News Drops of Sri Lanka

News Drops of Sri Lanka News Drops of Sri lanka

23/05/2022

ஒரு லீற்றர் பெற்றோல் இல்லாததால் பிறந்து இரண்டே நாளில் இறந்த குழந்தை..!

-ஒரு வைத்தியரின் உருக்கமான பதிவு.

இது தியதலாவ மருத்துவமனையில் எனது 86 ஆவது மரண பரிசோதனையும் மிக வேதனைக்குரிய மரணமுமாகும்.

பிறந்து இரண்டே நாட்களான இந்தச்சிசுவை தாய்ப்பால் பருகாமல் மஞ்சள் நிறமாகி இரத்தத்தில் சக்கரை அளவு குறைந்ததால் ஹல்தும்முல்ல வைத்தியசாலைக்கு கொண்டு வருவதற்காக தந்தை பெற்றோல் தேடி ஒரு மணி நேரம் அலைந்து திரிந்து- கொண்டு வரப்பட்டபோது குழந்தையின் இரத்தத்தில் சக்கரை அளவு 22mg/dl.

அங்கிருந்து தியதலாவ மருத்துவமனைக்கு கொண்டு வரும்போதே குழந்தை மூச்சுத் திணறியபடி இருந்திருக்கிறது. தியதலாவ வைத்தியசாலை ETU வில் அனுமதிக்கப்பட்டு அங்கே குழந்தை இறந்து விட்டது.

அந்த ஒரு மணி நேரம் பிந்தியிருக்கா விட்டால் குழந்தையை காப்பாற்றியிருக்கலாம்.

தங்களுக்கு எதுவும் நேரும்வரை அடுத்தவர் துன்பம் நமக்கு புரியாது.

ஒன்பது மாதங்கள் வயிற்றில் சுமந்து இரண்டு நாட்கள் கையில் கொஞ்சிய பிஞ்சுக் குழந்தை ஒரு லீற்றர் பெற்றோல் இல்லாததால் இறந்து போனது என்கிற துக்கம் அந்தப் பெற்றோருக்கு வாழ்க்கை முழுவதும் வதைக்கப் போகிறது.

இறந்த பிஞ்சு உடலை வெட்டுவதற்கே துயரம். அங்க அவயவங்கள் எல்லாம் எந்தக் குறையுமற்று பிறந்திருந்த குழந்தை.

இந்த ஆட்சியாளர்கள் அனைவருக்கும் சாபம் உண்டாகட்டும்.

பின்னர் இந்த சாபக்கேடான நாட்டில்- கேடுகெட்ட ஆட்சியாளர்கள் உள்ள நாட்டில்- வாழ்வதை விட அந்தக் குழந்தை இறந்ததே நல்லதென்று தோன்றியது.

Dr.Shanaka Roshan Pathirana

தினகரன் 21 மே 2022 சனிக்கிழமை
21/05/2022

தினகரன் 21 மே 2022 சனிக்கிழமை

21/05/2022

நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் உள்ள எரிபொருள் இருப்புக்கள் குறித்த தகவல்களை வழங்கக்கூடிய மொபைல் போன் செயலி உருவாக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அடுத்த 10 நாட்களில் குறித்த செயலி அறிமுகப்படுத்தப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் எரிபொருள் விநியோகம் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் விநியோகம் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் உள்ள எரிபொருள் இருப்புக்களை இதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது....

*உலகளவில் அதிகரிக்கும் குரங்கு அம்மை; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை*உலகளவில் குரங்கம்மை வைரஸ் தொறின் தாக்கம் அதிகரிக்கு...
21/05/2022

*உலகளவில் அதிகரிக்கும் குரங்கு அம்மை; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை*

உலகளவில் குரங்கம்மை வைரஸ் தொறின் தாக்கம் அதிகரிக்கும் வருகிறது. இதனையடுத்து உலக நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு இதுகுறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

குரங்கம்மை தொற்று மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் அதிகமாகக் காணப்படும் வைரஸ் மூலம் பரவும் நோய். இது சின்னம்மையைப் போன்ற அரிய தொற்றுநோய். ஆனால் சின்னம்மையைவிட அதன் தாக்கம் சற்று குறைவு. காய்ச்சல், தலைவலி, முகத்திலிருந்து தொடங்கி உடலுக்குப் பரவும் கொப்புளங்கள் போன்றவை இந்த தொற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள். குரங்கம்மையை ஏற்படுத்தும் வைரஸ் தோலின் மேற்புறத்தில் உள்ள உடைந்த உயிரிகள் மூலமாகவும், சுவாசக் குழாய் மூலமாகவும் பரவ வாய்ப்புள்ளது.

மேலும் கண், காது, மூக்கு உள்ளிட்ட பகுதிகள் உள்ள மியூகோஸ் திசுக்கள் மூலமாக பரவக்கூடும். உலகையே கொரோனா தாக்கம் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆட்டிப்படைத்து வந்த நிலையில் தற்போது கனடா, பிரிட்டன், பெல்ஜியம், ஆஸி., ஜெர்மனி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் தொடர்ந்து குரங்கம்மை பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தி உள்ளது.

WhatsApp Group Invite

Divaina SL E-PAPER'S 21-05-2022.
21/05/2022

Divaina SL E-PAPER'S 21-05-2022.

20/05/2022

*லிபியா ஜனாதிபதி கடாபியின் நிலைமை இலங்கை ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவுக்கு வருவதை அவர் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.*

வீதியில் வைத்து பொதுமக்களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட லிபியாவின் ஜனாதிபதி

கடாபியின் நிலைமை தற்போதைய இலங்கை ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவுக்கு வருவதை அவர் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதியே நாட்டின் அனைத்து பிரச்சினைகளுக்குக் காரணம். எமது நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு இந்தியாவில் உள்ள யாசகர்கள் கூட உதவும் நிலை ஏற்பட்டுவிட்டது . ஒரு யாசகர் சுமார் 10 ஆயிரம் ரூபா வழங்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொருளாதார வீழ்ச்சி அதன் பின்னர் ஏற்பட்ட அரசியல் ஸ்திரத்தமின்மை அகியவற்றால் நாட்டில் அண்மையில் வன்முறைச் சம்பவங்கள் வெடித்தன. இவ்வாறான வன்முறைகளை நாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழ் Mirror SL E-PAPER'S 20-05-2022.
20/05/2022

தமிழ் Mirror SL E-PAPER'S 20-05-2022.

Daily NEWS SL E-PAPER'S 20-05-2022.
20/05/2022

Daily NEWS SL E-PAPER'S 20-05-2022.

Divaina SL E-PAPER'S 20-05-2022.
20/05/2022

Divaina SL E-PAPER'S 20-05-2022.

வீரகேசரி 2022 மே 20 வெள்ளிக்கிழமை
20/05/2022

வீரகேசரி 2022 மே 20 வெள்ளிக்கிழமை

Address

Kattankudy
Colombo

Telephone

+94784432800

Website

Alerts

Be the first to know and let us send you an email when News Drops of Sri Lanka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share