Ncbh Tvl

Ncbh Tvl we can serve books that you need.

வாசகர்களுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வழங்கும்  *உங்கள் இல்லம் தேடி புத்தகங்கள்...
11/01/2022

வாசகர்களுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வழங்கும்

*உங்கள் இல்லம் தேடி புத்தகங்கள்*

தினசரி வாழ்க்கையில் அன்றாட நடவடிக்கைகளின்
மன அழுத்தங்களில் இருந்து விடுபட அனைத்து மக்களுக்கும் ஒரே தீர்வாக பொழுது போக்கு
அம்சங்கள் மட்டுமே உண்டு.

ஆனால் உலக அளவில் சமீப ஆண்டுகளில் ஒட்டு மொத்த மனித சமூகத்தையும் கொடுமையாக பாதித்த இத்தொற்றின் சமூக பரவல் மனிதர்களை மேலும் பத்துக்கு பத்து அறைக்குள் அடைக்கவே செய்தது.

சுற்றுலா, திரைப்படங்கள் என அனைத்து வகைப்பட்ட
பொழுது போக்கு அம்சங்களும் முடங்கி போன சூழலில்
மக்களுக்கு பெரும் வரமாக அமைந்தது புத்தகங்கள் தான்.

சமீபத்திய மாதங்களில் சாதாரண நிலைக்கு உலகம் திரும்பினாலும் தொடர்ந்து பரிணாமம் அடைந்து வரும் கொரோனா கிருமியின் சமூக பரவலினால் சமீபத்திய சென்னை புத்தக. கண்காட்சி திருவிழா
கூட தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

புத்தக கண்காட்சி ரத்து செய்யப்பட்டாலும் மக்களிடையே புத்தகங்களை கொண்டு சேர்ப்பதை எப்போதும் அறப்பணியாகவே மேற்கொள்ளும்
எமது நிறுவனம் தற்போது வாசகர்களுக்கு பொங்கல் விழாக்கால பரிசாக

"உங்கள் இல்லம் தேடி புத்தகங்கள்" எனும் பெயரில்
ஜனவரி 13 ஆம் தேதி முதல் ஜனவரி 20 ஆம் தேதி வரை

வாசகர்களுக்கு சிறப்பு தள்ளுபடியில் புத்தகங்களை
தூதஞ்சல் (கொரியர்) மூலம் அனுப்பி தர உள்ளது.

இந்த பெருந்தொற்று காலத்தில் பண்டிகைகால விடுமுறையை இல்லத்தில் இருந்தவாறே புத்தகங்களை தூதஞ்சல்( கொரியர்) மூலம்
சிறப்பு தள்ளுபடியில் பெற்று வாசித்து மகிழுங்கள்.

எமது நிறுவனத்தின் புதிய விலைப்பட்டியல் வேண்டுவோர் தங்களது பெயரை கீழே உள்ள எண்ணில் வாட்சப்பில் பதிவு பண்ணுங்கள் விலைப்பட்டியலை அனுப்பித் தருகிறோம்

மேலும் விபரங்கள் மற்றும் தொடர்புக்கு

R . மகேந்திரன்
கிளை மேலாளர்
திருநெல்வேலி கிளை

9487655033 , 8428284545 &
8098712409.

⭐ மார்க்ஸ் - அம்பேத்கர் தொடரும் உரையாடல்⭐ ஆசிரியர் : D. ராஜா                            N. முத்துமோகன்⭐ தமிழில் : ரகு அந...
20/08/2021

⭐ மார்க்ஸ் - அம்பேத்கர் தொடரும் உரையாடல்
⭐ ஆசிரியர் : D. ராஜா
N. முத்துமோகன்
⭐ தமிழில் : ரகு அந்தோணி

மனித குலத்தின் விடுதலைக்கான போராட்டத்தில் கார்ல் மார்க்ஸ் மற்றும் டாக்டர் அம்பேத்கரின் பங்கை விளக்கும் மிகச்சவாலான பணியை இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்கள் மேற்கொண்டுள்ளனர்.
ஆனாலும், சிக்கலான இந்த முயற்சியை ' தொடரும் உரையாடல் ' என்று தன்னடக்கத்துடன் துணைத்தலைப்பில் குறிப்பிடுகின்றனர். இந்த முயற்சி முடிந்துவிடவில்லை, இதன் பின்னரும் தொடருமென்ற உண்மையையும், உறுதியையும் இந்த நூல் வெளிப்படுத்துகிறது.
மார்க்சியக் கருத்தியலுக்கும் அம்பேத்கரியக் கருத்தியலுக்கும் இடையேயுள்ள ஒற்றுமைகளையும், அவற்றின் பொருத்தப்பாடுகளையும் கருத்தில் கொண்டு எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகம் , இவ்விரண்டு சிந்தனைகளும் தோன்றிய வரலாற்றுச் சூழல்களை ஆய்வு செய்கிறது.
வர்க்க - சாதி உறவுகளை விவாதிக்கும் போது, பண்டையச் சூழல்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளையும், இன்று பேசப்படும் அடையாள அரசியலில் பொதிந்திருக்கும் வர்க்க, சாதி நலன்களையும் ஆய்வுக்குட்படுத்துகிறது.
இந்த நோக்கத்தில்தான் மார்க்சியத்திற்கும், அம்பேத்கரியத்திற்கும் இடையே ஓர் உரையாடல் அவசியமென்பதை இந்த நூல் கூர்மையாக வலியுறுத்துகிறது.

⭐நூலின் விலை : 240₹

⭐தொடர்புக்கு : 8098712409
& 8428284545

🏳️‍🌈 செனிக்காவின் நல்வாழ்வுச் சிந்தனைகள் ( The morals of Seneca )ஆசிரியர் : சர் ரோஜர் எல்லஸ்ட்ரேன்ஞ்தமிழில் : முனைவர் கு...
28/07/2021

🏳️‍🌈 செனிக்காவின் நல்வாழ்வுச் சிந்தனைகள் ( The morals of Seneca )

ஆசிரியர் : சர் ரோஜர் எல்லஸ்ட்ரேன்ஞ்

தமிழில் : முனைவர் கு.குணசேகரன்

செனிக்காவின் முழுப்பெயர் லூசியஸ் அன்னேயஸ் செனிக்கா என்பதாகும். இவர் கி.பி மூன்றாம் ஆண்டில் பிறந்தவர். ரோமில் வசித்த இவர் பாய்பிரயஸ் பேபியனஸ், அட்டலுஸ் மற்றும் சோஷன் ஆகியோரிடம் ஸ்டாயிக் தத்துவத்தைக் கற்றறிந்ததோடு தம் வாழ்நாள் முழுவதும் ஸ்டாயிக் கோட்பாடுகளை அனுசரித்து வந்தார்.
மனித வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ்வதற்குத் தேவையான வழிமுறைகளை இப்புத்தகத்தில் செனிக்கா எடுத்துத்துறைக்கிறார்.
மகிழ்ச்சியை எவ்வாறு அடைவது என்பதை சொல்லிவிட்டு மகிழ்ச்சியில் எப்பொழுதும் திளைத்துக் கொண்டிருப்பது பற்றி எச்சரிக்கை செய்வதோடு ஒரு தனி மனிதனின் மகிழ்ச்சி அவன் வாழும் சமுதாயத்தைச் சார்ந்தே இருக்கும் என்றும் கூறுகிறார்.

நூலின் விலை : 125₹

தொடர்புக்கு : 8098712409 & 8428284545

🏳️‍🌈 வன்மம் ( சிறுகதை )ஆசிரியர் :  #பாமா           ' தலித் ' என்பதாலும் பெண் என்பதாலும் இருவித அடக்கு முறைகளுக்கு ஆளாகும...
17/07/2021

🏳️‍🌈 வன்மம் ( சிறுகதை )

ஆசிரியர் : #பாமா

' தலித் ' என்பதாலும் பெண் என்பதாலும் இருவித அடக்கு முறைகளுக்கு ஆளாகும் பெண்ணின் பார்வையில் எழுதப்பட்ட புனைவு.
தலித் பெண்கள் மீது உளரீதியாகவும் உடல்ரீதியாகவும் நிகழ்த்தப்படும் வன்மம் மிக்க தாக்குதல்களை இந்நூலில் எங்கும் காணலாம்.
பொது நிகழ்வுகளில் பலவாறு அவமானப்படுத்தப்பட்டும் சமூகவெளியில் பலவித அடக்குமுறைகளுக்கும் ஆளாக நேரும் தலித் சமூகப் பெண்கள் இந்த இழி நிலையிலிருந்து வெளியேறுவதற்கு கல்வியறிவு மிக மிக அவசியம் என்பதை இந்நூல் வலியுறுத்திச் சொல்கிறது.

📘நூலின் விலை : 140₹

📱தொடர்புக்கு : 8098712409 & 8428284545.

🏳️‍🌈 ஒரு தாத்தாவும் எருமையும் ( சிறுகதை )ஆசிரியர் :  #பாமா        ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் வாழ்வை நேரடி சாட்சியங்களாக ...
17/07/2021

🏳️‍🌈 ஒரு தாத்தாவும் எருமையும் ( சிறுகதை )

ஆசிரியர் : #பாமா

ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் வாழ்வை நேரடி சாட்சியங்களாக அடையாளப்படுத்தியும் ஆவணப்படுத்தியும் தொடர்ந்து எழுதி வரும் எழுத்தாளர் பாமா, சாதியச் சமூகத்தால் பெண்கள் அனுபவிக்கும் இன்னல்களையும் ஆற்றாமைகளையும் விரித்தெழுகிய முப்பது சிறுகதைகளின் தொகுப்பு அனுபவபூர்வமாக தாமறிந்த மனிதர்களை கதைமாந்தர்களாக்கி உலவ விட்டுள்ள இக்கதைகள் எளிதில் கடக்க இயலாத தன்மையைக் கொண்டவை.

📘நூலின் விலை : 225₹

📱தொடர்புக்கு : 8098712409 & 8428284545

🏳️‍🌈 மனுசிஆசிரியர் :  #பாமா          ஆணாதிக்கச் சமுதாயத்தில் பெண்ணொருத்தி குடும்பம் என்ற அமைப்புக்குள் இல்லாமல் தனி மனுச...
17/07/2021

🏳️‍🌈 மனுசி
ஆசிரியர் : #பாமா

ஆணாதிக்கச் சமுதாயத்தில் பெண்ணொருத்தி குடும்பம் என்ற அமைப்புக்குள் இல்லாமல் தனி மனுசியாக வாழ்ந்தால் என்னவாகும் என்பதை, அனுபவித்தால்தான் தெரிந்துகொள்ள முடியும்.
அப்படியொரு பெண் தனியாளாக வாழ்கையை எதிர்கொண்டதன் அனுபவத்தைச் சொல்வதுதான் இந்த ராசத்தியின் கதை.
இந்தப் பரிசோதனை வாழ்க்கை அவளுக்கு நிறைவான நம்பிக்கையையும் சக்தியையும் தந்து அவளைப் பலப்படுத்தி இருப்பதை அனுபவித்து ஆனந்தமடைந்திருக்கிறாள். அந்த அனுபவமே இந்த 'மனுசி.'

📘நூலின் விலை : 200₹
📱தொடர்புக்கு : 8098712409 & 8428284545.

🏳️‍🌈 தவுட்டுக் குருவி ( சிறுகதை )ஆசிரியர் :  #பாமா              போராடுதல் என்ற கருத்தை விட்டுக்கொடுக்காமல் வாழ்தல், குறி...
17/07/2021

🏳️‍🌈 தவுட்டுக் குருவி ( சிறுகதை )

ஆசிரியர் : #பாமா


போராடுதல் என்ற கருத்தை விட்டுக்கொடுக்காமல் வாழ்தல், குறிப்பாக சக மனிதருடன் வாழ்தல் என்பதன் அடிப்படைகள் என்னவாக இருக்க முடியும் என்பது குறித்து பாமா இக்கதைகளின் வழி யோசிப்பதாகக் கொள்ளலாம். சில பொழுதுகள், கணங்கள், சில அனுபவங்களில் தெளிவு பெற வாய்ப்புள்ளன என்ற ரீதியில் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள சில கதைகளை வித்தியாசமாகப் படைத்துள்ளார் என்று கூடச் சொல்லலாம்.

கல்வி, குழந்தைகள் , சாதி, சமுதாய உளவியல், அன்றாட வாழ்வில் சாதியத்தைத் தொலைத்தல் - இவற்றில் அக்கறையுடையவர்கள் இந்தத் தொகுப்பை விரும்பிப் படிப்பர்.

📘நூலின் விலை : 195₹
📱தொடர்புக்கு : 8098712409 & 8428284545.

🏳️‍🌈 சங்கதி ஆசிரியர்:  #பாமா       தலித் பெண் குழந்தைகளின் பிறப்பு, வளர்ப்பு, விளையாட்டு, சடங்குகள், தலித் பெண்களின் மத ...
17/07/2021

🏳️‍🌈 சங்கதி
ஆசிரியர்: #பாமா

தலித் பெண் குழந்தைகளின் பிறப்பு, வளர்ப்பு, விளையாட்டு, சடங்குகள், தலித் பெண்களின் மத மாற்றம், வாழ்க்கை முறை, உழைப்பு, படிப்பு, கோவில்,திருவிழாக்கள், நாடகம், பொழுது போக்கு, குடும்பக் கட்டுப்பாடு, குருட்டு நம்பிக்கைகள், பேய் பிடித்து ஆடுதல், கணவன் - மனைவி சண்டைகள், பெண்களின் இழிநிலை, மணமுறிவு, மறுமணம் பற்றிய மரபுகள், தலித் மக்கள் மீதான ஆதிக்கசக்தி மக்களின் அடக்கு முறைகள், தலித் இனப் பெருமைகள் போன்ற அச்சு அசலான வாழ்வனுபவங்கள் வாசகர் கண்முன் சித்திரங்களாக விரிகின்றன.

இந்நாவல் தலித் இனத்தின் எழுச்சிக் குமுறல். தலித் மக்கள் வாழ்ந்த பொருளாதார, கலாச்சார, சமூகச் சூழலிலிருந்து பெற்ற அனுபவங்களை ஆய்வுக்கு உட்படுத்தி எழுச்சிமிக்க தலித் கழகப் பண்பாட்டிற்கு வாசகர்களை இட்டுச் செல்கிறது இச் ' சங்கதி '

📘நூலின் விலை : 110₹

தொடர்புக்கு : 8098712409 & 8428284545

🏳️‍🌈 சங்கதிஆசிரியர் :  #பாமா  "என் கதை, உன் கதை, உங்கள் கதை" என்னும் பாணியிலே தன் பிறப்பு, வளர்ப்பு, வாழ்ந்த விதம் இவை ப...
17/07/2021

🏳️‍🌈 சங்கதி
ஆசிரியர் : #பாமா

"என் கதை, உன் கதை, உங்கள் கதை" என்னும் பாணியிலே தன் பிறப்பு, வளர்ப்பு, வாழ்ந்த விதம் இவை பற்றிக் கூறுவதன்வழி தனது தலித் இனத்தின் வரலாற்றையே படம் பிடித்துக் காட்டுகிறார் இந்நூல் ஆசிரியர்.
சமுதாயமும் சமயமும் சாதிவெறி வளர்த்து சொல்லொண்ணாக் கொடுமைகளைச் சாதித்து வந்தது உண்மையென்றாலும், அதன் மத்தியிலும் உயிரோட்டத்தோடு, தன்மான உணர்வோடு, இன எழுச்சியோடு தலைநிமிர்ந்து நின்று எதிர் நீச்சல் போடுவோம் என்ற உள்ளத்து உறுதி இந்நூலின் ஒவ்வொரு ஏட்டிலும் குதித்தெழுகின்றது.
தலித் மக்களுக்கு தமிழகக் கத்தோலிக்க திருச்சபையிலே இழைக்கப்பட்டு வரும் அநீதிகளைக் கண்டு குமுறும் நாம் அவற்றின் வரலாற்றுப் பின்னணியை ஒரு சிறிது அறிவதற்கும் இந்நூல் துணை நிற்கும்.

📘நூலின் விலை : 110₹

📱தொடர்புக்கு : 8098712409 & 8428284545.

🏳️‍🌈 புத்துமண் ( சுற்றுச்சூழல் நாவல் )ஆசிரியர் :  #சுப்ரபாரதிமணியன்                   புத்துமண் - மணியன் என்ற சமூக ஆர்வல...
10/07/2021

🏳️‍🌈 புத்துமண் ( சுற்றுச்சூழல் நாவல் )

ஆசிரியர் : #சுப்ரபாரதிமணியன்

புத்துமண் - மணியன் என்ற சமூக ஆர்வலர் போராளியை மையமாகக் கொண்டு பின்னப் பட்டுள்ளது. இதில் தொழிலாளர் சுரண்டல் , சுற்றுச்சூழல் சுரண்டல், சாதிய ஆதிக்க வெறியின் அட்டகாசம், வறண்டுபோன மனிதாபிமானம் முதலியவற்றின் வெளிப்பாடுகளை இலக்கியமாகப் பார்க்கலாம். இது இன்றைய போராளி அரசின் அடக்குமுறை ஆதிக்க சக்திகளின் வெறியாட்டம், இவற்றிற்கு இடையே தன் உடலையும் உயிரையும் பணயம் வைத்துத்தான் போராட்டத்தை முன்னெடுத்து செல்ல முடியும் என்பதை மறைமுகமாகச் சொல்கிறது.

📙நூலின் விலை : 125₹
தொடர்புக்கு : 8098712409 & 8428284545

Address

Tirunelveli
627001

Opening Hours

Monday 9:30am - 8pm
Tuesday 9:30am - 8pm
Wednesday 9:30am - 8pm
Thursday 9:30am - 8pm
Friday 9:30am - 8pm
Saturday 9:30am - 8pm

Telephone

+919487655033

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ncbh Tvl posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ncbh Tvl:

Shortcuts

Share

Category