22/05/2023
“ஹைக்ரோ”- இயற்கை தோட்டம் இனி எளிது.
ஹைக்ரோ இயற்கை உரம் :
இந்திய அரசின் உயரிய தேசிய விருதினை பெற்ற ஜேப்பி பயோடெக்ஸ் நிறுவனம் , இயற்கை முறையில் அனைவரும் எளிதாக செடி, மரம் வளர்க்க கீழ்கண்ட இயற்கை உரம் , வளர்ச்சி உரம், இயற்கை பூச்சி விரட்டிகளை ஹைக்ரோ நுட்பமாக 32 வருடமாக வேளாண் பட்டதாரியினால் உற்பத்தி செய்யபட்டு அதனது நர்சரி பிரிவு மூலமாக வழங்குகின்றது.
1.வெர்மிசெல் : ஊட்டமேற்றிய மண்புழு உரம்:
இது பசு சாணம், மற்றும் தாவர கழிவுகளினை அய்சினியா பெட்டிடா மண்புழுக்களினால் பதப்படுத்தபட்டு அஸோஸ்பரில்லம், பாஸ்போபேக்டர், சூடோமோனாஸ், ட்ரைக்கோடர்மா என்னும் செடி வேர்வளர்ச்சி நுண்ணூயிர்களினால் ஊட்டமேற்படுத்தபட்டது. இதனை வீட்டு தோட்ட்த்தில் கீழ் கண்ட அளவில் பயன் படுத்தவும். புல் தோட்டம் – 0.5-1 கிலோ /10 ச.அடி. வீட்டில் உள்ள பழ மரம்/நிழல் மரம் – 2 -5 கிலோ/மரம்..க்ரொபேக் செடிகள் -100 கிராம்- 1 கிலோ வரை செடியின் அளவினை பொருத்து. இது 1 கிலோ, 5 கிலோ, 10 கிலோ, 40 கிலோ மற்றும் 50 கிலோ என கிடைக்கும்.இதனை வருடம் ஒன்றுக்கு பை ஒன்றுக்கு 50 கிராம் வரை இடவும்.
2.ஹைக்ரோ மீடியா : ஊட்டமேற்றிய தென்னை நார் ஊடகம்:
இது நுண்ணுயிர்கள் மற்றும் மண்புழுக்களினால் உயிரி நொதி தொழில் நுட்பத்தின் மூலம் வேம்பு, வெர்மிகுலேட், மண், வேப்பம்புண்ணாக்கு ஆகிவற்றினால் பதப்படுத்தப்பட்ட மண்மாற்று ஊடகம். இது தற்பொழுது வீட்டு மாடி தோட்டத்தில் உபயோகிக்கும் தென்னை நார் கட்டியினை விட வீட்டு தோட்டத்திற்கு மிகச் சிறந்தது ஏனெனில் தென்னை நார் கட்டிட்யில் பயிர்களுக்கு தேவையான எந்த சத்துக்களும் இருக்காது. இது மண்ணினை விட 2.5 பங்கு எடை மிகவும் குறைவாக இருப்பதால் பெண்கள் தொட்டியில்/க்ரோபேக்களில் இவ்வூடகத்தை கையால்வது எளிது. மண்ணினை விட அதிக அளவில் நீரினை பிடித்து கொள்ளகூடியது. இதில் தண்ணீர் எளிதில் வடியும் முற்றிலும் இயற்கையானது. இது 1 கிலோ, 10 கிலோ, மற்றும் 40 கிலோ அளவுகளில் கிடைக்கும்.
3. ஊட்ட மேற்றிய திரவ இயற்கை உரம் - ஹைக்ரோ பஞ்ச்:
இது தேர்வு செய்த நுண்ணுயிர்களினால் கடற் சார் உயிர்ம கழிவு மற்றும் வேளாண் சார் உயிர்ம கழிவுகளிலிருந்தும் உயிரி நொதி தொழில் நுட்பத்தின் மூலம் தயாரிக்கபட்டு ஹூமிக் ,பல்விக் மற்றும் நுண்ணுயிர்களினால் ஊட்டமேற்படுத்தபட்ட. இது செடிகளுக்கு தேவையான அனைத்து பயிர் சத்துகளினையும் அளித்திடும். இவ்வுரத்தினை 1 லிட் தண்ணீருக்கு 1மி.லி. என்ற அளவில் செடிகளுக்கு தண்ணிர் விடும் சமயம் கலந்து உபயோகம் செய்திட வேண்டும்.
4. மீன் அமிலம் ஊட்டமேற்றிய திரவ இயற்கை வளர்ச்சி ஊக்கி - அமினோஸ்:
இதனை செடிகள் மீது வாரம் ஒருமுறை 1 லிட்டர் தண்ணீருக்கு 2-4மி.லி. என்ற அளவில் சூரிய ஒளி குறைந்த சமயம் கலந்து செடிகள் நன்கு நனையுமாறு தெளிப்பு செய்திட வேண்டும்.
5 ஊட்டமேற்றிய மணிசத்து அடிஉரம் ; புரொம்;
இது இயற்கையாக மணிசத்து உள்ள பாறையினை துகளாக்கி அவற்றினை மண்புழு மற்றும் நுண்ணுயிர் செயல்பாட்டால் கரத்து பயிர்களுக்கு கிடைக்கும் வண்ணம் உள்ள மணிசத்து இயற்கை உரம். இவ்வுரத்தின வருடம் ஒருமுறை பைகளில் 25-50 கிராம் வரை இடவும்.
6. ஹைக்ரோ பைகள்:
இது வீட்டின் மாடி கூறையில் அதிகம் எடை எறாது மண்தொட்டிகளுகும் மாற்றான் எளிய நெகிழி பைகள். இது புறஊதா கதிர்களினால் சிதைக்கபடாத 600 மைக்ரான் கனம் கொண்ட பல அடுக்கு க்ரொபேக் கள். இவை மூன்று அளவில் கிடைக்கும்.
அளவு 1 கீரைகள் பீட்ரூட்,.சிறு அலங்கார செடிகள் தண்டுகீரை, , வெண்டை, கத்தரி தக்காளி, மிளகாய் கொத்தவரை,சிறுகீரை,கொத்தமல்லி,பாலக்,வெங்காயம் வளர்க்க ஊகந்த்து . இப்பைகளில் 3 கிலோ ஹைக்ரோ மீடியம் கொண்டு அடைத்து செடிகள் வளர்க்கலாம்..
அளவு 2 ரோஜா, அலங்கார செடிகள்,மஞ்சள், கிழங்குகள். இப்பைகளில் 5 கிலோ ஹைக்ரோ மீடியம் கொண்டு அடைத்து செடிகள் வளர்க்கலாம்..
அளவு 3 அவரை,புடலை, சுரை, பாகல், பீர்க்கு,முருங்கை,கருவேப்பிலை, இப்பைகளில் 7 கிலோ ஹைக்ரோ மீடியம் கொண்டு அடைத்து செடிகள் வளர்க்கலாம்..
7. ஹைக்ரோ சீட்ஸ் ;
ஆராய்சி நிலயங்களில் பரிசோதனைபடுத்திய மரபணு மாற்றப்படாத தரமான வீரிய நாட்டு ரக வெண்டை, கத்தரி தக்காளி, மிளகாய் கொத்தவரை, புடலை, சுரை, பாகல், பீர்க்கு, கீரை, அவரை, முருங்ககை வெங்காயம் காய்கறி விதைகள்.
8. ஹைக்ரோ பயிர் வேர் வளர்ச்சி குச்சிகள் : ரைசோகாப்பான்ள
பயிர் வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்புக்கும் உதவிடும் நுண்ணுயிர்கள் மற்றும் வேம்பு கொண்ட்ட குச்சிகள்.இவற்றினை செடி ஒன்றுக்கு 5 குச்சிகள் என 6 மாதம் ஒருமுறையாவது வைப்பதால் செடிகள் வளர்ச்சி செழுமையாகும்
9. பயிர் நுண்ணுயிர்கள் :
மேலும் அஸொஸ்பிரில்லம், பாஸ்போபேக்டர், பொட்டாஷ் நுண்ணுயிர், சூடொமோனாஸ், பவேரியா, வெர்டிசீலியம், டிரைக்கோடர்மா பூசணம் போன்ற பயிர்களுக்கு நன்மைசெய்யும் பூசணங்களும் சிறிய வடிவில் திரவ மற்றும் பொடி வடிவில் கிடைக்கும், இவற்றினை வருடம் ஒருமுறை 1 லிட்டர் தண்ணீருக்கு 4 கிராம் என்ற அளவில் உபயோகித்தால் நன்று, ஒவ்வொரு நுண்ணுயிர் வகைகளும் 50 கிராம் அளவில் கிடைக்கும்.
10.ம்ஞ்சள் மற்றும் நீல நிற ஒட்டு பொறிகள்:
இவை பூச்சிகளினை கவர்ந்து கட்டுபடுத்தும் அதனால் வீட்டுதோட்டத்தில் வளர்க்கப்படும் காய்கறிகள் பூச்சி தொந்தரவு இல்லாது பாதுகாக்கப்படும், 100 சதுர அடிக்கு ஒரு மஞ்சள் மற்றும் ஒரு நீல் நிற அட்டையினை வைக்கவும் இதன் ஒட்டுத்தன்மை 45 நாள் வரை இருக்கும்.
11. வேம்பு மருந்து அசாடிராக்டின் : நீமசால்ட்:
இது வேப்பங்கொட்டடை எண்ணையிலிந்து பிரித்தெடுக்கப்பட்ட இயற்கை பூச்சி கொல்லி. இதனை பூச்சி நடமாட்டம் கண்டால் ஒருலிட்டர் தண்ணீருக்கு 5 மிலி என கலந்து தெளிக்கவும். இது 100 மிலி அளவுகளில் கிடைக்கும்
12. கழிவு மக்க வைக்கும் நுண்ணுயிர் - டெக்கோமின் :
மக்கவைக்கும் நொதிகள் உற்பத்திசெய்யும் தேர்ந்தெடுக்கப்பட்ட நுண்ணுயிர் கொண்ட கலவை.
இது சுரக்கும் மக்கவைக்கும் செல்லுலேஸ், லிக்னினேஸ்,ப்ரொட்டினேஸ் போன்ற நொதிகள் ( என்சைம்) நகரகழிவு, வீட்டில் கழிக்கும் உணவு கழிவு கழிவுகளினை எளிதில் குறுகிய நாளில் மக்கவைத்து அவற்றினை வீட்டு தோட்டத்தில் வளர்க்கும் செடிகளுக்கு உரமாக உபயோகம் செய்த்திட உதவும். இது ஒருகிலோ பைகளில் கிடைக்கும். 6-8 நபர் உள்ள வீட்டில் கழிக்கும் உணவு கழிவுகளினை 20 -25 லிட்டர் வாளி/ பெரிய பிளாஸ்டி க்ரோ பேக்களில் தினமும் கொட்டி அதன்மீது வாரம் ஒன்றுக்கு 100 கிராம் டெக்கொமின் மற்றும் 1 கிலோ மண்புழு உரம் கொண்டு கழிவு மேல் மூடவும். அதன் காற்றோட்டம் அதிகரிக்கும் வண்ணம் வாரம் ஒருமுறையாவது வெட்டி கலக்கிவிடுவதால் ஒரு மாதத்திற்குள் உரமாகும். தினமும் வெட்டிவிடுவது உர உற்பத்தியாகும் நாள் குறையும். ஈரப்பதம் குறைந்தால் அதன் மீது தண்ணீர் தெளிக்கவும்
13. நிழல்வலைகள்:
வீட்டு மாடியி நிழல்வலைகள் கொண்டு கூடாரம் அமைத்து அதன் கீழ் க்ரோபைகளில் ஹைக்ரோமீடியம் நிரப்பி தோட்டம் அமைத்தால் குறைந்த நீரில் சூரிய வெப்பம் தாக்காது செடிகளினை எளிதாக வளர்க்கலாம் இதில் உள்ள வலைகள் 50 % சூரிய வெப்பத்தினை தவிர்த்திடும்
மேலும் தகவலுக்கு:
ஜேப்பி பார்ம் ,
ஹைக்ரோ நர்சரி பிரிவு ,
குல்லூர்சந்தை,
விருதுநகர்.
வியாபார விசாரணைக்கு : [email protected]
7010043267