Darulmasharie

Darulmasharie شركة دار المشاريع (الصفحة الرسمية)

11/02/2025
10/02/2025
18/01/2025

புனித ரஜப் மாதத்தில் நடைபெற்ற அற்புத நிகழ்வுகளாகிய அல்- இஸ்ராஉ, அல்-மிஃராஜ் (வி்ண்ணுலக) பயணத்தை நினைவுகூறுவோம்

அகீததுல் அவாம் عقيدة العوام எனும் கிதாப் அறபுக்கல்லூரிகளில் பாடத்திட்டத்தில் கற்பிக்கப்படுகின்ற மிக முக்கியமான கிதாப் லெ...
10/03/2022

அகீததுல் அவாம் عقيدة العوام எனும் கிதாப் அறபுக்கல்லூரிகளில் பாடத்திட்டத்தில் கற்பிக்கப்படுகின்ற மிக முக்கியமான கிதாப் லெபனான் அச்சகத்தில் மிக அழகான முறையில் அச்சிடப்பட்ட அழகான கிதாப்
தேவையுடையவர்கள் வட்ஸ் அப் மூலம்
+94 777 255635
தொலைபேசி மூலம் +94 (77) 302 9184 இவ் இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம்.
இதன் விலை 1200/- முழு இலங்கையிலும் கொரியர் மூலம் அனுப்ப முடியும்.

“அஸ்ஸிறாத்”அஷ்அரிய்யஹ்களின் பொக்கிஷம்அல்லாமஹ்,அல்ஹாபிழ் அப்துழ்ழாஹ் அல் ஹறரீ றஹிமஹுழ்ழாஹ் அவர்களினால் அஹ்லுஸ்ஸுன்னஹ் வல்...
10/03/2022

“அஸ்ஸிறாத்”
அஷ்அரிய்யஹ்களின் பொக்கிஷம்

அல்லாமஹ்,அல்ஹாபிழ் அப்துழ்ழாஹ் அல் ஹறரீ றஹிமஹுழ்ழாஹ் அவர்களினால் அஹ்லுஸ்ஸுன்னஹ் வல் ஜமாஅத்தினரின் கொள்கையை பாதுகாக்கும் விடயத்தில் தொகுத்த நூற்றுக்கணக்கான நூற்களில் இந்நூல் மிக முக்கியமானதாகும்.

மேலும் கொள்கை ரீதியாக முன்வைக்கப்படும் பல கேள்விகளுக்கு இந்நூல் தக்க பதில்களை உள்ளடக்கி இருப்பதும் இதன் சிறப்பம்சங்களில் ஒன்றாகும். நம் நாடு உட்பட பல நாடுகளிலில் உள்ள அஹ்லுஸ்ஸுன்னஹ் வல் ஜமாஅத்தினரின் கல்லூரிகளில் இந்நூல் பாடத்திட்ட நூலாக இணைக்கப்பட்டு போதிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

அஷ்அரிய்யஹ்களின் கொள்கை கோட்பாடுகளை ஆதாரங்களை பிரதானப்படுத்தி, தற்காலத்தில் எதிர்கொள்ளப்படும் அகீதஹ் தொடர்பான பல சவாலான மஸ்அலாக்களுக்கு தரமான தீர்வுகளை உள்ளடக்கி தொகுக்கப்பட்ட நூற்களில் இந்த நூலுக்கு தனிச் சிறப்புண்டு.

அழ்ழாஹ்வின் ஸிபாத்கள் (பண்புகள்) எவ்வாறு நம்பிக்கை கொள்ளப்பட வேண்டும், முதஷாபிஹான வசனங்கள் எவ்வாறு கையாளப்படவேண்டும், முக்கிய சில முதஷாபிஹான வசனங்களை ஸலபுகள், ஹலபுகள் கையாண்ட விதம்,

தஃவீல் என்றால் என்ன தஃவீல் தப்ஸீலீ, தஃவீல் இஜ்மாலீ என்றால் என்ன? தஃவீல் செய்ய அனுமதியுண்டா?, தஃவீல் செய்வதை மறுப்போருக்கு எதிராக முன்வைக்க வேண்டிய கேள்விகள், அணுகுமுறைகள், பிழையான முறையில் தஃவீல் செய்து அகீதாவுக்கெதிரான கருத்துகளை நம்பியிருப்போர் தொடர்பான தீர்ப்பு, அழ்ழாஹ் அனைத்து இடத்திலுமோ, அர்ஷிலோ, வானத்திலோ தரிபடுபவன் அல்ல. அவன் இடமோ, திசையோ இன்றி உள்ளவன் என்பதை குர்ஆன், சுன்னஹ் ரீதியாகவும், தர்க்க ரீதியாகவும் நிறுவும் முறை, குப்ரை ஏற்படுத்தும் காரியங்கள் என்னென்ன?

வஹ்ஹாபிகள், முஃதஸிலாக்கள் போன்ற பித்அத்வாதிகளின் வழிகேடுகளை முறியடிப்பது எவ்வாறு? அழ்ழாஹ்வின் கலாம் (பேச்சு) தொடர்பான தெளிவு, அது தொடர்பான சரியான நம்பிக்கை போன்ற இன்னும் பல மஸ்அலாக்களை அஷ்அரிய்யஹ்களின் போங்கில் தெளிவுபடுத்தும் தனித்துவம் வாய்ந்த ஒரு நூல்.

இந்த"அஸ் ஸிறாத்"பாகம் 01 தற்போது தமிழ் மொழியில் வெளிவரவுள்ளது.
ஜாமிஅதுல் ஜமாலிய்யா அறபுக் கல்லூரியின் அனுசரனையில் இமாம் அல் அஷ்அரீ கலாபீடம் இந்நூலை வெளியிடவுள்ளது.

அஹ்லுஸ்ஸுன்னஹ் வல் ஜமாஅத்தினரே மறுமை வெற்றியடைவர். அஹ்லுஸ்ஸுன்னஹ் வல் ஜமாஅத்தினரின் அறிவே மறுமை வெற்றிக்கும் வழிவகுக்கும...
21/01/2022

அஹ்லுஸ்ஸுன்னஹ் வல் ஜமாஅத்தினரே மறுமை வெற்றியடைவர். அஹ்லுஸ்ஸுன்னஹ் வல் ஜமாஅத்தினரின் அறிவே மறுமை வெற்றிக்கும் வழிவகுக்கும். அஹ்லுஸ்ஸுன்னஹ் வல் ஜமாஅத்தினர் என்போர் அஷாஇராக்களும் மாதுரீதிய்யக்களுமே ஆவர். குர்ஆன் சுன்னஹ் கற்றுத்தந்த சத்தியக் கொள்கையை பாதுகாத்த பெருமை அஷாஇரா மற்றும் மாதுரீதிய்யக்களையே சேரும். குர்ஆன், சுன்னஹ் தூய கொள்கை பாதுகாக்கப்பட அஹ்லுஸ்ஸுன்னஹ் வல் ஜமாஅத்தினர் காலநெடுகிலும் நூல்களை எழுதி வந்துள்ளனர். வருகின்றனர். அழ்ழாஹ் மேலும் பலப்படுத்துவானாக! ஆமீன்.

அஷ்அரிய்யஹ்களின் கொள்கை கோட்பாடுகளை ஆதாரங்களை பிரதானப்படுத்தி, தற்காலத்தில் எதிர்கொள்ளப்படும் அகீதஹ் தொடர்பான பல சவாலான மஸ்அலாக்களுக்கு தரமான தீர்வுகளை உள்ளடக்கி தொகுக்கப்பட்ட இந்த நூல் விரைவில்... வெளிவர இருக்கின்றது.
வெளியீடு-ஜாமிஅதுல் இமாம் அல் அஷ்அரி அரபுக்கல்லூரி -கொழும்பு

💥قلائد الأئمة المرصعة بعقائد الأئمة الأربعة💥 🌟கலாயிதுல் அஇம்மதில் முரஸ்ஸஅஹ் பி அகாஇதில் அஇம்மதில் அர்பஅஹ்.🌟தாருல் மாஷாரீ...
27/11/2021

💥قلائد الأئمة المرصعة بعقائد الأئمة الأربعة💥

🌟கலாயிதுல் அஇம்மதில் முரஸ்ஸஅஹ் பி அகாஇதில் அஇம்மதில் அர்பஅஹ்.🌟

தாருல் மாஷாரீஃ இஸ்லாமிய புத்தக நிலையமானது பெறுமதிமிக்க, இந்த நூலை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறது.

மத்ஹபு அறிஞர்களின் வார்த்தைகளை வைத்து அவர்களை முஜஸ்ஸமாக்களின் கொள்கைக்கு நேர்பாடானவர்கள் என்ற பொய்யாக காட்டும் குறிக்கோளுடன் எழுதப்பட்ட நூலொன்றுக்கு எதிரான மறுப்புகளை உள்ளடக்கியதே இந்த நூல். மற்றும் மேற்குறித்த அறிஞர்கள் அனைவரும் முஜஸ்ஸிமாக்களின் கொள்கைக்கு எதிரானவர்களுக்கும், அஹ்லுஸ்ஸுன்னஹ் வல் ஜமாஅத்தினரின்
கொள்கையை உடையவர்களே என்பதை பதிவு செய்யும் ஆக்கபூர்வமான நூலுமாகும்.

விலை ரூபா:1500/=

👉பெற்றுக் கொள்ள பின்வரும் இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்.0773029184-0772328686 நேரடியாகவோ, தபால் மூலமோ பெற்றுக் கொள்ளலாம்.

Address

03 Aalim Place, Sir Rasik Fareed Mawatha
Kattankudi
30100

Opening Hours

Monday 08:30 - 20:00
Tuesday 08:30 - 20:00
Wednesday 08:30 - 20:00
Thursday 08:30 - 20:00
Saturday 08:30 - 20:00
Sunday 08:30 - 20:00

Telephone

+94777255635

Website

Alerts

Be the first to know and let us send you an email when Darulmasharie posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Darulmasharie:

Shortcuts

Share