உண்மை செய்திகள்

உண்மை செய்திகள் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from உண்மை செய்திகள், 1st, Sammanthurai.

8 இலட்சம் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றார் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை...
04/09/2026

8 இலட்சம் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றார் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ்.போதரகம இன்று (04) உத்தரவிட்டார்.

இலஞ்ச ஆணைக்குழு சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார மற்றும் சந்தேகநபரின் சட்டத்தரணிகள் முன்வைத்த காரணங்களை பரிசீலித்த பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய எயார்பஸ் விமான கொள்வனவு சம்பவத்தில் 8 இலட்சம் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றார் என்ற சந்தேகத்தின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

04/09/2026

மனதை நெகிழ வைத்த சம்பவம்!!

சமூக வலைதளங்களில் வைரலாகும் #காணொளி..

゚viralシ

 #கொழும்பில்_மெட்ரோ  #புதியநவீன_பஸ்  #சேவைகள்_ஆரம்பம்: 04 Sep 2026 கொழும்பில் லங்கா மெட்ரோ ட்ரான்ஸிட் புதிய நவீன பஸ் சேவ...
04/09/2026

#கொழும்பில்_மெட்ரோ #புதியநவீன_பஸ் #சேவைகள்_ஆரம்பம்:

04 Sep 2026 கொழும்பில் லங்கா மெட்ரோ ட்ரான்ஸிட் புதிய நவீன பஸ் சேவைகள் ஆரம்பம்: 7 முக்கிய வழித்தடங்களில் இச் சேவை ஆரம்பம்

மேல் மாகாண பொதுப் போக்குவரத்துச் சேவைகளை நவீனமயப்படுத்தும் நோக்குடன் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள லங்கா மெட்ரோ ட்ரான்ஸிட் (Lanka Metro Transit - LMT) பஸ் சேவைகள் செப்டம்பர் 04 ஆம் திகதி முதல் உத்தியோகபூர்வமாகத் தனது இயக்கத்தை ஆரம்பிக்கவுள்ளது. இதற்கென தலங்கம மெட்ரோ டிப்போவிற்கு ஒதுக்கப்பட்ட முதற்கட்ட 20 சொகுசு தாழ்தள (Low Floor) பஸ்கள் பேலியகொட பஸ் முனையத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. புதிதாக இணைக்கப்படும் 100 பஸ்கள் ஊடாக மாகும்புர - புறக்கோட்டை (CM01), மிலேனியம் சிட்டி - புறக்கோட்டை (CM02), கடவத்தை - மாகும்புர (CM03), தெமட்டகொட - பாணந்துறை (CM04), பத்தரமுல்ல - ஏகல (CM05), கொள்ளுப்பிட்டி சுற்று வட்ட வீதி (CM06) மற்றும் கெஸ்பேவ - புறக்கோட்டை (CM08) ஆகிய ஏழு முக்கிய வழித்தடங்கள் உள்ளடக்கப்படவுள்ளன. மேலும், மெட்ரோ பேஸ், மெட்ரோ கோஸ்ட், மெட்ரோ டிரைவ், மெட்ரோ கோர், மெட்ரோ லிங்க் மற்றும் மெட்ரோ லேக் என ஆறு புதிய மெட்ரோ டிப்போக்கள் அமைக்கப்படவுள்ளதுடன், பயணிகள் இலகுவாக ஆசனங்களை முன்பதிவு செய்து நேர அட்டவணையை அறிந்துகொள்ள LMT GO என்ற புதிய மொபைல் செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

🛑 அதிர்ச்சிச் சம்பவம்: கரவனெல்ல பொதுக் கழிவறையில் பச்சிளம் குழந்தை மீட்பு!கரவனெல்ல பகுதியில் உள்ள பொதுக் கழிவறையில், குழ...
03/09/2026

🛑 அதிர்ச்சிச் சம்பவம்: கரவனெல்ல பொதுக் கழிவறையில் பச்சிளம் குழந்தை மீட்பு!

கரவனெல்ல பகுதியில் உள்ள பொதுக் கழிவறையில், குழந்தையொன்றைப் பிரசவித்த தாய் ஒருவர், அக்குழந்தையைக் கழிவறைக்குள்ளேயே கைவிட்டுச் சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மனிதாபிமானமற்றச் செயலால் அக்குழந்தை ஆபத்தான நிலையில் தவித்தபோது, அங்கு வந்த ஷமீர ஹர்ஷ மற்றும் சுரங்க ஆகிய இருவரும் உடனடியாகச் செயல்பட்டு பச்சிளம் குழந்தையின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.

அவர்களின் இந்த உன்னத செயலுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

"உங்களிருவருக்கும் பல பிறவிகளிலும் புண்ணியம் கிடைக்கட்டும்" எனப் பலரும் தங்களின் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஒருவேளை குடும்பச் சூழலோ அல்லது வேறு ஏதேனும் நிர்க்கதியான சூழ்நிலையோ காரணமாகவிருந்தாலும், இவ்வாறான கொடூர முடிவுகளை எடுப்பதற்குப் பதிலாக பிறரிடம் உதவி கோரியிருக்கலாமே தவிர, இந்த அப்பாவிப் பிஞ்சுகளுக்குத் தண்டனை வழங்குவதை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஒரு கணத்தில் கைவிடப்பட்ட அந்த மலராத உயிருக்கு, இந்த மனிதர்களின் துரிதச் செயல் இன்று புதிய வாழ்வைத் தந்துள்ளது.

மனிதாபிmத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் ஷமீர மற்றும் சுரங்க ஆகியோருக்கு நாமும் நமது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வோம்! 🙏

அபுதாபியிலிருந்து நாடு கடத்தப்பட்ட இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!போதைப்பொருள், சட்டவிரோத துப்பாக்கிகளை வைத்த...
03/09/2026

அபுதாபியிலிருந்து நாடு கடத்தப்பட்ட
இருவர் கட்டுநாயக்க விமான
நிலையத்தில் கைது!

போதைப்பொருள், சட்டவிரோத துப்பாக்கிகளை வைத்திருந்தமை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளுக்காக இலங்கையில் தேடப்பட்டு வந்ததாகக் கூறப்படும் இருவர், ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியிலிருந்து இன்று (03) இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அந்நாட்டின் பாதுகாப்புப் பிரிவினரால் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபுதாபியிலிருந்து Etihad Airways EY-392 விமானம் மூலம் காலை 10.15 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இருவரையும், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்து வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.

37 வயதான பந்துல திசாநாயக்க என்பவர் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத துப்பாக்கிகளை வைத்திருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் தேடப்பட்டு வந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றைய சந்தேகநபரான 36 வயதான ஹர்ஷ குமார, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நபரின் நெருங்கிய ஆதரவாளராகவும், பூஸ்ஸ சிறைச்சாலையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் அமைதியின்மை சம்பவத்துடன் தொடர்புடையவராகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது, ஈரான் மேற்கொண்ட தாக்குதல்களுடன் தொடர்புடைய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் உள்ளிட்ட காட்சிகளை தங்களது கையடக்கத் தொலைபேசிகளில் சேமித்து வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர், பந்துல திசாநாயக்க கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கும், ஹர்ஷ குமார கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கும் மேலதிக விசாரணைகளுக்காக கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Katunayake

03/09/2026

உக்ரைன் தனது கடற்படை ட்ரோன்களை ரஷ்யாவின் கருங்கடல் கடற்கரையின் ஆழமான பகுதியில் அமைந்துள்ள சோச்சி (Sochi) துறைமுகத்திற்குள் அனுப்பியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிராஸ்னோடர் கிராய் (Krasnodar Krai) பகுதிக்குள்ளும் ஊடுருவி, போர்க்களத்தில் இருந்து மிகத் தொலைவில் உள்ள ரஷ்யத் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் பின்பகுதி தளவாடப் போக்குவரத்து ஆகியவற்றின் மீது உக்ரைன் நடத்தி வரும் தீவிரமான தாக்குதல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகவே இந்தத் தாக்குதல் அமைந்துள்ளது.

ஜார்ஜியா எல்லைக்கு அருகில் உள்ள ஒரு ஓய்வுக்கால நகரம் இப்போது ட்ரோன்களின் தாக்குதல் எல்லைக்குள் வந்துள்ளது. ரஷ்யாவின் கடற்கரைப் பாதுகாப்புப் பகுதி தொடர்ந்து சுருங்கி வருகிறது.

எழுத்தாளர்: ஜூலி

  கதிர்காமம் பாதையில் காட்டு யானை தாக்குதல் யாத்ரீகர்களின் பேருந்து கவிழ்ந்து விபத்து!புத்தள - கதிர்காமம் வீதி யால சரணால...
03/09/2026


கதிர்காமம் பாதையில் காட்டு யானை தாக்குதல் யாத்ரீகர்களின் பேருந்து கவிழ்ந்து விபத்து!

புத்தள - கதிர்காமம் வீதி யால சரணாலயப் பகுதிக்கு அருகில் இன்று (03) வீதியைக் கடந்த காட்டு யானை தாக்கியதில், கட்டுப்பாட்டை இழந்த யாத்ரீகர்களின் பேருந்து வீதியை விட்டு விலகித் தலைகீழாகக் கவிழ்ந்தது விபத்து இடம்பெற்றுள்ளது..

பேருந்தில் பயணித்த யாத்ரீகர்கள் பலர் காயமடைந்து, சிகிச்சைக்காகக் கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Address

1st
Sammanthurai

Telephone

+94772654939

Website

Alerts

Be the first to know and let us send you an email when உண்மை செய்திகள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share