Thivakaran

Thivakaran Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Thivakaran, Book shop, Jaffna Town.

31/12/2022

HAPPY NEW YEAR

10/10/2020
What is a coronavirusesCoronaviruses are a large family of viruses which may cause illness in animals or humans.  In hum...
04/04/2020

What is a coronaviruses

Coronaviruses are a large family of viruses which may cause illness in animals or humans. In humans, several coronaviruses are known to cause respiratory infections ranging from the common cold to more severe diseases such as Middle East Respiratory Syndrome (MERS) and Severe Acute Respiratory Syndrome (SARS). The most recently discovered coronavirus causes coronavirus disease COVID-19.

Watch for symptoms

Reported illnesses have ranged from mild symptoms to severe illness and death for confirmed coronavirus disease 2019 (COVID-19) cases.
These symptoms may appear 2-14 days after exposure (based on the incubation period of MERS-CoV viruses).

Fever

Cough

Shortness of breath

மாவீரன் நெப்போலியன் (ஒரு 'சாமானியன் சக்ரவர்த்தியான சரித்திரம்') - வரலாற்று நாயகர்!இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்...
24/05/2015

மாவீரன் நெப்போலியன் (ஒரு 'சாமானியன் சக்ரவர்த்தியான சரித்திரம்') - வரலாற்று நாயகர்!

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கம் தந்த மாவீரன் அலெக்ஸாண்டர் தி கிரேட், சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு பிரான்ஸ் தந்த மாவீரன் நெப்போலியன் பொனபார்ட். அலெக்ஸாண்டர் ஒரு கிரேக்கப் புயல் என்றால் நெப்போலியன் ஒரு பிரெஞ்சு பிரெளயம். இருவருக்குமிடையே பல ஒற்றுமைகள் இருந்தாலும் ஒரு முக்கியமான வேற்றுமை இருந்தது. ஒரு மன்னனுக்கு மகனாக பிறந்ததால் கிரேக்கத்தை ஆண்டான் அலெக்ஸாண்டர். ஆனால் ஒரு ஏழைக்குடும்பத்தில் பிறந்தும் பிரான்ஸுக்கு மன்னனானான் நெப்போலியன். உலக வரலாற்றில் ஒரு எழைக்குடும்பத்தில் பிறந்த ஒருவன் ஒரு தேசத்திற்குச் சக்ரவர்த்தியானது அதுதான் முதல்முறை. விதியை வென்ற நெப்போலியன் என்ற அடைமொழியும் அவருக்கு உண்டு. ஒரு 'சாமானியன் சக்ரவர்த்தியான சரித்திரம்' என்று நெப்போலியனின் வாழ்க்கையை விவரிக்கிறார் திரைப்பட பாடலாசிரியர் பா.விஜய்.

1769 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் 15ந்தேதி பிரான்ஸின் கோர்சிக்காவில் ஒரு ஏழ்மையான் குடும்பத்தில் பிறந்தார் நெப்போலியன் 13 பிள்ளைகளில் ஒருவர். சிறு வயதிலேயே பயம் என்றால் என்னவென்று அறியாதவனாக வளர்ந்தார் நெப்போலியன். அரசின் சலுகை பெற்று வியந்நாவிலும் பாரிசிலும் உள்ள இராணுவப் பள்ளியில் கல்வி பயின்றார். கணிதம், வரலாறு, புவியியல் ஆகியவை அவருக்குப் பிடித்தப் பாடங்கள். பள்ளியில் தனிமையை விரும்பிய நெப்போலியன் பொறுப்புணர்ச்சி மிக்கவராக இருந்தார். 16 வயதில் பள்ளிப் படிப்பை முடித்து பிரெஞ்சு இராணுவத்தின் ஆர்ட்டிலரிப் பிரிவில் சேர்ந்தார். டுலால் நகரில் நடைபெற்ற யுத்தத்தில் மிகச்சிறப்பாக செயல்பட்டதற்காக நெப்போலியன் படைத்தளபதியாக பதவி உயர்வு பெற்றார். 1796ல் இத்தாலியில் ஆஸ்திரிய சாடினியப் படைகளை வெற்றிகரமாக முறியடித்தப் பிறகு நெப்போலியனுக்கு தேசிய அளவில் புகழ் கிடைத்தது. பின்னர் பாரிஸில் ஆட்சிக்கவிழ்ப்பில் ஈடுபட்டு வேறு இருவருடன் சேர்ந்து ஆட்சியைக் கைப்பற்றினார்.

1804 ஆம் ஆண்டு தனது 35 ஆவது வயதில் தன்னை பிரான்ஸின் மன்னனாக முடிசூட்டிக் கொண்டார் நெப்போலியன். அதற்குப் பிரெஞ்சு மக்களின் பேராதரவு இருந்தது. நெப்போலியன் அடுத்தடுத்தத் தொடுத்தப் போர்களால் இங்கிலாந்தைத் தவிர்த்து ஒட்டுமொத்த ஐரோப்பாவும் நெப்போலியனின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இங்கிலாந்து நெப்போலியனின் கட்டுப்பாட்டுக்குள் வர மறுக்கவே Continental System என்ற வர்த்தக முறையை அறிமுகப்படுத்தினார். அதன்படி பிரான்ஸின் கட்டுப்பாட்டில் இருந்த எந்த நாடும் இங்கிலாந்துடன் எந்த வர்த்தகமும் புரியக்கூடாது என்று கட்டளையிட்டார் நெப்போலியன். ஆனால் ரஷ்யா அந்தக் கட்டளையை மீறி இங்கிலாந்துடன் வர்த்தகம் புரிந்ததால் சினம்கொண்டெழுந்த நெப்போலியன் 600 ஆயிரம் வீரர்களுடன் ரஷ்யா மீது படையெடுத்தார் அந்த ஆண்டு 1812.

நெப்போலியனின் படையெடுப்பை முன்கூட்டியே அறிந்தோ என்னவோ அவர் ரஷ்யாவுக்குள் அடியெடுத்து வைத்தபோது மாஸ்கோ வெறிச்சோடி கிடந்தது. சுமார் இரண்டரை லட்டம் ரஷ்யர்கள் வீடுகளை விட்டு வெளியேறியிருந்தனர். ரஷ்யாவின் ஷா மன்னன் தன்னிடம் வந்து சரனடைவான் என்று சுமார் ஒரு மாதம் அங்கயே முகாமிட்டுருந்தார் நெப்போலியன். ஆனால் மன்னன் வருவதற்குப் பதில் பனிக்காலமும், கடுங்குளிரும்தான் வந்தன. நெப்போலியன் சுதாரித்துக்கொள்ளும் முன் பசிக்கும், குளிருக்கும் பல்லாயிரம் பிரெஞ்சு வீரர்கள் பலியாயினர். வேறுவழியின்றி மிஞ்சியிருந்த வீரர்களை பாரிஸ் திரும்ப கட்டளையிட்டார் நெப்போலியன். ஆறு லட்சம் வீரர்களுடன் சென்றவர் வெறும் இருபதாயிரம் வீரர்களுடன் திரும்பியதாக ஒரு வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது. பிரெஞ்சு இராணுவம் நிலைகுலைந்து போயிருந்த அந்த தருணத்தைப் பயன்படுத்தி பிரிட்டன், ரஷ்யா, ஆஸ்திரியா, ஸ்வீடன் ஆகியவற்றின் கூட்டுப்படைகள் பிரான்ஸைத் தாக்கின. போரில் தனது முதல் தோல்வியைச் சந்தித்தார் நெப்போலியன்.

கூட்டுப்படையால் நெப்போலியன் எல்பா என்ற தீவில் சிறை வைக்கப்பட்டார். ஆனால் ஓராண்டுக்குள் சிறையிலிருந்த தப்பி வந்த நெப்போலியனை பிரெஞ்சு மக்கள் மீண்டும் ஏற்றுக்கொள்ள மீண்டும் பிரான்ஸின் சக்ரவர்த்தியானார் நெப்போலியன். புதிய படையை உருவாக்கினார் இரண்டே ஆண்டுகளில் பிரிட்டனும், அதன் நட்பு நாடுகளும் நெப்போலியனுக்கு எதிராக அணி திரண்டன. பெல்ஜியத்தின் வார்ட்டலு என்ற இடத்தில் நடந்த யுத்தத்தில் இரண்டாவது முறையாக தோல்வியைத் தழுவினார் நெப்போலியன். அவரை சிறைப்பிடித்த பிரிட்டிஷ் இராணுவம் இம்முறை ஆப்பிரிக்காவுக்கு பக்கத்திலுள்ள Saint Helena என்ற தீவில் சிறை வைத்தனர். அந்தத் தீவில் தனிமையில் வாடிய நெப்போலியனுக்கு வயிற்று புற்றுநோய் ஏற்பட்டது. ஆறு ஆண்டுகளில் அதாவது 1821 ஆம் ஆண்டு மே மாதம் 5ந்தேதி நெப்போலியன் என்ற வீரசகாப்தம் முடிவுக்கு வந்தது.

பிரெஞ்சு ரெவல்யூசன் எனப்படும் பிரெஞ்சுப்புரட்சியின் தாக்கத்தினால் உருவானவர்தான் நெப்போலியன். அவர் ஆட்சிக்கு வந்தப் பிறகு பிரான்ஸில் அமைதி நிலவியது. பொருளாதார, அரசியல், சட்டத்துறைச் சீர்சிருத்தங்களை அறிமுகம் செய்தார். பிரான்ஸில் செயிண்ட் ஆற்றுக்கு மேல் பாலங்கள் கட்டினார். வீதிகளை திருத்தி அமைத்து புதிய வீதிகளை உருவாக்கினார். நகரின் தண்ணீர் விநியோகத்தை மேம்படுத்தினார். வேலைவாய்ப்புகளைப் பெருக்கினார். வரி வசூலிக்கும் முறைகளில் மாற்றங்களை கொண்டு வந்ததோடு பிரான்ஸில் இன்ப்ரீயல் பேங்க் என்ற வங்கியை உருவாக்கினார். ஆனால் நாட்டு நிர்மானத்தில் நெப்போலியனின் மிகப்பெரிய பங்களிப்பு அவர் வகுத்துத் தந்த Civil Code என்ற புதிய சட்டங்கள். அந்தச் சட்டங்கள் Code of Napoleon என்றும் அழைக்கப்படுகின்றன. கிட்டத்தட்ட 40 போர்களில் கிடைக்காத பெருமை அந்தச்சட்டங்கள் மூலம் நெப்போலியனுக்கு கிடைத்தது.

சட்டத்துக்கு முன் எல்லோரும் சமம் என்பதே அதன் சாரம்சம். அவை இன்னும் பிரெஞ்சு சட்டங்களாக நீடிக்கின்றன. நூல்கள் வாசிப்பதில் அதிக விருப்பம் கொண்ட நெப்போலியன் ஒரு நாளில் கிட்டதட்ட நான்கு மணி நேரந்தான் உறங்குவாராம். அப்படி அவர் சிரமபட்டு படித்துச் சேர்த்த அறிவுச்செல்வம்தான் அவரை வெறும் மாவீரன் என்ற நிலையைத் தாண்டி ஒரு தேசத்தையே மிகச்சிறப்பாக நிர்வகிக்கும் மன்னனாக உயர்த்தியது. “வெற்றி என்பது முயற்சியின் பாதி, நம்பிக்கையின் மீதி” இதுதான் நெப்போலியன் என்ற மாவீரனின் தாரக மந்திரமாக இருந்தது. அந்த மந்திரம்தான் வெற்றி மேல் வெற்றிகளை நெப்போலியனிடம் குவித்தது. அரச வம்சத்தில் பிறக்காத ஒரு ஏழைகூட மன்னனாக முடியும் என்பதை உலகுக்கு உணர்த்தியது.

“முடியாது என்ற சொல் என் அகராதியில் கிடையாது” என்பது நெப்போலியன் உதிர்த்த புகழ்பெற்ற வாசகம். நெப்போலியனிடம் குடிகொண்டிருந்த துணிவு, நம்பிக்கை, முயற்சி ஆகியவை நமக்கு இருந்தால் நமக்கும் நாம் விரும்பும் வெற்றியும் அதன்மூலம் அந்த வானமும் வசப்படும்.

ஆபிரகாம் லிங்கன்ஆபிரகாம் லிங்கன் (Abraham Lincoln, பெப்ரவரி 12, 1809—ஏப்ரல் 15, 1865) ஐக்கிய அமெரிக்காவின் 16 வது குடியர...
23/05/2015

ஆபிரகாம் லிங்கன்

ஆபிரகாம் லிங்கன் (Abraham Lincoln, பெப்ரவரி 12, 1809—ஏப்ரல் 15, 1865) ஐக்கிய அமெரிக்காவின் 16 வது குடியரசுத் தலைவர். அடிமை முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அதனை ஒழிக்க முனைந்தவர்களில் ஒருவர். 1860ல் மேற்கு மாநிலங்களில் தலைவராக இருந்த இவர் குடியரசுக் கட்சியின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக வெற்றி பெற்றார்.

ஐக்கிய அமெரிக்காவைப் பிளவுபடாமல் காக்க, தென் மாநிலப் பிரிவினைக் கருத்தாளர்களை எதிர் கொண்டு உள்நாட்டுப் போர் நடத்தி வெற்றி பெற்றவர். இவர் 1863ல் அடிமைகள் விடுதலை பெற புகழ்பெற்ற விடுதலை எழுச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து 1865 ல் ஐக்கிய அமெரிக்காவின் 13 வது அரசியல் சட்டத் திருத்தத்தின் வழி அடிமை முறையை ஒழித்தார். இவருடைய தலைவருக்கான பண்புகளை அறிய இவர் நடத்திய உள்நாட்டுப் போர், மற்றும் அடிமை முறையை எதிர்த்து இவர் நாட்டு மக்களுக்கு விழிப்பு ஏற்படுத்து வகையில் எழுப்பிய குரலும் முக்கியமானவை. கெட்டிஸ்பர்க் சொற்பொழிவு எனப் புகழ்பெற்ற இவர் ஆற்றிய உரை இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. உள்நாட்டுப் போர் முடியும் தறுவாயில் தென் மாநிலங்களுடன் கடுமையாக இல்லாமல் இணக்கமான முறையில் அமெரிக்க ஒன்றியத்தை நிறுவ முயன்றார். இவர் அடிமை முறையை ஒழிப்பதில் ஒரு சிறிதும் தளர்வில்லாமல் உறுதியாக இருந்ததை ஒரு சிலர் கடுமையாக சாடினார்கள் (எ.கா. காப்ர்ஹெட்ஸ்). ஆனால் வேறு சிலர் இவர் போதிய விரைவுடன் அடிமை முறையை ஒழிக்கவில்லை என்றும், அடிமை முறையை போற்றிய தென் மாநிலங்களிடம் உள்நாட்டுப்போரின் இறுதியில் போதிய அளவு கடுமையாக நடந்துகொள்ளவில்லை என்றும் குற்றம் சாட்டினர். இறுதியில் 1865 இவர் வாஷிங்டன் டி.சி யில் உள்ள ஃவோர்டு அரங்கில் ஜான் வில்கிஸ் பூத் என்பவனால் கொல்லப்பட்டார். அமெரிக்க ஒன்றியத்தின் ஒற்றுமைக்காக உயிர் துறந்து புகழ் எய்தினார்.

இளமை

1809 ஆம் ஆண்டு பிப்ரவரி 12ந் தேதி அமெரிக்காவின் கெண்டக்கியில் ஓர் ஏழை குடும்பத்தில் பிறந்தார் ஆபிரகாம் லிங்கன். அவரது தந்தை தாமஸ் லிங்கன் ஒரு தச்சர். சிறுவனாக இருந்த போது, தந்தையின் பணிகளில் லிங்கன் உதவி புரிந்தார். தாயார் நான்சி ஹாங்க்ஸ்(Nancy Hanks). காடுகளுக்கிடையே ஒன்பது மைல் நடந்து சென்று கல்வி பயின்றார் லிங்கன். ஆபிரகாம் லிங்கனுக்கு 9 வயது இருக்கும்போது தாய் இறந்து போனதால், சிற்றன்னையால் லிங்கன் வளர்க்கப்பட்டார். குடும்ப ஏழ்மை காரணமாக லிங்கனால் சரியாக படிக்க முடியவில்லை. பிறருக்கு உதவி செய்தல், அடுத்தவர் மீது அன்பு செலுத்துதல் போன்ற அரிய குணங்கள் சிறு வயதிலேயே லிங்கனிடம் இருந்தது. எப்போதும் கலகலப்பாகப் பழகுதல்; கதை சொல்லுதல்; வேடிக்கையாகப் பேசுதல் ஆகிய லிங்கனின் குணங்கள் அவர் மீது மற்றவர்களை விருப்பம் கொள்ளச் செய்தன.

ஒருமுறை, நியூ ஆர்லியன்ஸ் என்ற நகரத்திலுள்ள சந்தைக்கு லிங்கன் சென்றிருந்தார். அங்கே ஒரு நீக்ரோ பெண் அடிமையாக விற்கப்படுவதைக் கண்டார். அடிமைகள் என்ற பெயரில் கறுப்பினத்தவர்கள் விற்கப்படுவதையும் இரும்புக் கம்பிகளால் கட்டப்பட்டிருப்பதையும் சாட்டையால் அடிக்கப்படுவதையும் ஒட்டுமொத்தமாகக் கொடுமைப்படுத்தப்படுவதையும் கண்டார். அவர் மனம் துடித்தது. இந்தக் கொடுமைக்கு முடிவு காண வேண்டும் என்று லிங்கன் விரும்பினார். அதற்கான வழிமுறைகளைக் கண்டறிய முற்பட்டார். தனது இருபத்து மூன்றாவது வயதில் முதன் முதல் ஆபிராகாம் லிங்கன் பிளாக் காக் போரில்( black hawk war ) கலந்து தலைவனாக பணியாற்றியது அவருக்கு புதியதோர் பாதையை காட்டியது.

1833 ல் ஆண்ட் ரூத்லெஸ் என்ற பெண்ணைக் காதலித்து மணந்து கொண்டார். ஆனால் இரண்டே ஆண்டுகளில் ஆண்ட் நோய்வாய்ப்பட்டு இறந்தார். 7 ஆண்டுகள் கழித்து லிங்கன் தனது 33 வயதில்(1842 )மேரி டாட்(mary todd )எனும் பெண்ணை மணந்தார்.அவருக்கு நான்கு ஆண் குழந்தைகள் பிறந்தன.

பணிகள்

தனது 22 ஆவது வயதில் ஓர் அலுவலகத்தில் குமாஸ்தாவாக வேலைக்கு சேர்ந்தார். பின்னர் கடனுக்கு ஒரு கடையை வாங்கி வியாபாரத்தில் தோற்றுப்போனார், அடுத்து ஓர் அஞ்சலகத்தில் அஞ்சல்காரராகப் பணியாற்றினார். அதன்பிறகு அவர் தாமாகவே படித்து வழக்குரைஞர் ஆனார். 1847 தொடக்கம் 1849 ஆண்டுகளில் அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினராக பணிபுரிந்தார்

அரசியல்

அரசியலில் ஈடுபடுவதன் மூலமே அடிமைத்தனத்தை ஒழிக்க முடியும் என்ற முடிவுக்கு லிங்கன் வந்திருந்தார். 1834 ஆம் ஆண்டு தமது 25 ஆவது வயதில் முதன் முதலாக இலினோய் மாநில சட்டமன்றப் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிப்பெற்றார். பொது மக்களிடம் அவர் செய்த பிரச்சாரம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. முடிவில் லிங்கன் வெற்றி பெற்றார். அடுத்து அமெரிக்க செனட்டுக்கு தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் மிகப் பிரபலமான நீதிபதி ஒருவர் போட்டியிட்டார். அந்த நீதிபதியை லிங்கன் எதிர்த்து நின்றார். இந்தத் தேர்தலின் வெற்றியை அமெரிக்க மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.[1]

அமெரிக்க தேசத்தின் வரலாறு; அமெரிக்க அரசியல்; அன்றைய அமெரிக்க நிலைமை; பல்லாயிரம் நீக்ரோக்களை அடிமையாக நடத்தும் வழக்கம்; வெள்ளையர் – கறுப்பர் என்ற பாகுபாடு; தேசத்தைச் சீரழிக்கும் சூழ்நிலை ஆகியற்றை யெல்லாம் தமது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் லிங்கன் குறிப்பிட்டார். லிங்கனின் இந்த அணுகுமுறை அமெரிக்க மக்களிடத்தில் எழுச்சியை உண்டாக்கியது. தேர்தல் முடிவு லிங்கனுக்கு சாதகமாக அமைந்தது. முதன் முதலாக லிங்கன் அமெரிக்க செனட்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதன்பிறகு அரசியலைவிட்டு விலகி 5 ஆண்டுகள் தனியார் துறையில் வழக்குரைஞராகப் பணியாற்றினார். 1854 ல் லிங்கன் மீண்டும் அரசியலில் நுழைந்தார். குடிப்பழக்கம், புகைக்கும் பழக்கம் எதுவும் இல்லாத லிங்கன் அரசியலில் கடுமையாக உழைத்தார். 1860 ஆம் ஆண்டு அமெரிக்காவின் 16 ஆவது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அடிமை முறை ஒழிப்பு

பதவியேற்ற இரண்டே ஆண்டுகளில் அதாவது 1862 ல் அவர் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து அனைத்து அடிமைகளும் விடுவிக்கப்படுவர். அதன்பின் அமெரிக்காவில் அடிமைத்தனம் இருக்கக்கூடாது என்று பிரகடனம் செய்தார். இக்காலத்தில் அமெரிக்காவின் தென்மாநிலங்களில் செல்வந்தர் நிலங்களில் அடிமைகளாக பணிபுரிந்து வந்த பல்லாயிரம் கறுப்பர்கள் சமத்துவ நிலையை அடையாது இன்னலுற்று வந்தனர்.

லிங்கன் பதவி ஏற்புக்கு சில மாதங்களுக்கு முன்பு ஐக்கிய அமெரிக்காவிலிருந்து தென்பகுதியில் அடிமைக் கொள்கையை ஆதரிக்கும் 7 மாநிலங்கள் ஒன்று சேர்ந்து விலகிச் சென்றனர். அதன் பிறகு மற்றும் நான்கு மாநிலங்கள் அவற்றுடன் சேர்ந்து கொண்டன. 1863 ஜனவரி 1 அன்று ஆபிரகாம் லிங்கன் அமெரிக்க கூட்டு மாநிலங்களில் (confederacy )அடிமைகளை நிரந்தரமாய் விடுவிக்கப் புரட்சிகரமான "விடுதலை பிரகடனம்"(emancipation proclamation )ஒன்றை வெளியிட்டார். அதை எதிர்த்து நிராகரித்த 11 தென் பகுதி மாநிலங்களுக்கும் வரவேற்ற மற்ற வடபகுதி மாநிலங்களுக்கும் அமெரிக்க உள்நாட்டுப் போர் தொடங்கியது.அடிமைகள் ஒழிப்பு பிரச்சனையில் பிளவுபட்ட ஐக்கிய மாநிலங்களை போரிட்டு மீண்டும் ஒன்று சேர்ப்பது ஆபிரகாம் லிங்கனின் பெரும் பிரச்சினை ஆகி நீண்ட போராட்டம் ஆகியது.

அமெரிக்காவின் தெற்கு மாநிலங்கள் விவசாயத்தை நம்பி இருந்ததால் பொருளியல் வளர்ச்சிக்கு அடிமைகள் தேவை என்று கூறின. மேற்கு மாநிலங்களோ தொழிலியல் பகுதிகளாக இருந்ததனால் தங்களுக்கு அடிமைகள் தேவை இல்லை என்று கருதினர். இவை இரண்டுக்கும் காரணமாக இருந்த கருத்து வேறுபாடு உள்நாட்டு கலகமாக வெடித்தன. அடிமைத்தனத்தை எதிர்த்து ஆரம்ப காலத்திலிருந்து முழங்கி வந்த லிங்கன், குடியரசுத் தலைவர் ஆனதும் உள்நாட்டுக் கலவரங்கள் ஏற்பட்டன. அமெரிக்காவின் தெற்கில் உள்ள சில சில மாநிலங்கள் தனியே பிரிந்து செல்ல வேண்டும் என விரும்பின. அடிமைத்தனத்தை கைவிடுவதைவிட, பிரிந்து செல்வதே பெருமை சேர்க்கும் என்று பிற்போக்குவாதிகள் முடிவெடுத்தனர். அதற்குண்டான காரண காரியங்களை விளக்கி, கலவரங்களையும் தூண்டி விட்டனர். அடிமைத்தளையை அறுத்தெறியவும் அமெரிக்காவை ஒன்றுபடுத்தவும் போர் அவசியம் என்று துணிந்தார்.உள்நாட்டுப்போர் மூண்டது. இந்த அடிமை வாழ்வை ஒழித்திட ஜனாதிபதி லிங்கன் தென் மாநிலத்து அமெரிக்கரோடு தவிர்க்க முடியாத உள்நாட்டுப்போரில் இறங்கி சுமார் நான்கு ஆண்டுகள் போராட வேண்டியதாயிற்று.

4 ஆண்டுகள் நீடித்த உள்நாட்டுப்போரில் தென்மாநிலங்கள் தோற்கடிக்கப்பட்டன. லிங்கனின் உயரிய சிந்தனைக்கு வெற்றி கிடைத்தது. வடபுறத்து மாநிலங்களும் தென் புறத்து மாநிலங்களும் புரிந்த அந்த உள்நாட்டுப் போரில் ஆபிரகாம் லிங்கனின் வடபுறத்து மக்கள் வெற்றி பெற்றனர். ஜனவரி 1865 இல் அமெரிக்காவில் அடிமைத்தனத்தை ஒட்டுமொத்தமாக ஒழிக்க வேண்டும் என்ற தீர்மானம் அமெரிக்க மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.

மக்களாட்சி விளக்கம்

1863 இல் லிங்கன் ஆற்றிய கெட்டிச்பெர்க் பேருரையில் ( Gettysburg speech )"விடுதலை உணர்ச்சி மிக்க ஐக்கிய அமெரிக்காவை பாதுகாப்பதற்கே இந்த உள்நாட்டுப்போர் நடத்தப்படுகிறது. எல்லா மாந்தரும் சமத்துவ நிலையில் படைக்கப்பட்டவர், எனும் உன்னத வாசகம் மேற்கொள்ளப்படுகிறது. மக்களுக்காக அரசாங்கம்,மக்களுடைய அரசாங்கம் ,மக்களால் ஆளப்படும் அரசாங்கம் என்னும் வாக்கு மொழிகள் அழிந்து போகாது." எனக் குறிப்பிட்டார்.

“ "மக்களால், மக்களுக்காக நடத்தப்படுவதே மக்களாட்சி" ”
என்பது ஆபிரகாம் லிங்கனின் மிகப் புகழ்பெற்ற மக்களாட்சி குறித்த விளக்கம் ஆகும். லிங்கனின் சீர்திருத்தக் கருத்துக்களும், மக்களாட்சித் தத்துவமும், அடிமைத்தன ஒழிப்பும் அடித்தட்டு மக்களிடம் எழுச்சியை உண்டாக்கியது.

1864 ஆம் ஆண்டு நிகழ்ந்த தேர்தலில் 4 வாக்குகள் மிகையாக பெற்று இரண்டாம் தடவையாக ஜனாதிபதியாக லிங்கன் தேர்டுக்கப்பட்டார். அடுத்த ஒரு மாதத்தில் போர் நின்றது. உள்நாட்டில் போரில் வெற்றி பெற்ற தென்பகுதி மாநிலங்களில் போர் தளபதி ராபர்ட் லீ (rober lee )வடபகுதி இராணுவ தளபதி கிரான்ட் (genral grant )முன்பு சரணடைந்த அதே ஆண்டு இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபதிராக தேர்வுபெற்றார் லிங்கன்.

இறப்பு

1865 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ந்தேதி பெரிய வெள்ளிழைமையன்று தனது மனைவியுடன் "அவர் அமெரிக்கன் கசின்" என்ற நாடகம் பார்க்க சென்றிருந்தார் லிங்கன். அவர் நாடகத்தை ரசித்துகொண்டிருந்தபோது ஜான் வில்ஸ் பூத் (john wilkes booth) என்ற ஒரு நடிகன் அதிபர் லிங்கனை குறி வைத்து சுட்டான். மறுநாள் காலை 56 வயதான லிங்கனின் உயிர் பிரிந்தது.[3] பிரிந்து போன வட தென் அமெரிக்க மாநிலங்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தன. தென் பகுதி அமெரிக்க அடிமைக் கறுப்பருக்கு எல்லாம் விடுதலை கிடைத்தது. ஆனால் வரலாற்று முக்கியத்துவம் உள்ள அந்த மகிழ்ச்சிகரமான வெற்றியை கண்டுகளிக்க அவற்றின் ஆக்க மேதையான ஆபிரகாம் லிங்கன் அப்போது உயிரோடு இல்லை.

மத நம்பிக்கை மற்றும் கொள்கைகள்

பல கல்வியாளர்கள் ஆபிரகாம் லிங்கனின் மத மற்றும் தத்துவ கொள்கைகள் பற்றி விரிவாக ஆராய்ந்தும் எழுதியும் வந்துள்ளனர். உதாரணமாக லிங்கனது மத சார் கருத்துக்கள் அவரது சொந்த மத நம்பிக்கைகளை பிரதிபலிப்பதாக இருந்ததா அல்லது பெரும்பாலாக மறுபிரவேச புரொட்டஸ்டன்ட்டுகாரர்களாக இருந்த அவரது பார்வையாளர்களைக் கவரும் கருவியாக அவர் பயன்படுத்தினாரா என்பது போன்றவையாகும். மனைவியுடன் அடிக்கடி தேவாலயத்துக்குச் செல்லும் வழக்கம் கொண்டவராக லிங்கன் இருந்தபோதிலும் அவர் ஒருபோதும் எந்த ஒரு தேவாலயத்திலும் உறுப்பினராக இணையவில்லை. இருப்பினும் லிங்கன் விவிலியத்தில் மிகவும் பரிச்சயமான ஒருவராக இருந்துள்ளார். அத்துடன் பல தடவைகள் அவர் விவிலியத்தை புகழ்ந்தும் மேற்கோள் காட்டியும் பேசியுள்ளார்.

வரலாற்றுப் புகழ்

அமெரிக்காவின் சிறந்த அதிபருக்கான வாக்கெடுப்புகளில் லிங்கன் தொடர்ச்சியாக முதல் மூன்று இடங்களுக்குள் வந்துள்ளார்.பல முறை அவர் பெயர் முதலிடம் பெற்றிருக்கிறது. 2004 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டஓர் ஆய்வின் பொது, லிங்கனைப் பல வரலாற்று ஆய்வாளர்கள் சிறந்த அதிபராக முதலிடத்தில் வரிசைப்படுத்தும் அதே வேளையில் பல சட்டவல்லுநர்கள் அவரை ஜார்ஜ் வாஷிங்டனுக்கு அடுத்தபடியாக இரண்டாவது சிறந்த அதிபராக வரிசைப்படுத்துவது அறியப்பட்டுள்ளது.

லிங்கனின் படுகொலையினால் அவர் அமெரிக்க மக்களால் 'ஒரு தேசியத் தியாகி' என மரியாதை செய்யப்படுகிறார். அடிமைத்தனத்தை ஒழிக்கப் போராடியதால் மக்களால் அவர் ஒரு சிறந்த சுதந்திரப் போராளியாக வணங்கப்படுகிறார் .

நினைவகங்கள்

அமெரிக்காவில் லிங்கனது நினைவாக அவரது பெயரில் பல நினைவு இல்லங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அத்துடன் பல சிறிய மற்றும் பெரிய நகரங்களுக்கும் இவரது பெயர் இடப்பட்டுள்ளது. அதில் முக்கியமாக நேபெரேஸ்கா மாநிலத்தின் தலைநகர் அவரின் பெயரைக் கொண்டுள்ளது. லிங்கனின் முதல் சிலையும் பொது நினைவுச்சின்னமும் அவரது படுகொலைக்கு மூன்று ஆண்டுகளுக்கு பின்பு வாசிங்டன், டி. சி.யில் 1868 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது

ஐக்கிய அமெரிக்காவின் 16 வது குடியரசுத் தலைவர்
பதவியில்
மார்ச் 4, 1861 – ஏப்ரல் 15, 1865
துணை குடியரசுத் தலைவர் ஹன்னிபல் ஹாம்லின் (1861 முதல் 1865 வரை); ஆண்ட்ரூ ஜான்சன் (மார்ச்-ஏப்ரல்l 1865)
முன்னவர் ஜேம்ஸ் புக்கானன்
பின்வந்தவர் ஆண்ட்ரூ ஜான்சன்
தனிநபர் தகவல்
பிறப்பு பெப்ரவரி 12, 1809
ஹார்டின் வட்டம், கெண்ட்டக்கி
இறப்பு ஏப்ரல் 15, 1865. அகவை 56
வொஷிங்டன் டி.சி
தேசியம் அமெரிக்கன்
அரசியல் கட்சி விக் கட்சி, குடியரசுக் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) மேரி டாடு லிங்கன்
சமயம் ஏதும் இல்லை
கையொப்பம்

அலெக்சாண்டர் கிரகாம் பெல்அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் ( Alexander Graham Bell, மார்ச் 3, 1847 - ஆகஸ்ட் 2, 1922) ஓர் அறிவியல...
02/05/2015

அலெக்சாண்டர் கிரகாம் பெல்

அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் ( Alexander Graham Bell, மார்ச் 3, 1847 - ஆகஸ்ட் 2, 1922) ஓர் அறிவியலாளர், பொறியாளர், கண்டுபிடிப்பாளர், ஆசிரியர் மற்றும் அறிவியல் அறிஞர் ஆவார். தொலைபேசியைக் கண்டுபிடித்ததற்காக அறியப்படுகிறார். தனது இளமையில் பிரித்தானியக் குடிமகனாக இருந்தார். பின்னர் அமெரிக்கக் குடியுரிமை பெற்றார்." இவரது தாயாரும் மனைவியும் செவிடராதலினால் இவரது ஆய்விற்கு இது ஓர் உந்துசக்தியாக அமைந்திருக்கலாம். இவரது ஆய்வுகள் ஊடாக 1876 ஆம் ஆண்டு தொலைபேசி உருவாக்கப்பட்டது. இவர் பெல் தொலைபேசி நிறுவனத்தின் நிறுவனரும் ஆவார்.

இளமை

அலெக்சாண்டர் பெல் ஸ்கொட்லாந்தில் எடின்பேர்க்கில் 3 மார்ச் 1847 ஆம் ஆண்டு பிறந்தார்.[4] அவருடைய குடும்ப நன்பரான அலெக்சாண்டர் கிரகாம் என்பவரின் மேல் மிகுந்த மதிப்பு கொண்டு அவருடைய பெயரையும் சேர்த்து அலெக்சாண்டர் கிரகாம் பெல் என்று இவருக்குப் பெயர் சூட்டப்பட்டது.[N 1] அலெக்சாண்டருக்கு மெல்வில்லி ஜேம்ஸ் பெல் (1845–70) , எட்வர்டு ஜேம்ஸ் பெல்(1848–67) என்ற இரண்டு சகோதரர்கள். இவர்கள் இருவரும் காசநோயால் மரணமடைந்து விட்டனர்.[7] இவருடைய தந்தை அலெக்சாண்டர் மெல்வில்லி பெல் ஒரு பேராசிரியர். தாயார் எலிசா கிரேஸ் ஆவார்.[N 2] லண்டனில் வசித்த அவருடைய தாத்தா, டப்ளினில் உள்ள அவருடைய மாமா, எடின்பர்க்கில் உள்ள அவருடைய தந்தை அலெக்சாண்டர் மெல்வில்லி பெல் ஆகிய அனைவரும் பணி முறையாக நாவன்மை பயிற்றுவிப்பவர்களாகத் (Professed elocutions) திகழ்ந்து வந்தனர். கண்பார்வை அசைவுகளினால் பல்வேறு உணர்வுகளை எவ்வாறு காட்டுவது? உதடுகளின் அசைவைக் கொண்டு ஒருவர் பேசுவதைக் காது கேளாதோர் எவ்வாறு புரிந்து கொள்வது? என்பதைப் பற்றியெல்லாம் பெல்லின் தந்தை பல நூல்களை எழுதியுள்ளார்.

எட்டு வயதிலேயே கிரகாம் நன்றாகப் பியானோ வாசிப்பதில் வல்லவராகத் திகழ்ந்தார்.[8] பத்து வயதான போது அவருக்குப் பள்ளி செல்ல நாட்டமில்லாமல் போனது. இலத்தீன், கிரேக்க மொழிகளைப் படிப்பதைவிட பியானோ வாசிப்பதிலும், ஒலி அலைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்வதிலும் தனது நேரத்தைப் போக்கினார. பேச்சை மின் ஒலியாக மாற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது வந்த காது கேளாத பெண்ணை விரும்பி அவளையே திருமணம் செய்துகொண்டார்

பணிகள்

கிரகாம் பெல்லின் குடும்பம் கனடாவிற்குக் குடி பெயர்ந்தது. போஸ்டன் நகரத்தில் வசித்த போது காது கேளாதோர் பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி தருவதற்காக பெல் ஒரு பள்ளிக் கூடத்தை ஏற்படுத்தினார். அதில் பேச்சுமுறை பற்றிய அடிப்படைகளைக் கற்பித்தார் .அவரது ஆய்வுமுறை, அறிவாற்றல் எங்கும் பரவியதால், பாஸ்டன் பலகலைக் கழகம் பேச்சு அங்கவியல் பேராசிரியராக இவரை பணியில் அமர்த்தியது

ஆய்வு
பியானோவில் ஒலி எழுப்பி மின்சாரம் மூலமாக அந்த இசையை ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு அணுப்பினார் பெல். தந்தி முறையில் வெறும் ஒலிகள் மட்டுமே அனுப்பப்பட்டன. பேச்சுகளையும் அந்த முறையில் அனுப்பலாமே என்று கிரகாமுக்கு 18 வயதிலேயே தோன்றியது. அதனால் அந்த முயற்சிகளில் ஈடுபடார்[18][N 3] . அக்காலத்தில் மனிதனின் பேச்சொலிகளை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு தந்திகள் மூலம் அனுப்பப்பட்டு வந்தது. அந்த முறைகள் இவருடைய ஆராய்ச்சிக்கு மிகவும் உதவியாயிருந்தன. 1875 இல் இந்த முயற்சிகள் ஓரளவு வெற்றி பெற்றன. முதலில் தெளிவில்லாத பேச்சொலிகளை அனுப்ப முடிந்தது.

1876 ஆம் ஆண்டு உலகின் முதல் தொலைபேசி பேசியது பெல் அவருடைய உதவியாளர் வாட்சன்[20] என்பவரிடம் பேசினார். அவர் முதலில் தொலைபேசியில் பேசிய சொற்றொடர் " வாட்சன் இங்கே வாருங்கள். உங்களைக் காண வேண்டும்."(Watson, come here, I want to see you)என்பதுதான். இந்த சொற்களை வாட்சனால் தெளிவாகக் கேட்க முடிந்தது. ஆனால் பெல் கண்டுபிடித்த தொலைபேசியைப் பற்றி யாரும் அக்கறை கொள்ளவில்லை அதனால் அவர் மிகவும் சோர்வடைந்தார். பிலெடெல்பியாவில் நடைபெற்ற ஒரு கண்காட்சியில் தனது தொலைபேசியைப் பார்வைக்கு வைத்தார். அங்கு வந்த பிரேசில் நாட்டு மன்னர் அதை வியப்போடு எடுத்துப் பயன்படுத்திய பின்னர் தான் தொலைபேசியின் பெருமை எங்கும் பரவியது. அமெரிக்காவில் உள்ள தனது மாமனாரின் உதவியுடன் 1876 மார்ச்சு 7 ஆம் தேதி தொலைபேசிக்கான காப்புரிமையைப் பெற்றார்.

1877 இல் தன் உதவியாளர் வாட்சனுடன் சேர்ந்து "பெல் தொலைபேசி கம்பனி" என்ற பெயரில் தொலைபேசி நிறுவனம் ஒன்றை நிறுவினார். தொலைபேசியைக் கண்டுபிடித்ததற்காக பிரெஞ்சு அரசு அவருக்கு வழங்கிய 50,000 பிராங்க் பரிசுத் தொகையைக் கொண்டு வோல்டா ஆய்வுச் சாலை (Volta Laboratory) என்ற பெயரில் ஓர் அமைப்பை நிறுவினார்

கண்டு பிடிப்புகள்
பெல் தொலைபேசியுடன் மட்டும் நின்றுவிடவில்லை. அரசு நிறுவனத்தின் மூலம் பொட்டோ போன்[28][29][30], ஆடியோ மீட்டர், மெட்டல் டிடக்டர், இன்டக்‌ஷன் பேலன்ஸ், வாக்ஸ் ரிகார்டிங் சிலிண்டர், கிராமபோன் போன்ற கருவிகளைக் கண்டு பிடித்தார். பெல் விமானம் கண்டு பிடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார். ஆனால் அது அவருக்கு வெற்றி தரவில்லை. ஆனால் சில கண்டுபிடிப்புகளைச் செய்தார்.

AEA Silver Dart ca. 1909
விமானத்தின் எய்லிரான் என்ற பகுதியைக் கண்டுபிடித்தவர் பெல் ஆவார். பிற்காலத்தில் கடல் விமானத்தைச் சீர்திருத்தி அமைப்பதில் வெற்றி கண்டார். ஆடுகள் வளர்க்கும் முயற்சியில் புதுமையைப் புகுத்தினார். ஒவ்வொரு முறையும் இரட்டைக் குட்டிகளை ஈடும் பெண் ஆடுகளை உருவாக்கவும் திட்டமிட்டார். பாலைவனங்களில் நாடுகாண முற்படும் படைவீரர்களுகு, காற்றிலுள்ள மிகுந்த ஈரத்தை வடிகட்டி உதவக் கூடிய அரிய கருவியைக் கண்டுபிடித்தார். காது கேளாதோருக்குப் பேச்சுப் பயிற்சியை வளர்ப்பதற்கான சங்கம் ஒன்றை நிறுவினார். கண் தெரியாதவர்களுக்குப் பிரெய்ல் முறையைக் கண்டு பிடித்த ஹெலன் கெல்லருக்கு பெல் பல உதவிகளைச் செய்துள்ளார்.[38] ஒலியியல் அடிப்படையில் உலக ஆங்கிலம் என்பதை உருவாக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டினார். தனிப்பட்ட முறையிலும், பிற அறிவியலறிஞர்களுடன் சேர்ந்தும் 59 கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமையை பெல் பெற்றுள்ளார் என்பது அவருடைய வரலாற்றில் மிக முக்கியமான அம்சமாகும்.

சிறப்புகள்
1882 இல் அமெரிக்கக் குடியுரிமை பெற்றார்.
1888 இல் உலக புவியியல் கழகத்தை(National Geograph Society) ஆரம்பித்த உறுப்பினர்களில் ஒருவராகவும், அந்தக் கழகத்தின் இரண்டாவது தலைவராகவும் விளங்கினார். He has been described as one of the most influential figures in human history.
பிரெஞ்சு அரசு வழங்கிய 'லெஜியன் ஆப் ஆனர்'(Legion of Honour) விருது
Acedemic Francise விருது
வோல்டா பரிசு
ராயல் சொசைட்டி ஆப் ஆர்ட்ஸ்(லண்டன்),
ஆல்பெர்ட் பதக்கம்(1902)
உர்ஸ்பர்க் பல்கலைக் கழகம் வழங்கிய முனைவர் பட்டம்
எடிசன் பதக்கம்(1914)
போன்ற பல்வேறு சிறப்புகளையும் விருதுகளையும் பெற்றார்

மறைவு

அமெரிக்காவில் உள்ள பாடக் என்ற ஊரில் 1922 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தேதி அலெக்சாண்டர் கிரகாம் பெல் காலமானார். அவர் மறைந்த தினத்தன்று அமெரிக்காவில் உள்ள தொலைபேசிகள் அனைத்தும் 5 நிமிடங்கள் நிறுத்தப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

ரைட் சகோதரர்கள்ரைட் சகோதரர்கள் என்றழைக்கப்படும் (Wright brothers, ஓர்வில் ரைட் (ஆகஸ்ட் 19, 1871 – ஜனவரி 30, 1948), வில்ப...
27/04/2015

ரைட் சகோதரர்கள்

ரைட் சகோதரர்கள் என்றழைக்கப்படும் (Wright brothers, ஓர்வில் ரைட் (ஆகஸ்ட் 19, 1871 – ஜனவரி 30, 1948), வில்பர் ரைட் (ஏப்ரல் 16, 1867 – மே 30 1912), என்ற இருவரும் அமெரிக்காவைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர்களும் விமானத்தைக் கண்டறிந்த முன்னோடிகளும் ஆவர்.[1][2][3] முதன்முதலில் டிசம்பர் 17, 1903 ஆம் ஆண்டில் பன்னிரெண்டு வினாடிகள் எஞ்சின் உந்தும் ஊர்தியில் பறந்து சாதனை படைத்தவர்கள். வட கரோலினாவின் கிட்டி ஹாக்கில் "ஓர்வில் ரைட்" 12 கு.வ. (H.P.) ஆற்றல் கொண்ட ரைட் பிளையர் எனும் பெட்ரோல் இயந்திரம் பூட்டிய வானூர்தியில் முதன் முதலாகப் பூமிக்கு மேல் 30 மைல்/மணி வேகத்தில் 12 வினாடிகள் 120 அடி தூரம் பறந்து புகழடைந்தார்.[4][5][6][7] 1904, 1905 ஆண்டுகளில் ரைட் சகோதரரின் பறக்கும் ஊர்தி பல முறையில் முற்போக்காகி மேன்மைப்படுத்தப்பட்டது.

இளமை

மில்டன் ரைட் என்ற ஆங்கிலேய-டச்சுக்காரருக்கும் சுசான் கேத்ரின் என்ற ஜெர்மன்-ஸ்விஸ் பெண்மணிக்கும் பிறந்தவர்கள் ஏழு பேர். அவர்களில் வில்பர் 1867 இண்டியானாவிலுள்ள மில்வில்லே என்ற இடத்திலும், ஓர்வில் ஒஹையோவின் டேட்டன் என்ற இடத்தில் 1871-இலும் பிறந்தனர்.[8] இவ்விருவரும் திருமணமே செய்துகொள்ளவில்லை. ரியூச்லின் (1861–1920), லோரின், கேத்தரின் ரைட் (1874–1929), இரட்டையர்களான ஓட்டிசு மற்றும் இடா ஆகியோர் இவர்களது மற்ற குழந்தைகளாவர். இவர்கள் 1870 இல் பிறந்து குழந்தைகளாக இருக்கும்போதே இறந்துவிட்டனர். தொடக்கப் பள்ளியில் படிக்கும்போது ஓர்வில் குறும்புத்தனம் செய்தார். அதற்காகவே ஒரு முறை அவர் பள்ளியைவிட்டு வெளியேற்றப்பட்டார்.[9]

1878 இல் அவருடைய தந்தை சர்ச் ஆஃப் தி யுனைடெட் பிரெத்ரென் இன் கிறிஸ்ட்டில் ஆயராக இருந்தார். பணிநிமித்தமாக அவர் அடிக்கடி பயணம் செய்தார். அவ்வாறு ஒருமுறை அவர்தம் பயணத்தின்போது எலிகாப்டர் பொம்மை ஒன்றை அவ்விரு குழந்தைகளுக்கும் வாங்கிவந்தார். வான்வழி தொலையளவு முன்னோடியான அல்ஃபோன்ஸ் பேனாட் என்ற பிரஞ்சு நாட்டவரின் கண்டுபிடிப்பை அடிப்படையாகக்கொண்டு காகிதம், மூங்கில், கார்க்கு, இரப்பர் வளையம் ஆகியவற்றால் ஒரு அடி நீளத்திற்கு அப்பொம்மை செய்யப்பட்டிருந்தது. அது உடையும் வரை வில்பரும் ஓர்வில்லும் விளையாடினர், பிறகு அவர்களாகவே அதனை மீளமைத்தனர்.[10] அந்தப் பொம்மைதான் தங்களுக்கு பறப்பதற்கான ஆர்வத்துக்கான ஒரு தொடக்கப் பொறியாக இருந்தது என்று பிற்பாடு அவர்கள் தங்கள் அனுபவம் பற்றிச் சுட்டிக்காட்டினர்.

ஆய்வுகளும் பணிகளும்

இரு சகோதரர்களும் உயர்கல்வி வரை பயின்றனர் ஆனால் அதற்கான பட்டயங்கள் எதுவும் பெறவில்லை.[N 1] 1884 இல் ரைட் குடும்பம் இந்தியானாவிலிருந்து ஒஹையோவிலுள்ள டேட்டனுக்குக் குடிபெயர்ந்தது. இங்கு 1870 வரை இருந்தனர்.

1885 இல் வில்பர் ரைட் ஒருமுறை பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட காயத்தால் தனது முன்பற்களை இழந்தார். அதன்பிறகு அவர் முரட்டுத்தனமானவராக மாறினார். எனவே விளையாடச் செல்லாமல் வீட்டிலிருக்கத் தொடங்கினார். சில வருடங்கள் வீட்டில்ருந்த வில்பர் என்புருக்கி நோயால் பாதிக்கப்பட்ட தனது தாயாருக்கு உதவியாக இருந்தார். அச்சமயம் தனது தந்தையின் நூலகத்தில் இருந்த புத்தகங்களைப் படித்துத் தேர்ந்தார். சில நேரஙக்ளில் தனது தந்தைக்கு உதவியாகப் பிரெத்திரென் சபையில் உதவிகள் செய்தார்.[12][13]

ஆலிவர் ரைட் தனது படிப்பை இடையில் நிறுத்தி 1889 இல் தனது சகோதரர் வில்பரின் உதவியுடன் ஒரு அச்சுக்கூடத்தை நிறுவினார். பிறகு இருவரும் இணைந்து ஒரு வார இதழைத் தொடங்கினார்கள். 'மேற்கத்திய செய்திகள்' (West Side News) என்ற பெயரில் வெளிவந்த இவ்விதழுக்கு ஆர்வில் வெளியிடுவோராகவும் வில்பர் ஆசிரியராகவும் இருந்தனர். 1890 இவ்விதழை நாளிதழாக மாற்றி 'தி ஈவினிங் ஐடெம்' என்ற பெயரில் வெளியிட்டனர். நான்கு மாதங்கள் வெளிவந்த இவ்விதழ் பிறகு நின்று போனது. அதன்பிறகு வணிக நோக்கிலான அச்சகமாக மாறியது. தனது நன்பர்கள் மற்றும் தன்னுடன் பயின்ற மாணாக்கர்களை தங்களது அச்சகத்தின் வாடிக்கையாளர்களாகப் பெற்றனர். அவர்களில் புகழ்பெற்ற ஆப்பிரிக்க அமெரிக்கக் கவிஞரும் எழுத்தாளருமான 'பால் லாரன்சு டன்பர்' என்பவரும் ஒருவர். அதன் பிறகு டன்பர் ஆசிரியராகப் பணியாற்றிய 'டேட்டன் டாட்லெர்'(Dayton Tattler) என்ற வார இதழ் ஒன்றை நீண்ட நாட்கள் அச்சிடட்டனர்.[14]

அச்சுத்தொழில் நொடிந்த நிலையில் 1892 இல் ஒரு மிதிவண்டி பழுது பார்த்தல் மற்றும் விற்பனை நிலையத்தைத் தொடங்கினர்.இங்கு பழைய சைக்கிள்களைப் பரிமாற்றவும் செய்தனர். இது பின்னர் ரைட் மிதிவண்டி நிறுவனமாக மாறியது. 1896 இல் இந்நிறுவனம் தனது மிதிவண்டிகளை சொந்தமாகத் தயாரிக்கவும் செய்தது.[15]

இதிலிருந்து அவர்களது பேராவலாகிய வானப் பயன ஆய்வுக்குத் தேவையான பணம் கிடைத்தது. 1890 இல் அவர்கள் ஒரு முறை நாளிதழ் செய்தி ஒன்றில் ஜெர்மனியைச் சேர்ந்த ஒட்டோ லிலியந்தால் என்பவர் தான் தயாரித்த கிளைடர் என்ற கருவியின் மூலம் இயந்திரம் எதுவுமின்றி காற்றின் சக்தியினால் ஆகாயத்தில் பறந்ததைப்பற்றி ரைட் சகோதரர்கள் கேள்விப்பட்டனர். இதே ஆண்டில் அக்டேவ் சான்யூட், சாமுவேல் பி. லாங்லீ ஆகியோர் கிளைடர் விமானப் பயணம் பற்றிய முயற்சிகளையும் ஆர்வமுடன் படித்தனர்.[16] பறக்கும் இயந்திரத்தைக் கண்டுபிடித்துவிடலாம் என்ற நம்பிக்கை மேலும் வளர்ந்தது. அதைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள முற்பட்டபோது ஒட்டோ லிலியந்தால் ஒரு பறக்கும் சோதனை முயற்சியில் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். ரைட் சகோதரர்கள் அதிர்ந்து போனாலும் அவர்களது நம்பிக்கை உதிர்ந்து போகவில்லை.[16] சிமித்சோனியன் என்ற அமைப்பின் தலைவருக்கு அவர்கள் கடிதம் எழுதினர்.[17] ரைட் சகோதரர்களின் ஆர்வத்தை உணர்ந்த கழகத்தின் தலைவர் சாமுவேல் பி. லாங்க்லீ ஆகாயத்தில் பறக்க அதுவரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளைப் பற்றியும், வெற்றி தோல்விகளைப் பற்றியும், முன்னேற்றம் பற்றியும் இப்படி எல்லாத் தகவல்களையும் அனுப்பி வைத்தார்.[18] ரைட் சகோதரர்கள் தங்களுக்கு முன் பலர் மேற்கொண்ட அரிய முயற்சிகளைக் கண்டு அவர்கள் மலைத்தனர். அந்த முயற்சிகளால் பெறப்பட்ட அறிவைக்கொண்டு வெவ்வேறு கோணங்களில் சிந்தித்தனர். 1899 இல் அவர்களே வானில் பறப்பது பற்றிய வேலைகளைத் தொடங்கினர். 4 ஆண்டு உழைப்புக்குப் பிறகு 1903 டிசம்பரில் அவர்களது முயற்சி வெற்றி பெற்றது.

இதற்குத் தேவையான எந்திர திறன்களை அவர்கள் தங்களுடைய அச்சுக்கூடம், மிதிவண்டி, மோட்டார்கள், மற்ற இயந்திரங்கள் மூலம் பெற்றனர். பறக்கும் எந்திரம் போன்ற ஒரு நிலையற்ற வாகனத்தைப் பயிற்சி மூலம் கட்டுப்படுத்தி சமநிலையில் நிறுத்தலாம் என்ற நம்பிக்கை மிதிவண்டியுடன் வேலை செய்யும்போது அவர்களுக்கு ஏற்பட்டது. 1900 முதல் 1903 வரை தங்களின் முதல் பறக்கும் விமானம் வரை, அவர்கள் பல மிதவை வானூர்திகளைச் சோதனை செய்தனர். அதன்மூலம் தங்களின் விமானிக்கான திறன்களையும் வளர்த்துக் கொண்டனர். அவர்களுடைய மிதிவண்டி கடையில் ஊழியரான 'கியார்கு கெய்லே' என்பவரும் அவர்களுடைய முதல் வானூர்தியை அமைப்பதில் அவர்களுடன் இணைந்து முக்கிய பங்குவகித்தார்.

தொழில்நுட்பம்

வானில் பல ஆண்டுகளாய்ப் பறக்க முயன்ற பல அறிஞர்கள் தோல்வியுற்ற போது, ரைட் சகோதரர்கள் பல்வேறு சோதனைகளுக்குப் பின் வெற்றி பெற்றதற்கு மூன்று தொழில்நுட்பங்கள் உதவின. முதல் முதலாக இறக்கை ஊர்திப் பறப்பியல் பயிற்சி முறையில் 'முன்னுந்தல்' (Thrust), 'மேலெழுச்சி'(Lift), 'திசைதிருப்பி'(Rudder) எனப்படும் 'முப்புற உந்தல் கட்டுப்பாடு 'என்ற நுணுக்கத்தை ரைட் சகோதரர்கள் கையாண்டனர். ரைட் சகோதரர்கள். இரண்டாவது ஊர்திக்கு முன்னுந்தல் ஆற்றலைத் தருவதற்கு எண்ணெயிலியங்கும் எரிபொருள் இயந்திரத்தைப் புகுத்தி அதிக வேகத்தை அளித்தனர். மூன்றாவதாக 1900-1903 ஆண்டுகளில் ஆர்வில்ரைட், வில்பர்ரைட் இருவரும் [Wind Tunnel] ஒன்றைத் தயாரித்து 200 விதமான இறக்கைகளைச் சோதித்துத் தகுதியான ஒன்றைத் தேர்ந்தெடுத்தனர்

முயற்சிகளும் வெற்றியும்

அமெரிக்கா வட கரோலினா கிட்டி ஹாக்கில் [Kitty Hawk, North Carolina]1903 டிசம்பர் 17 ஆம் தேதி ஆர்வில் ரைட் முதன் முதலாக எஞ்சின் ஊர்தியை இயக்கி 12 வினாடிகள் பூமிக்கு மேல் பறந்தார். அடுத்து வில்பரும், ஆர்விலும் அன்றைய தினம் மாறி மாறி நான்கு தடவைகள், பறந்து காட்டி, ஊர்தியின் பறப்பியல் திறனை நிரூபித்தார்கள். வில்பர் ரைட் முற்பட்ட மூன்றாவது இறுதி முயற்சியில், ஆர்வில் ரைட் 12 குதிரைத் திறன் ஆற்றல் கொண்ட, 600 பவுண்டு எடை கொண்டிருந்த, பெட்ரோல் இயந்திரம் பூட்டிய பறக்கும் ஊர்தியில் முதன் முதலாகப் பூமிக்கு மேல் ஆகாயத்தில் மணிக்கு 30 மைல் வேகத்தில் 59 வினாடிகள் 852 அடி தூரம் பறந்து காட்டிச் சரித்திரப் புகழடைந்தனர். 1901 ஆம் ஆண்டில் மார்க்கோனி ரேடியோத் தொடர்பை முதலில் நிரூபித்துக் காட்டியபின், இருபதாம் நூற்றாண்டின் மகத்தான இரண்டாவது சாதனையாக 1903 இல் ரைட் சகோதரரின் வான ஊர்திப் பறப்பு கருதப்படுகிறது

இறுதி நாட்கள்

வில்பர்

விமானம் கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காகவே ரைட் சகோதரர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளவில்லை.[20] 1912 இல் ஒரு முறை தொழில்முறைப் பயணமாகப் போஸ்டன் சென்றிருந்த போது உடல்நலக் குறைவு ஏற்பட்டது.[21] டேய்டனுக்குத் திரும்பிய பிறகு டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். நோயின் தீவிரத்தால் தன்நினைவின்றி பல நாட்கள் இருந்தார். இறுதியாகத் தனது 45 ஆம் வயதில் தமது இல்லத்தில் 1912, மே 30 இல் காலமானார்

ஆர்வில் ரைட்

வில்பர் ரைட் இறந்த பிறகு ரைட் நிறுவனத்தை ஆர்வில் ரைட் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தினார். ஆனால் 1915 இல் ரைட் நிறுவனத்தை விற்பனை செய்துவிட்டு திருமணம் செய்து கொள்ளாமலேயே தமக்கு உதவியாக இருந்த தமது தங்கை காத்ரீன் ரைட் மற்றும் தனது தந்தையுடனும் ஒஹையோவில் ஓக்வுட் எனுமிடத்திற்குக் குடியேறினார். 1917 இல் ஆர்வில்லின் தந்தை தூங்கும்போதே இறந்து போனார். ஆர்வில் 1911 இல் தயாரிக்கப்பட்ட 'மாடல் பி' என்ற விமானத்தைக் கடைசியாக 1918 இல் ஓட்டினார். அதன் பிறகு தொழிலில் இருந்து ஓய்வுபெற்றார். நாசா உள்ளிட்ட பல்வேறு வானாய்வு நிறுவனங்களில் முன்னனி ஆலோசகராகப் பணிபுரிந்தார்.

1926 இல் தங்கை காத்ரீன் தனதுடன் பயின்ற தோழரான ஹென்றி ஆஸ்கெல் என்பவரை மணந்தார். இது ஆர்விலை மிகவும் பாதித்தது. இந்தத் திருமணத்தில் ஆர்வில் கலந்து கொள்ளவில்லை. அவருடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளவுமில்லை. இறுதியாக 1929 இல் காத்ரின் இறப்புக்கு சற்று முன்னரே அவரைப் பார்க்க ஒப்புக்கொண்டார்.

1948, ஜனவரி 30 இல் இரண்டாவது முறையாக மாரடைப்பு ஏற்பட்டு ஆர்வில் ரைட் காலமானார். இவருடைய உடல் ஒஹையோவின் டேய்ட்டனில் உள்ள இவருடைய குடும்பத்திற்குச் சொந்தமான வுட்லாண்ட் இடுகாட்டில் வில்பர் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கருகில் அடக்கம் செய்யப்பட்டது.

Address

Jaffna Town
40000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thivakaran posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Thivakaran:

Share

Category