07/08/2026
சுட்டிகளே ஆகஸ்டு மாதச் சுட்டி மயில் சிறப்பிதழ் வெளிவந்திருக்கிறது. உங்களைக் கவரும் பல புது அங்கங்கள் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன.
தென்கிழக்காசியாவின் பல தீவுகளைத் தன் வசம் கொண்டிருந்த நுசாந்தாரா கடற்கொள்ளையர்கள் பற்றிய தகவல்களைத் தெரிந்து கொள்ள வேண்டுமா?
மீத்திறன் கணினிகளின் அதி நவீனத் தொழில்நுட்பம், அதன் செயல்பாடுகள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள வேண்டுமா சுட்டிகளே?
மேலும், சிரம்பானில் அமைந்திருக்கும் பூரான் கோவிலைப் பற்றியும், அதன் மர்மம் நிறைந்த புராணக் கதைகளும் இம்மாதச் சுட்டி மயிலில் இடம்பெற்றிருக்கிறது.
அதுமட்டுமல்ல சுட்டிகளே. உங்களுக்காக, விடுகதைகள், புதிர்கள், நகைச்சுவைகள், திகில் கதைகள், மற்றும் பல தரப்பட்ட நடவடிக்கைகளும் இருக்கின்றன.
இவற்றோடு உங்களுக்குப் பிடித்த தமிழ் புதிர் விளையாட்டுகள், தகவல் துளிகள், கலைச் சார்ந்த படைப்புகள், நகைச்சுவை போன்றவை வழக்கம்போல இடம்பெறுகின்றன.
உங்கள் சுட்டியை வாங்க மறவாதீர்கள்!!!