23/09/2021
குப்பைமேனி கீரை பொரியல்:
தேவையான பொருட்கள்:
குப்பைமேனி கீரை- தேவையான அளவு
வெங்காயம் (சிறிய/பெரிய) - 2
பூண்டு - 1 (உரித்தது)
துவரம் பருப்பு-சிறிதளவு வேக வைத்தது
உப்பு -தேவையான அளவு
தேங்காய்- தேவையான அளவு துருவியது.
தாளிக்க:
கடுகு, உளுத்தம் பருப்பு-1/4 tsp
காய்ந்த மிளகாய் - 2, 3 (கட் செய்தது )
செய்முறை:
ஸ்டெப் 1: முதலில் குப்பைமேனிக் கீரையை நன்கு அலசி எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அவற்றை சிறிது சிறிதாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஸ்டெப் 2: வாணலியில் சிறிது எண்ணைவிட்டு அவற்றில் கடுகு ,உளுத்தம்பருப்பு இவற்றை விட்டு நன்கு வதக்கவும். கடுகு நன்கு சிவந்தவுடன் காய்ந்த மிளகாயை போட்டு நன்கு வதக்கவும்.
ஸ்டெப் 3: காய்ந்த மிளகாய் நன்கு வதக்கிய உடன் அரிந்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் பூண்டு இவற்றை நன்கு வதக்கி எடுத்துக் கொள்ளவும். நன்கு வதங்கியவுடன் குப்பைமேனிக் கீரையை வாணலியில் சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும் .
ஸ்டெப் 4: கீரை நன்கு வெந்தவுடன் வேகவைத்து எடுத்து வைத்துள்ள துவரம்பருப்பை சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு துருவிய தேங்காயை சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும். இப்பொழுது சுவையான , ஆரோக்கியமான குப்பைமேனி கீரை பொரியல் தயார்.
குறிப்பு:
* இந்த குப்பைமேனி கீரை பொரியலை வெறும் சாதத்துடன் பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும். மருத்துவகுணம் நிறைந்ததும் கூட. ஆகவே இந்த கீரை பொரியலை அனைவரும் செய்து தன்னுடைய ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன்.
* என்னுடைய அடுத்த பதிவில் குப்பைமேனியின் ஆரோக்கியமான மகத்துவமான குணங்களைப் பற்றி எடுத்துரைக்கிறேன் படித்து பயன் பெறுங்கள். நன்றி!