்டுகளும் பாட்டாளி களும்) உருது மொழியாக்கம் நான்கு பகுதிகளாக வெளி யிடப்பட்டது.

அடுத்ததாக மராட்டி மொழியாக்கமும் தமிழாக்கமும் ஏறத்தாழ ஒரே காலக்கட்டத்தில் வெளிவந்தன. கங்காதர் மொரேஸ்வர் அதிகாரி மீரத் சதி வழக்கில் சிறையிலிருந்த போது 1930-31இல் மராத்தியில் மொழியாக்கம் செய்தார். இது 1931 அக்டோபரில் வெளியிடப்பட்டு ஆறணா விலைக்கு விற்கப்பட்டது. அந்த மொழியாக்கம் 160 பக்கங்களைக் கொண்டிருந்தது.

தமிழாக்கம் :

1931 அக்டோபர் மாதத்தில் அறிக்கையின் முதல் தமிழாக்கம் வெளிவந்தது. பெரியார் ஈ.வெ.ரா.வின் சுய மரியாதை இயக்க வார ஏடான குடிஅரசு 1931 அக்டோபர் 4 முதல் தொடர்ச்சியாக அய்ந்து இதழ்களில் ‘சமதர்ம அறிக்கை’ என்னும் தலைப்பில் அறிக்கையின் முதல் பிரிவின் (பூர்ஷ் வாக்களும் கம்யூனிஸ்டுகளும்) தமிழாக்கத்தை வெளியிட்டது. மொழிபெயர்ப்பாளரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. ஆயி னும் முதல் பகுதி பெரியாரின் அறிமுகவுரையுடன் வெளியிடப் பட்டது.

இன்றும் பொருத்தப்பாடுடைய அந்த அறிமுக உரையில் பெரியார் எழுதினார் : “உலக அரசாங்கங்களிலெல்லாம் ரஷிய ஜார் அரசாங்கமே மிக்க கொடுங்கோன்மையாக நடைபெற்று வந்திருக்கின்றது. அதனாலேயே அங்கு சமதர்ம முறை அனுபவத்திற்குக் கொண்டுவர வேண்டியதாயிற்று. இந்த நியாயப்படி பார்த்தால், அவ்வித சமதர்ம உணர்ச்சி உலகில் ரஷியாவை விட இந்தியாவிற்கே முதன்முதலாக ஏற்பட்டிருக்க வேண்டியதாகும், இங்கு அனேகவித சூழ்ச்சிகள் நடைபெற்று வந்திருப்பதாலும் சூழ்ச்சிக்காரர்கள் இந்திய மக்களை வெகுஜாக்கிரதையாகவே கல்வி அறிவு, உலக ஞானம், சுயமரியாதை உணர்ச்சி முதலியவைகள் பெறுவ தற்கு மார்க்கம் அல்லாமல், காட்டுமிராண்டித்தன்மையில் வைத்து வந்ததோடு, கடவுள் பேராலும், மதத்தின் பேராலும் ஏற்படுத்தப்பட்ட உணர்ச்சியானது, அடிமையாக இருப்பதே கடவுள் சித்தமென்றும், மோட்ச சாதனமென்றும் புகட்டி வந்ததாலும், உலகில் சமதர்ம உணர்ச்சி முதன்முதலில் இந்தியாவிலேயே ஏற்பட்டிருக்க வேண்டியது மாறி, ரஷ்யா வுக்கு முதல் ஸ்தானம் ஏற்பட வேண்டியதாயிற்று.

“........... ஆனால் உலகில் சமதர்ம உணர்ச்சிக்கு விரோதமான தன்மையில் மற்ற தேசத்துக்கும் இந்தியாவுக் கும் ஒரு முக்கிய வித்தியாசம் இருந்து வருகின்றது. அதென்ன வென்றால், மற்ற நாடுகளில் ஒரு விஷயந்தான் முக்கியமாய்க் கருதப்படுகின்றது. அதாவது முதலாளி (பணக்காரன்) வேலையாள் (ஏழை) என்பதுவேயாகும். ஆனால் இந்தியாவிலோ மேல்சாதியார் - கீழ்ச்சாதியார் என்பது ஒன்று அதிகமாகவும் முதன்மையானதாகவும் இருப்பதால் அது பணக்காரன்-ஏழை தத்துவத்திற்கு ஒரு கோட்டையாக இருந்து காப்பாற்றிக் கொண்டு வருகிறது” (குடிஅரசு 4.10.1931).

கம்யூனிஸ்ட் அறிக்கையின் முதல் பிரிவின் தமிழாக்கத் தின் கடைசிப் பகுதியை வெளியிட்ட குடிஅரசு 1.11.1931ஆம் நாளைய இதழ், அறிக்கையின் பிற பிரிவுகளின் மொழியாக்க மும் வெளிவரும் என்று அறிவித்தது. ஆனால் 1931 டிசம்பர் 13ஆம் நாளன்று பெரியார் வெளிநாட்டுப் பயணத்தை மேற் கொண்டு பல மாதங்களுக்குப் பிறகே திரும்பி வந்ததால், பிற பிரிவுகளின் மொழியாக்கம் ஏதும் வரவில்லை. சோவியத் யூனியனில் பெரியார் 14.2.1932 முதல் 17.5.1932 வரை தங்கி, அங்கு ஏற்பட்டுவந்த சமூக, பொருளாதார, பண்பாட்டு மாற்றங்களை அறிந்துவந்தார்.

கம்யூனிஸ்ட் அறிக்கையின் முழுமையான முதல் தமி ழாக்கம், எம். இஸ்மத் பாஷாவால் செய்யப்பட்டு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூல் வெளியீட்டகமான ஜனசக்தி பிரசுராலயத்தால் 1948இல் வெளியிடப்பட்டது. பதினாறு பக்க அறிமுகவுரையுடன் கூடிய 91 பக்க மொழியாக்கம் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை எனத் தலைப்பிடப்பட்டிருந்தது.

எஸ்.வி. ராஜதுரை

13/02/2024

2020-2021 ஆம் ஆண்டுகளில் வெளியான நூல்களில் 33 வகைமைகளில் சிறந்த நூல்களை தெரிவு செய்து இன்று அறிவிப்பினை செய்திருக்கிறது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை.

தெரிவு செய்யப்பட்ட நூலாசிரியர்களுக்கும் வெளியிட்ட பதிப்பகங்களுக்கும்
வாழ்த்துகள்.

22/01/2024

சென்னைப் புத்தகக் காட்சியில் தோழமை உறவுகள் அளித்ததும், வாங்கியதும்.


1-புதியோர் உலகம் - கோவிந்தன்
2-யுத்த துாஷனம் - ஷோபா சக்தி
3- நெஞ்சறுப்பு - இமையம்
4-நிலக்கிளி - அ. பால மனோகரன்
5-சீதாயணம் - தமிழில்: ஞா. சதீஸ்வரன்
6-வீடு வெளி - சி. மோகன்
7-மிளகு - இரா. முருகன்
8-வேட்டை நாய்கள் - நரன்
9-பர்ஸா - கதீஜா மும்தாஜ்
10-அகதியின் பேர்ளின் வாசல் - ஆசி. கந்தராஜா
11-ஏழு போராளிகள் - ராமச்சந்திர குஹா
12 -அத்தங்கி மலை - பி. அஜய்பிரசாத்
13-கைவிடப்பட்ட காஷ்மீரும் பறிக்கப்பட்ட பாலஸ்தீனமும்- தமிழில்: இ.பா. சிந்தன்
14- சொர்க்கத்தின் பறவைகள் - அப்துல் ரஸாக் குரானா
15-கரிக்காசு - மு. தமிழ்ச்செல்வன்
16-எங்கள் ஊர் - உ.வே. கோவிந்தராஜு
17-இல்புறம் - அருண் நரசிம்மன்
18-பார்த்ததும் படித்ததும் - ச. மாடசாமி
19-தேவதையின் மச்சங்கள் கருநீலம் - கே.ஆர். மீரா
20-தமிழ் மொழியின் வரலாற்றுப் பயணயம் - வாசு அரங்கநாதன்
21- மோகனசாமி - தமிழில்: கே. நல்லதம்பி
22- மாயம் - பெருமாள் முருகன்
23-வேல் - பெருமாள் முருகன்
24-ஓர்மைகள் மறக்கு மோ - அரசு அமல்ராஜ்
25-பால் மீசை - தமிழில்: நஞ்சுண்டன்
26-நிலம் துப்பாக்கி சாதி - தமிழில்:ந. வினோத் குமார்
27-ஜிந்தகி - மீரான் மைதீன்
28-காவிய லோகம் - மீரான் மைதீன்
28-ஞாலம் - தமிழ்மகன்
29-ஒட்டுப்பலகை - துரை நந்தகுமார்
30- மோகமுள் - தி. ஜானகிராமன்
31-தேசியத்தின் உண்மைகளும் பொய்களும் - தமிழில்: ராஜன் குறை - ரவீந்திரன் ஸ்ரீ ராமச்சந்திரன்
32-புதிய இந்தியா எனும் கோணல் மரம் - தமிழில்: ஆர்.விஜயசங்கர்
33-பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கருடன் எனது வழ்க்கை - தமிழில்: த. ராஜன்
34-கடைசிக் கட்டில் - குணா கவியழகன்
36-மாயாதீதம் - என்.ஸ்ரீராம்
37-அம்மா- ரிஷான் ஷெரீஃப்
38-முறிநாவு - தமிழில்: கே.வி. ஜெயஸ்ரீ
39-வாரணம் - ராம் தங்கம்
40-இரட்டை இயேசு - விஜய ராவணன்
41-ஒரு சாகசக்காரனின் கதை - கார்த்திகைப் பாண்டியன்
42-திருவேட்கை - தெய்வீகன்
43-ஒப்பாரிக் கோச்சி - மு. சிவலிங்கம்
44-என் புரட்சி - குதுப்தீன்
45-தகப்பன் சாமி - குடந்தை அனிதா
46-பிரார்த்தனையைப் பின்தொடர்ந்து - தமிழில்: ராமாநுஜம்
47-சொக்கட்டான் - கே. டானியல்
48-கங்கு - முத்து ராச குமார்
49-தரூக் - கார்த்திக் பாலசுப்பிரமணியன்
50-பச்சை ஆமை - விஜய ராவணன்
51-சொனட்டா - பாலு
52- காய்த பூவு - மலர்வதி
53-இடமும் வலமும் அலைவுறும் சுடர் - பி.ஆர். மகாதேவன்
54-அருஞ்சுரம் - அதியமான்
55-கட ஊழி சூழ் கடல் - ஆசி
56-அன்பிற்கும் உண்டு அடைக்கும் தாழ் - சிவபாலன் இளங்கோவன்
57-நக்சலைட் இயக்கம் நிழலும் வெளிச்சமும் - கே. பாலகோபால்
58-கர்ஷூ - தமிழில்: அனுஷா சிவலிங்கம்
59-மரக்குரல் - அகராதி
60-சின்னாசிக் கிழவனின் செங்காரிப் பசு - தாமரைச்செல்வி
61-குடிமவன் - காமராசு செல்வன்
62-ஒறுப்பு - கா.சி. தமிழ்க்குமரன்
63-நிற்க அதற்குத் தக - சி. துரைக்கண்ணு
64-கிளர்ச்சியாளர் யூசுப் கான் - தமிழில்: விஜயசாய்
65-சில விமர்சனங்களும் அறிமுகங்களும் - மதி கண்ணன்
66-பரத்தை தொழிலில் படித்த பெண் - மானதா தேவி
67-இராசேந்திர சோழன் தன் வலாறு
68-பேரழகி - கண்மணி குணசேகரன்
69-தென்னம்படல் மறைப்பு - நபீல்
70-கரையில் மோதும் நினைவலைகள் - நொயெல் நடேசன்
71-நஞ்சாகும் நிலம் - மு. தமிழ்ச்செல்வன்
72-பித்தனாரும் பூங்குன்றன் விளாதிமிரும் - சுஜித் லெனின்
73-பூச்சாண்டி - யோசுவா
74-துருவேறும் கைவிலங்கு - விவேகானந்தனூர் சதீஸ்

15/01/2024

2024 சென்னைப் புத்தகத் திருவிழாவிற்கு வந்துள்ள நாவல்கள்:
பட்டியல் முழுமையானதல்ல, விடுபட்ட நாவல்களை கமெண்ட்டில் பதிவிட்டு உதவவும்.

1-சபக்தனி - சம்சுதீன் ஹீரா -பாரதி புத்தகாலயம்
2-நரவேட்டை - சக்தி சூர்யா -பாரதி புத்தகாலயம்
3-பகை நன்று - மால்கம் -பாரதி புத்தகாலயம்
4-புதியதோர் உலகம் - கோவிந்தன் - சமூக இயல் பதிப்பகம்
5-நிலக்கிளி - அ. பாலமனோகரன் - சமூக இயல் பதிப்பகம்
6-கங்கு - முத்துராசகுமார் - சால்ட் பதிப்பகம்
7-பச்சை ஆமை - விஜயராவணன் - சால்ட் பதிப்பகம்
8-தரூக் - கார்த்திக் பாலசுப்பிரமணியன் - காலச்சுவடு
9-சொனட்டா - பாலு - எதிர் வெளியீடு
10-கடைசிக் கட்டில் - குணா கவியழகன் - எதிர் வெளியீடு
11-ஞாலம் - தமிழ்மகன் - மின்னங்காடி
12-வீடு வெளி - சி. மோகன் - டிஸ்கவரி புக் பேலஸ்
13-நெஞ்சறுப்பு - இமையம் - க்ரியா
14-மாயதீபம் - என்.ஸ்ரீ ராம் - தமிழ்வெளி
15-வேட்டை நாய்கள் - நரன் - விகடன்
16-ஜிந்தகி - மீரான் மைதீன் - சுவடு பதிப்பகம்
17-காவிய லோகம் - மீரான் மைதீன் - சுவடு பதிப்பகம்
18-இடமும் வலமும் அலைவுறும் சிறு கடல் - பி.ஆர்.மகாதேவன் - ஸ்வாசம்
19-குடிமவன் - காமராசு செல்வன் - தாமரை

09/01/2024

திருப்பூர் புத்தகத் திருவிழா: 2024 ஜனவரி 25-4 ஃபிப்ரவரி
நாமக்கல் புத்தகத் திருவிழா:
2024 ஜனவரி 26-3 ஃபிப்ரவரி
சிவகங்கை புத்தகத் திருவிழா:
2024 ஜனவரி 27-6 ஃபிப்ரவரி
நாகர்கோவில் புத்தகத் திருவிழா: 2024 ஃபிப்ரவரி 02 – 12
திருநெல்வேலி புத்தகத் திருவிழா:
2024 ஃபிப்ரவரி 02 – 13
விழுப்புரம் புத்தகத் திருவிழா: 2024 ஃபிப்ரவரி 02 – 12

47 ஆவது சென்னைப் புத்தகக் காட்சியின் 7 ஆம் நாள் நிகழ்வு.
08/01/2024

47 ஆவது சென்னைப் புத்தகக் காட்சியின் 7 ஆம் நாள் நிகழ்வு.

Address

Nandhanam
Teynampet

Website

Alerts

Be the first to know and let us send you an email when புத்தக உலகம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category