SKA Arumugam pillai naatu marundhu kadai

SKA Arumugam pillai naatu marundhu kadai Siddha and ayurvedic medicines seller Seller of siddha and ayurvedic medicines..

16/08/2022

Click my page as

https://www.facebook.com/skasiddha/

You can get regular tips and updates from Ayurveda and you can get healthy life by using it..!

மற்ற எல்லா வகை நட்ஸ்களையும் விட சற்று சுவையிலும் ஆரோக்கிய விஷயத்திலும் வேறுபட்டது வால்நட் என்னும் அக்ரூட். இது உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைத்து உடலுக்கு ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் முதல் இடத்தை பிடித்துள்ளது என்று கூட கூறலாம். இந்த வால்நட்டை என்னும் அக்ரூட்டை ஊறவைத்து காலையில் சாப்பிடுவது இன்னும் கூடுதல் நன்மையைத் தரும். இதுகுறித்து இந்த தொகுப்பில் விளக்கமாகப் பார்க்கலாம். ஊறவைத்த வால்நட்டை சாப்பிடுவதன் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
​

வால்நட் என்னும் அக்ரூட் பருப்பில் மிக அதிக அளவிலான ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறைந்திருக்கிறது. அதேபோல் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிக அளவில் உள்ளது. குறிப்பாக பாலிபெனால் என்ற ஆன்டி ஆக்சிடன்ட் மிக அதிகம். இந்த ஆன்டி- ஆக்சிடண்ட் கொழுப்பை எளிதில் கரைக்கக்கூடிய ஆற்றல் கொண்டது. மற்ற நட்ஸ் வகைகளை விட கசப்பாக இருக்கும், எனவே இதன் சுவை பிடிக்காதவர்கள் தேனில் கலந்து சாப்பிடலாம். ஊறவைத்து சாப்பிடும்போது சற்று கசப்புத் தன்மை நீங்கியதாகவே இருக்கும்.

​வால்நட்ஸியில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:

கொழுப்பு – 0 கிராம்

சோடியம் – 0.2 மில்லி கிராம்

பொட்டாசியம் – 441 மில்லி கிராம்

புரதச்சத்து – 15 கிராம்

விட்டமின் ஏ, விட்டமின் டி, விட்டமின் பி12 மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் இந்த வால்நட்டில் உள்ளது.

​மூளையின் செயல்பாடு:

வால்நட்டில் உள்ள புரதச்சத்து மற்றும் வைட்டமின் சத்துக்கள் அனைத்தும் இரத்தத்தில் கலந்து மூளையின் ஆற்றலை நன்றாக செயல்படத் தூண்டுகிறது. அதனால் வளரும் குழந்தைகளுக்கு இந்த வால்நட்ஸை தினமும் 5 வீதம் காலையில் எழுந்ததும் சாப்பிடக் கொடுக்கலாம்.

இதில் உள்ள ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் அமிலம் ஞாபக மறதியைப் போக்கி நினைவுத் திறனை அதிகரிக்கச் செய்கிறது.

​மார்பகப் புற்றுநோய்:

தினமும் ஊறவைத்த வால்நட்ஸை பெண்கள் சாப்பிடுவதன் மூலம் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க முடியும். அதோடு வால்நட்ஸ் கணைய புற்றுநோயின் அபாயத்தைத் தடுப்பதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆகவே புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து விடுபட வேண்டுமானால், தினமும் வால்நட்ஸை தவறாமல் சாப்பிட்டு வரலாம்.

​நோயெதிர்ப்பு ஆற்றல்:

அக்ரூட் பருப்பில் அதிக அளவிலான புரதச்சத்தும் நல்ல கொழுப்பும் இருப்பதால் இது உடலுக்கு அதிகப்படியான ஆற்றலைக் கொடுக்கிறது. வால்நட்ஸை காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். இதனால் நம் உடலில் எந்த ஒரு நோய் தொற்றுகளும் அவ்வளவு எளிதாக தாக்கிவிட முடியாது.

​தூக்கமின்மை:

சிலர் இரவில் தூக்கமின்மை பிரச்சனையால் அதிகம் அவஸ்தைபடுவார்கள். குறிப்பாக ஷிப்ட் மாற்றி வேலை செய்பவர்கள் பலருக்கும் இந்த பிரச்சினை இருக்கும். அப்படி தூக்கமின்மையால் அவதிப்படுகிறவர்கள் தினமும் இரவில் கூட சாப்பிட்ட பின் பாலில் சேர்த்தோ அல்லது தனியாகவோ அக்ரூட்டை எடுத்துக் கொள்ளலாம். தூக்கமின்மை பிரச்சினை நீங்கி நல்ல ஆழ்ந்த தூக்கத்தைப் பெற முடியும்.

​வயதான தோற்றத்தை தடுக்கும்
வால்நட்ஸ் உடல் வறட்சியைப் போக்கும். நெற்றி மற்றும் சருமத்தில் ஏற்படும் சருமச் சுருக்கத்தைப் போக்கக் கூடிய ஆற்றல் கொண்டது. சருமத்தை எப்பொழுதும் ஈரப்பதத்துடன் வைத்து கொள்ளும். எனவே தினமும் அக்ரூட் பருப்புகளை சாப்பிடுவதன் மூலம் உடல் வறட்சியினால் ஏற்படும் தோல் சுருக்கம் பிரச்சனை சரியாகும். சில துளிகள் பால் சேர்த்து சில வால்நட்ஸ் சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து, சருமத்துக்கு ஸ்கிரப்பாகக் கூட பயன்படுத்தலாம். சருமத்தில் உள்ள மாசுக்கள் மற்றும் கருந்திட்டுக்களை அகற்றும் ஆற்றல் கொண்டது.

​அஜீரணக் கோளாறை தடுக்கும்
உடலில் ஏற்படும் எல்லா வகை பிரச்சினைகளுக்குமே அடிப்படையில் மலச்சிக்கல் ஒரு காரணமாக இருக்கும். அதற்கு காரணம் அஜீரணக் கோளாறு தான். இத்தகைய செரிமான பிரச்சனையால் பாதிக்கப்படுபவர்கள் தினமும் வால்நட்ஸ் சாப்பிட்டு வருவதினால் செரிமான பிரச்சனை சரியாகும். மேலும் வயிற்றில் சுரக்கும் அமிலங்களையும் சீராக்கும்.

​பித்தப்பை கற்கள்:

பித்தப்பைகளில் உள்ள கற்களை கரைக்கும் தன்மை இந்த அக்ரூட்டுக்கு உண்டு. எனவே பித்தப்பையில் கற்கள் உள்ளவர்கள் இந்த ஊறவைத்த வால்நட்ஸை தினமும் சாப்பிடுவதன் மூலம் பித்தப்பை கற்கள் படிப்படியாக கரைய ஆரம்பிக்கும். குறிப்பாக வலியின்றி கற்கள் வெளியேறும்.

​எடை குறைக்க:

உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பொதுவாக தங்களுடைய உணவில் கார்போ1ட்ரேட் அளவைக் குறைத்துக் கொண்டு அதிக அளவிலான புரதத்தை எடுத்துக் கொள்வதுண்டு. அதற்கான நட்ஸ் அதிகமாக சாப்பிடுவார்கள். அப்படி எடுத்துக் கொள்ளும்போது மற்ற நட்ஸ்களைக் காட்டிலும் நீங்கள் உங்கள் டயட்டில் அதிகமாக அக்ரூட்டை எடுத்துக் கொள்ளலாம். இது நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காமல் பார்த்துக் கொள்ளும். இதனால் உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.

​தலைமுடி பிரச்சினைகள்
அக்ரூட்டில் அதிக அளவில் பயோட்டின் என்னும் வைட்டமின் பி7 ஊட்டச்சத்து நிறைந்து காணப்படுவதால், இது தலைமுடியின் வலிமையை அதிகரித்து, தலைமுடி உதிர்வதைக் குறைக்கிறது. தலை முடியின் வளர்ச்சியை அதிகரிக்கிறது.

இது போன்று மேலும் பல சித்த மருத்துவம் சார்ந்த குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Click my page ashttps://www.facebook.com/skasiddha/You can get regular tips and updates from Ayurveda and you c...
20/05/2022

Click my page as

https://www.facebook.com/skasiddha/

You can get regular tips and updates from Ayurveda and you can get healthy life by using it..!

கடல் பாசிகளும் அதன் மருத்துவ பயன்களும்...!

பூமியில் வளரும் பல தாவரங்கள் மூலிகைகளாகப் பயன்படுவதை போன்று கடல் தாவரங்களான பாசிகளும் மருந்தாகப் பயன்படுகிறது.
கிரேசி, லேரியா, அசிரோசா போன்ற பாசிகளிலிருந்து ‘அகார் அகார்’ என்னும் பொருள் கிடைக்கிறது. இது ரொட்டி, பாலாடைக் கட்டி முதலியவற்றைப் பதப்படுத்தவும், இறைச்சி, மீன் முதலியவற்றை டின்களில் அடைத்துப் பதப்படுத்தவும் பயன்படுகிறது.

ஸ்பைருலினா பாசியில் புரதம் முதலான சத்துக்கள் அதிகம். எளிதில் ஜீரணம் ஆகக்கூடியது. நீரிழிவு நோயாளிகட்குத் தேவையான சக்தியை அளிப்பதாகவும், புற்றுநோய், எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவாமல் தடுக்க இது உதவுவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.

கிப்னியா நிடிபிகா என்னும் கடல் பாசி பலவகையான வயிற்றுத் தொல்லைகளுக்கும் தலைவலிக்கும் மருந்தாகின்றன. துர்வில்லியா என்னும் கடல்பாசி தோல் நோயை குணப்படுத்துகிறது. பொதுவாக, கருத்தரிப்பதில் தைராய்டின் பங்கும் மிக அதிகம். சரியான அளவில் தைராய்டு சத்து இல்லை எனில் கருத்தரிப்பு நிச்சயம் தாமதமாகும். உணவில் மீன்கள், கடல் கல்லுப்பு ‘அகார் அகார்’ எனும் வெண்ணிறக் கடல் பாசி சேர்ப்பது தைராய்டு சீராக்கிட உதவிடும்.

கெல்ப் என்ற கடற்பாசி ஏராளமான தாதுக்களையும், விட்டமின்களையும் மற்றும் ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. இந்த கெல்ப் தாவரத்தில் உள்ள ஒவ்வொரு சத்தும் நமக்கு எந்த வகையில் உதவுகிறது மேலும் இதை எப்படி சமையல்களில்


சிலவகைப் பாசிகளை கொண்டு புற்றுநோய், சர்க்கரை நோய், காசநோய், மூட்டு வலி, இரும்பு சத்து குறைபாடு உள்ளவர், மாதவிடாய் சார்ந்த நோய்கள் மற்றும் வெள்ளைபடுதல் போன்றவை தடுக்கப்படும். கடல் பாசியானது அதிகளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகி வருகிறது.


சிலவகை கடல் பாசிகள் மருத்துவ பயன்கள் உடையது. குடல் மற்றும் அல்சர்க்கு நல்லது. உடல் சூட்டை தணிக்கும். இதில் வைட்டமின், மினரல் மற்றும் புரோடீன் நிறைந்து இருக்கிறது.

இது போன்று மேலும் பல சித்த மருத்துவம் சார்ந்த குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Click my page ashttps://www.facebook.com/skasiddha/You can get regular tips and updates from Ayurveda and you c...
24/03/2022

Click my page as

https://www.facebook.com/skasiddha/

You can get regular tips and updates from Ayurveda and you can get healthy life by using it..!

தாமரை விதை:

தாமரை விதை பெரும்பாலும் விரதத்தின்போது மக்களால் உண்ணப்படும் ஒரு உணவு. இதில் நிறைந்துள்ள ஆற்றல் விரத நேரங்களில் மக்களை சோர்வடையாமல் வைத்திருக்க உதவுகிறது. மேலும் இது எடை இழப்பிலும் அதிக அளவில் உதவுகிறது. நீண்ட நேரம் பசியை தூண்டாமல் இருப்பதன் மூலம் நாம் அதிக கலோரிகளை உட்கொள்வதிலிருந்து இது நம்மைப் பபாதுகாக்கிறத.

விரதத்தின் போது இந்த உணவு உட்கொள்ளப்படுவதற்கான முக்கிய காரணம், இதில் அதிக அளவில் ஆற்றல் ஆதாரமாக உள்ளது. இதனால் விரதத்தின் போது விரதம் இருப்பவர்கள் ஆற்றலுடன் இருக்க இது உதவுகிறது. மேலும் இது எடை இழப்பிலும் உதவுகிறது, அது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் .

​எடை இழப்பு:

இதில் புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகமாக நிறைந்துள்ளது. இதனால் இது ஒரு ஆரோக்கிய உணவாக கருதப்படுகிறது. இதிலுள்ள புரதச்சத்து நீண்ட நேரம் நமக்கு பசியை ஏற்படுத்தாது. பசியை கட்டுப்படுத்துவதன் மூலம் அதிக கலோரிகளை உட்கொள்ளுவதிலுருந்து நம்மை பாதுகாக்கறது.

​சிற்றுண்டி நேரத்தில்:

இந்த உணவை பச்சையாகவும் சாப்பிடலாம் அல்லது உப்பு மற்றும் கருப்பு மிளகு சேர்த்து சமைத்தும் சாப்பிடலாம். இதில் நிறைந்துள்ள பல ஆரோக்கிய நன்மைகள் காரணமாக இது ஒரு ஆரோக்கியமான சிற்றுண்டியாக கருதப்படுகிறது. இந்த உணவை காலையில் அல்லது மதியம் என ஏதேனும் ஒரு வேளை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

​ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள்:

மக்கானாக்களில் பிளேவனாய்டுகள் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக நிறைந்துள்ளன. மேலும் இது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது. அதுமட்டுமல்லாமல் இது சரும ஆரோக்கியத்தையும் ஊக்குவிக்கிறது.

​ரத்த சர்க்கரை அளவை மேம்படுத்த:

இதில் குறைந்த அளவில் கிளைசெமிக் குறியீடு என் உள்ளது. ஆரோக்கியமான ரத்த குளுக்கோஸ் அளவை ஒழுங்குபடுத்துவதில் இது பெரும் பங்கினை கொண்டுள்ளன என்பதை பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

​எலும்பு ஆரோக்கியம்:

இதில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. எனவே இது எழும்பு ஆரோக்கியத்தை பராமரிக்க மிகவும் அத்தியாவசியமான ஊட்டச்சத்துகள் ஆகும். எலும்புகள், பற்கள் மற்றும் மூட்டு பிரச்சினை போன்ற நிலைமைகளை சரிசெய்ய உங்கள் உணவில் நீங்கள் இந்த மக்கானாக்களை சேர்த்துக்கொள்ளலாம்.

மக்கானாவில் உள்ள ஊட்டச்சத்துக்கள்தாமரை விதை சாப்பிடுவதன் பயன்கள்எலும்பு ஆரோக்கியத்துக்கு தாமரை விதைஎடை இழப்புக்கு உதவும் தாமரை விதை.

இது போன்று மேலும் பல சித்த மருத்துவம் சார்ந்த குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Click my page ashttps://www.facebook.com/skasiddha/You can get regular tips and updates from Ayurveda and you c...
21/02/2022

Click my page as

https://www.facebook.com/skasiddha/

You can get regular tips and updates from Ayurveda and you can get healthy life by using it..!

செக்கு, மரச்செக்கு... இந்த இரண்டு எண்ணெய்க்குமே வித்தியாசம் இருக்கு...

`வைத்தியனுக்குக் கொடுப்பதை வாணியனுக்குக் கொடு' என்பது பழமொழி. அந்நாள்களில் எண்ணெய் என்பது உடலுக்கு ஒரு மருந்தாக இருந்ததற்காகச் சொல்லப்பட்ட பழமொழிதான் இது. கண்ட எண்ணெய்களைப் பயன்படுத்தி, நோய்வாய்ப்பட்டு மருத்துவருக்குக் காசு செலவழிப்பதைவிட, வணிகருக்குக் கொடுத்துவிடலாம் என்பது இதன் அர்த்தம். முன்னர், கடலை, எள், தேங்காய், ஆமணக்கு போன்ற பயிர்களைப் பயிரிட்டு வீட்டு உபயோகத்திற்குப் போக மீதமிருப்பதை மரச்செக்குகளில் ஆட்டி செக்கு எண்ணெய்யாக விற்பனை செய்வார்கள் அல்லது வீட்டு உபயோகங்களுக்கு வைத்துக்கொள்வார்கள். சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை மரச்செக்கு வழக்கில் இருந்தது. அப்போது மக்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கி செக்கில் அரைத்து எண்ணெய்யாக நேரடியாக மாற்றிக் கொள்வர். நவீன எண்ணெய் பிரித்தெடுக்கும் இயந்திரங்கள் வந்த பின்னர், செக்குகள் பக்கம் மக்கள் செல்வதை குறைத்துக் கொண்டனர். அதன் விளைவு, மரச்செக்குகள் குறைந்து இன்று செக்குகளைக் காண்பதே அரிதாகி விட்டன. ஆனால் இப்போது ஏற்பட்டுள்ள விழிப்புஉணர்வு காரணமாக மீண்டும் மரச்செக்கை நாட ஆரம்பித்திருக்கிறோம்.

மரச்செக்கு

`செக்கு' எண்ணெய் வேண்டும் என்று பலரும் வாங்கி உபயோகித்து வருகிறார்கள். அவை அனைத்தும் உண்மையான செக்கு எண்ணெய்யா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். செக்கு எண்ணெய் என்பதற்கும் மரச்செக்கு எண்ணெய்க்கும் அதிக வித்தியாசம் இருக்கிறது.

செக்கில் இரும்புச் செக்கு, மரச்செக்கு என இரு வகைகள் உண்டு. இரும்புச் செக்கை ரோட்டரி என்றும் சொல்வர். இரும்புச் செக்கு முழுமையாக இரும்பில் அமைக்கப்பட்டிருக்கும். இதில் இணைக்கப்பட்டுள்ள மோட்டார் திறன் 15 எச்.பி திறனைக் கொண்டிருக்கும். அதனால் சுமார் 300 டிகிரி வெப்பத்தில் அரைக்கும். 15 எச்.பி திறனைக் கொண்டிருக்கும் மோட்டார் மூலம், செக்கின் உலக்கைப் பகுதி ஒரு நிமிடத்திற்கு 34 முதல் 36 சுற்றுகள் சுற்றும். இந்த வேகமும், அதிகமான வெப்பநிலையும் அரைக்கும் தானியத்தின் உயிர்த் தன்மையை நிச்சயமாகப் பாதிக்கும். இதையும் பலர் செக்கு எண்ணெய் என்று வாங்கிப் பயன்படுத்துகிறார்கள். இதனால் உடலுக்கு முழுச் சத்துகளையும் கொடுக்க முடியாது. ஆனால் கலப்பட எண்ணெய்களிலிருந்து தப்பிக்க இதுவும் ஒரு வழிதான். பலர் செக்கு எண்ணெய் என்றால் அது மரச்செக்கு எண்ணெய் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம்.

மரச்செக்கின் கீழ்ப்பகுதியும், உலக்கையும் நிச்சயமாக மரங்களில் செய்யப்பட்டிருக்கும். இதனுடன் 3 எச்.பி திறன் கொண்ட மோட்டார் இணைக்கப்பட்டிருக்கும். இச்செக்கின் உலக்கை ஒரு நிமிடத்துக்கு 10 முதல் 14 சுற்றுகள் வரை சுற்றும். இதனால் மரச்செக்கில் எண்ணெய் ஆட்டும்பொழுது அதிகபட்சம் 35 டிகிரி வரை வெப்பம் உருவாகும். அதனால், இந்த எண்ணெய்யில் உயிர்ச் சத்துகள் ஒருபோதும் அதன் தன்மையை இழக்காது. இது முழுமையாக நமது உடலுக்கும், உயிருக்கும் முழுயான நன்மை கிடைக்கும்.

ரோட்டரி செக்கு எண்ணெய்களோடு ஒப்பிடும்போது மரச்செக்கு எண்ணெய் விலை கொஞ்சம் அதிகம்தான். உடலுக்குத் தகுந்த எண்ணெய் உருவாக்க, பக்குவம், நேரம், செலவு சற்றுக் கூடுதலாகத்தான் ஆகும். எண்ணெய் என்ற பெயரில் ஏதோ ஒரு பொருளை உருவாக்க முன்னர் சொன்ன மூன்றுமே தேவையில்லை. சரியில்லாத உணவை எடுத்துக்கொண்டு கொழுப்பு ஏறி, மருத்துவரிடம் சென்று மாத்திரை, மருந்து இவற்றிற்குச் செலவு செய்வதை விட, மரச்செக்கு எண்ணெய்க்குக் கொஞ்சம் கூடுதலாகப் பணம் கொடுத்து வாங்கினால் தவறில்லை என்பதை உணர மறுக்கிறோம். மரச்செக்கில் எண்ணெய் ஆட்டும்போது பயிர்களைக் காய வைத்து, கல், தூசு நீக்கியே மரச் செக்கில் ஆட்டப்படுகிறது. கற்களை நீக்காமல் ஆட்டினால் மரத்தால் ஆன உலக்கையும், அடிப்பாகமும் சேதமாகும். ஆனால் ரோட்டரி செக்குகள் முழுவதும் இரும்பால் ஆனதால் கல் இருந்தாலும் கவலையில்லை. சுத்தமான மரச்செக்கு எண்ணெய்யா என உறுதி செய்து கொள்ள, எண்ணெய் பாட்டில் வாங்கும்போது அதைத் தலைகீழாக ஒரு முறை திருப்பிப் பார்க்கலாம். கறுப்பாக கசடுத் துகள்கள் தென்படும். அப்போது அதை உண்மையான செக்கு என்பதை உறுதிசெய்து கொள்ளலாம்.

ரோட்டரி செக்கு

நம் முன்னோர்கள் செக்கில் பிழிந்தெடுக்கும் எண்ணெய்யை அப்படியே பயன்படுத்தி வந்தனர். அவர்கள் ஒரு கிண்ணம் நல்ல எண்ணெய்யைக் குடிக்கும் வழக்கத்தையும் கடைப்பிடித்தே வந்திருக்கின்றனர். அப்போது ஏற்படாத கொழுப்புச் சத்து ஏன் இப்போது ஏற்படுகிறது என்ற கேள்வியும் இங்கே எழுகிறது. காரணம், அவர்கள் பயன்படுத்தியது மரச்செக்கு எண்ணெய். உடலுக்கு நன்மை தரும் பல பாரம்பர்ய முறைகளைக் கைவிட்டு இருக்கும் தற்போதைய சூழலில், மரச்செக்கு எண்ணெய்களை வாங்கி உபயோகிப்பதை வழக்கமாகக் கொண்டால், இப்போது இருக்கும் மரச்செக்குகளாவது அழியாமல் பாதுகாக்கப்படும்.

இது போன்று மேலும் பல சித்த மருத்துவம் சார்ந்த குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Click my page ashttps://www.facebook.com/skasiddha/You can get regular tips and updates from Ayurveda and you c...
09/12/2021

Click my page as

https://www.facebook.com/skasiddha/

You can get regular tips and updates from Ayurveda and you can get healthy life by using it..!

நொச்சி, தேங்காய் நார், யூகலிப்டஸ் இலை... கொசுக்களை விரட்ட எளிய வழிமுறைகள்!

மழைக்காலம் என்பதால் நிலத்தில் ஈரப்பதம் எப்போதும் காணப்படும். இதனால் செடி, கொடிகள் அடர்ந்து வளர்ந்திருக்கிறது. ஏற்கெனவே நீர்நிலைகளில் தேங்கியிருக்கும் நீரில் உருவாகும் கொசுக்கள் இப்போது நெருக்கமாக வளர்ந்திருக்கும் தாவரங்களின் துணையோடு பல்கிப் பெருகுகின்றன. கொசுக்கள் வீட்டின் உள்ளே நுழைவதைத் தடுக்க ரசாயன மருந்துகள் பயன்படுத்துவதால் பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படுகின்றன என்பதால் மக்கள் அவற்றைப் பயன்படுத்த தயங்குகின்றனர். இயற்கை வழியில் கொசுக்களை விரட்டும் வழிகளை நாடிச் செல்கின்றனர்.

இயற்கை வழியில் கொசுக்களை எப்படி விரட்டுவது :

நொச்சி இலையைக் காய வைத்து அதை நெருப்பில் போட்டு எரித்து அதன் புகையை மாலை நேரத்தில் கதவு, ஜன்னல் பகுதிகளில் காட்டினால் கொசுக்கள் நுழைவதைத் தடுக்கலாம். தேங்காய் நாரைத் தீயிட்டுக் கொளுத்தினால் கொசுக்கள் அங்கிருந்து விலகிச்செல்லும். வேப்பிலையுடன் வைக்கோல் சேர்த்து எரியூட்டினால் அதிலிருந்து வெளிப்படும் புகையும் கொசுக்களை விரட்டும். மா இலை மற்றும் அதன் பூக்களை நெருப்பிலிட்டு அதன் புகையை வீடு முழுவதும் காட்டினால் கொசுக்கள் நெருங்காது. யூகலிப்டஸ் இலைகளையும் எரித்து அதன் புகையை வீட்டில் பரவவிடலாம்.

``தேங்காய் எண்ணெயை ஒரு கரண்டியில் ஊற்றி சூடாக்கி அதில் கற்பூரம் சேர்த்தால் கரைந்துவிடும். சூடு குறைந்ததும் அந்த எண்ணெயை கைகால் மற்றும் உடல் பகுதியில் தேய்த்தால் கொசுக்கள் நம்மை நெருங்காது. இதேபோல் கிராம்பு தைலம், `சிட்ரோனெல்லா' என்ற வாசனைப்புல் மற்றும் `லெமன்கிராஸ்' எண்ணெய்களில் ஏதாவதொன்றை எடுத்து அதனுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து கைகாலில் பூசினாலும் கொசுக்கள் நம்மை நெருங்காது.

வேம்பு, துளசி, சிறியாநங்கை, நொச்சி, ஆடாதொடை, தும்பை ஆகிய இலைகளை வெயிலில் காய வைத்துப் பொடியாக்க வேண்டும். அதனுடன் சாம்பிராணி, குங்கிலியம் போன்றவற்றைக் கலந்து நெருப்புத்தணலில் போட்டு அதன் புகையை வீடு முழுவதும் காட்டலாம். இலைகளை இப்படி எரியூட்டுவதால் அதை சுவாசிக்கும்போது ஏதும் பிரச்னை வரும் என்று பயப்படத் தேவையில்லை. இவற்றின் புகை ஒவ்வொன்றுக்கும் சில மருத்துவ குணங்கள் இருக்கின்றன என்பதால் தாராளமாகப் பயன்படுத்தலாம்.

சிலவகை செடிகளின் வாசனை கொசுக்களுக்குப் பிடிக்காது என்பதால் அவற்றை வளர்க்கலாம். புதினா, சாமந்தி, துளசி, லெமன்கிராஸ், ரோஸ்மேரி போன்ற செடிகளை வீட்டின் வாசல் பகுதியில் வளர்த்தால் கொசுக்கள் வீட்டின் உள்ளே நுழைவது குறையும். துளசி இலையை அரைத்து நீரில் கலந்து, அதனுடன் சிறிது யூகலிப்டஸ் தைலம் கலந்து வீட்டின் மூலையில் வைத்தால் கொசுக்களின் ஆதிக்கம் குறையும்.

ஒரு பிளாஸ்டிக் பாட்டிலை குறுக்காக வெட்டி அதில் பாதியளவு வெதுவெதுப்பான நீர் ஊற்றிக் கைப்பிடி அளவு சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். அந்தக் கரைசலில் ஒரு டீஸ்பூன் ஈஸ்ட் சேர்த்து வெட்டிய பாட்டிலின் மீதமுள்ள பகுதியை தலைகீழாக வைத்து சுற்றிலும் செல்லோ டேப் அல்லது வேறு ஏதாவது டேப்பைக் கொண்டு சுற்றி வீட்டின் மூலையில் வைக்க வேண்டும். அதிலிருந்து வெளிவரும் எத்தனால், கார்பன்டைஆக்ஸைடு வாயுக்கள் கொசுக்களை ஈர்த்து அந்தப் பாட்டிலில் விழ வைக்கும். தண்ணீரில் விழும் கொசுக்கள் உயிரிழக்கும். அந்த வாயுக்களின் நெடியே கொசுக்களை மயக்கமடையவோ மரணத்தை ஏற்படுத்தவோ செய்யும் தன்மை கொண்டது. இந்தக் கலவையை 15 நாள்களுக்கு ஒருமுறை தயாரித்துப் பயன்படுத்தலாம்'.

இது போன்று மேலும் பல சித்த மருத்துவம் சார்ந்த குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Click my page ashttps://www.facebook.com/skasiddha/You can get regular tips and updates from Ayurveda and you c...
23/11/2021

Click my page as

https://www.facebook.com/skasiddha/

You can get regular tips and updates from Ayurveda and you can get healthy life by using it..!

சளியும் இருமலும் வந்துவிட்டால் நாம் படும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல. கூடவே தொண்டைவலியும் வந்துவிட்டால் அவ்வளவுதான். சில வேளைகளில் உடலில் வெப்பம் அதிகரித்து காய்ச்சலாகவும் மாறிவிடும். பருவநிலை மாறும்போது இவை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். சளி, இருமல் வந்துவிட்டால், அதிலிருந்து இயற்கையான வழிமுறைகளைப் பயன்படுத்தியே மீண்டுவிடலாம். எப்படி?

உப்புநீரில் வாயைக் கொப்பளித்தல்
தொண்டைவலி வந்துவிட்டால், உடனே வெதுவெதுப்பான உப்புநீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். இது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாத இயற்கையான வழிமுறை. தொண்டையில் ஏற்பட்ட வீக்கத்தைக் குறைக்கும்; தொண்டை உறுத்தலை நீக்கும்; சளியையும் குறைக்கும்.

இஞ்சி:
இஞ்சி, வறண்ட இருமலை எளிதில் நீக்கக்கூடியது. ஒரு சிறிய துண்டு இஞ்சியை எடுத்து, அதில் சிறிது உப்பைத் தூவவும். உப்பு கலந்த இஞ்சியை சில நிமிடங்களுக்கு நன்கு மெல்லவும். இஞ்சியோடு துளசி இலையையும் சேர்த்துக்கொண்டால், சளி, இருமலுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

பூண்டு:
நான்கு அல்லது ஐந்து பூண்டுப் பற்களை எடுத்துக்கொள்ளவும். அத்துடன் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றிச் சேர்த்து பூண்டைப் பொரித்து எடுக்கவும். சூடு ஆறுவதற்குள் இதைச் சாப்பிட்டுவிட வேண்டும். பூண்டை நன்றாக நசுக்கி குழம்பு அல்லது சூப்பில் போட்டும் பயன்படுத்தலாம். சளி, இருமலை இயற்கைவழியில் நீக்கும்.

ஆளி விதை:
சிறிது ஆளி விதையை நீரில் கொதிக்கவைத்தால் பசை மாதிரி ஆகிவிடும். இதனுடன் இயற்கை ஆன்டிபயாடிக்குகளான (Antibiotics) எலுமிச்சைச் சாறு மற்றும் தேன் சேர்த்துப் பருகிவர தொண்டை வீக்கம் குறையும்.

கருமிளகு டீ:
கருமிளகு இருமல், சளிக்கு மிக நல்ல மருந்து. கருமிளகு டீ குடிப்பது தொண்டைவலியைக் குறைக்கும். ஒரு கப் வெந்நீரில் இரண்டு டேபிள்ஸ்பூன் தேன், சிறிதளவு கருமிளகு சேர்த்துக்கொள்ளவும். இதை அப்படியே மூடிவைக்கவும். 15 நிமிடங்களுக்குப் பிறகு இதைக் குடிக்கலாம்.

பால் மற்றும் மஞ்சள்:
சூடான பாலில் மஞ்சள் சேர்த்துப் பருகுவது சளியைப் போக்கும். பால் மற்றும் மஞ்சளில் நம் உடலுக்கு நன்மை செய்யக்கூடிய பல பொருட்கள் உள்ளன. பொதுவாகவே, சளி போன்ற பாதிப்புகள் இல்லாத நாள்களிலும் பாலில் மஞ்சள் கலந்து குடிப்பதும் ஆரோக்கியம் தரும். குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் ஏற்றது மஞ்சள் பால்.

எலுமிச்சை சிரப்:
ஒரு வாணலியில் 100 மி.லி தேனை ஊற்றி, அதன் அடர்த்தி குறைகிற வரை சூடாக்கவும். இதனுடன் சிறிது எலுமிச்சைச் சாறு, லவங்கப்பட்டை சேர்த்துப் பயன்படுத்திவர சளி குறையும்.

வெங்காய சிரப்:
ஒரு வெங்காயத்தை உரித்து நன்றாக நசுக்கிக்கொள்ளவும். அதனுடன் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு, தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்கவும். இதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தேன் சேர்த்துக்கொள்ளவும். சூடு ஆறிய பிறகு இதனைக் குடிக்கலாம். வெங்காயம் சளி, இருமலுக்கு மிக நல்ல மருந்து. வெங்காயத்தில் உள்ள ஃபிளேவனாய்ட்ஸ் நிறமி, சளி மற்றும் இருமலை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளுக்கு எதிராகச் செயல்படும் தன்மைகொண்டது.

சளி, இருமல் வந்துவிட்டால் தண்ணீரை சூடாக்கித்தான் குடிக்க வேண்டும். வெந்நீருக்கு தொண்டையில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும் தன்மை உண்டு. இது சளி, காய்ச்சலுக்குக் காரணமான தொற்றுகளை நீக்கவும் உதவும். எனவே, சளி வந்தால் வெந்நீர் அருந்தவேண்டியது கட்டாயம்.

இது போன்று மேலும் பல சித்த மருத்துவம் சார்ந்த குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

04/11/2021
Click my page ashttps://www.facebook.com/skasiddha/You can get regular tips and updates from Ayurveda and you c...
10/10/2021

Click my page as

https://www.facebook.com/skasiddha/

You can get regular tips and updates from Ayurveda and you can get healthy life by using it..!

சாம்பிராணி தூபம் போடுவதால் ஏற்படும் நன்மைகள் - சாம்பிராணி வகைகளின் பலன்கள.

சாம்பிராணி தூபத்தை போடுவதால் நம் வீட்டில் ஏற்படும் நன்மையும், சாம்பிராணியுடன் எந்தெந்த மருத்துவ பொருட்களை எல்லாம் சேர்த்து தூபமிடுவதால் நம் உடலுக்கு மருத்துவ நன்மைகள் என்னென்ன என்பதை இங்கு விரிவாக பார்ப்போம்.

நம் முன்னோர்கள் எதைச் செய்தாலும் அதில் ஒரு முக்கிய காரணம் இருக்கும் என்பதை நாம் தற்போது உணர்ந்து வருகின்றோம். அதன் அடிப்படையில் சாம்பிராணி போடுவது என்பது வீட்டில் வெறும் வாசனைக்காக மட்டும் இல்லை. அதன் பின்னர் பல நன்மைகள் அடங்கியுள்ளது என்பதை பலரும் அறியாமல் உள்ளனர்.

இருப்பினும் குழந்தைகளும், பெண்களும் தலைக்கு குளித்த பின்னர் அவர்களுக்குச் சாம்பிராணி போடுவதும், கோயில், மற்றும் வீட்டில் வழிபாட்டின் போது சாம்பிராணி புகை போடுவதை இன்றும் நாம் கடைப்பிடித்து வருகின்றோம்.

சாம்பிராணி என்பது வெறும் நறுமண புகை கிடையாது. இதனை வீட்டில் போடுவதால் ஒரு ஹோமம் செய்ததற்குரிய பலன் கிடைக்கும்.

சாம்பிராணி போடுவதால் மிக முக்கியமாக நமக்கும், நம் வீட்டிற்கும் ஏற்பட்டிருக்கும் கண் திருஷ்டி, நம் மீதான பிறரின் பொறாமை, திருஷ்டி உள்ளிட்டவை நீங்க.

சரி சாம்பிராணி போடும் போது அதில் எதை எல்லாம் சேர்த்து தூபமிட்டால் என்னென்ன நன்மை உண்டாகும் என்பதைப் பார்ப்போம்.
சாம்பிராணியுடன் அகில் சேர்த்து தூபமிட்டால் குழந்தைப் பேறு உண்டாகும்.

தூதுவளை சேர்த்து தூபமிடும் போதும் வீட்டில் இறைவனின் அருள் நிலைத்து நிறைந்திருக்கும்.
சாம்பிராணியில் சந்தனத்தை சேர்த்து தூபமிட்டால் மகாலட்சுமி கடாட்சம் ஏற்படும்.

அறுகம்புல் பொடியை சாம்பிராணியில் சேர்த்து தூபமிடும் போது சகல தோஷங்களும் நீங்கும்.

சாம்பிராணியுடன் வெட்டிவேரை போட்டு தூபமிட்டால் நாம் நினைத்த காரியம் வெற்றி அடையும்.

வேப்பிலையை சாம்பிராணியில் போட்டு தூபமிட்டால் பல நோய்களிலிருந்து நிவாரணம் பெறலாம்.

சாம்பிராணியுடன் வெண்கடுகை போட்டு தூபமிடுவதால் எதிரிகளும், பகைமையும் விலகும்.

வெண்குங்கிலிய பொடியை சாம்பிராணியில் சேர்த்து தூபமிடுவதால் வீட்டில் இருக்கும் துஷ்ட சக்திகள் வெளியேறும்.

ஜவ்வாதி போட்டு சாம்பிராணி தூபமிட்டால் திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும்.

வேப்பம்பட்டையை சாம்பிராணியில் போட்டு தூபமிடுவதால் பில்லி. சூனியம், ஏவல் உள்ளிட்ட துஷ்ட சக்திகள் விலகும்.

துரோகிகள் நீங்க வேண்டுமெனில் சாம்பிராணியுடன் நாய் கடுகை சேர்த்து தூபமிடுவதால் நன்மை ஏற்படும்.

செயல்களில் வெற்றி உண்டாகவும், திருமண தடை நீங்க சாம்பிராணியில் காய்ந்த துளசியை போட்டு தூபமிடுவது சிறந்தது.
கரிசலாங்கண்ணி பொடியை சாம்பிராணியில் தூவி தூபமிட்டால் மகான்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.

நன்னாரி வேர் பொடியை சாம்பிராணியுடன் சேர்த்து தூபமிட்டால் சகல ஐஸ்வர்யங்கள் உண்டாகும்.
சாம்பிராணியுடன் மருதாணி இலைப் பொடியை சேர்த்து தூபமிடும் போது மகாலட்சுமி அருள் கிடைக்கும்.

Disclaimer/பொறுப்பாகாமை:
All the information on this page is published in good faith and for general information purpose only.
எங்கள் மொழிபெயர்க்கப்பட்ட பக்கங்கள் மற்றும் ஆவணங்களின் உள்ளடக்கம் பொது தகவல் மட்டுமே வழங்கப்படுகின்றன.உத்தரவாதங்கள் எதுவும் இல்லை

இது போன்று மேலும் பல சித்த மருத்துவம் சார்ந்த குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Click my page ashttps://www.facebook.com/skasiddha/You can get regular tips and updates from Ayurveda and you c...
11/09/2021

Click my page as

https://www.facebook.com/skasiddha/

You can get regular tips and updates from Ayurveda and you can get healthy life by using it..!

நாட்டுச்செக்கு எண்ணைகளின் மகத்துவங்கள் பற்றிய குறிப்பு!!

புதிய கண்டுபிடிப்புகள் வரும் சமயங்களில், நாம் இயற்கையாக பயன்படுத்தி வந்ததையெல்லாம், சுத்த பட்டிக்காட்டுத்தனம் என்று ஒதுக்கி, புதியவரவுகளை தலையில்வைத்து கொண்டாடி, அவற்றால் இன்று உடல்நலம் கெட்டு, அதனால் வந்த புத்திமாற்றத்தால், மீண்டும் முன்னோர் வகுத்த பழைய வாழ்வியல்நெறிகளை தேடிப்பிடித்து, பயன்படுத்திவருகிறோம்.

சென்ற அரை நூற்றாண்டுகளில் ஏற்பட்ட நவீன மாற்றங்களால், நாம் இழந்தவைகளில் முக்கியமான ஒன்று, இயற்கை எண்ணைவகைகள். கிராமங்களில் தேங்காயை, நிலக்கடலையை, எள்ளைக் காயவைத்து, மரச்செக்குகளில் ஆட்டி, எண்ணையாக்கி, அவற்றை அன்றாடம் வீடுகளில் பயன்படுத்தி, உடல்நலமுடன் வாழ்ந்தவர்கள் நம் பெரியவர்கள்..

மாடுகள் மூலமும், கைகளாலும் இயக்கப்பட்ட மரச்செக்குகள் பின்னர், விஞ்ஞானவளர்ச்சிகளால், மின்சாரம்மூலம் இயங்கும்படி அமைந்தாலும், நாம் அதை மரச்செக்கு ஆட்டுபவர்களின் சிரமத்தைக்குறைக்க வந்ததாக எண்ணிக்கொண்டோம். வீடுகளில் அப்போது மாவரைக்கும் கிரைண்டர்கள், மெல்ல எட்டிப்பார்த்த சமயமது.

ஆனால், அத்தகைய விஞ்ஞான வளர்ச்சிகள், செக்கு ஆட்டுபவர்களுக்கும், நமக்கும், அவர்களின் வாழ்வாதாரத்தையும், நம் நல்ல உடல்நிலையையும் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்போகும் ஒரு மோசமான நிகழ்வின் முன்னோட்டம், என்று உணரவில்லை.

எண்ணை வித்துக்களை மரச்செக்கில் கடைவதுபோய், மில்களில், இயந்திரங்கள் மூலம் பிழியப்பட்டன. இயந்திரங்களின் சூடும், செயற்கை வாசமும், எண்ணைகளை இயற்கைமணம் வீசும் மரச்செக்கு எண்ணைகளிலிருந்து அதிகம் மாறுபட்டு காண்பித்தாலும், நாட்டுச்செக்கு எண்ணையில் கலப்பட வாய்ப்பு இருந்த காரணத்தால், மக்கள் பாலித்தீன் பாக்கெட்களில் அடைக்கப்பட்டு, வெளிர் நிறத்தில் காணப்பட்ட எண்ணைகளை, பரவலாக வெளிவந்த விளம்பரங்களின் மூலமாக, நூறு சதம் சுத்தமானது, கொழுப்பு நீக்கப்பட்டது, இதயத்துக்கும், உடலுக்கும் நன்மையானது என்ற கவர்ச்சிகர வாசகங்களில் நம்பி, மரச்செக்கு எண்ணையைவிட சற்றே விலையும் குறைவாக இருந்ததால், அவற்றை உபயோகிக்க ஆரம்பித்தனர்.

தேவைகள் அதிகரிக்க, வெளிநாட்டிலிருந்து, பாமாயில் எனும் பனை எண்ணை இறக்குமதி செய்யப்பட்டது. அதன்பின்தான், ஆலை வியாபாரிகள் எண்ணை வியாபாரத்தை, நாட்டு செக்கு வியாபாரிகளிடம் இருந்து முழுமையாகப்பறித்தனர். தொடர்ச்சியான ஆலைஎண்ணைகளின் விளம்பரங்கள் மூலம், மெல்லமெல்ல, நுகர்வோரின் ஆதரவு குறைந்து, நாட்டு எண்ணைகள் உற்பத்தி குறைந்துபோனது.

இந்த காலகட்டத்தில், மருத்துவ வியாபாரிகள் எல்லாம் ஒன்றுகூடி, இந்தியாவில் இதயம்சம்பந்தமான பாதிப்புகள் அதிகரிக்க, நாம் உபயோகிக்கும் நாட்டுச்செக்கு நல்லெண்ணையும், கடலை எண்ணையுமே காரணம் என்று கூறி, அவற்றை உணவில் தவிர்த்து, கொழுப்பு நீக்கப்பட்ட ரீபைண்ட் எண்ணைகளை உபயோகிக்கவேண்டும், என்ற ஒருஅரைவேக்காட்டுத்தனமான அறிக்கையின்மூலம் திரும்பத் திரும்ப பிரசாரம் செய்து, மக்களை பயமுறுத்த, ஒரேயடியாக நாட்டுமரச்செக்குகளின் எண்ணை உற்பத்தி, நின்று போனது.

அதன்பின், சன்பிளவர் எண்ணைகள் உடலுக்கு நலம்பயப்பது, அதில் கொழுப்பு இல்லை, நன்கு சுத்திகரிக்கப்பட்டது, என்ற பிரச்சாரத்தில் இன்றுவரை, அந்த ரீபைண்ட் எண்ணைகள் ஆதிக்கம் செலுத்திவருகின்றன.

ரீபைண்ட் யுகத்தில் மனிதர்களுக்கு அதிக உடல்நல பாதிப்புகள் ஏற்படுத்திய "தாவர நெய்" எனப்படும் டால்டாவும், உபயோகத்தில் இருந்து மறைந்தது, ஒருஆறுதல்தான். அக்காலங்களில், இனிப்பு, பலகாரங்கள் செய்ய, மணத்திற்காகவும், கூடுதல் செலவுபிடிக்கும் பசு நெய்க்கு மாற்றாகவும், வனஸ்பதி எனும், உடலுக்கு அதிகஅளவில் தீமைகள் செய்யும் டால்டாவைப்பயன்படுத்திவந்தனர்.

ஒரு லிட்டர் எண்ணை தயாரிக்க, இரண்டு கிலோவுக்கும் மேல் தானியங்கள் தேவைப்படும் நிலையில், இன்று திரும்பிய பக்கமெல்லாம், சூரியகாந்தி எண்ணைகள் கடைகளில் அதிகஅளவில் குவிந்திருப்பது எப்படி? யோசித்திருக்கிறோமா?

இயற்கைஎண்ணைகளைவிட, மிகக்குறைந்தவிலைகளில் அவை எப்படி கிடைக்கிறது?

சூரியகாந்திஎண்ணை ஒருலிட்டர் தயாரிக்க, குறைந்தபட்சம் மூன்றுகிலோ விதைகள் அல்லது ஐயாயிரம் மலர்கள் தேவைப்படும், எப்படி அதிகஅளவில் தயாரிக்கிறார்கள்?

நம்மிடம் அந்தஅளவு மலர்கள் உள்ளனவா? இதேபோலத்தான் தேங்காயெண்ணை தயாரிப்பும், எப்படி அதிகஅளவில் உற்பத்தி சாத்தியம்? பெட்ரோலிய கழிவிலிருந்து சுத்தம்செய்து எடுக்கப்பட்டு, மினரல் ஆயில் என்ற பெயரில் நம்நாட்டில் அதிகஅளவில் இறக்குமதியாகும் ஒரு பொருள், அனைத்துவகை எண்ணைகளிலும் கலக்கப்படுவதாக நாம் படிக்கிறோமே, அதன் பொருள் என்ன?

இதைவிடக்கொடுமை, தேங்காயெண்ணை எடுக்கப்பயன்படும் கொப்பரைகள் நாள்பட்டால் பூஞ்சைபிடிக்கும் என்ற காரணத்தால், அவற்றின்மேல், கந்தகத்தூள்களை தடவி காயவைத்து எண்ணை எடுக்கிறார்களே, அந்த எண்ணையைத் தலையில் தடவிவந்தால், அதன்மூலம் தலைமுடி உதிராமல், பின் என்னவாகும்?

இருக்கட்டும், "விழித்துக்கொண்டோரெல்லாம், பிழைத்துக்கொண்டார்" எனும் வைர வரிகளுக்கேற்ப, நாம் இப்போதாவது விழித்துக்கொள்வோம், பாரம்பரிய நாட்டு செக்கு எண்ணைகள் சற்றே விலைகூடுதலானாலும், அவற்றையே பயன்படுத்தி, உடல்நலம் பெறுவோம்.

நாட்டு செக்கு எண்ணை பயன்கள்

தாவர எண்ணைகள் உடலுக்கு நன்மைகள் தரும் கொழுப்பு நிறைந்தவை, உடலுக்கு தீங்கிளைக்கும் கொழுப்புகள் எல்லாம், அசைவ உணவுவகைகளாலே ஏற்படுகிறது. அதனால்தான் இப்போது சில மருத்துவர்கள், செயற்கை எண்ணைகளின் மோசமான விளைவுகளைப்பார்த்துவிட்டு, மீண்டும் மரச்செக்குஎண்ணைகளைப் பரிந்துரைக்கின்றனர்.

வீடுகளில், மரச்செக்கில் ஆட்டிய எண்ணைகளை, ஃபில்டர் செய்யாமல், வெயிலில் நன்கு காயவைத்து பயன்படுத்தினர். இயற்கையான செக்குஎண்ணை மிக அடர்த்தியாக, கருநிறத்தில், வாசனையாகவும், கொழகொழப்பாகவும் இருக்கும். இந்த எண்ணைகளில், நலம்பயக்கும் வைட்டமின்கள், புரோடீன்கள்,அரிய வகை தாதுக்கள் மற்றும் உயிர், நார்ச்சத்துகள் எல்லாம் நிறைந்திருக்கும்.

மரசெக்கு எண்ணை பயன்கள்:

சமையலில் வறுக்கவும், பொரிக்கவும் அன்றாடம் பயனாகும் கடலை எண்ணை, உடலில் சேர்ந்த கொழுப்புகளை கரைக்கும் தன்மைகள் மிக்கது.

இதயத்துக்கு கெடுதல்,சமையலில் பயன்படுத்தக்கூடாது என்று மேலை மருத்துவம் பயமுறுத்தி நம்சமையலில் ஒதுக்கிவைத்த தேங்காயெண்ணை இல்லாமல், கேரளத்தில் ஒருஉணவும் சமைப்பதில்லை. அப்படியானால் அவர்களுக்கு அதிகஅளவில் அல்லவா, இதய வியாதிகள் வந்திருக்க வேண்டும்?

ஆயினும், இதயவியாதிகள் சதவீதம் கேரளத்தில் வெகுகுறைவு என்பதுதானே, நிதர்சனம்! தாய்ப்பாலுக்கு, இணையாகக்கருதும் உயிராற்றல்மிக்க தேங்காய் எண்ணையே, உடலின் நோய்எதிர்ப்புசக்தியை அதிகரித்து, அவர்களின் உடல்நலம் காத்துவருகிறது என்பதுதான், உண்மை.

ஆமணக்கு விதைகளிலிருந்து எடுக்கப்படும் விளக்கெண்ணை, சிறந்த மலமிளக்கி, உடல்வலி நிவாரணி, உடலை சுத்திகரிக்கும் தன்மைமிக்கது.

சித்தவைத்தியத்தில், விளக்கெண்ணையுடன், வேப்பெண்ணையும் வியாதித்தடுப்பு மருந்தாக, பயன்படுகிறது.

வேப்பெண்ணை, சிறந்த கிருமிநாசினி, கிராமப்புறங்களில் மக்கள் தலைக்கு வேப்பெண்ணை தடவிவந்த காரணத்தால், அவர்களுக்கு பேன், பொடுகு அரிப்பு ஏற்பட்டதில்லை, தலைமுடி உதிர்வை கட்டுப்படுத்தி, கருமைநிறத்தை பேணும் தன்மைமிக்கது. மேலும் நாட்டுச்செக்கு எண்ணைகளின் புண்ணாக்கு எனப்படும் விதைச்சக்கைகள் மாடுகளுக்கு சிறந்ததீவனமாகின்றன.

தரமான விதைகள் மூலம் தயாராகும் மரசெக்கு எண்ணைகளை பிளாஸ்டிக்பைகளில் இட்டு உபயோகிப்பது கெடுதலாகும், பித்தளை பாத்திரங்கள் அல்லது, எவர்சில்வர் பாத்திரங்களிலிட்டு பயன்படுத்துவதே, சிறப்பாகும்.

எண்ணைகளில் உயர்வான, "எண்ணைகளின் அரசி" நல்லெண்ணை.

எல்லா எண்ணைகளும் அவற்றின் விதைகளின் பெயரிலேயே, அழைக்கப்பட்டாலும், எள் எண்ணை மட்டும், நல்லெண்ணை என்று அழைக்கப்படுகிறது.

மரச்செக்கில் உண்டாக்கிய நல்லெண்ணை, உடலில் உள்ள கொழுப்புத்தன்மையைக் குறைத்து, உடலில் கரையும்வண்ணம் உள்ள கொழுப்புகளின் மூலம் உடல் சக்தியை அதிகரித்து, உடல் செல்களின் புதிய உற்பத்தியைத்தூண்டி, நோய்எதிர்ப்பு சக்தி அளித்து, வயோதிகமடைவதை தடுக்கும் ஆற்றல்மிக்க, ஒரு தாவர எண்ணையாகத் திகழ்வதால்தான், "நல்லெண்ணை" என்று எள் எண்ணையை அழைக்கிறார்கள்.

கவலை, மனச்சோர்வு உள்ளிட்ட மனவியாதிகளிலிருந்து, இதய வியாதிகள், தோல் வியாதிகள், சுவாசக்கோளாறுகள், மாதவிலக்கு, மூலம் உள்ளிட்ட அனைத்துவகை உடல் பாதிப்புகளையும் சீராக்கி, உடல்நலம் காக்கும் தன்மைமிக்கது, நல்லெண்ணை.

இதனால்தான் நல்லெண்ணையை, "எண்ணைகளின் அரசி" என்கிறார்கள்.

மரச்செக்கு எண்ணைகளில், ஒரு தனிவிதமான வாசனையை, அதை உபயோகித்தவர்கள் அறிந்திருப்பர், அது எதனால் தெரியுமா?

மரச்செக்குகளில், எள் விதைகளை ஆட்டும்போது, ஏற்படும் உராய்வில் உண்டாகும் வெப்பத்தைத்தணிக்கவும், செக்கில் நன்கு அரைபட்ட எள் விதைகளிலிருந்து, எண்ணையைப்பிரித்தெடுக்கவும், சிறிது வெல்லம் அல்லது கருப்பட்டியை சேர்ப்பதே, மரச்செக்கு நல்லெண்ணையின் அற்புத சுவைக்கும், தனித்துவமான வாசனைக்கும், காரணமாக அமைகிறது.

பெரிய இயந்திரங்களில் செயற்கை முறையில், ரீபைண்ட், டபுள் ரீபைண்ட் என்றுதயாராகும் எண்ணைகளிலுள்ள இரசாயன வேதிப்பொருட்கள் மூலம், மனிதர்களின் உடல்நலம் கெடுக்கும் எண்ணைகள் எல்லாம், விதவிதமான வணிகப்பெயர்களில், மனதை சுண்டியிழுக்கும் விளம்பரங்கள்மூலம், மக்களை முட்டாள்களாக்கி, பல்வேறு வியாதிகளுக்கு உறைவிடமாக மனிதஉடலை மாற்றுகின்றன. இளநரை பாதிப்புகள், மூட்டுவலி, அதிக உடல்எடை, இரத்த அழுத்த பாதிப்புகள் போன்றவை உண்டாக, இந்த எண்ணெய்களின் தயாரிப்பில் சேர்க்கப்படும் இரசாயனங்களே, காரணமாகின்றன.

பயன்படுத்துவதையே தவிர்க்கவேண்டிய ரீபைண்ட் எண்ணைகளை, ஒருமுறை பயன்படுத்தியபின் மீண்டும், வடை,போண்டா,பஜ்ஜி போன்ற காரவகைகள் மற்றும் இனிப்புகள்செய்ய,வடவம்,வற்றல் பொரிக்க மீண்டும் பயன்படுத்த, வியாதிகளை தேடிப்போய் பெற்றுக்கொள்கிறோம், என்று அர்த்தம்.

இது போன்று மேலும் பல சித்த மருத்துவம் சார்ந்த குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Address

51 B, East Car Street
Tuticorin
628003

Opening Hours

Monday 9am - 10pm
Tuesday 9am - 10pm
Wednesday 9am - 10pm
Thursday 9am - 10pm
Friday 9am - 10pm
Saturday 9am - 10pm
Sunday 10am - 2pm
5pm - 9:30pm

Telephone

8870028734

Website

Alerts

Be the first to know and let us send you an email when SKA Arumugam pillai naatu marundhu kadai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share